Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்

Featured Replies

அன்பு உள்ளங்களே 
அனேகரின் வேண்டுகொள்ளுக்கு ஏற்ப பல்வேறு வாழ்த்துக்கவிதைகள் பதிய போகிறேன் உங்கள் ஊகப்படுத்தளுக்கு 
மிக்க நன்றி 

என்றும் உங்கள் கவி 
கவிப்புயல் இனியவன்
எல்லோருக்கும் பொதுவான பிறந்தநாள் கவிதை 

பிறந்து விட்டாய் இந்த 
பூமியை புரிந்து கொள்ள 
பிறந்து விட்டாய் ....!!!

இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும் 
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத 
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து 
வீழ்ந்து விடாதே ....!!!

தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய் 
செய்ய வேண்டும் ....
உனக்காக எனக்காக 
வாழவேண்டாம் ........
நமக்காக வாழ கற்று கொள்....!!!

வருடங்கள் வருவதும் 
அவை நம்மை கடப்பதும் 
விந்தையில்லையே 
அதற்காக கொண்டாட்டம் 
தேவையில்லையே ....!!!

கடந்த 
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் ...!!!
இந்த 
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார் 
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு 
இருக்கும் தீய குணத்தை 
அழித்துவிடு ....!!!

பிறப்புகளில் உயர் பிறப்பு 
மானிட பிறப்பு ....
இப்பிறப்பில் நீ எல்லாம் 
பெறவும் ....
பெற்றவற்றை உலகிக்கு 
பகிரவும் வாழ்த்துகிறேன் 
மகிழ்கிறேன் உன் பிறந்த 
தினத்தை நினைத்து .....!!!

வாழ்க வளமுடன் 
மிளிர்க தமிழுடன் ....!!!
  • தொடங்கியவர்

நண்பனுக்கு பிறந்த நாள் ...!!!
-------------------------------------------

குணத்தின் குன்றா விளக்கு 
குறையை எடுத்து காட்டுவதில் 
குன்றா மணி விளக்கு ....!!!
என் நண்பனுக்கு இன்று 
பிறந்தநாள் பெருவிழா ....!!!

மற்றவர்களுக்கும் அவன் 
ஒரு மனிதன் எனக்கு அவன் 
நடமாடும் தெய்வம் 
துன்பத்தை துடைப்பவன் 
இல்லை -துன்பமே வராமல் 
தடுப்பவன் ....!!!
இன்று அவனின் பிறந்தநாள் 
மணி மகுடம் ....!!!

என் நண்பனுக்கு என்ன 
கொடுப்பேன் - எதை கொடுப்பேன் 
என்னிடம் உள்ள தீய பழக்கத்தை
அவனுக்காக விட்டு விடுவேன் 
அவனிடம் உள்ள நல்ல பழக்கத்தை
அவனிடம் கேட்காமல் 
எடுத்து விடுவேன் .....!!!

இறைவா எனக்கு வரம் 
கொடு -இந்த ஜென்மத்தில் 
மட்டுமல்ல அடுத்த ஜென்மமும்
இவன்தான் என் நண்பன் ...
இந்த ஜென்மத்தில் அவன் 
பிறந்தநாளில் என் வயது கூட 
வேண்டும் -அவன் வயது குறைய 
வேண்டும் ....!!!

மற்றவர்களுக்கு அவனின் 
பிறந்தநாள் இன்று ..
எனக்கு ஆண்டவன் அவதரித்த 
நாள் இன்று .......!!! 
இதற்கு மேல் என்னடா உனக்கு 
வாழ்த்து .....!!!
 

நண்பா என் பிறந்தநாள் வாழ்த்துகள்...!!!

-------------

தாயை போல் அன்பை தருபவனே ....
தந்தையைப்போல் புத்திமதி சொல்பவனே ....
அண்ணனை போல் ஆபத்தில் உதவுபவனே ....
தம்பியை போல் குறும்பு செய்பவனே ....
மொத்தத்தில் என் குடும்பமாய் இருப்பவனே ....
என் உயிர் நண்பா உனக்கு என் பிறந்தநாள் ...
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ....!!!

