Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூரிகைக் கலைஞன் ஓவியர் திரு. மோகனதாஸ் இராமதாஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் ஆட்ஸ் வல்வையின் ஒரு சகாப்தம்…..!

 

1970 களில் வல்வெட்டித்துறையில் கையெழுத்துச் சஞ்சிகையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதில் தனது ஆற்றலைப் பிரதிபலிக்கும் வகையில் வல்வை சனசமுக சேவா நிலையத்தின் வெளியீடாக சுப்பிரமணியம் சக்திவடிவேல் அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட “அலை ஒளி” கையெழுத்துச் சஞ்சிகையும்இஅதன்பின்னர் அப்போதைய செயற் குழுவின் ஒத்துழைப்பின்மை காரணமாக அதனை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்குள்ளான நிலையில் திரு.சு.சக்திவடிவேல் அவர்கள் தனது சொந்த முயற்சியினால் “அருவி” என்ற அழகிய பல வர்ண கையெழுத்துச் சஞ்சிகையை உருவாக்கி வாசகர்களை ஊக்குவிப் பதற்காக அதனை கணபதி படிப்பக நிர்வாகிகளின் ஆதரவினால்இ தொடர்ச்சியாக சுமார் இரண்டு வருடங்கள்  வல்வை நெடியகாடு கணபதி படிப்பகத்தில் வாசகர் பார்வைக்காக வைத்தபொழுது,  வல்வையில் ஒரு புதிய எழுத்துப் பரம்பரையின் சகாப்தம் உருவாகியது.அத்தனை சிறப்பு வாய்ந்த இரு சஞ்சிகைகளான “அலை ஒளி” மற்றும் “அருவி” ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளில் உயிர்த்துடிப்புடைய உணர்வுகளை வெளிக்காட்டும் வகையில் அதன் ஒவ்வொரு பக்கங்களிலும் அழகிய ஓவியங்களைத் தத்ரூபமாக  வரைந்து அவற்றிற்கு உயிர் கொடுத்த “மோகன் ஆட்ஸ்” என அழைக்கப்பட்டுவந்த இராமதாஸ் மோகனதாஸ் அவர்கள் திடீரென இரண்டாயிரத்துப் பதினைந்தாம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி(09 – 11 – 2015) அன்று தமிழகத்தில் அமரத்துவம் அடைந்து விட்டார் என்ற செய்தியை தொலைபேசியினூடாக அறிந்ததும் நான் மட்டுமல்லாது கலையுலகமே  அதிர்ந்து போய் நிற்கின்றது.

மோகன் தனது கைவண்ணத்தில் பல ஓவியங்களை. உருவாக்கியது மட்டுமல்லாது, தமிழ் மக்களின் மீட்புக்காகவும் அர்ப்பணித்துச் சாதித்தவையோ ஏராளம்.

மோகனின் இருவேறு தோற்றங்கள்1.Mohan Arts 2.Mohan Arts

 

மோகன் தனது சித்திரக் கலையை சிதம்பரக் கல்லூரியில்; பிரபல ஆசிரியரான “பாலா மாஸ்ரர்” என்று வல்வையர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் அவர்களிடம் ஓவியக் கலையை பயின்ற காலத்திலேயே தனது ஆர்வம் காரணமாக பழைய கிராம போன் தட்டுக்களிலும், மற்றும் கண்ணாடி ஆகியவற்றிலும் விதம் விதமான ஓவியங்களை வரைந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டு வந்தhர். இந்த  நிலையில்தான் அற்புதமான அந்த ஓவியக் கலையை முழுநேரமாக கற்று சிறந்த ஓவியராகத் திகழவேண்டுமென்ற ஆர்வத்தில்இ அக்காலத்தில் தமிழகத்தில் புகழ் பெற்றிருந்த ஓவியர் மு.மாதவன் அவர்களிடம் மேலும் ஓவியக் கலையை கற்றுத் தேர்ச்சியடைந்தார்.ஓவியத் துறையில்  தான் பெற்ற பயிற்சியின் விளைவாக முதன் முதலில் அட்டைப் படத்திற்கான ஓவியம் ஒன்றை வரைவதற்கான ஒரு வாய்ப்புத் தேடிவந்தபோது, அவர் அதனைத்தட்டிக் கழிக்கவில்லை. வடமராட்சியின்  பிரபலமான சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த நெல்லை.க.பேரன் அவர்களின் “ஒரு பட்டதாரி நெசவுக்குப் போகின்றாள்” என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அட்டைப் பட ஓவியத்தை வரைந்து அது நூல் உருவில் வெளியிடப்பட்ட போது தான் மோகனின் ஆற்றல் வெளி உலகுக்குத் தெரியவந்தது.அந்த அட்டைப் படத்தை வரைந்து கொடுத்ததில் மோகன் சில வித்தியாசமான  அனுபவங்களுக்கு முகம் கொடுத்த போதும்இஅவரை  அந்த ஓவியமே தென்னிந்திய ஓவியர்களுக்குச் சமமான அந்தஸ்த்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அந்தச் சம்பவமே மோகனின் ஓவியக் கலைத் துறையில் ஒரு திருப்பு முனையையும்  ஏற்படுத்தியிருந்தது. ஓவியக் கலை ஒரு கலையாகத் தான் இருக்கலாமே அன்றி முழுநேரத் தொழிலாக இருக்கமுடியாது என்றிருந்த அவநம்பிக்கையைத் துடைத்தெறிந்த மோகன் பருத்தித்துறையில் அப்பொழுது இருந்த சென்ரல் படமாளிகையின் முன்னால் “மோகன் ஆட்ஸ்” என்ற பெயரில் ஒரு வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்து ஓவியத்தை முழுநேரத் தொழிலாக நடத்தி வந்தார்.அந்தக் காலப் பகுதியில் வடமராட்சியில் மட்டுமல்லாது வடமராட்சிக்கு அப்பாலும் இவரால் வரையப்பட்ட ஓவியங்கள் புகழ் பெற்று விளங்கியமையை மறக்கமுடியாது.

