Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

24 நவம்பர் 2015

கனடாவின் முக்கிய இந்து ஆலயம் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சாட்டு- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:

கனடாவின் முக்கிய இந்து ஆலயங்களில் ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் ரொரன்டோவில் அமைந்துள்ள கந்தசாமி ஆலயம் இவ்வாறு புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ரொரன்டோ கந்தசாமி ஆலயம் இவ்வாறு பணம் வழங்கியமை தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் அந்நாட்டு மத்திய நீதிமன்றிற்கு இது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், இந்த ஆலயத்தினை உலகத் தமிழர் இயக்கம் நடத்திய வந்ததாகவும் கொழும்பில் வெளியான தகவல்களில் கூறப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் இயக்கம் கனடாவின் பயங்கரவாத இயக்கப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆயலத்தின் பூசகர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கந்தசாமி ஆலயத்தினை பலவந்தமான அடிப்படையில் உலகத் தமிழர் இயக்கம் கட்டுப்படுத்தி வந்ததாக கனேடிய அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்தினை பயன்படுத்தி புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு பிழையானது என ஆலயத்தின் நீண்ட கால தன்னார்வ தொண்டர்களில் ஒருவரான தனபாலசிங்கம் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஆலயம் தொடர்புபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆலயம் அனைவருக்கும் பொதுவானது எனவும் எந்தவொரு தரப்பினரையும் வழிபாடுகளில் ஈடுபடக்கூடாது என தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126232/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசாமியாருக்கு தடை நீக்கம் என்று இரண்டு மாதத்தில் சிறிலங்கா அரசு அறிக்கை விடும்

செய்தியே பிழை .

உலகத்தமிழர்கள் என்ற பெயரில் புலிகள் அடாவடித்தனமாக கைப்பற்றிய சொத்துகளில் இதுவும் ஒன்று .

3 hours ago, arjun said:

செய்தியே பிழை .

உலகத்தமிழர்கள் என்ற பெயரில் புலிகள் அடாவடித்தனமாக கைப்பற்றிய சொத்துகளில் இதுவும் ஒன்று .

இப்பிடி எத்தினையை கனடிய அரசாங்க துணையோடை புலிகளிட்டை இருந்து மீட்டனீங்கள்..? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.