Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015 நான் பார்த்த சில படம்கள்/தொடர்கள்

Featured Replies

  படம்களின் தரவரிசை இல்லை

1 ) Bajiro mastani -hindi) - good,  தீபிகா படுகோன் நடிப்பு சூப்பர்  வரலாற்றில் நிகழ்ந்த கதை என்கிறார்கள்  ,ஜோதா அக்பர் உங்களுக்கு பிடித்திருந்தது என்றால் இதுவும் கட்டாயம் பிடிக்கும்  அதைவிட நன்றாக உள்ளது 

பாஜிராவ் மஸ்தானி

உலகமறிந்த காவியக்காதல் கதை, பிரம்மாண்டமான செட்கள், கண்கவர் வண்ண வண்ண காஸ்டியூம்கள், ஒவ்வொரு ப்ரேமிலும் கூட்டம் கூட்டமாகத் துணை நடிகர்கள் இவை த...ான் சஞ்சய் லீலா பன்சாலி படங்கள். இவரது காதல் படங்களான Devdas, Guzaarish விட கண்தெரியாத மாணவிக்கும் அவளது வயதான ஆசிரியருக்கும் இருக்கும் அருமையான உறவைச் சொன்ன Black திரைப்படம் எனது ஆல் டைம் பேவரிட். ஏற்கனவே 'பாகுபலி' பார்த்து பிரம்மித்து போயிருந்த எனக்கு, இந்தப் படத்தின் டிரைலர் எப்படியும் தியேட்டரில் முதல்நாளே இந்தப் படத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று முடிவு செய்ய வைத்தது. ஊரே 'தங்கமகன்' பார்த்துக்கொண்டிருந்த போது நான் வெறும் 30 பேருடன் அமர்ந்து ஒரு சுமாரான தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன், தமிழில்.

மராத்தியப் சத்ரபதி சாகு போஸ்லேவின் பிரதமமந்திரியும் படைத்தளபதியுமான 'பேஷ்வா' பாஜிராவிற்கும் அவரது இரண்டாவது மனைவியான மஸ்தானிக்குமான காதல் கதை தான் இந்தப் படம். மாவீரன் பாஜிராவ் இந்து மன்னர் ஒருவருக்கு போரில் உதவிசெய்கிறார். உதவி கேட்டு வந்தவர் அம்மன்னரின் பாரசீக மனைவிக்கு பிறந்து முஸ்லீமாக வளர்க்கப்படும் வீராங்கனையான மஸ்தானி. போர்க்களத்தில் பாஜிராவின் வீரம் கண்டு மஸ்தானியும், ஒரு தருணத்தில் தன் உயிரைக் காக்கும் மஸ்தானியைக் கண்டு பாஜிராவிற்கும் காதல் மலர்கிறது. முறைப்படி மஸ்தானியை பாஜிராவ் மணம்முடிக்க எண்ணினாலும், இந்து மராத்திய சத்திரபதி ஆளும் சாம்ராஜ்யத்திலிருக்கும் ஆச்சாரமான பிராமண குடும்பத்தவர்கள் இந்த உறவை ஏற்க மறுக்கிறார்கள். இவர்களது காதலை உதாசீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு நாட்டியக்காரி என்ற அளவிலேயே மஸ்தானியையும் மதிப்பிடுகிறார்கள். ஏற்கப்படாத இந்தக் காதல் கதை என்ன ஆனது என்பதைத் தான் மறக்க முடியாத ஒரு காவியமாகக் கொடுத்துள்ளார் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி.

மாவீரன் பாஜிராவாக ரன்வீர் சிங். ஆறடி உயரமும் எஃகு போன்ற உடலுமாக பார்த்தவுடன் வசீகரிக்கிறார். போர்க்களக்காட்சிகளில் காட்டும் வீரமும், காதல் காட்சிகளில் காட்டும் மென்மையும், தன் குடும்பம் தன் காதலை ஏற்க மறுத்து செய்யும் சதிவேலைகளால கலங்கி உடைவதும், கோபப்படுவதுமாக ஒரு பக்கா பேக்கேஜ் நடிப்பை வழங்கியிருக்கிறார். ரன்வீருக்கு இணையாக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மஸ்தானியாக வரும் தீபிகா படுகோனே. அவ்வளவு அழகு. காதலில் உருகுவதும், அதே காதலுக்காக அவமானங்களை ஏற்கும் இடங்களிலும், பாஜிராவின் குடும்பத்தாரை, முக்கியமாக அவரது முதல் மனைவி காஷிபாயை எதிர்கொள்ளும் இடங்களில் மின்னுகிறார். குதிரையேற்றம், வாள் சண்டை என்று ஆக்ஷன் ஏரியாவிலும் அதகளம் செய்திருக்கிறார். பாஜிராவின் முதல் மனைவி காஷிபாயாக பிரியங்க சோப்ரா. தன் கணவன் வேறு பெண்ணை விரும்புவது தெரியும் இடங்களில் இவர் காட்டும் உணர்சிகள் அபாரம். இந்த மூவரைத் தாண்டி மற்ற கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கவில்லை. அதற்கான தேவையுமில்லை.