மோகனை அற்புதமான ஒரு ஓவியக் கலைஞனாகவே பார்ததிருந்த எங்களில் பலருக்கு தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் அவர் கொண்டிருந்த பற்றுதல்களும், தமிழ் மக்களுக்காக அவர் ஆற்றிய துணிச்சலான  சேவைகளும், ஈடுபாடும் தெரியாது.

  • யாழ்ப்பாண மேயராக இருந்து தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த விடா திருக்க பல முயற்சிகளை எடுத்த மேயர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் ‘வேம்படி மோகன்’ என்ற பெயரில் புலனாய்வு அதிகாரி பஸ்தியாம்பிள்ளை யினால்; தேடப்பட்டு வந்த மோகன் கடைசி வரை சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் பிடிபடாமலேயே தனது இயக்கப் பங்களிப்பை ஆற்றி வந்தவர்.
  • தமிழீழ விடுதலை; புலிகளின் உத்தியோகபூர்வமான அடையாளச் சின்னம் முதன்முதலில் 1976 ஆம் ஆண்டில் மோகன் அவர்களாலேயே வடிவமைக்கப் பட்ட போதும் தனது பெயரை வெளியே காட்டிக் கொள்ளாத நிலையில் அதற்கு மெருகூட்டிய  மதுரை ஓவியர் நடராசா பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
  • தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது மாவீரன் லெப்டினென்ட் சங்கர் என அழைக்கப்பட்ட  சத்தியநாதனின் படம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்ட போது. அந்தப்  படத்திற்கு விடுதலைப் புலிகளின் சீருடையை வரைந்து உயிரூட்டியது போன்றே கேணல்கிட்டு, லெப்டினன்ட் கேணல் குமரப்பா, லெப்டினன்ட் கேணல் புலேந்திரன், லெப்டினன்ட் கேணல் விக்டர், கப்டன் பண்டிதர், கப்டன் லாலா என பலபோராளிகள் மற்றும் தளபதிகள் மாவீரர்களாகிய பின்னர் அவர்களை விடுதலைப் புலிகளின் சீருடைகளில் தத்ரூபமாக எமது கண்முன்னால் கொண்டு வந்தவர் மோகன்.
  • தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வமான ‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையில் மோகன்; வரைந்த ஓவியங்கள் எண்ணற்றவை. விடுதலைப்புலிகள் போராளிகளை அதிரடிப்படை சீருடையில் சித்தரிக்கும் அத்தனை படங்களும் இவரின் கைவண்ணங்களே.
  • பிற்காலத்தில் பிரபாகரன் தமிழினத்தின் தேசியத் தலைவராவார் என்பதையே அறியாத காலத்தில் 1970 ஆம் ஆண்டுகளிலேய தம்பி என அழைத்து பாசத்துடன் பழகிய தலைவர் பிரபாகரனை விடுதலை இயக்கத்தில் சக தோழனாக, தமிழினத்தின் தலைவராக, தான் நேசிக்கும் ஒரு வழிகாட்டியாக உருவகித்துப் பார்த்து அவரது கொள்கை வழி நின்று உறுதியுடன் செயற்பட்ட மோகனின் ஆளுமையையும், இனத்தின் மீது கொண்ட பற்றுதலையும் அன்று யார் அறிவார்…?
  • தமிழீழ விடுதலைப்புலிகளிற்காக இவர் உருவாக்கிய பாயும் புலியின் அமைப்பைக் கொண்ட   சின்னம்போல வல்வெட்டித்துறையின் பல்வேறு  சங்கங்களிற்காக அன்னபூரணியின் படத்தை மையப்படுத்தி இவர் உருவாக்கிய வல்வெட்டித்துறையின் சின்னமும் இன்று புலம் பெயர்ந்த நாடுகளிலும், தாயகத்திலும் பய்னபடுத்தப்பட்டு வருகின்றது.

1976 ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்ட பொழுது, அங்கே ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் பல விளம்பரப் பலகைகள் இவராலேயே வடிவமைக்கப்பட்டிருந்தன.மோகனின் தத்ரூபமான படங்களைப் பார்த்து மெய்மறந்த அன்றைய பருத்தித்துறை நகரபிதா அமரர் நடராசாவினால்,  தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டுக் களைப்   பெற்ற மோகனின் புகழ் யாழ் குடாநாடு எங்கும் பரவியிருந்தது..

vengadasappilli

திருமேனியார்வெங்கடாசலபிள்ளை-(3)    புலவர்ச.வைத்தியலிங்கம்பி;ள்ளை (4)

வல்வையின் பெரும்புலவராக வாழ்ந்து பிரித்தானியர்களின் மதமாற்றத்திற்குச் சவாலாக விளங்கி தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதற்காக தமிழகத்திலும், ஈழத்திலும் தடம் பதித்த புலவர் வல்வை சங்கரநாதர் வைத்தியலிங்கம் பிள்ளை அவர்களின் உருவ அமைப்புக்களை வைத்து தத்ருபமாக அவரது படத்தை வரைந்து தந்த ஓவியர் மோகன் அவர்களின் கைவண்ணம் இன்றும் உலக வரலாற்றில் தடம் பதித்து நிற்கின்றது. அதேபோன்று வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தாபகரும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கொள்ளுப் பேரனுமாகிய பெரியவர் என்றும்,எசமான் என்றும் பெருமையுடன் அழைக்கப்படும் திருமேனியார் வெங்கடாசலபிள்ளை அவர்களின் உருவப்படத்தையும் வரைந்து அந்த இரு மகான்களையும் எமது கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த மோகன் இன்று ஓவியமாக எங்கள் மனதில் நிழலாடுவதை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களுடைய நெஞ்சே வெடித்துவிடும் போல் இருக்கின்றது.

