Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சர் சம்மதித்தால் கட்சியை ஒப்படைக்கத் தயார் : ஆனந்தசங்கரி

Featured Replies

முதலமைச்சர் சம்மதித்தால் கட்சியை ஒப்படைக்கத் தயார் : ஆனந்தசங்கரி
 
முதலமைச்சர் சம்மதித்தால் கட்சியை ஒப்படைக்கத் தயார் : ஆனந்தசங்கரி
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் படித்த பண்புள்ள நம்பிக்கையானவர். அவர் ஏற்பாரேயானால் எமது கட்சியை இந்த நிமிடமே அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக உள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் :-
‘என்னுடன் செயற்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். புனிதமான இந்த கட்சியை எதிர்காலத்தில் வீதியில் விட்டுச் செல்ல முடியாது. மாசுபடாத இயக்கமாக எமது கட்சி திகழ்கின்றது. இந்த நிலையில் அனைவரும் எமது கட்சியில் இணைந்து கொள்ளவேண்டும். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகத்தில் முக்கியஸ்தராக உள்ளார். அவர் நம்பிக்கைக்குரியவர். இதனால் கட்சியை ஏற்பதற்கு அவர் தயாரானால் இந்த நிமிடமே அதனை ஒப்படைப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நல்லதொரு மனிதரை முதலமைச்சராக்கிவிட்டு அதனைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அத்தகைய செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.
விக்கினேஸ்வரன் சம்மதித்தால் அவரை கட்சியின் தலைவராக நாளைக்கே நியமிப்பேன். அவர் பிரேரிக்கும் மற்றொருவரை செயலாளராக நியமிக்கவும் நான் தயாராக உள்ளேன். சம்பந்தனுடனோ, மாவையுடனோ நான் இணைவதற்கு தயாராக உள்ளேன்.
 
2004 ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலைத்தார். இதனால் நான்கு வருட பிரதமர் பதவியை ரணில் இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு நடந்தும் ஒரு இலட்சியத்திற்காக அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இதேபோல் நானும் ஒன்றிணைவதற்கு தயாராகவே உள்ளேன். ஒற்றுமை ஏற்படவேண்டும் என்பதே எனது அவாவாகும்’ என்றும் கூறினார்.
 
 
 
 
சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் பதில்
 
சங்கரியின் கூற்றுக்கு முதலமைச்சர் பதில்
போரினால் பாதிக்கப்பட்டு நாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்கு செய்ய வேண்டிய பல பணிகள் உள்ளன. இன்று கூட இப்பேர்ப்பட்ட மக்கள் உதவி கோரி என்னிடம் வந்தார்கள். இன்று மக்கள் சந்திப்பு நாள். நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து எம் மக்களை வலுவூட்டுவதற்குப் பாடுபட வேண்டிய தருணம் இது.
 
இதைவிடுத்து, உட்கட்சி மோதல்கள், கருத்து முரண்பாடுகளினால் எமது செயற்பாடுகள் வேறு வழிகளில் திசை திருப்பப்படுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். நான் இது பற்றிக் கவனமாகவே இருக்கின்றேன்.
 
அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலை போகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்து கொடுக்காமல் எமது மக்களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்று விரும்புகின்றேன். இதுவே மக்களின் விருப்பமுமாகும்.
 
எனது சட்டக்கல்லூரி சமகால நண்பர் ஆனந்தசங்கரி அவர்கள் எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்தி உள்ள கருத்துக்களுக்கும் அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூற முடியும் என்றார்.
 
                                                               1449062158_vikki.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணி ஒட்டுக்குழுப் பட்டியலில் இருக்கும் வரை யாரும் அதில் ஏறிச் சவாரி செய்ய வரமாட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.