பாகுபலி படத்தில் இருந்த "குறைகள்" இந்தப் படத்தில் இல்லை. உண்மையில் வாழ்ந்த மனிதர்களின் கதை என்பதால், முடிந்தவரை சினிமாத்தனமான ஜிகினா ஒட்டு வேலைகளை (செட், காஸ்டியூம், சண்டைக்காட்சி, லைட்டிங் போன்றவற்றில்) தவிர்த்திருக்கிறார்கள். இதை ஒரு மாவீரனின் கதை என்று நினைத்து ஆக்ஷன் எதிர்பார்த்துப் போனால் ஏமாற வாய்ப்புண்டு. இது முழுக்க முழுக்க ஒரு காதல் கதை. சண்டையிட்ட 42 போர்களில் இதுவரை ஒன்றில் கூட தோல்வியைக் கண்டிராத மாவீரனின் காதல் கதை. நமது கே.பி 'சிந்து பைரவி' படத்தில் சொன்ன அதே இரண்டாம் காதல் கதை. படத்தில் 10 ற்கும் அதிகமான பாடல்கள். சில இடங்களில் நெடிய வசனங்கள். தமிழ் டப்பிங் வசனங்களை மதன் கார்க்கி எழுதியிருப்பாதாகப் பார்த்த நியாபகம். சிறப்பாக இல்லை என்றாலும், குறைந்தபட்சம் காட்சிகளுக்கேற்ப சீரியஸாகவாவது இருந்தது. அதே போல பிரம்மாண்டத்தை மேலும் பிரம்மாண்டமாக்கும் ஏரியல் ஷாட்கள் படத்தில் குறைவு. சிறிய அறைகளுக்குள் அளவிற்கதிமாக ஆட்கள் முட்டிக்கொண்டு நிற்பதைப்போலத் தெரிந்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இந்த விஷயத்தில் கெட்டி.

படம் நெடுக பிரதானக் காட்சிகளை காதலும், காதல் சார்ந்த வசனங்களுமே நிரப்பியுள்ளது. மாறி மாறி உருகுகிறார்கள். அவ்வபோது யாராவது வந்து வெறுப்பை உமிழ்கிறார்கள். படத்தின் நீளத்திற்கு இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கலாம். போர்த்தளபதியாக ரன்வீர் சிங் வரும் காட்சிகளும், சிறிது நேரமே வந்தாலும் இரண்டு போர்க்களக்காட்சிகளும் அபாரம். முதல் போர்க்களக்காட்சி இருட்டில் நடக்கிறது. இரண்டாவது ஆரம்பித்த வேகத்தில் முடிந்துவிடுகிறது. படம் நெடுக தீப்பந்தம், சூர்ய ஒளி என்று natural lighting யிலேயே எடுத்திருக்கிறார்கள். நான் பார்த்த தியேட்டரோ மிகவும் சுமாரானது. பாதி தெரிந்து பாதி தெரியவில்லை. ஆனால் டிரைலரில் காட்சிகள் துல்லியமாகவே இருந்தன. ஆக, படத்தை நல்ல வெளிச்சமான திரையைக் கொண்ட, ஆனால் திரையில் வெளிச்சம் விழாத அரங்கில் பார்க்கவும். முடிந்தவரை மாலை அல்லது இரவுக் காட்சி பார்க்கவும். என்னைப் போல அவசரப்பட்டு பகல் வேலையில் சுமாரான தியேட்டரில் அடிக்கடி செல்போன் பேச, தம்மடிக்க வெளியே போகும் கூட்டத்தவருடன் படம் பார்த்தால் திருட்டு வி.சி.டி பிரிண்ட்டில் படம் பார்த்த எஃபெக்டே மிஞ்சும். நான் மீண்டும் இந்தப் படத்தை ஹிந்தியில் பொறுமையாக ஒரு நல்ல திரையரங்கில் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

14565675768 ஆவது காவியக் காதல் கதை தான் என்றாலும், அதனை கொடுத்திருக்கும் விதத்திற்காகவாவது இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும். காணாததைக் காட்ட வேண்டும் சினிமா. அந்த வகையில் சரித்திரக்கதைகள் எதையுமே நாம் மிஸ் பண்ணிவிடக்கூடாது. இந்தப் படத்தின் வெற்றி நம் பாரத தேசத்தின் இன்னும் சொல்லப்படாத பலப்பலக் கதைகளுக்கு அடித்தளமாக இருக்கும். பாகுபலி அளவிற்கு கமர்ஷியல் சரக்கு இந்தப் படத்தில் குறைவு தான் என்றாலும், பாஜிராவ் மஸ்தானி எந்த விததிலும் குறைவான படமே அல்ல.

from FB

 

2) உப்பு கருவாடு -ராதமோகனின் படம் எனபதற்காக below average 

 

3)நானும் ரவுடி தான் - இரண்டு பாடல்கள்  good, நயன்தார மற்றும் விஜய்  சேதுபதிக்காக பார்க்கலாம்

 

4) தனி ஒருவன் - இந்த வருடத்தின்  மிகவும் பிடித்த படங்களில் ஒன்று  don't miss it 

 

5) பாகுபலி- இந்த  வருடத்தின் மிகப்பெரும் ஹிட்,  எனக்கு பிடித்த படம்களில் இன்னொன்று

 

 

நாளை மிகுதி .............

 

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

6) பிரேமம்- மலையாளம்  good 

7) NH10 - இந்தி

 

8)பிகு-இந்தி

9) தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 

 

10) highway -இந்தி

 

 

11) ட்ரெமாண்டிகாலனி- தில் இருந்தா தனிய இருந்து பாருங்கள்  பார்ப்பம்

 

 

  • தொடங்கியவர்

12)இன்று நேற்று நாளை 

 

 

13) மாயா

 

 

  • தொடங்கியவர்

14) blindspot

 

15)blood and oil 

 

16) last ship 2

 

16) agent x

 

Edited by அபராஜிதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.