Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதிகள் விடுதலை விடயத்தில் மௌனம் காப்பது சிறந்ததல்ல

Featured Replies

கைதிகள் விடுதலை விடயத்தில் மௌனம் காப்பது சிறந்ததல்ல
 
கைதிகள் விடுதலை விடயத்தில் மௌனம் காப்பது சிறந்ததல்ல
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இனியும் மௌனம் காப்பது அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையில் பாரிய விரிசலை ஏற்படுத்தும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சமாதான சூழ்நிலையில் தமிழ் கைதிகளை சிறையில் தடுத்து வைத்திருப்பது அர்த்தமற்ற செயல் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.  
 
புலம் பெயர் அமைப்புக்களின் தடை நீக்கம் நாட்டை பாதுகாக்கலாம் என தெரிவித்த அவர், அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என எண்ணம் ஒரு நிலைப்பாடு தம்மிடம் இருந்ததாக தெரிவித்த அவர், நாட்டை காப்பாற்றவும் மூவின மக்களை அமைத்தியாக வாழவிடவும் அந்த காரியத்தை செய்யவேண்டிய பாரிய பொறுப்பு தமக்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
 
 
  • தொடங்கியவர்

"யுத்தகாலத்தில் புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டோம்"

 

"யுத்தகாலத்தில் புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டோம்"

 

 
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாக முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்சல்ச ரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 

நாட்டையும் மூவின மக்களையும் பாதுகாக்கும் நோக்கில் அந்த முடிவுக்கு தாம் வந்திருந்ததாகவும் புலிகளை முழுமையாக அழிக்க திட்டமிட்டது உண்மையே என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பயங்கரவாதம் உருவாகும் சூழல் இல்லை என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

 
அதனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் இனியும் மௌனம் காப்பது நல்லதல்ல என்று  சரத்பொன்சேகா தெரிவித்தார். 
 
அரசாங்கம் இனியும் மௌனம் காத்தால் தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும்“ இடையில் பாரிய விரிசல் ஏற்படும் என்றும் சரத்பொன்சேகா எச்சரித்துள்ளார். சமதான சூழலில் கைதிகளை சிறைப்பிடிப்பது அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார். 
 
தமிழ் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற கருத்தை தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை யுத்த காலத்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் பல்லாயிரம் பேரை வடக்கில் கைது செய்ததாகவும்  அதேபோல புலிகளுடன் தொடர்புடைய ஆயுதம் ஏந்திப் போராடிய நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். 
 
நேரடியாக ஆயுதம் ஏந்திப் போராடிய 12ஆயிரம் பேர் மகிந்த ராஜபக்ச காலத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை இன்னமும் தடுத்து வைத்திருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தமிழ் மக்கள் அரசாங்கம்மீது நல்ல நம்பிக்கையை கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்த அவர் அந்த நம்பிக்கையை அரசாங்கம் பாதுகாக்காவிடில் நிலமை மோசமாகலாம் என்றும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை புலம்பெயர் அமைப்புக்கள்மீதான தடையை நீக்கியமையால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று தெரிவித்த அவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிக்க வேண்டிய ஊசியளை அடிச்சுப்போட்டு ஆக்களை வெளியிலை விடுங்கோப்பா....வருத்தம் சுகம் வரும்....ஆனால் ஆள் தப்பாது.....எண்ட தத்துவம் சிங்களவனுக்கு எப்பவும் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.