2014 ஆம் ஆண்டில் கனடாவில் வெளியிடப்பட்ட தமிழ் நீ பொன் சிவகுமாரன் அவர்களின் எழுத்துருவான  “அமெரிக்காவில் அன்னபூரணி என்ற இரட்டைப் பாய்க் கப்பலின் அமெரிக்க பயணத்தை நினைவு கூரும் சித்திரக்  கதைக்கு ஒவ்வொரு பக்கத்திலும் அன்னபூரணியைக் கொண்டுவந்து தத்ரூபமாக ஓவியத்தை வடித்தெடுத்த மோகனின் கைவண்ணம், அந்த நூலுக்கான மெருகையும் கலைவண்ணத்தையும் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது.

oviyam

அமெரிக்காவில் அன்னபூரணி சித்திரக் கதை நூலின் முகப்பு அட்டையும்,               நூலின் உள்ளே காணப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களில்     இடம்பெற்ற   ஒரு ஓவியமும்   (5,6)

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்   கனடாவில் நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவுக்கு முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டுச் சென்றபோதுஇஅந்த விஜயத்தின் பொழுது, கனடாவில் இருந்து,மோகனுடன் தொலைபேசி மூலமாகப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது.

வல்வெட்டித்துறையில் 1991 ஆம் ஆண்டு தொடர்ந்து நான்கு நாட்கள் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்த ஸ்ரீலங்கா அரசாங்கம் 48 மணித்தியாலங்களுக்குள் வல்வை மக்களை அந்த மண்ணில் இருந்து வெளியேறவேண்டும் என்ற துண்டுப் பிரசுரத்தை வான் வழியாகத் தூவி விட்டு அடுத்த அரை மணித்தியாலங்களுக்குள் குண்டுகளை வீசி அழித்த அந்தக் கொடுரமான சம்பவத்தை “முகிழ்த்து நிற்கும் முல்லைத்தீவு” என்ற விவரணச் சித்திரமாக பத்திரிகைத் தொடராக எழுதியத னூடாக  உண்மை நிலை உலகுக்கு அம்பலப்படுத்தப் பட்டிருந்தது.

ஆனால் அது நூல் உருவில் வெளிவரவேண்டுமென்ற எனது புலம் பெயர் உறவுகள் பலர் கேட்டுக் கொண்டபோது, அதனை மேலும் மெருகூட்டி வர்ணப் படங்களையும் சேர்த்து, “வல்வைப் புயல்” என்ற கனதியான  நூலாக வெளியிட்ட பொழுது,அதற்கான உள்முக அட்டைப்படத்தைத் தத்ருபமாக மோகன் வரைந்து அனுப்பிய அந்தப் படம் தான் அவரது கடைசிப்படமாக இருக்குமோ தெரியவில்லை.அந்தச் சம்பவத்தின் ஒரு காட்சியை அப்படியே நெஞ்சைப் பிழித்தெடுககும் வகையிலான ஓவியமாக வரைந்து தந்த மோகனின் அந்தக் கலைவண்ணம் உலகெங்கும் வல்வைப் புயல் என்ற வரலாற்று நூலினூடாக இன்று வியாபித்து நிற்கி;ன்றது.

 

valavai=puyal              வல்வைப் புயல்உள்முக அட்டைபடம் (7) வல்வெட்டித்துறை அமைப்பக்களினால்      பயன்படுத்தும் சின்னங்களில் ஒன்று(8

அந்த உணர்வு பூர்வமான ஓவியத்தை வரைந்து அனுப்பிய மோகன், அன்று கூறிய பதில் தமிழ் தேசியத்தை ஆளமாக நேசிக்கின்ற ஒரு உணர் வாளனாகவே என்னால் பார்க்கமுடிந்தது.அவர்,

“மாஸ்ரர்…..எங்களுடைய மண்ணில் ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப் பெரிய

அவலத்தை நீங்கள் துணிந்து நூலாக வெளியிடும் பொழுது,அதில்

என்னுடைய பங்களிப்பும் இருப்பது எனக்கும் பெருமை தானே….” எனறு கூறியபொழுது 1980 களில் நான் பார்த்துப் பழகிய மோகனாகவே பார்த்தேன்.

ஒரு விபத்தின் பொழுது,தனது ஒரு கண்பார்வையை இழந்த நிலையில்இ தனது கை வண்ணத்தினால் பல நூற்றுக் கணக்கான ஓவியங்களை வரைந்து தமிழ் உலகுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்த மோகனின் கைகள் இன்று ஓய்ந்து விட்டன…..அந்த உன்னதமான கலைஞன் தனது தாயகத்தில் இருந்து இடம் பெயர்ந்து தமிழகத்தில் வாழ்ந்த பொழுது அமரத்துவம் அடைந்தமை வல்வையின் உன்னதமான கலைக்கான ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.

