Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்; சிலருக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கவும் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரியில் அமைச்சரவை மாற்றம்; சிலருக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கவும் தீர்மானம்

[ Tuesday,22 December 2015, 03:09:20 ]   
go.jpg

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சிங்கள பத்திரிகை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, அமைச்சரவை 90 பேருக்கு வரையறுக்கப்பட்டுள்ளதோடு, இதில் 45 அமைச்சர்களும், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 45 பேரும் காணப்படுகின்றனர்.

தற்போது அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் உள்ளதோடு, 23 பிரதியமைச்சர்களும், 19 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.

இதுதவிர மஹிந்த ராஜபக்ச அணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் அமைச்சுப் பதவிகளை கோரியிருப்பதோடு, நிபந்தனைகளையும் முன்வைத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சுப் பதவிகளை கோரியுள்ளனர்.

எவ்வாறாயினும் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்ப் பிரதிநிதிகள், நல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு டக்ளஸ் தேவானந்தாவிற்கு  அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் என்ற அழுத்தத்தை அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக கொடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மலையகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தலைமைகளும், ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டாம் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்திவருவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வருடம் ஜனவரி மாததத்தில் அமைச்சரவையில் சில சில மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்திவருவதோடு, சில புதியவர்களும் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://ibctamil.com/news/index/15573

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.