Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு !

Featured Replies

டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு !
 
 
நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
 
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் ஆண்டுதோறும் உலகில் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கலை டைம் இதழின் ஆசிரியர் குழு தேர்வு செய்துள்ளது.
German chancellor Merkel named Time's 'Person of the Year'2015
 ஐரோப்பிய கண்டத்தில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் சிரியாவில் இருந்து வெளியேறும் அகதிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதித்தல் உள்ளிட்ட பிரச்சினையில் சிறப்பாக செயல்பட்ட மெர்கலின் தலைமைப்பண்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் தலைவர் தன் நாட்டு மக்களிடம் கேட்க அஞ்சும் அளவை விட அதிகமாக கேட்டு பெற்றுள்ளார் ஏஞ்சலா மெர்கல் என புகழாரம் சூட்டியுள்ளது டைம் இதழ்.
 
இந்த ஆண்டுக்கான போட்டியில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் பாகிஸ்தானின் மலலா ஆகியோர் இருந்தனர். இவர்கள் தவிர இந்தியாவின் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அமெரிக்க அதிபர் ஒபமா, ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபுபக்கர், ஹிலாரி கிளின்டன், நோபல் பரிசு வென்ற பாகிஸ்தானின் மலாலா உள்ளிட்ட 58 பேர் போட்டியில் இருந்தனர்.
                                           Eingebetteter Bild-Link

                     Seriously though, did they have to paint me the morning after the Chancellery Xmas party? #puffy #blotchy

 
 
இவர்களிலிருந்து எட்டு பேர் இறுதி செய்யப்பட்ட நிலையில், டைம் இதழின் ஆசிரியர் குழு ஏஞ்சலா மெர்கலை இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வு செய்து இன்று அறிவித்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/german-chancellor-merkel-named-time-s-person-the-year-2015-241893.html
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, நவீனன் said:

டைம் இதழின் 2015 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தேர்வு !

இவ இதோடை வீட்டை போகவேண்டியதுதான். அடுத்த லெக்சனிலை ஒரு காக்கா குருவி கூட இவவை திரும்பி பாக்காது.....வீட்டை போய் சொந்த அலுவலை..... ironing smiley    housewife smiley

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக அங்கேலா மேர்க்கெல் தெரிவு

[ Thursday,10 December 2015, 05:36:39 ]   
12fa955e-c69b-471c-b3b7-d91d5ab348c4_S_s

 

 
 
 
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல வார இதழான டைம் சஞ்சிகையின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக ஜெர்மனி ஆட்சியாளர் அங்கேலா மேர்க்கெல்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
டைம் சஞ்சிகையின் ஆண்டுதோறும் உலகின் சிறந்த மனிதரை தேர்வு செய்து கௌரவித்து வருகின்றது.
 

இந்நிலையிலேயே இந்த ஆண்டின் சிறந்த மனிதராக அங்கேலா மேர்க்கெல்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து டைம் இதழின் ஆசிரியர் நான்சி கிப்ஸ் தெரிவிக்கையில், கொடுங்கோன்மைக்கு எதிராக வலிமையுடனும், உறுதியுடனும் செயல்படும் உலக தலைவர்கள் அரிதாகிவரும் நிலையில், அங்கேலா மேர்க்கெல்  அவ்வாறான தலைவராக செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
 
மேலும் கிரீஸ் நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்பதிலும், சிரிய அகதிகளை தன் நாட்டுக்குள் அனுமதித்தமையிலும் ஒரு அரசியல் தலைவராக செயற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • தொடங்கியவர்

உலகின் மிகச் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் தேர்வு

 
 
ஏஞ்சலா மெர்கெல்
ஏஞ்சலா மெர்கெல்

உலகின் மிகச் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளி யாகும் டைம் பத்திரிகை ஆண்டு தோறும் உலகின் மிகச் சிறந்த மனிதரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டியாளர் பட்டியலில் 58 பேர் இடம்பெற்றிருந்தனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர் கெல், பிரான்ஸ் அதிபர் ஹோலந்தே, சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இதில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் (61) உலகின் மிகச் சிறந்த மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகதிகள் பிரச்சினையில் ஏஞ்சலா மெர்கெல் தாயுள்ளத்துடன் சுமார் 8 லட்சம் பேருக்கு ஜெர்மனியில் அடைக்கலம் அளித்தார். அதன் காரணமாக உலகளாவிய அளவில் அவரது மதிப்பு உயர்ந்துள்ளது.

அதேநேரம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி பட்டியலில் அதிக வாக்குகளுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது உலக நாடு களின் தலைவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

http://tamil.thehindu.com/world/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article7974783.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.