ஆம்…அந்த அமர காவிய நாயகன் எங்களுடன் வல்வெட்டித்துறை மண்ணில் வாழ்ந்த காலத்தில், அவரது முக்கியத்துவம் எம்மவர்களால் உணரப்படாத நிலையில் தமிழகத்திற்குச் சென்ற பொழுது, தென்னிந்திய ஓவியக் கலைஞர்களுக்கு ஈடாகத் தனது ஓவியக் கலையை மக்களின் நெஞசத்தில் ஆளப்பதித் எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த  ஒரு உன்னதமான கலைஞனின் இழப்பை ஈடு செய்வதற்கான அவரது வாரிசுகள் உருவாக்கப்பட வேண்டும்.அதுவே அந்த மாபெரும் ஓவியப் போராளிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்….!ரப்படாத நிலையில் தமிழகத்திற்குச் சென்ற பொழுதுஇ தென்னிந்திய ஓவியக் கலைஞர்களுக்கு ஈடாகத் தனது ஓவியக் கலையை மக்களின் நெஞசத்தில் ஆளப்பதித் எமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த  ஒரு உன்னதமான கலைஞனின் இழப்பை ஈடு செய்வதற்கான அவரது வாரிசுகள் உருவாக்கப்பட வேண்டும்.அதுவே அந்த மாபெரும் ஓவியப் போராளிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்…

வல்வை.ந.அனந்தராஜ்

===========================

valvai=puyalகண்ணீர் அஞ்சலி – ஓவியக்கலைஞர் மோகனதாஸ் ராமதாஸ்
…………………………………………………………………………………………………………………………
மையெடுத்து விரல்கொண்டு வியக்கவைக்கும் ஓவியங்களைப்படைத்த ஒப்பற்ற கலைஞனின் மறைவில் இகுருவி நிறுவனமும் தலை கவிழ்ந்து கண்ணீர் சொரிகின்றது….!
பலநூறு சொல்கொண்டு கூட வடித்துவிட முடியாத உணர்வுகளை  ஒரு சித்திரத்துள் சிதையாமல் கொடுக்கும் சிற்பி அய்யா நீர்.

இ குருவிக்காய் நீர் கடைசியா இயற்றித்தந்த ஓவியத்தின் ஈரம் காயமுன் கண்மூடிப்போனீரே?

அதுதான் நீங்கள் இறுதியா வரைந்த ஓவியம் ..

உங்கள் இணையற்ற படைப்புகழுக்காய் நாம் இன்னும் காத்திருக்கிறோம் அய்யா!.

உம் துயரில் மூழ்கிய உற்றவருக்கும் மற்றவர்க்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இறைவன் சீரடியில் இடம்பிடித்து ஆத்மசாந்தியைப்பெற்றுக் கொள்ள
இருகரம் நீட்டித் தொழுது நிற்கின்றோம் இறைவனிடம்….

நன்றி மூலம் :- http://ekuruvi.com/mohan-arts-valvettiturai-2015/ekuruviTamilNews

 

Edited by வல்வை சகாறா

கண்ணீர் அஞ்சலி!….. மோகன்ஆட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)

கண்ணீர் அஞ்சலி!…..
மோகன்ஆட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)
வல்வெட்டித்துறை
வல்வையில் வந்தது 06ஃ07ஃ1949
வானகம் சென்றது 09ஃ11ஃ2015

இழப்புக்களும் இறப்புக்களும் எங்களுக்கு புதியவை அல்ல. ஒவ்வொருமுறையும் அவைகளை சந்திக்கும் பொழுது உடைந்துபோகின்றோம். இருந்து அழுகின் றோம. பின்னர் எம்மைநாமே தேற்றிக்கொள்கின்றோம் எழுந்துநடக்கின்றோம். ஓயாத அலைகளால் தினம்தினம் தாக்கப்படும் வல்வெட்டித்துறையின் கரைகளைப் போலவே அக் கரையில் தோன்றும் மனிதர்களான எங்களிற்கும் இவை பாலபாடங்களே. எனினும் சுனாமியாய் கரையைமேவி ஊருக்குள் புகுந்துதாக்கும் அலைகள் சிலவேளைகளில் எம்மை நிர்க்கதியாக்கி விடுகின்றன. கண்களை கண்ணீரில் மூழ்கடித்து விடுகின்றன. கடல்நீரின் கரிப்பைத் தாங்கும் கண்களினால்  சிலஉறவுகளின் பிரிவினை மட்டும் தாங்க முடிவதில்லை. இவ்வாறாகத்தான் மோகண்ணா என்ற உறவும் எங்களை நிர் கதியாக்கிவிட்டு பிரிந்து சென்றுள்ளது . மற்றவர்களால் பெரும் ஓவியனாகமட்டும் அறியப்பட்ட மோகண்ணா ஒரு வரலாற்றின் சாட்சியானவர் . 1970 ஆண்டு தம்பி என அழைத்து பழகத்தொடங்கிய  தலைவர் பிரபாகரனை விடுதலை இயக்கத்தில் சக தோழனாக, தமிழினத்தின் தலைவராக, தான்வணங்கும் தெய்வமாக பலநிலைகளில் உயர்திப்பார்த்த உத்தமர். வல்வெட்டித்துறை ஊறணியில் இருந்து பொலிகண்டி மணிக்கம்பிதோட்டம் வரை சுமார்ஒன்றரை மைல்தூரம் ஒற்றைப் புறாவை துரத்திச் சென்று உறுதியுடன்பிடித்த பிரபாகரனை தனது நெஞ்சில் சுமந்துதிரிந்த பிடிவா தக்காரர் மோகண்ணா ஆவார்.

