Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் காப்பிரியர்களின் வருகையும் திருகோணமலையில் அவர்களின் இன்றைய இருப்பும்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் காப்பிரியர்களின் வருகையம் திருகோணமலையில் அவர்களின் இன்றைய இருப்பும்:
07 நவம்பர் 2015

சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை கிழக்குப்பல்கலைக்கழகம்:

இலங்கையில் காப்பிரியர்களின் வருகையம் திருகோணமலையில் அவர்களின் இன்றைய இருப்பும்:

பல்லினக் கலாசாரம் கொண்டதே இவ்வுலகமாகும். இவ்வுலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் சரித்திரங்களும், அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களின் பின்னணியாகும். இவ்வாறான பின்னணியே ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்ற சமூகங்களுக்கிடையே நிலவி வருகின்ற பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்க்கை நடைமுறைகள், தெய்வ நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவற்றோடு ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையின் சிந்தனையோடும் ஒரு சமூக அமைப்பாக மக்கள் குழாம் சிறந்ததொரு நாட்டை உருவாக்கும் திறனை அடைந்துள்ளனர். இவ்வாறான ஒரு சமூகம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதென்பது ஒரு சமூகத்தின் துர்பாக்கியநிலை என்றே கருதலாம்.

எமது இலங்கைத் திருநாட்டில் பல்லினக் கலாசார வருகை மிக வேகமாக இருந்துள்ளது என்பதற்கு எமது நாட்டில் காணப்பட்டு வருகின்ற இருபது வகை சமூகங்களை உதாரணமாகக் கூறலாம். இலங்கைத் திருநாட்டின் வரலாற்றுப் பக்கங்களிலும் பல்லினக்கலாசாரம் வேரூன்றிக் காணப்படுகின்றது என்பதை சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணி எமது நாட்டில் தற்போதும் நிலவி வருகின்றது என்பதற்கு இங்கு வசிக்கின்ற முக்கியமான சமூகங்கள் ஆதாரமாக விளங்குகின்றன.

அந்த வகையில், ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கும் காப்பிரிச் சமூகம் தொடர்பாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

இக்காப்பிரிச் சமூகமானது பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை நாட்டுக்கு வந்தபோதிலும் அவர்கள் தம்முடைய கலாசார பண்பாடுகளைத் தாண்டி இலங்கையில் காணப்பட்ட பிரதான சமூகங்களுக்குள் ஊடுருவி தமது வாழ்வை மாற்றிக் கொண்டதால் இவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்ற நிலை தென்படவில்லை. 
அதாவது, எமது நாட்டில் காணப்படுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கி என்ற சமூகத்திடையே தமது கலாசாரங்களை ஊடுருவ விடாவிட்டாலும் கலப்புத் திருமணம், சமூக ஒற்றுமைப்பாடு என்ற ரீதியில் காப்பிரி சமூகம் இலங்கை மக்களின் சமூக சரித்திரங்களைப் பின்பற்றி இணைந்து வாழ்கின்றார்கள் என்பது எமது நாட்டு கலாசார வரலாறுகளில் உரைத்து நிற்கின்ற உண்மையாகும்.


காப்பிரி என்ற சொல்லானது காப்பிரி சமூகத்தின் பூர்வீக கண்டமாகக் கருதப்படுகின்ற தென்னாபிரிக்க, மத்தியாபிரிக்க நிலப்பரப்பின் பழங்குடிகளான 'பண்டு' இனத்தை குறிக்கும் பழமையான சொல்லிலிருந்து கருதப்பட்ட சொல் என்றும் இப்பூர்வீக இனமே போர்த்துக்கீசரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு காலனித்துவ இலங்கையின் பல வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி இன்றைய இலங்கையின் சிறுபான்மைச் சமூகமாகக் காணப்படுகின்ற ஆபிரிக்கர்களாவர். இருந்தபோதும் இக்காப்பிரி என்ற சொல்லுக்கு மற்றொரு விளக்கமும் உள்ளது.

ஆபிரிக்காக் கண்டத்திற்குள் ஐரோப்பியரின் ஊடுருவல் ஆரம்பமாக முன்பே ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்ததாகவும், போர்த்துக்கீசரின் கைக்குள் ஆபிரிக்கா சிக்கிக்கொள்ள அவர்களிற் கணிசமானவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றிருக்கின்றார்கள். இஸ்லாத்தை நிராகரித்தவர்களைக் குறிக்கும் 'கபர்' என்ற அரபுவகைச் சொல் 'மயககசை' ஆகி அது தமிழில் காப்பிரியாக வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்.  


