Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரம்பரியமான உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாத பிரதேசமாக மாற்றப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரியமான உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாத பிரதேசமாக மாற்றப்படுகிறது

* மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

உடப்பு கிராமம் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழும் கிராமமே. இங்குள்ளவர்கள் கடற்றொழலைச் செய்கின்றனர். இது ஒரு மீன்பிடிக் கிராமம். ஆனால், இக்கிராமத்தைப்பற்றி சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இங்குள்ள அப்பாவித் தொழிலாளர்களைப் பற்றியும் தவறான கருத்து வெளியிடப்படுகிறது. உடப்பு பிரதேசத்தை பயங்கரவாத சூனிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் கே. இராதாகிருஷ்ணன் சபையின் கடற்றொழில் அமைச்சு நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும்போது இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் கே. இராதாகிருஷ்ணன்;

இந்த உடப்பு வாழ் கடற்றொழிலாளர்களுடன் அருகில் வாழும் ஏனைய இனமக்களும் நெருக்கமான உறவு கொண்டு, சகோதரர்கள் போலவே இதுகால வரையும் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இன, மத பிரச்சினைகளே தோன்றவில்லை.

ஆனால், கடந்த சில காலமாக உடப்பு கிராமம் பற்றி பொய்யான வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. உடப்பு தமிழ்க் கிராமம் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்ற பிரதேசம் என்று சிலர் கூறி வருகின்றனர். உடப்பு பயங்கரவாத பிரதேசமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உடப்பு கிராமத்துக்கு ஒரு வரலாறே உள்ளது. இதனை சிலர் மாற்றியமைக்க முயல்கின்றார்கள். இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தான் இப்பிரதேச மக்கள். பல நூறு வருடங்களாக இங்கு தமிழர்கள் வாழுகின்றனர்.

உடப்பு கிராமத்துக்குள் வெளியார் செல்வதற்கு உள்ள மூன்று பாதைகளிலும் இன்று சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல இராணுவ முகாம் ஒன்றையும் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுவதாக அறிகின்றேன்.

உடப்பு வாழ் கடற்றொழிலாளர்கள் அதிகாலையில் கடலுக்குச் செல்வார்கள். இரவிலும் மீன் பிடிப்பார்கள். சுதந்திரமாக தொழில் புரிந்தார்கள்.

ஆனால், சோதனைச் சாவடிகள், இராணுவ முகாம் என்பவற்றால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. சாதாரண தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். சித்திரவதைக்குள்ளாகும் நிலைமையும் தோன்றியுள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் டோரா படகு ஒன்று உடப்பு கடல் பிரதேசத்தில் வந்ததாகவும் அதனை கடற்படையினர் தாக்கி அழித்ததாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இச்சம்பவம் பற்றி உடப்பில் உள்ள எவருக்குமே தெரியாது.

உடப்பு கடலின் எல்லைக்கு அப்பால் 50 மைல் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அறிந்தேன். இச்சம்பவம் இடம்பெற்ற பகுதி 50 மைல்களுக்கு அப்பால் உள்ள சின்னப்பாடு, தொடுவாய், கல்பிட்டி பிரதேசங்களுக்கு நேராக இருக்கலாம்.

அம்பகந்தவில, சிலாபம் ஆகிய பிரதேசங்களுக்கு நேராகவும் இருக்கலாம். ஆனால், நிலைமை இப்படியிருக்க உடப்பு கிராமத்தை மையமாக வைத்து இப்பிரச்சினை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளத

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இன அடையாளத்தை அழித்துவிட முதற்படியா?

`

உடப்பு, தமிழ்க் கிராமம் பயங்கரவாத சூனியப்பிரதேச மாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்க

இன்றைய (12டிசம்2006) சுடர் ஒளி ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி:

வன்செயல்களில் எவ்வித சமபந்தமும் இல்லாத,அது குறித்தச் சிந்தித்தும் பார்காத, அது தொடர்பான அகரமும் தெரியாத அப்பாவிகளை, அவர்கள் தமிழர்கள் என்பதால் பயங்கரக் குற்றவாளிகள் என் முத்திரை குத்திவிட்டு இம்சைப்படுத்துவது, வழமைனயான நடைமுறையாக்கபட்டுவிட்ட நாடு இது.

நீதிமுறைகள், சட்டங்கள் அவை எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும், தமிழ் மக்கள் என்றால் அவர்கள் இந்நாட்டுப் பிரஜைகள் அல்லர், மனிதர்களும் அல்லர் என்று இனவாதப் போக்குடையோர் மட்டுமன்றி அரச இயந்திரத்தின் அலகுகளைச் சேர்ந்தவாகளும் அவ்வாறே தமிழர்களை உருவகித்துப் பார்க்கிறார்கள்.