துரையப்பா கொலைவழக்கில் ‘வேம்படி மோகன்’ என்ற பெயரில் பஸ்தியாம் பிள்ளையால் தீவிரவேட்டைக் குள்ளாகியவர் இராமதாஸ் மோகனதாஸ் ஆவார். 1916இல் அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய Goldwin pictures நிறுவனமே பின்னாட்களில் Metro Goldwyn mayer எனும் பிரமாண்டமான Media Company உருவா யிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் Trad mark ஆக காணப்படுவது திரைப்படசுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1976இல் மோகண்ணா உருவாக்கிய தமிழீழ விடுதபை; புலிகளின் உத்தியோகபூர்வமான அடையாளச்சின்னமே மதுரை ஓவியர் நடராசா விற்கு பின்னாட்களில் பொன் னாடை போர்த்தியது எத்தனை பேருக்கு தெரியும். பிறந்த இடத்தால் திறமைபெற்ற மோகண்ணா வாழ்ந்தஇடத் தால் வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டவர். ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என செயற்பட்ட எங்கள்தலைவரின் கொள்கை இன்று மோகண்ணாவின் முன்னால் கேள்விக்குறியாகி நிற்கின்றது. குழந்தையை பெற்றவன் தந்தையா? குழந்தைக்கு சட்டைதைத்தவன் தந்தையா? சாட்சிகளாய் பலரிருந்தும் தலைவரின் மனதில் தானிருக் கின்றேன் அதுபோதும் எனக்குஎன தன்னடக்கத்துடன் வாக்குமூலம் தந்தவர் மோகண்ணா!… தமிழீழ விடுதலைப்புலிகளிற்காக இவர் உருவாக்கிய அடையாள  சின்னம்போல புலம்பெயர் வல்வெட்டித்துறை சங்கங்களிற்காக அச்சுஅசலான அன்னபூரணியின் படத்தினை மையப்படுத்தி இவர் உருவாக்கிய சின்னமும் அதிஅற்புதமானது.

இயற்கையிலேயே கலைத்திறமை வாய்க்கப்பெற்ற இவர் பாடசாலைக்காலத்தில் வல்வெட்டித்துறை சிதம்பராக்கல்லூரியில் பாலாமாஸ்டரிடம் ஓவியக் கலையை கற்றிருந்தார். பின்பு இருபதாம் நூற்றாண்டின் சிறந்தஓவியர் என தமிழகத்தின் முன்னால் முதலமைச் சரான சி.என்.அண்ணாத்துரையால் கொளரவிக்கப்பட்ட K.மாதவனால் பட்டை தீட்டப்பட்டவர். ஓவியம் சோறுபோடுமா என்றவர்கள் மத்தியில் ஓவி யத்தை முழுநேரத்தொழிலாக வரித்துக்கொண்டு வாழ்ந்து காட்டியவர். வல்வெட்டித் துறை சுங்கவீதியில் தனது ஓவியக்கடையை ஆரம்பித்து பருத்தித்துறை சென்றல் தியேட்டருக்கு மருகாமையில் ‘மோகன்ஆட்ஸ்’ எனும்பெயரில் இவரது வியாபார ஸ்தானம் பரந்து விரிந்தது. வடமராட்சியின் ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் இவரது ஓவியங்கள் அன்று துலங்கின. வல்வெட்டித்துறையின் சமூகசிற்பியான பெரியவர் வெங்கடாசலத்தையும் வைத்திலிங்கபுலவரையும் தத்ரூபமாக வரைந்து எங்கள் மத்தியில் நடமாட வைத்தவர் மோகண்ணாதான். வல்வெட்டித்துறையில் யுத்த காலத்திற்கு முன்பு வருடாவருடம் களைகட்டும் அருள்மிகு முத்துமாரியம்மனின் இந்திரவிழாவில் இவரது கைவண்ணத்தில் உருவாகும் போட்டிக்கோவில் இவரது திறமை அதிஅற்புதமாக ஜொலிக்கும். வல் வெட்டித்துறையின் கையெழுத்து சஞ்சிகைகளான அலைஒளி மற்றும் அருவி என்பன மோகண்ணாவின் வண்ணச் சித்திரங்களிற்காகவே பலரின் கைபட்டு விரிந்தன. 1976 இல் பருத்தித்துறை நவீன சந்தை திறக்கப்பட்டபோது அதன் தொண்ணூறுவீதமான விளம்பரபலகைகளை உருவாக்கியமைக்காக அன்றைய முதல்வர் நமசிவாயம் நடராசாவினால் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டப்பெற்றவர். கலைக்காகவே பிறந்து கலைக்காகவே வாழ்ந்த இவர் திரு.வையாபுரிஅப்பா அவர்களிடம் தற்பாதுகாப்பு மற்றும் உடற் பயிற்சிகளும் கற்றிருந்தார். இதுபோலவே சிலம்பக்கலையை மதிப்புக் குரிய சோதிசிவத்திடமும் கராட்டிக்கலையை ஆசான் இரத்தினசோதியிடமும் கற்று தேறியிருந்தார். கலைக் காவிய நாயகர்களான வல்வை ஹெலியன்ஸ் நண்பர்கள்  நாடககுழுவினரின் நடிகரும் ஒப்பனை கலைஞருமாக மிளிர்ந்தவர்.

‘விடுதலைப்புலிகள்’ பத்திரிகையின் முதலாவது ஆஸ்தான ஓவியராகி இவர் வரைந்த ஓவியங்கள் எண்ணற்றவை கேணல்கிட்டு லெப்டினன்கேணல் குமரப்பா லெப்டினன்கேணல் புலெந்திரன் லெப்டினன் கேணல் விக்டர் கப்டன் பண்டிதர் கப்டன் லாலா என பலபோராளிகள் மற்றும் தளபதிகள் மறைந்தபின்னும் அதிரடிப்படை சீருடையில் சிரிக்கும் அத்தனை படங்க ளும் இவரின் கைவண்ணங்களே. பிரபாகரனின் நீண்டநாள் கனவானது பின்னாட்களில் விடுதலைப் புலிகளின் முதலாவது கப்பலான ‘சோழன்’ ஆக மாறிய போது தலைவரின் விருப்பத்திற்கு அமைய அத னில் பணிசெய்து தனது கண்களின் ஒன்றினையும் இழந்தார்.