கி.பி 5ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரினால் ஆபிரிக்காவிலிருந்து சிப்பாய்களாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவர்களாக இக்காப்பிரி சமூகத்தவர்கள் காணப்படுகின்றனர். போர்த்துக்கீச மாலுமிகள் முதற் தொகுதிக் காப்பிரியர்களை அப்போதைய சிலோனுக்கு 1500ம் ஆண்டு கொண்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். கி.பி 5ம் நுற்றாண்டில் எதியோப்பிய வணிகர்கள் மாதோட்டத் துறைமுகத்தில் வணிகம் செய்திருக்கின்றார்கள்.  அதன் பின்னர் முதன்முறையாக 1631.10.13இல் 100காப்பிரிகள் கோவா துறைமுகம் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டார்கள் என்பது எழுதப்பட்ட செய்திகள். காப்பிரி மக்கள் அங்கோலாவிலும், மொசாம்பிக்கிலும் ஆபிரிக்கக் கண்டத்தின் வேறு சில பகுதிகளிலிருந்தும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.

 

இவ்வாறு வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கோட்டைகள் அமைத்தல், கடற்படையின் ஓர் அம்சமாகவும், வீட்டுவேலைகள் செய்தல் மற்றும் படைத் துறையிலும் வேலைக்காக நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அத்தோடு, போத்துக்கீசப் படைத்தளபதி 'னுநைபழ னந ஆநடடழ னந ஊயளவசழ' 1638.03.27இல் கண்டி மீது படையெடுத்த போது அதில் 300காப்பிரிகள் பங்கேற்றதாக இலங்கை வரலாறு கூறுகின்றது.

இதைத் தொடர்ந்து இலங்கை போத்துக்கீசரிடம் இருந்து  டச்சுக் காரர்களின் கையில்விழ காப்பிரிகளும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் இணைக்கப்பட்டார்கள். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் மேலும் ஆபிரிக்க மக்களை இலங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்தது. 1675-1680 காலப்பகுதியில் டச்சுத்தளபதியாக பணியாற்றிய 'ஏயn புழநளெ துச'இ இனுடைய காலத்தில் டச்சுப் படையில் இருந்த காப்பிரிகளின் எண்ணிக்கை 4000ஆகக் காணப்பட்டது. 
போர்த்துக்கீசர் மற்றும் டச்சுக்காரர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கும் அடிமைமோகம் உருவாகியது. இக்காலத்தில் சிலோன் ஆயுதப் படையினருக்கு எதிராக காப்பிரிப்படைப் பிரிவுகளில் போரிடுவதற்காக பிரித்தானியக் குடியேற்ற வாசிகள் ஏனைய காப்பிரிகளை சிலோனுக்குக் கொண்டு வந்தனர். பிரித்தானியாவின் முதலாவது ஆளுனர் 'குசநனநசiஉம ழேசவா' என்பவர் ஒருவருக்கு 125 ஸ்பானிய டொலர் என்ற விலைப்படி  மொசாம்பிக் அடிமைச் சந்தையில் கறுவாவும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒரு பண்டமாற்றுப் பொருள் போல ஆபிரிக்க மக்களை விலைபேசி வாங்கிக் கொண்டார்.


அவரைத் தொடர்ந்து இலங்கை ஆளுனராகப் பதவியேற்ற 'டீநளவழறநன' மேலும் பல காப்பிரிகளை இலங்கைக்குக் கொண்டு வந்தார். அத்தோடு போர்த்துக்கீசரின் கோவா அடிமைச் சந்தையில் பணத்திற்கும், பண்டத்திற்கும் காப்பிரி மக்கள் விற்கப்பட்டதால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு வேண்டும் போதெல்லாம் கோவாவில் இருந்து காப்பிரிகளை திருகோணமலை வழியாக இலங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1815இல் பிரித்தானிய படைத்தலைவராக இருந்த 'அல்விஸ் ஜெமாடர்' தென்னாபிரிக்கச் சந்தையில் இருந்து பெருந்தொகையில் காப்பிரிகளைக் கொண்டுவந்து சேர்த்தார். அதற்குப் பின்னரான காலத்தில் பிரித்தானியப் படையின் 3ம்இ4ம் படைப்பிரிவுகள் முழுமையான கருநிறத்தோடு காப்பிரிகளை மட்டுமே கொண்டதாக அமைக்கப் பட்டிருந்தன. முன்னிருந்த காலங்களைக் காட்டிலும் 'டீநசவழடயஉஉi' இனுடைய காலத்திலே 9000இற்கும் அதிகளவான காப்பிரிகள் கொண்டுவரப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1815-1817 காலப்பகுதியில் பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக காப்பிரிகள் இருந்த படையணிகள் கலைக்கப்பட்டன.

