Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை மட்டக்களப்புக்கு விஜயம்

Featured Replies

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை மட்டக்களப்புக்கு விஜயம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன், வியாழேந்திரன், மாகாணசபைப் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மாகாணசபை உறுப்பினரான நடராசா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் தொடர்பில் பல விடயங்கள் ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

batti%20visit%20mavi7880d.jpg

http://malarum.com/article/tam/2015/11/17/12532/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-uf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவை இப்போதும், தமிழரசு கட்சியில் இருக்கிறாரா?
ஆளின் குரலை பாராளுமன்றத்தில், கேட்பதில்லை. ஒதுங்கி விட்டார் என நினைத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

மாவை இப்போதும், தமிழரசு கட்சியில் இருக்கிறாரா?
ஆளின் குரலை பாராளுமன்றத்தில், கேட்பதில்லை. ஒதுங்கி விட்டார் என நினைத்தேன்.

அதிகப்பிரசங்கி சுமந்திரன் இருக்கும் வரைக்கும் மற்றவையின்ரை சத்தம் பெரிசாய் கேக்காது...:grin:

சுமந்திரன் மாமி உடைத்தது மண்குடமே – மாவை விக்கி மருமகள் உடைத்த குடம் பற்றி ஆராய்வோம் – சம்பந்தன்

 

 

‘முதலமைச்சரை நீக்க வேண்டுமென்ற கருத்து சுமந்திரனின் கருத்தாக இருக்கலாம். ஆனால் அதுவே கட்சியின் முடிவாக இருக்காது. இந்நிலையில் சுமந்திரனின் கருத்துக் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். ஆகவே இதனை யாரும் விமர்சிப்பதில் அர்த்தம் இல்லை’ இவ்வாறு திருவாய் மொழிந்திருக்கிறார் மாவை.

மற்றவர்கள் விமர்சிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். இதுவரை எந்த விடயத்துக்கு சுமந்திரனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்பதை மாவை தன்னை விட அர்த்தம் தெரியாதவர்களுக்கு புரிய வைக்க வேண்டியுள்ளது.

01. கட்சியில் யாரிடம் அனுமதி பெற்று அரசுத்தரப்பினரோடு கிரிக்கெட் ஆடினார்?

02. விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று தமிழரசுக்கட்சி கருதுகின்றதா? கருதவில்லையாயின் தென்னிந்தியச் திருச்சபை தொடர்பான வழக்கொன்று கிளிநொச்சி நீதிமன்றதில் முன்னெடுக்கப்பட்ட போது புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டமை தொடர்பாக அவர்மீது கட்சி எடுத்த நடவடிக்கை என்ன?

03. புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடும் சுமந்திரன் ஸ்ரீலங்கா படையினரைக் கௌரவிக்கும் வகையில் ஓர்கிட் மலரைத் தனது கோட்டில் சூடிக் கொண்டு பாராளுமன்றம் சென்றாரே. இந்நடவடிக்கையானது கட்சியின் நிலைப்பாட்டின் வெளிப்பாடா?

04. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட வடக்கு மாகாணசபையின் சகல உறுப்பினர்களும் இணைந்து ஏகமனதாக இறுதியுத்தத்தில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதை விமர்;சிக்கும் உரிமையை இவருக்கு யார் கொடுத்தது? இப்படியான வீட்டோ அதிகாரம் நிச்சயமாக மாவைக்கு இல்லைத்தான். சுமந்திரனைத் தவிர வேறு யாருக்கு இவ்வாறான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

05. வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு என்ற தீர்மானத்தை கட்சி உத்தியோக பூர்வமாக எடுத்துள்ளதா? அவ்வாறில்லையாயின் இப்படியெல்லாம் உளற அவரால் எப்படி முடிகிறது? சமாதானம் நிலவிய கால கட்டத்தில் மீண்டும் மெல்லத் தளிர்த்த தமிழ் – முஸ்லீம் உறவுகளைச் சீர்குலைக்கும் முகமாக வரலாறு தெரியாத வகையில் உரையாற்றியமை தொடர்பாக கட்சி எடுத்த நடவடிக்கை என்ன?

முஸ்லிகளின் வெளியேற்றம் நியாயப்படுத்த முடியாதது தான். எனினும் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் இது இருதரப்பு விவகாரம் என்ற நிலையை அடைந்தது. வீரமுனைப் பிள்ளையார் ஆலயம், திராய்க்கேணி, அட்டப்பள்ளம் முதலான இடங்களில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் குறிப்பாக ஆண்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்படமை தமிழரின் விகிதாசாரத்தை குறிப்பாக இனப்பெருக்கத்தைப் பாதிக்கும் செயல்கள் என்ற விடயத்தை தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட போது அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மாவை அறியாரா? நிலைமை இவ்வாறிருக்க ஒரு தலைப்பட்டமாக இனச்சுத்திகரிப்பு என்ற பதத்தை ஏன் சுமந்திரன் பயன்படுத்தனார்.