நிரம்பிய வரலாற்றுஅறிவும் தொடர்ச்சியானதேடலும் இடைவிடாதவாசிப்பும் ஒரு வரலாற்றுஅறிஞனாக இவரை மாற்றியிருந்தது. திருமாவளவனான கரிகாலன் ராஜ ராஜசோழன் ராஜேந்திரசோழன் எனப்பலரின் தரவுகளையும் தலைவர் பிரபாகர னுடன் ஒப்பிடும் அதீதஆற்றல் இவருக்கிருந்தது. ஈழத்தமிழனின் கடலோடும் பெருமையையும் வல்வெட்டித்துறை கடலோடிகளின் திறமையையும் பறைசாற்றும் ‘அமெரிக் காவில் அன்னபூரணி’ நூலின் நூற்றி எழுபத்தைந்து படங்களையும் வரைந்து அந்தவரலாற்றிற்கு மீளவும் உயிரூட்டியவர். அதுபோலவே தலைவர் பிரபா கரனின் முழுவாழ்கையையும் அந்நிகழ்வுகளையும் தன்கைவண்ணத்தால் வரைய எண்ணமிட்டு செயற்பட்ட மோகண்ணாவின் இழப்பானது என்றும் எவராலும் நிரப்ப முடியாதது.

சிலகாலங்களே அவருடன் இணைந்து செயற்பட்டபோதும் அவரது இழப்பின்துயர் அளவிடமுடியாதது. அன்னாரின் குடும்பத்துடன் துயரினை பகிர்ந்து அவருக்காக தலைவணங்கும்
வர்ணகுலத்தான்
10ஃ11ஃ2015

http://www.velichaveedu.com/%E0%AE%BF-111115-03/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஓவியர் மோகன்வல்வையின் ஒரு பெரும் சொத்து

 

மோகன்என்றுஅழைக்கப்படும் இராமதாஸ் மோகனதாஸ், படிக்கும் காலத்தில் சிதம்பரா சித்திர ஆசிரியர்பாலாமாஸ்டரின்மேற்பார்வையில் ஓவியம்வரைந்து, பேரறிஞர் அண்ணாவினால் கௌரவிக்கப்பட்ட தமிழ் நாட்டு ஓவியர் மாதவனின் பள்ளியில் பட்டை தீட்டப்பட்டு சிறந்த ஓவியரானார்

 

chithambara-college-founder-chithambara-prabaharan-grand-father-thirruvengadam.jvalvettithurai-inthirani-hospital-founde

ஓவியத்தை ஒய்வு நேரத் தொழிலாகக்கொள்பவர்கள் மத்தியில் முழுநேர ஓவியராக தனது தொழிலில் கால்பதித்தார். இவரது கைவண்ணத்தி ல்வல்வையிலும், பருத்தித்துறையிலும் விளம்பரப் பலகைகள் மிளிர்ந்தன.

 

யாழ்குடாநாட்டில் மட்டுமல்ல அதைத் தவிர்ந்த வேறு இடங்களிலும் கோயில்களில் இவரின் வண்ணத் தூரிகை தன் திறமையைக் காட்டத்தயங்கவில்லை.

வல்வையில் 1974 ஆம் ஆண்டின் காலப் பகுதியில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களினால் வல்வை வைத்தியலிங்கப் புலவரின் பெருமையை அறிந்து கொண்ட சில இளைஞர்கள் அவரின் உருவப்படத்தை வல்வை சன சமூக சேவா நிலையத்தில் மிளிர வைக்க விரும்பினர்

 அந்நாளில் லீலா பஞ்சாங்கக் கலண்டரில் புலவரின் தம்பி மகனான சித்திர ஆசிரியர் நடராசா அவர்களினால் வரையப்பட்ட  புலவரின் மார்புடன் கூடிய வரிப்படம் அவரது நினைவு நாளில் செப்டம்பர் 3 இல் வெளிவந்துகொண்டிருந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு புலவரின் முழுஉருவப்படத்தையும் வரைந்து, இன்று பட்டி தொட்டியெங்கும் அவரது உருவம் வெளிவரக் காரணமாயிருந்தவர் ஓவியர் மோகனே!

alai-oli-valvettithurai.jpg

 

அது மட்டுமல்லாது 2008 இல் அவுஸ்திரேலியாவிலுள்ள வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் வல்வையின் மூன்று முத்துக்களான, இந்திராணி ஆஸ்பத்திரியைக் கட்டிய தெய்வத்திரு அப்புக்க்குட்டியா பிள்ளை, சிதம்பரக் கல்லூரியை நிறுவிய தெய்வத்திரு சிதம்பரப்பிள்ளை, வல்வை சிவன் கோவிலைக் கட்டிய தெய்வத்திரு வெங்கடாசலம் பிள்ளை ஆகியோரின் முத்திரை வெளியிட முன்வந்த போது பெரியவரின் உருவப்படத்தை வரைந்ததுடன் மற்றைய இருவரின் உருவப்படத்தையும் வரைந்து தந்தவரும் ஓவியர் மோகனே!