 

இவ்வாட்சிகளைத் தொடர்ந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காப்பிரி மக்களை திருப்பிக் கொண்டுசெல்ல யாரும் துணியவில்லை. அதனால் அவர்கள் இலங்கையிலேயே இருக்க நேர்ந்தது. இதனால் இம்மக்கள் எதற்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்களோ அதிலிருந்து கைவிடப்பட்டதனால் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்லாமலும் வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாமலும் இவர்கள் தமது வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக சிறுசிறு வேலைகளைச் செய்து இலங்கையிலேயே திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பல இடங்களில் தமது வாழ்க்கையினை தொடர்ந்தார்கள்.

இவ்வாறு கைவிடப்பட்ட அம்மக்கள் கூட்டத்தினர் இன்றைய நிலையில் எனைய சமூகங்களின் பார்வையில் தனியானதொரு அல்லது வேறுப்பட்ட பார்வையினூடாகவே பார்க்கப்படுகின்றனர்.ன் காப்பிரி என்ற ஓர் சமூகக்குழு இருப்பதே எம்மில் பலருக்கு தெரியாது. இன்று பல்கலைக்கழக. பாடசாலை மாணவர்கள் அவர்களை காட்சி கூடப்பொருளாக பார்த்து வருகின்ற நிலைமை. கட்டமைத்து வருகின்ற நிலைப்பாடு அவர்கள் மீதான வெளிப்பார்வையை எமக்கு எடுத்துரைக்கின்றது.

 

இவ்வாறான  சூல்நிலைகளில் அம்மக்கள் பண்பாட்டுத் தாழ்வுச் சிக்கலால் பாதிக்கப்படுவோராக தம்மை தாம் மறைக்க முற்படுவதோடு தமது அடையாளங்களையும் மாற்ற அல்லது மறுத்து வருகின்ற ஆபத்தான நிலைப்பாட்டை நாம் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக ஆரம்பகாலத்தில் திருகோணமலையில் காப்பிரிகளின் பைலாப் பாடல்களும் றபான் இசையும் மாலை வேளைகளில் பாலையூற்றுக் கிராமத்திற்கு உயிரூட்டுபவையாக இருந்தது. ஆனால் இன்று அவை பெருமளவு குறைந்து விட்டதாக பாலையூற்றில் வசிக்கும் ஏனைய மக்களின் கருத்துக்களிலிருந்து அறிய முடிகின்றது. இப்படி ஒவ்வொரு விடயத்திலும் இப்பண்பாட்டு தாழ்வுச்சிக்கல் பெரும் தாக்கம் புரிந்த வருகின்றது.

காப்பிரியர் என்று வர்ணிக்கப்படும் இவர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகுந்த பிரயத்தனத்துடன் தமது வெளித்தோற்றங்களையும் மாற்றிக் கொள்கின்ற தன்மை இன்று பரவலானது.

இவ்வாறான செயற்பாடுகளால் அச்சமூகத்தின் தனித்துவமான அடையாளங்கள் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருவது அவர்களின் எதிரகால இருப்பு குறித்த அச்சத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது. இவ்வாறான சமூக குழுமம் அழித்தொழிப்பதான ஆபத்து எமது கவனிப்பிற்கும் கணிப்பிற்குமுரியது.

ஈழத்துச் சூழலில் விபத்தாக கிடைத்த பெரும் சொத்தே காப்பிரியர். இவர்களின் பண்பாடும் அடையாளங்களும் எமது நாட்டின் பண்பாடுகளுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கின்றன. அதேநேரம் அவை எமது கொண்டாடுதலுக்கும் உரியன. இந்நிலையில் அவர்கள் மீதான எமது கவனம் மிக முக்கியமானது. அவர்களின் பண்பாடுகளை. அடையாளங்களைப் பற்றிய புரிந்துணர்வை. அவசியப்பாட்டை கலந்தரையாடுவதும் செயற்படுத்துவதும் அவர்களோடு இணைந்து வேலை செய்வதும் முக்கியம்.

