Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…

Featured Replies

செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…

 

நடராஜா குருபரன்:-

செந்தூரா உன் உடல் கருகிய தீச் சுவாலையில், இரும்பாய் போன இதயங்கள் இழகட்டும், ஈரம் கசியட்டும்…


உன் மரணத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அப்பனே… உன் உயிரை தற்கொடையாக கொடுத்ததன் ஆழ அகலம் பற்றி ஒன்றும் அறியேன்… உன் மரணத்திற்கு பலரும் பல்வேறு கற்பிதங்களை மெருகேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்….

மாவீரர் வாரத்தில் நவம்பர் 27ஆம் நாளுக்கு அண்மித்த உன் மரணம், வீர மரணம் என்கிறார்கள்… தற்கொடை என்கிறார்கள்… வீர மறவன், தமிழர் மானம் காக்க புறப்பட்ட வீரத் தமிழன், மாவீரன் என்றெல்லாம் புகழாரங்கள் சூட்டுகின்றார்கள்… இணையங்கள் சமூக வலைத்தளங்கள் யாவற்றிலும், நீ வியாபித்து இருக்கிறாய்…

உன் வயதில் எனக்கோர் மகன் இருக்கிறான்.. வெளியில் போகும் அவன் வீடு திரும்பப் பிந்தினால், என்மனம் படும் பாட்டை பதபதைப்பை நானே அறிவேன்… உன்னையும் என்னில் இருந்து பிரித்துப் பாரக்க எனக்கு முடியவில்லை…

என் கல்லூரி நாட்களில,; கொக்குவில் இந்துக் கல்லூரியில் நான் பயின்ற காலத்தை நினைத்து பார்க்கிறேன்.. உன் உடலை தாங்கிச் செல்லும் மாணவர்கள் அணிந்து சென்ற கழுத்துப் பட்டியை அக்காலத்தில் நாமும் அணிந்திருந்த ஞாபகங்கள் என்னை அமைதியிழக்கச் செய்கின்றன… உன்வயதில் விடுதலைக்காக புறப்பட்டு, நான் கற்ற கல்லூரியில், நானே அரசியல் வகுப்புகளை எடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன்… எல்லாம் கனவுபோல் விரிந்து செல்கின்றன….

வீறுகொண்ட தமிழ்த் தேசிய எழுச்சிக் காலம் அந்தக்காலம்… ஈழக் கோரிக்கைக்காக விடுதலை இயக்கங்களில், ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி திரண்ட காலம்… ஆளும் அரசாங்கங்களுடன் ஆயுதங்கள் பேசிய காலம்.. இளைஞர்களின் எழுச்சிக்கு அர்த்தம் இருந்த காலம. அது…

செந்துரா உனது இன்றைய காலம், முள்ளிவாய்க்காலில் ரத்தம் கரைபுரண்டோடி  5 வருடங்கள் விழலுக்கு இறைத்த நீராய் போன காலம் எடா…..

திக்குத் தெரியாது, நாம் திணறிக் கொண்டிருக்கும் உன் காலத்தில், பொய்மைகளும், வஞ்சகங்களும், பிறர் தியாகங்களை தம் தியாகங்களாக்கி, குளிர் காயும் அயோக்கியத் தனங்களும், தமது அரசியல் இருப்புகளுக்காக, பிறரைப் பலிகொடுத்து வீரகாவியங்களை புனையும் காலமடா….

ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளின் உயிர்த் தியாகங்களும், லட்சக்கணக்கான மக்களின் மரணங்களும், இன்று சுய நலன்களுக்காகவும், அரசில் பேரம் பேசல்களுக்காகவும் வாழ்வின் இருத்தலுக்குமான, வியாபாரமாகிப் போன துயரத்தை உன் பிஞ்சுமனம் அறிந்திருக்குமா?

இன்னும் என்னால் உன் மரணத்தை ஏற்க முடியவில்லை செந்தூரா… வெறும் உணர்வுகள் மட்டும் ஒரு இனத்தின் விடுதலையை பெற்றுத் தராது என்பதனை, ஊடக கற்கையை ஒரு பாடமாக எடுத்து, நாளாந்தம் பல பத்திரிகைகளை புரட்டும் உணக்குமா புரியவில்லை?