மனித நேயம் என்பது சிறிதளவேனும் இல்லாத அவர்கள் "உத்தியோகபூர்வ முத்திரை" இல்லாத தமிழர் பகுதிகளையே கண்ணில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டு பார்த்து உருக் கொண்டு சன்னதம் ஆடுவது சாதாரணமாகவே நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் கிராமத்தை ஏனைய இன மக்கள் வாழும் கிராமங்களுக்கிடையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தை பயங்கரவாத சூனியப் பிரதேசம் என்று உத்தியோகபூர்வ முத்திரை குத்தியபின்னர், அங்கு வாழும் மக்களை எத்தனை பாடுபடுத்துவார்கள். சந்தேகப் பிரஜைகளாகக்கி என்னென்ன இடர்களுக்கும் நெருக்கடிகளுக்குள்ளும் ஏன் உயிராபத்துக்குள்ளளும் தள்ளி விடுவார்கள் என்பதனைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது!

முன்னர் தனக்குரிய இயற்கையான இயல்புடன் சமாதானமும் அமைதியும் நிரம்பி வழிந்த உடப்புக்கிராமத்தில் யுத்தம் நடைபெறும் பிரதேசங்களைப் போன்று, சோதனைச் சாவடிகளும்,இராணுவ முகாம்களும் முளைத்து அவற்றால் அது நிரம்பி வழிகின்றது.

உடப்புக் கிராமத்திலிருந்து கடலில் 50 மைல் தொலைவுக்கு அப்பால் நடைபெற்ற சம்பவம் ஒன்றுக்கு அந்தக் கிராமத்தை முதன்மைப்படுத்தியே பிரச்சனைகள் தோற்றுவிக்கப்பட்டதாக மாகணசபை உறுப்பினர் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது போன்று இட்டுக்கட்டுதல்களும் வேண்டுமென்றே அந்தக் கிராம மக்களை மாட்டிவிடும் செயல்பாடுகளும் இனி மலிந்து போய்விடும் என்பதில் சந்தேகம் இல்லை.

வடக்கு கிழக்குத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் தமிழர்களின் இன அடையாளம் தொனிக்கக் கூடாது என்பதில் அரசும் அதன் தலைவர்களும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் திட்டமிட்டு வரைந்துள்ள தொடக்கப் புள்ளி இது.

இலங்கையின் பெரும் நிலப்பரப்பில் தமிழர்ககள் வாழ்ந்தார்கள். தமக்கே உரிய சிறப்புமிகு இன அடையாளத்துடன் வாழ்ந்தார்கள்,என்பதனை முத்திரை பதிததுக் காட்டுவது உடப்பு. அதற்கான ஒரு தனித்துவமம் சிறப்பும் உண்டு.

நாகரிகம் மிகுந்த,சகவாழ்வும், இன நல்லுறவும் மலிந்துள்ள,நவீன சிந்தனைகள் மக்களைப் புடம் போடும் இக்காலத்தில் -

வன்செலய்களைக் கட்டுப்படுத்துவது,பயங்கரவாத

பயங்கரவாத சூனியப் பிரதேசமாக

உடப்பு தமிழ்க்கிராமம் பிரகடனம் .

வடமேல் மாகாணத்தில் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ்மக்கள் வாழும் உடப்பு கிராமம் பயங்கரவாத சூனியப் பிரதேச மாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபையின் உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன் சபையின் நிதி ஒதுக் கீட்டு விவாத்தில் பேசுகையில் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

பலநூறு வருடங்களாக தமிழ் மக்கள் தனித்து வாழும் உடப்பு கிராமத் தில் வாழும் அப்பாவித் தொழிலாளர் கள் பற்றித் தவறான கருத்து வெளியிடப்படுகின்றது.

இந்தக் கிராமத்தில் அருகில் வாழும் ஏனைய இன மக்களும் நெருக்கமாக உறவுகொண்டு சகோதரர்கள் போலவே இதுகாலவரையும் வாழ்ந்து வருகின் றனர். இங்கு இன, மத பிரச்சினைகளே தோன்றவில்லை.

இந்தக் கிராமம் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்ற பிரதேசம் என்று சிலர் கூறி வரு கின்றனர்.

இந்தக் கிராமம் பயங்கரவாத சூனியப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.

அங்கு சோதனைச் சாவடிகள், இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பல்வேறு பிரச் சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது என்றார் அவர்.

www.uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.