சரணியா சந்திரகுமார்
உதவி விரிவுரையாளர்
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125653/language/ta-IN/article.aspx
 

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் - பகுதி 2:-

19 நவம்பர் 2015

திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் - பகுதி 2:-


இலங்கைவாழ் ஆபிரிக்க மக்கள் 1505, 1815, 1817 ஆகிய ஆண்டுகளில் போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்றோரால் மொசாம்பிக்கில் இருந்து சிற்பாய்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர். இவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளிளிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டாலும் அவர்களின் முதல் காலடித் தடங்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்தான் பதிந்திருக்கின்றன.


இவ்வாட்சிகளின் பின் சுதந்திரம் அடைந்த இலங்கை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காப்பிரிகளை திருப்பி அனுப்ப முயற்சிக்கவில்லை. அதனால் அவர்கள் இலங்கையிலேயே இருக்க நேர்ந்தது. அச்சமயம் இவர்களுக்கு ஏற்பட்ட வறுமை, வேலையின்மை, 1820இல் திருகோணமலையில் ஏற்பட்ட கடும் வரட்சி என்பன இவர்களின் வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டு சென்றது. அவ்வேளை தங்கள் வயிற்றுப் பசியை தீர்த்துக்கொள்வதற்காக சிறுசிறு வேலைகளைச் செய்தனர். இவ்வாறு கைவிடப்பட்ட காப்பிரிகள் புத்தளம்இ  திருகோணமலைஇ மட்டக்களப்புஇ யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர்.


சுதந்திரத்திற்குப் பின்னர் திருகோணமலையில்  வாழ்ந்த காப்பிரிகளை நோக்கும்போது தமது வறுமையைப் போக்க நிலாவெளியில் உள்ள சிறிய மலையொன்றில் இருந்துகொண்டு திருகோணமலை யாழ்ப்பாண பொதிமாட்டுவண்டி வணிகர்களை தாக்கினர். அதுமட்;டுமன்றி திருகோணமலை கப்பற்துறையிலும் இவர்களின் நடமாட்டம் தொடர்ந்தது. அதன் பின்னர் கிண்ணியா, பாலையூற்று, ஜமாலியா போன்ற இடங்களில் வசித்தனர். இன்று ஜமாலியா தவிர்ந்த ஏனைய இரு இடங்களிலும் காக்காமுனை என்ற இடத்திலும் வாழ்கின்றனர்.


பாலையூற்று காப்பிரிச் சமூகத்தினரைப் பார்க்கும்போது ஆபிரிக்காவில் இருந்து போனா, சாலி, மைக்கல் என்பவர்களின் வருகையால் உற்பத்தியான பிள்ளைகள்தான் பாலையூற்றில் வசித்தனர் என்றும் இவர்களின சமூகத்தவர்கள்தான் இன்றும் பாலையூற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் காப்பிரிச் சமூகம் என்றும் கூறப்படுகின்றது.
1914ம் ஆண்டு பாலையுற்றுக்கு வந்தவர்களின் உறவினர்கள் நீர்கொழும்பு, புத்தளம் போன்ற இடங்களில் வாழ்ந்துவந்ததோடு தொழில்களாக காவலாளி, மீனவர், கூலியாள், தச்சர், மேசன் போன்றவற்றைச் செய்தனர். ஆனால் தற்போது அவர்களின் தொழிலானது மாற்றமடைந்து சிறப்புடன் காணப்படுகிறது.


பாலையூற்றுப் பிரதேசசத்தில் வாழ்கின்ற காப்பிரிச் சமூகம் தமிழ்மொழியினையே பேசுகின்றவர்களாகக் காணப்படுகின்றனர். இம்மக்களுடைய ஆபிரிக்க மொழியான “போர்த்துக்கீசிய கிரியோல்” மொழியானது இவர்களிடையே பழக்கமற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. இவர்கள் பெரும்பாலும் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர். இதனால் இவர்களின் கலாசாரப் பண்புகள் கத்தோலிக்கம் மற்றும் தமிழ் மக்களின் பண்புகளை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. ஆனாலும், இங்கே வாழ்கின்ற இச்சமூகத்தவரின் நான்காவது, ஐந்தாவது தலைமுறைகள் ஆபிரிக்கக் காப்பிரியர்களின் உடலமைப்பினை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.