முள்ளிவாக்காலில் இரத்த ஆறு ஓடிக்கொண்டு இருக்கையில், தமிழகத்தில் இருந்து, புலம்பெயர் நாடுகளில் இருந்து ஐநா முன்றலில் முருகதாஸன் வரை எத்தனை பேர் தமது உயிர்களை தற்கொடை ஆக்கினார்கள்…. உலம் மருண்டதா? இலங்கையின் ஆட்சியாளர்கள்தான் அசைந்தார்களா? இல்லேயே….

ஏன், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியா சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பின்னர் சிறைச்சாலை உத்தியோகத்தரை பணயமாக பிடித்து போராடினார்கள்.. அப்போது அங்கு போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் என்னுடன் பேசினார்கள்…
உணர்ச்சிவசப்பட்டு கடுமையான முடிவுகளை எடுக்காதீர்கள்… மகிந்த சகோதரர்களுடன் மோதுவது மலையுடன் மோதுவது என்றேன்.... அவர்கள் கேட்கவில்லை, புலம்பெயர் உறவுகளும், தமிழ்க் கட்சிகளும் தம்முடன் இருப்பதாக சொன்னார்கள்..
செந்தூரா.. இறுதியில் நடந்தது என்ன? உசுப்பேத்தியவர்களில் பலர் ஐராப்பாவில் உல்லாசவாழ்வு வாழ்ந்தனர், வாழ்கின்னறனர். போராடியவர்களில்   நிமலரூபன் வதைபட்டு மாண்டு போனான்… பலர் நையப்புடைக்கப்பட்டு தெற்கின் சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.. சிலர்  அனுராதபுரத்தில் மலம் தின்ன வைக்கப்பட்டார்கள்…

செந்துரா உன்மரணத்தை வீரகாவியமாக்கும் பல பெற்றோர்கள், உன்வயதுப் பிள்ளைகளை தமது மடிக்குள் வைத்திருக்கிறார்கள்;. அவர்களை வைத்தியர்களாகவும், கணக்காளர்களாகவும், பொறியலாளர்களாகவும், இன்னும் பல துறைகளில் விற்பனர்களாகவும் உருவாக்குவற்கு, ஐரோப்பிய தேசங்களிலும், உள்நாட்டிலும் ஓடாய் தேய்கிறார்கள்…
பணம் தேடி உண்டு கழித்து உறங்குவதற்கு முன் எடுக்கும் ஓய்வுப் பொழுதில் ஊரார் வீட்டு பிள்ளைகளுக்கு உசுப்பேத்தி இல்ங்கை அசுடன் யுத்தம் புரியும் சமூக வலைத்தள போராளிகளாகிறார்கள்…

குழந்தாய் உன்மரணம் ஆட்சியாளர்களை ஒருபோதும் தட்டி எழுப்பப் போவதில்லை..  குறைந்தபட்சம் மற்றவர்களின் மரணங்களில் வீரகாவியங்களை படைக்க முயலுபவர்களின்  இதயங்களையாவது உறைய வைக்குமா?

உன்னுடன் இந்த தற்கொலை கலாசாரம் முடிவுக்கு வரட்டும் செந்தூரா.. உன்முடிவு ஈழத்து குழந்தைகளுக்கு ஒரு போதும் முன் உதாரணமாக அமையக் கூடாது… பதிலாக உன் மரணம் அவர்களின் சிந்தனைகளை தூண்டுவனவாக, இனத்துவ மேலான்மைகளை தகர்த்தெறிவதற்கான, அறிவார்ந்த ஆழுமைகளை வளர்ப்பதற்கான மரணமாக அமையட்டும்….

சென்றுவா.. செந்தூரா.. உன்னுள் உறைந்த உணர்வுகளை உணர முடியாது தவிக்கிறேன்… உன்னை மாமனிதனாகவோ, மாவீரனாகவோ, வீர மறவனாகவோ, வீரருஸனாகவோ, இல்லை வீர மைந்தனாகவோ அழகுபடுத்தி, என் இருப்பை பேண ஒரு போதும் நான் துணிய மாட்டேன்… “நீ வரலாறாகிப் போன உன்னத மனிதன்”

உன் உடல் கருகிய தீச் சுவாலையில் இரும்பாய் போன இதயங்களில் ஈரம் கசியட்டும்…

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126365/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.