Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி)

Featured Replies

தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி)

 

நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள்.

அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது.

இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீர்மானிக்கிறது. இதை வைத்துத்தான் தும்மல் எப்படி வியாதிக்கிருமிகளை பரப்புகிரது என்பதைக் கண்டறிய முடிகிறது.

இந்த ஆய்வின் நோக்கமே, இந்த தும்மலின் திரவ வெளியேற்றத்தை வடிவமைப்பது மற்றும் அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான். இது போஸ்டன் நகரில் அமெரிக்க உடலியல் கழகத்தின் திரவ இயங்கியல் பிரிவின் கூட்டமொன்றில் காட்டப்பட்டது.

தும்மல் உருவாக்கும் மேகம் போன்ற மண்டலத்தைப் பற்றி பல ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், அவைகளின் முடிவுகள் மாறுபட்டிருந்தன, ஏனென்றால்,தும்மலின் முதல் கட்ட வெளியேற்றம் சரியாக புரிந்துகொள்ளப்படாமல் இருந்தது என்கிறார் இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவர், மசாச்சுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த , டாக்டர் லிடியா பூருபா.

"அந்தப் பகுதி இன்னும் பெரிய அளவுக்கு தெரியாத ஒன்றுதான். இந்தத் துளிகள் எப்படி உருவாகின, அவை பரவும்போது எந்த அளவுடன் பரவுகின்றன? தும்மும்போது, வாயின் அருகே என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முயன்றேன்", என்றார் அவர்.

ஆனால் வீடியோவில் அவர்கள் தும்மலின்போது ஏற்படும் நீர்த்திவலைகள் வெவ்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் இருப்பதை மட்டும் பார்க்கவில்லை. அவை சுவாசப் பாதைக்கு வெளியேயும் உடைந்து சிதறும் வழிமுறை தொடர்வதைப் பார்த்தார்கள்.

நீர்த்திவலைகள், அருவி நீர் போல பரவுவதைப் பார்த்தார்கள்.

இந்த திரவப் பரவல் இது போல பல்வேறு வடிவங்களை எடுப்பதை சில தொழிற்சாலை சூழல்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம் , ஆனால் தும்மல் போன்ற மனித உடலியல் சார்ந்த ஒரு வழிமுறையில் இது போன்ற திரவப் பரவல் ஏற்படுவதைப் பார்ப்போம் என்று தோன்றவில்லை, என்கிறார் அவர்.

இந்த தகவல் இப்போது கிடைத்திருக்கும் நிலையில், நோய் தொற்றல் என்பதன் "காலடிச்சுவட்டை" பற்றி கணிப்பதற்குத் தேவைப்படும் நீர்த்திவலைகளின் உருவாக்கம் பற்றிய வடிவமைப்பைச் செய்ய விஞ்ஞானிகளால் இனி முடியும்.

  • 9 months later...
  • தொடங்கியவர்

தும்மலின் தூரம்

 

sneezing.jpg

எம்மில் பலரும் ஒரு அசௌகரியமான சூழலில் ஆரோக்கிய ரீதியாக தங்களைப் பொருத்திக் கொள்ள முடியாதபோது அதன் பல வெளிப்பாடுகளில் முதன்மையானது தும்மல். அத்துடன் தும்மும் போது அதன் வேகம் குறித்து நாம் ஏற்கனவே அறிந்திருப்போம். ஆனால் ஒரு தும்மல் எவ்வளவு தூரம் பயணிக்கிறது என்பது குறித்து தெரியாது. ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தும்மலின் தூரத்தை நவீன கமெரா மூலம் படமாக்கி, ஒரு தும்மல் 25 அடி தொலைவு வரை பயணிக்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல். எமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் பணி. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலமும் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது. இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளியேத் தள்ளுகின்றன. இதுதான் தும்மல். இப்படித் தும்மும்போது அத்துமீறி அங்கிருக்கும் அந்நியப் பொருள் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில் தும்மலின்போது வெளியேற்றப்படும் ஒரு சிறுநீர்த்துளி 20 முதல் 26 அடி வரை பயணிக்கிறது என்றும், வெளியேற்றப்படும் தூசு அல்லது துகள் 6 அடி தூரத்திற்கு வெளியேற்றப்படுகிறது என்றும். இவையாவும் 0.15 விநாடிக்குள் நடைபெற்று முடிந்துவிடுகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அதனால் இனி தும்மும் போது கைகளில் அவசியம் கைகுட்டையை வைத்துக் கொண்டு சக மனிதர்களுக்கு பரவாமல் தும்ம பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.

http://www.virakesari.lk/article/10776

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.