இன்று பாலையூற்றில் வசிக்கும் ஆபிரிக்க வம்சத்தவரின் தலைவரான அல்போன்சோ அவரது  குடும்பத்தின் மூத்தபிள்ளை ஆவார். இவரின் வழித்தோன்றல்களாக ஆநசளயடin முழசயநெசளை – தாத்தா – நீர்கொழும்பு, ஆநசளயடin டீயனெய –  அப்பா – நீர்கொழும்பு, ஆநசளயடin யுடகழளெழ –  திருகோணமலை, யுடகழளெழ நுனசin குசைநள –  மகன் - திருகோணமலை,  நுனசin குசைநள னுசடையஒஉயைn -  பேரன் - திருகோணமலை போன்றோர் காணப்படுகின்றனர். இன்று பாலையூற்றில் அவருடைய பரம்பரையினைச் சேர்ந்த 100 பேர் வாழ்கின்றனர்.


திருகோணமலையில் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த காப்பிரிகள் வாழ்க்கையில் இருந்த ஆபிரிக்காவிற்குரிய மண்வாசன இன்று மிகவும் குறைந்துவிட்டது. ஏனெனில் முன்னொரு காலத்தில் காப்பிரிகளின் பைலாப் பாடல்களும் றபான் இசையும் மாலை வேளைகளில் திருகோணமலைப் புறநகர்க் கிராமமான பாலையூற்றுக் கிராமத்திற்கு உயிருட்டுபவையாக இருந்தது. ஆனால் இன்று அவை பெருமளவு குறைந்து விட்டதாக பாலையூற்றில் வசிக்கும் ஏனைய மக்களின் கருத்துக்களிலிருந்து அறிய முடிகின்றது. எனினும் அவர்களது கொண்டாட்;டங்களில் இசைக்கும், நடனத்திற்கும் இன்றும் தனி இடம் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதிலும் தங்கள் கொண்டாட்டங்களில் ஆண்கள் பாட பெண்கள் ஆடும் பைலா நடனம் இன்றுவரை களை கட்டுவதாக இன்றுள்ள தலைமுறையினர் நெஞ்சை நிமிர்த்திக் கூறுகின்றனர்.


இவ்வாறு பாலையூற்றில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய காப்பிரிகளின் அன்றைய அடையாளங்களாக உருக்கினால் வார்த்தெடுத்த கருகரு உடலமைப்புஇ சுருள்முடிஇ தடித்த உதடுகள் போன்ற ஆபிரிக்க உயிரியல் அடையாளங்களும் கலகக் குணமுடையவர்களாகவும் இருந்ததோடு நீண்டநேர கடும் உழைப்பாளிகளாகவும் இருந்தனர். இதனால் ஏனைய மக்கள் அவர்களுடன் இணைந்து வாழ்வதில் பல அசௌகரியங்கள் காணப்பட்டன. இதனால் அவர்கள் தனித்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இன்று இவர்களுடைய அடையாளங்களாக கடின உழைப்பும்இ இலகுவாக அனைவரோடும் நட்புக்கொள்ளும் அன்பான  குணமும் காணப்படுகின்றமையால் பாலையூற்றிலுள்ள ஏனைய மக்களுடன் ஒன்றிணைந்து தமது  வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


பொதுவாகக் காப்பிரி சமூகத்தவரின் வாழ்க்கை முறையினை எடுத்துக் கொண்டால்  பல்வேறு கலைகளை உள்ளடக்கியதாகவும் மதரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்தித்ததாகவும்இ கடின உழைப்பும் தமக்கான சில உடற்கூற்றியல்புகளையும் கொண்டு காணப்பட்டனர்.


இவ்வாறு பல தனி;த்துவப் பண்புகளைக் கொண்ட அவர்களுடைய வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டது போன்று அவர்களுடைய உடலமைப்பிலும் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. அதாவது கருநிறமாக இருந்த உடல் இன்று சாதாரண மக்களுடையதைப் போலவும் அதேவேளை அவர்களது சுருள்முடியில் எவ்வித மாற்றமும் ஏற்படாமலும் இருக்கின்றது. இதற்கான காரணம் என்னவென்று பார்க்கும்போது  அதற்கு மூலகாரணமாக இருப்பது கலப்புத்திருமணமே ஆகும்.