இனம் தெரியாது என் குணம் தெரியாது ....
வசதி தெரியாது என் வாழ்கை தெரியாது .....
குலம் தெரியாது என் கோத்திரம் தெரியாது ....
தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று அன்பு ....
ஆபத்தில் உதவும் பண்பு தோள் கொடுக்கும் ....
துணிவு இதுதாண்டா நட்பென்னும் ஜாதி ....
நண்பா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ....!!!
 

  • தொடங்கியவர்

ஆருயிர் நண்பா பிறந்தநாள் வாழ்த்துகள் 
-----------

அ-ன்பனே .....
ஆ-ருயிர் நண்பனே .....
இ-னியவனுக்கு இனியவனே ....
ஈ-டில்லா அன்பு உடையவனே ...
உ-னக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ....!!!

ஊ-ர்போற்றும் பண்பாளனே .....
எ-ன்னுயிர் தோழனே .....
ஏ-ற்றத்திலும் இறக்கத்திலும் 
ஐ-க்கியத்தோடு வாழ்பவனே ....
ஒ-ன்றுனரே உனக்கு வாழ்த்துகள் ....!!!

ஓர் கோப்பையில் உண்டோம் ....
ஓர் உடையை மாற்றி அணிந்தோம் ....
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்தோம் ....
ஓராயிரம் ஆண்டு வாழ்வாய் நண்பா ....
வாழ்த்துகிறேன் நண்பா வாழ்க வழமுடன் ....!!!

  • தொடங்கியவர்

நண்பனுக்கு( SMS )பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

-----------


நான் வாழ நீ வாழும் நண்பா ...
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... 
இந்த நாளே மீண்டும் நான் பிறந்தநாள்


|||||||||||||||||||||||

நண்பா 
உன்னை வாழ்த்துவதில் ....
மட்டற்ற மகிழ்ச்சி உன் பிறப்பே ....
எனக்கோ உயர்ச்சி ....!!!

|||||||||||||||||||||||

பிறப்பின் புனித்ததை தாய் தந்தார் ....
உறவின் புனித்தத்தை நீ தந்ததாய் ....
வாழ்த்துகிறேன் உனை பெற்றெடுத்த தாயை ....
பிறந்தநாள் வாழ்த்துகள் .....!!!

|||||||||||||||||||||||

என் இதய அரசனுக்கு எனது 
இதயம் கனிந்த பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்...!!! 
என் பிறப்பால் பெற்ற பலன் 
உன்நட்பு கிடைத்ததே ....!!!

|||||||||||||||||||||||||

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு நட்பின் ...
வலிமையை சொல்லும் நாள் ...!!!

  • தொடங்கியவர்

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை 

----------

ஒளி கொண்ட தேவனின் ....
கருணை கொண்ட தேவனின் ..
பிறந்த நாள் - கிறிஸ்துவின் 
பிறந்த நாள் .....!!!

தனக்காக 
வாழாமல் பிறருக்காய் ....
வாழ்தவரின் பிறந்தநாள் ....
கிறிஸ்துவின் பிறந்த நாள் .....!!!

எனக்காக தேவனே ....
இவர்களின் தவறுகளை ...
மன்னித்தருளும்பரமபிதாவே ....
இரங்கிகேட்டவரின்...
பிறந்தநாள் - கிறிஸ்துவின் ....
பிறந்த நாள் .....!!!

தேவனின் பிறந்தநாளை ...
அன்புடன் கொண்டாடுவோம் ...
அருளுடன் கொண்டாடுவோம் ....
பண்புடன் கொண்டாடுவோம் ...
கருணையுடன் கொண்டாடுவோம் ....!!!