06. கட்சியிடம் ரிக்கற் கேட்டு விண்ணப்பிக்கவில்லை முதல்வர். கூட்டமையிலுள்ள சகல கட்சிகளும் ஒரு மனதாக கையொப்பமிட்டு வலிந்து கேட்டதால்தான் போட்டியிடச் சம்மதித்தவர். உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் தன்னைத்தானே பி.எம்.டபிள்யூ கார் என்று சொல்லிக் கொள்ளும் சட்டத்தரணி சுமந்திரன் வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்ய கட்சியின் எந்தப் பிரிவு அனுமதித்தது?

07. சுமந்திரன் சொன்னது போன்று முரண்பாடான ஒரு கருத்தை அனந்தி சொல்லியிருந்தால் அவர் மீது
கட்சி எத்தனை வாரம் அல்லது நாள், மணித்தியாலம், நிமிடம், செக்கனில் நடவடிக்கை எடுத்திருக்கும்?

நடக்கப்போவது எதுவுமே இல்லை. பிறகெதற்கு பந்தா பேச்சு? மாவையை எவருமே கணக்கில் எடுப்பதில்லை. எடுத்திருந்தால் வல்வை நகரசபை, வலி கிழக்கு, வலி தென்மேற்கு, காரைதீவு முதலான உள்;ராட்சிச் சபைகளில் குழப்பம் நிகழாதிருந்திருக்கும்.

இவரது எச்சரிக்கை கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகத்தையே கட்டுப்படுத்தவில்லை, இந்நிலையில் சம்பந்தன் ஐயாவின் முழுமையான ஆசீர்வாதம் பெற்ற சுமந்திரனை கேள்வி கேட்கவோ ஏன் முறைத்துப் பாரக்கவோ முடியாது ‘ஏன்ன என்னிடம் விளக்கம் கேட்கப் போகிறீளோ? என்று சுமந்திரன் கேட்டால்’ இந்தப் பத்திரிகைகளுக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது’ என்று தலையைச் சொறிந்து கொண்டு சொல்லும் நிலை தான் அவருக்கு ஏற்படும்.

இளைஞர் பேரவைக்;கால மாவைக்கும், 50 வருடத்துக்கு மேல் கட்சியில் அங்கத்துவம் உள்ள பேராசிரியர் சிற்றம்பலத்துக்கும் கொடுக்கும் மதிப்பு என்ன, சுமந்திரனின் உயரம் என்ன என்பதைச் சகலரும் அறிவர்.

மாவையின் செய்தி வந்த அதே நாள் வேறொரு நாளிதழில் சம்பந்தன் ஐயாவின் செய்தி வெளிவந்தது. ‘நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் முதலமைச்சர் வெளியிட்ட சில கூற்றுக்கள் மற்றும் அவரின் நடவடிக்கைகள் சம்பந்தமாகச் சில கேள்விகள் எழுப்பட்டது உண்மை.

அது தொடர்பாக அவரிடம் நாங்கள் பேசவில்லை. பேச இருக்கிறோம். விரைவில் பேச்சு இடம்பெறும்’ என்றே கூறினார். இதில் எந்த இடத்திலும் சுமந்திரனினடம் கட்சி விளக்கம் கோரும் என்று அவர் கூறவில்லை. முதலமைச்சரை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக எவரும் கூறியிருந்தால் அது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார். சுமந்திரன் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோணேச்சரப் பெருமான் ஒரு போதும் சம்பந்தன் ஐயாவின் கனவில் வந்து சொல்லாமாட்டார். இப்போது தெல்லாம் யாருக்கு தேசியப் பட்டியலில் எம்.பி பதவி என்பதைக் கூட கோணேச்சரப் பெருமான் கனவில் தான் காட்டுகிறார்.

என்ன செய்வது சுமந்திரனுக்கு வாக்களித்த யாழ்.கிளிநொச்சி மாவட்ட மக்கள் 58.043 பேரும் தங்கள் தலையை மோதுவதற்குப் பலமான சுவரொன்றைத் தேட வேண்டியது தான். சும்மாவா சொன்னார் யோகர்சுவாமிகள் ‘யாழ்ப்பாணத்தாருக்கு காசியில் நான் கருமாதி செய்துவிட்டேன்’ என்று.

-மட்டு நேசன்-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.