காப்பிரிகளின் ஆரம்பகால வாழ்க்கை முறையில் அவர்கள் தமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே திருமணம் செய்யும் முறையினைக் கொண்டு காணப்பட்டனர். இதனால் அவர்களது உடற்கூற்றியல்புகள் எவ்வித மாற்றத்தினையும் எதிர்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் ஏனைய சமூகத்தினருடனும் சேர்ந்து  சாதாரணமாகப் பழகுவதனாலும் இலகுவாகத் தோழமை கொள்வதனாலும் கலப்புத் திருமணங்களை  ஏற்றுக்கொள்கின்றனர். இதன் காரணமாக இவர்களது உடற்கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


இவர்களது பூர்வீக மொழியாக ‘pழசவரபரநளந உசநழடந’ வழக்கத்திலிருந்தாலும் இன்றைய காப்பிரித் தலைமுறையினர் தம் தாய்மொழியினை அறியாதவர்களாகவே காணப்படுகின்றனர். காரணம் இன்றைய காப்பிரிகள் தமது சமூகத்துடன் மட்டும் வாழவில்லை. மாறாக தமிழ்இ சிங்களம் முஸ்லிம் பறங்கியென எல்லாச் சமூகத்தவர்களுடனும் வாழ்கின்றனர். இவ்வாறே  பாலையூற்று காப்பிரிச் சமூகமும் தமிழ்சமூகத்தில் வாழ்வதால் தமிழையே பேச்சு வழக்காகக் கொண்டுள்ளனர்.


இவர்கள் கலையினை வெகுவாக விரும்பும் ஒரு குழுமத்தினராக உள்ளனர். புதிய புதிய கலைகளைக் கண்டுபிடிப்பதில் இவர்கள் அதிக ஆர்வம் உடையவர்கள். அந்தவகையில் பைலா அல்லது கப்றிஞ்ஞாஇ மற்றும் உhiஉழவந போன்ற தாளவேகம் உடைய இசை, துள்ளல் இசை போன்றவற்றை இலங்கைக்கு அறிமுகம் செய்ததும் இவர்களேயாவர். இவர்கள் சிரட்டைகள்இ தகர டப்பாக்கள்இ குச்சிகள்இ கரண்டிகள் போன்றவற்றிலிருந்து புதிய புதிய இசையினை உருவாக்குபவர்கள். அதுமட்டுமன்றி இவர்களுடைய இசைக்கருவிகளை எவ்வித கலைத் தெய்வங்களின் கையிலும் காணமுடியாதளவு மிகவும் எளிமையானவையாகும்.


இச்சமூகத்தில் சடங்குகளும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது குழந்தை பிறப்புச் சடங்குஇ பூப்பெய்தல் சடங்குஇ திருமணச் சடங்குஇ மரணச் சடங்குஇ அவற்றோடு வழிபாட்டுச் சடங்குகள் பலவற்றையும் உள்ளடக்கியதாக இவர்களது வாழ்க்கை அமைந்துள்ளது.


இத்தனை சிறப்புக்களை இவர்கள் கொண்டிருந்தாலும் இன்று பாலையூற்றில் வசிக்கும் மக்களிடையே காப்பிரிகளின் பூர்வீக பழக்க வழக்கங்கள்இ அடையாளங்கள்இ ஒருசில கலைகள்இ பூர்வீக மொழி போன்ற பல்வேறு விடயங்கள் மறைந்து கொண்டே செல்கின்றன.  இன்றைய காப்பிரிச் சமூகத்தவர்கள் தமது அடையாளங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதில்  அக்கறை செலுத்துவதைக் காட்டிலும் ஆபிரிக்க அடையாளங்களை மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபடுபவர்களாகத் தெரிகின்றது. ஏனெனில் இன்று வளர்ந்துவரும் இளம் காப்பிரித் தலைமுறையினர் ஆபிரிக்க முக்கிய அடையாளமான சுருள் முடியினையே நேராக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது. இப்பண்பு இளைய தலைமுறையினரிடம் மட்டுமல்ல 90வயதை எட்டிய அல்போனஸ் அவர்களின் வார்த்தைகளிலும் வெளிப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.


மேலே கூறப்பட்ட விடயங்களை அடிப்படை எனக்கொண்டு, போத்துக்கீசர் காலத்தில் திருகோணமலைக்கு வந்த காப்பிரி சமூகத்தவர்கள் ஆரம்பத்தில் வேற்று இனத்தவர்களாக நினைக்கப் பட்டாலும் இன்று அனைத்து மக்களிடமும் தோழமையுடனும் நட்புணர்வுடனும் இலகுவாக அனைவரையும் ஈர்த்துவிடும் அளவிற்கு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் தமது சமூகத்திற்குரிய பாரம்பரிய பண்பாட்டம்சங்களை இழந்துவருபவர்களாகவே காணப்படுகிறனர்.


சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை:-

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126068/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.