உலகில் கருணை பெருகிடவும் ....
மனித நேயம் ஓங்கிடவும் ....
அன்புவெள்ளம் பாய்ந்திடவும் ....
கிறிஸ்துவின் நாளை கொணாடிடுவோம் ...
உலகில் மாற்றத்தை ஏற்படுத்துடுவோம் ....!!! 

கிறிஸ்மஸ் இறை விழாவை ...
கொண்டாடும் அனைத்துள்ளங்களுக்கும் ...
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ....!!!

  • தொடங்கியவர்

கிறிஸ்மஸ் குறுங்கவிதைகள்

மானிடரின் மனக்கண் திறக்க ....
மாட்டு தொழுவத்தில் அவதரித்த ,,,,
மாணிக்க ஒளியின் பிறந்தநாள் ...!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

இறையொளியின் சக்திபெற்று ....
இறைவனாக அவதரித்த பாலகன் ...
இறை ஞானத்துடன் வாழ்ந்திடுவோம் ....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

தட்டுங்கள் இதயங்கள் திறக்கப்படும் 
கேளுங்கள் ஞானம் தரப்படும் ...
தேடுங்கள் இறையருள் கிடைக்கும் ....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

ஆயிரம் விண்மீன்கள் மின்ன ....
விடிவெள்ளியாய் அவதரித்த பாலகன் ...
வருந்தும் உள்ளங்களின் நம்பிக்கை ஒளி....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

நடு ராத்திரியில் பிறந்தாலும் ....
உலகத்துக்கு ஒளியூட்டிய.....
உத்தமனின் திருநாள் விழா ....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் நத்தார் புதுவருட  வாழ்த்துகள் உரித்தாகட்டும் கவிப்புயல்...!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 12/18/2015 at 3:57 PM, suvy said:

உங்களுக்கும் நத்தார் புதுவருட  வாழ்த்துகள் உரித்தாகட்டும் கவிப்புயல்...!

மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி 

  • தொடங்கியவர்

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! 
-------

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!

ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!

இழப்புகளை ஏற்படுத்தாமல் ....
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!

ஈனச்செயல் புரியாமல் ....
ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!

உலகை உலுப்பாமல்....
உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!

ஊனங்களை ஏற்படுத்தாமல் ....
ஊர் செழிக்க ..வருக வருக .....!!!

எதிரிகளை தோற்றுவிக்காமல் ....
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! 

ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ....
ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!

ஐயத்தை தோற்றுவிக்காமல் ......
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஓலமிட மக்களை வைக்காமல் .....
ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!

ஔடத்தை பாவிக்காமல் .....
ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....!!!

^

கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

Make this my homepage

 

வியாழன், டிசம்பர் 26, 2013

 

 