 

artist-mohan.jpg

தொழிலுக்காக ஓவியம் வரைந்தாலும் 1971இல் வல்வை சன சமூக சேவா நிலையத்தால் வெளியிடப்பட்டஅலை ஒளிகையெழுத்துச் சஞ்சிகைக்கு 1974 இல் சித்திரம் வரைந்தது அவரது ஆத்மாவைக் குளிர வைத்தது. பின்னர்1975 இல் வெளி வந்தஅருவிகையெழுத்துச் சஞ்சிகையின் கௌரவ ஓவியராகி, சஞ்சிகையின் முழு ஓவியங்களையும் வரைந்ததுடன், கண்ணன் என்ற பாலசுப்ரமணியத்தின்ஹைட்ரோஜின்பொம்ப்என்ற சித்திரக் கதைக்கு ஓவியம் வரைந்து வல்வை இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

 

 

வல்வையின் பல படைப்பாளிகளின் நூல்களுக்கு ஊதியம் எதுவும் பெறாது ஓவியம் வரைந்து தனது ஊர்ப்பற்றையும் இலக்கியப்பற்றையும் வெளிக்காட்டினார்.

 

இளவயதிலிருந்து ஈழ நெருப்பைத் தன் நெஞ்சிலே சுமந்த இவர் யுத்த அனர்த்தத்தினால் இந்தியா சென்றாலும் ஈழத்திற்காக அளப்பரிய தியாகங்களைச் செய்தவர். இவ்வுலகை நீத்து வானுலகம் புகும் காலங்களிலும்வல்வை இலக்கிய வட்டம்’, ‘ஈழம்என்ற கனவுலகிலேயே மிதந்தவர் இவர்.

 

- அவுஸ்திரேலியாவில் இருந்து 

வல்வை. சு. சக்திவடிவேல்

 

நன்றி மூலம் :- http://www.valvettithurai.org/valvettithurai-news-5344.html

 

 

 

 

மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு – ச.ச.முத்து

November 11, 2015
செய்திகள் 0
132
மண்ணின் கலைஞர்கள் இருவரின் மறைவு     – ச.ச.முத்து
சித்திரவேல்சாமியும்,மோகணண்ணாவும் மறைந்துவிட்டார்கள் என்பது எல்லா மறைவுச்செய்திகளையும் போல இயல்பாக எடுத்து மிக இயல்பாகவே எம்மை கடந்துபோய்விடக்கூடியவை அல்ல.
ஏனென்றால் இந்த இருவரும் எமக்கு இன்னொரு உலகத்தை தமது கலைப்படைப்புகள் மூலம் திறந்துவைத்த கலைஞர்கள்.ஒருவர் எமது பாரம்பரியமான கூத்துக்கலையை அதன் அத்தனை அழகியலுடனும் அதன் மிகச்செறிவான பண்பாட்டுவளத்துடனும் எமக்கு எடுத்து சொன்னவர்.(சித்திரவேலாயும்).கூத்துகலையின் அத்தனை பாத்திரங்களுக்கும் ஏற்றதான ஒரு சாரீரவளமும், உச்சஸ்தாயில் பாடினாலும் பிசிர் வீழாத அற்புதமான குரல் வளமும் சித்திரவேலாயுதம் அவர்களின் சொத்து.
இன்னொருவர் மானுடத்தின் மிக முன்னோடியான வெளிப்படுத்தும் கலையான ஓவியத்தை எமது மண்ணுக்கே உரியதாக எமக்கு காட்டியவர்.(மோகனதாஸ்)நிறங்களை கலப்பதிலும் அதனை மிக சாதாரணமாக தேவைப்படும்படும் இடங்களில் தீட்டி நாம் எப்போதும் பார்த்து வந்த அதே கடல்அலைகளதும்,கடற்கரையினதும் காட்சிகளை மிகப்புதிதான ஒரு கோணத்தில் எமக்குள் செலுத்தி பரசவப்படுத்திய ஓவியர் மோகனதாஸ்.
இந்த இருவரினதும் மரணச்சேதி கேட்டபோது எமது பள்ளிநாட்களில் இந்த இருவரையும் எத்தனை அண்ணாந்து பார்த்து இருக்கின்றோம் என்ற நினைவுகளே மீள எழுகின்றன.
ஒரு முழுஇரவு முழுதும் அரங்கத்தை ஆளுமை செய்த அந்த குரலுக்கு சொந்தகார மனிதரான சித்திரவேலாயுதம் அவர்களை அதன் பின்னர் தூரத்தே கண்டாலும்கூட அத்தனை காத்தான் பாத்திரமும் அவற்றின் சாகசங்களும், கிளியாக மாறிடும் அற்புதமும்,ஏழுகடல் தாண்டிய சாதனையும்,கழுமரத்தில் ஏறுவதற்காக ஒவ்வொரு படியாக ஏறியபொழுதின் காட்சிகளும் எப்போதும் எமக்குள் எழுந்து மிகப்பெரும் மரியாதையுடனேயே அவரை கடப்போம்.
அதன்பின்னர் எமது தாயகத்தின் அத்தனை முனைகளிலும் காத்தான்கூத்துகளையும்,வடமோடி கூத்துகளையும் பார்த்திருந்த பொழுதுகளில் ஏனோ அவற்றுடன் எம் ஊரின் பெரும் கலைஞன் சித்திரவேலாயுதம் அவர்களை பொருத்தி ஒப்பிட்டு பார்த்து பெருமை கொள்வது பழக்கமாக இருந்தது.
அதனை போலவே எமது வயது வளரவளர ஓவியத்தின் அத்தனை நிறத்தேர்வுகளையும் அதன் ஒவ்வொரு கோடுகளும் திறந்துவைக்கும் புதிய சிந்தனைவெளியையும்; புரிந்துகொண்டபோதும் எனக்கு ஏனோ எம் சிறுவயதில் வல்வை காய்கறிச்சந்தைக்கு முன்னால்உள்ள கிட்டங்கியில் மோகனதாஸ் வரைந்து கொண்டிருந்த கண்ணாடி ஓவியங்களின் அழகு என்னவோ மிகமிக மனதுக்கு இதமானதாகவே இன்றும் தொடர்ந்துவருகிறது..இப்போதும்கூட.
இத்தனைக்கும் ஓவியத்தின் பின்நவீனத்துவ பாணி,அதன் வான்காக் பாணி,மொனெட்பாணி என்று அத்தனை ஓவியமரபுகளும் தெரிந்த பின்னும்கூட மோகனதாஸ் என்ற என்மண்ணின் கலைஞனை எந்தவொரு விமர்சனங்களும் இல்லாமல் மனது ஏற்கிறது என்றால் அவன் எம் சிறுவயது ஆகர்சங்களில் ஒருவராக இருந்திருந்தார் என்பதாலேயே.நிற்க,
இந்த இருபெரும் கலைஞர்களையும் எட்ட இருந்து பார்த்து ரசித்தபொழுது தாண்டி இவர்களை அணுகி பழக ஏற்பட்ட சந்தர்பங்களையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும்.
எமது இளம்பறவைகள் கழகத்தால் நானும் வல்வெட்டித்துறை குமார் அச்சகத்தின் இரண்டாவது மகன் குமாரும் இணைந்து பறவை என்று ஒரு கையெழுத்து இதழை சந்தி வாசிகசாலையில் ஆரம்பித்தோம்.
அதன் முதலாவது இதழுக்கு குமார் (கிருஸ்ணகுமார்) வரைந்த ஒரு ஓவியம் யாசீர்அரபாத் ஒரு கையில் ஒலிவ் இலையுடன் ஐநா மண்டபத்தில் நடந்துவரும் தோற்றம்.ஏறத்தாள பத்து பதினைந்து மாதிரிகள் வரைந்து கொண்போய் மோகனதாஸ் அண்ணாவிடம் கொடுத்து அதில் மாற்றங்களை திருத்தங்களை கேட்டோம்.அப்போதுதான் எனக்கும் குமாருக்கும் ஒருவரின் கை எப்படி வரையப்படவேணும் ஒரு முகத்தின் பக்கவாட்டு தோற்றத்தின் ஒளிபடும் இடங்கள் எவை என்று ஏராளம் சொல்லி தந்தார் மோகன்அண்ணா.
அன்று மோகன்அண்ணாவிடம் ஓவியத்தின் நுட்பங்களை  படித்த குமாரை வரலாறு தமிழர்களின் வரலாற்றின் மிகப்பெரும் அதிமானுடனாக்கியது.சங்கிலியனுக்கு பின்னர் தமிழர் இறைமையை மீள எடுத்த ஒருவனான குமார் உருவாக்கிய அத்தனை வெளியீடுகள்,பத்திரிகைகள்,பிரசுரங்கள் எல்லாவற்றிலும் அவனின் நிறத்தேர்வுகள்,பக்க லைன்கள் என்று அனைத்து தேர்வுகளும் ஒரு அற்புதமான தெரிவாக இருந்ததற்கு காரணங்களில் மோகன்ஆட்ஸ்ம் ஒருவர்.
ஏன்,குமார் பின்பொருநாள் மெக்சிகோ நாட்டின் மெக்சிகோசிட்டியில் ஓவியத்தை ஆழ கற்று திரும்பி அவன் வரைந்த ஓவியங்களை பற்றி அவன் என்னுடன் கதைத்த பொழுது ஒவ்வொன்றிலும் மோகன்அண்ணா அன்று ஆரம்பித்து வைத்த ஓவியகலை அறிமுகத்தை மறக்காமல் நினைவு கொண்டவன்.
அதனை போலவே எமது பறவை இதழின் முலாவது இதழுக்கு எம் பண்பாட்டின் மிகவும் செழுமை மிக்க கூத்துகலையின் கலைஞன் சித்திரவேலாயுதம் அவர்களையே நேர்கண்டு எழுத என்று முடிவு எடுத்து சென்றபோது எந்தஒரு அறிமுகமும் இல்லாத எமக்கு சிறிய வயதவர்களான எமக்கு மிக ஆறுதலாக எல்லாம் விளக்கி எம் கேள்விகளுக்கு பதிலையும் பாட்டுகளையும் தந்த அந்த அற்புத கலைஞன் என்றும் நினைவுகளில் இருக்க வேணும்.
நாளையும் ஏதோ ஒரு இரவுப்பொழுதில் காற்றில் மிதந்துவரும் காத்தான்பாடல்களில்,தமிழர்களின் பண்பாட்டு குறியீடுகளில் சித்திரவேலாயுதம் என்றென்றும் இருந்துவருவார்.
இன்று நாம் பார்க்கும் முதலாவது மாவீரன் சத்தியநாதனின் படத்துக்கு ஏற்றப்பட்ட நிற மெருகும், சத்தியநாதனின் சீருடையும் அதனை போலவே பண்டிதரின் வெறும் அடையாளஅட்டை போட்டோவுக்கு போராளி சீருடை வரைந்த அந்த மோகன்அண்ணா நாளை நாம் பார்க்கும் அத்தனை ஓவியபொழுதுகளிலும் நினைவிருப்பார்.
பண்பாடு என்பது வேறு என்ன..? இப்படியான மனிதர்கள் தத்தம் பங்குக்கு முன்னெடுத்த கலை வெளிப்பாடுகளின் மொத்த திரட்சிதானே..
என்றும் நினைவு கொள்ள வேண்டியவர்கள் இவர்கள்.எம் மண்ணின் கலை வெளிப்பாடு இவர்கள்.
– ச.ச.முத்து-
 
நன்றி மூலம்:- http://www.velichaveedu.com/np-111215-06/

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சகாரா , ஆதவன்....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.