Jump to content

இன்பத்தைக் கூட்டி, நோயைத் தடுக்கவல்ல புதிய ஆணுறைத் தயாரிப்பு


Recommended Posts

பதியப்பட்டது

இன்பத்தைக் கூட்டி, நோயைத் தடுக்கவல்ல புதிய ஆணுறைத் தயாரிப்பு

 

உடலுறவின் இன்பத்தைக் கூட்டவும், பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் வல்ல புதிய ரக ஆணுறை ஒன்றை தாங்கள் உருவாக்கியிருப்பதாக அமெரிக்காவின் டெஸ்காஸ் மருத்துவ ஆராய்ச்சி மைத்திலுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர்.

150807121527_condoms_624x351_getty.jpg
 தற்போது பல வண்ணங்களில் சந்தையில் ஆணுறைகள் விற்கப்படுகின்றன.

மிகவும் குறைந்த விலையில், பாதுகாப்பான வகையில் கூடுதல் இன்பத்தை இந்த ஆணுறை வழங்கும் என்று இந்த ஆய்வாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

'சூப்பர் காண்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறை, வழக்கமாக ரப்பரிலிருந்து எடுக்கப்படும் லேட்டக்ஸிலிருந்து தயாரிக்கப்படாமல், ஹைட்ரோஜெல் என்னும் பொருளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

150625083507_condom_624x351_n_nocredit.jபாதுகாப்பான உடலுறவை வலியுறுத்தியே இந்த ஆய்வு என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் ஆங்கிலத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு ரசாயனங்கள் இதில் சேர்க்கப்படுவதால், இந்த ஆணுறை பால்வினை நோய்களுக்கு எதிராகவும் செயல்படும் என்று தாங்கள் நம்புவதாக, இந்த ஆய்வுக்குத் தலைமையேற்றுள்ள இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் மஹுவா சௌத்திரி பிபிசியின் நியூஸ்டே நிகழ்ச்சியிடம் தெரிவித்தார்.

தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் இந்த நோய் எதிர்ப்பு இரசாயனங்கள் எச்ஐவி தொற்று பரவுவதை தடுக்கும் வல்லமை கொண்டது என்பது தமது ஆய்வில் தெரிய்வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

140520083731_condoms_624x351__nocredit.j பல நாடுகளில் ஆணுறையை பயன்படுத்துவதில் சமூக, சமயத் தடைகள் உள்ளன

எனினும் இந்த ஆணுறைத் தயாரிப்பு இப்போது சோதனை கட்டத்திலேயே உள்ளது என்றும், அதன் விலை தற்போது ஒரு அமெரிக்க டாலர் அளவுக்கு வருகிறது எனவும் டாக்டர் சௌத்திரி தெரிவித்தார்.

ஆனால் ஆரம்பகட்ட சோதனை முறையிலான தயாரிப்பு வெற்றி பெற்று, வர்த்தக ரீதியிலான தயாரிப்பு தொடங்கும்போது அதன் விலை நூற்றில் ஒரு பங்காக குறைந்து மிகவும் மலிவான விலைக்கு வரும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

150805104910_giant_condom_624x351_getty.  பல நாடுகளில் ஆணுறை குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் தம்பதியனரின் அறக்கட்டளை கொடுத்த உதவி மற்றும் ஊக்கத்தின் காரணமாகவே இந்த புதிய ஆய்வு முயற்சி முன்னெடுக்கப்பட்டது என்றும் பேராசிரியர் மஹுவா சௌத்திரி பிபிசியிடம் கூறினார்.

http://www.bbc.com/tamil/global/2015/12/151220_supercondom

  • கருத்துக்கள உறவுகள்
Posted

150807121527_condoms_624x351_getty.jpg

என்னப்பா ரவுசர் தோய்ச்சு காயப்போட்டமாதிரி உந்த நீளத்துக்கு தொங்குது!?!?!?!?!?!?!  tw_dizzy:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.