'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்

இலங்கைத் தமிழர்கள் 'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லி விட முடியும். இருப்பினும் எமது தமிழ்நாட்டு உறவுகளுக்கும், ஈழத்தில் பிறந்து வளர்ந்தாலும் காரணம் அறியாமல் ஒரே சொல்லைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனது தாயக உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துவதே எனது இந்தச் சிறிய பகிர்வின் நோக்கமாகும்.
கடந்த சில தினங்களாக முகநூலிலும், இணையங்களிலும் ஒருவருக்கொருவர் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். முகநூலில் எமது இலங்கைத் தமிழ் மக்கள் 'கிருஸ்துமஸ்' வாழ்த்துத் தெரிவிக்கும்போது "இனிய நத்தார் வாழ்த்துக்கள்" என்று எழுதியதைப் பார்த்துப் பல வருட காலமாகத் தமிழக உறவுகள் சிறிது குழப்பம் அடைய நேர்ந்திருக்கலாம். அது என்ன 'நத்தார்' வாழ்த்துக்கள்? என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி  'நத்தார்' என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ? என்று
எண்ணியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு எண்ணியிருந்தால் உங்கள் கணிப்புத் தவறானது. 'நத்தார்' என்ற சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும். போர்த்துக்கேய மொழியில் "இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal) என்று கூறுவார்கள். போர்த்துக்கேய ஆட்சி அகன்று ஏறத்தாழ முந்நூற்றைம்பது வருடங்கள் சென்று விட்ட போதிலும் இலங்கை மக்கள் பாலன் பிறப்புத் தினத்தைக் குறிக்கும் 'நத்தால்' என்ற போர்த்துக்கேய மொழி வார்த்தையை அப்படியே இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டைப் போர்த்துக்கேயர் கைப்பற்றவும் இல்லை, ஆட்சி செய்யவும் இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தைகளின் தாக்கம் மிகக் குறைவு எனலாம். சிங்கள மக்கள் பாலன் பிறப்பை(கிருஸ்துமஸ்) தினத்தைக் குறிப்பதற்குப் போர்த்துக்கேய மொழியில் இருந்து கடன் வாங்கிய 'நத்தால்' என்ற வார்த்தையை அப்படியே உபயோகிக்கின்றனர்.அதாவது சிங்கள மொழியில் 'கிறிஸ்துமஸ்' தினத்தைக் குறிப்பதற்கு 'நத்தால்' அல்லது நத்தாலக் (නත්තලක්) எனவும், சிங்கள மொழியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறும்போது 'சுப நத்தாலக் வேவா' (Subha nath-tha-lak vewa/ සුභ නත්තලක් වේවා ) என்றும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து 'நத்தார்' ஆக மாறியது.
எவ்வாறு போர்த்துக்கேயச் சொற்களாகிய அலுமாரி, அலவாங்கு(கடப்பாரை), அலுப்புநேத்தி(சட்டைப் பின்), கதிரை, கழுசான், குசினி, பீங்கான், துவாய், தவறணை போன்ற சொற்களை விட்டு விட முடியவில்லையோ அது போலவே இந்த 'நத்தார்' என்ற சொல்லையும் இலங்கைத் தமிழ் மக்களால் இன்றுவரை விட்டுவிட முடியவில்லை. இலங்கையர்களை முதன் முதலில் ஆண்ட அந்நிய நாட்டவர்கள்(ஐரோப்பியர்கள்) போர்த்துக்கேயர் என்பதுடன் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்த அவர்களின் ஆட்சியின் எச்சங்கள்/அடையாளங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போய் விடுமா என்ன? உங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான தகவலையும் கூற விரும்புகிறேன். அதாவது போர்த்துக்கேயருக்கு அடுத்து சுமாராக நூறு வருடங்கள் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்களின் டச்சு மொழிச் சொற்கள் விரைவாகவே இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து விடை பெற்று விட்டன. எஞ்சியிருப்பவை ஒன்றிரண்டுதான். உதாரணத்திற்குச் சில:கந்தோர், தபால், மற்றும் கக்கூசு. இவை மட்டுமன்றி கிறிஸ்துமஸ் தினத்தை நோர்டிக் மொழிகளாகிய டேனிஷ், சுவீடிஷ், நோர்வீஜியன் மொழிகளில் யூல்(Jul) என்று அழைப்பார்கள். இந்தச் சொல்லும் இலங்கைத் தமிழில் கலந்துவிட்டது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்தான். 'கிறிஸ்துமஸ்' தினத்தை 'யூல்' என்று அழைத்த வயதான பெண்மணிகளை/ஆண்களை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்தச் சொல்லை எங்கு கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமே.
இலங்கையில் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஏன் 'நத்தார்' என்று பெயர்? என்று ஆய்வு செய்யப் புகுந்ததால் எனக்குக் கிடைத்த விடையே போர்த்துக்கேய மொழியின் தாக்கம் அது என்பதாகும். உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.உங்கள் அனைவர்க்கும் இனிய 'கிருஸ்துமஸ்' வாழ்த்துக்கள்; மற்றும் பிறக்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2014 உங்கள் அனைவர்க்கும் ஏற்றத்தையும், செழிப்பையும் அள்ளித் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி நன்றி 
தகவல் அறிந்தேன் 
நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.