Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்திரிக்காவின் ஐக்கிய நாடுகள் கல்வித்துறை ஆலோசகர் பதவி பறிமுதல்?

Featured Replies

சந்திரிக்காவின் ஐக்கிய நாடுகள் கல்வித்துறை ஆலோசகர் பதவி பறிமுதல்?

ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான - பண்பாட்டு அமைப்பில் சிறீலங்காவின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட பதவி பறிமுதல் செய்யும் நிலை தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னாசியப் பிராந்தியத்தில் தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் சந்திரிக்காவை பயணத்தை உடன்நிறுத்தி தலமைச்செயலகம் திரும்புமாறு ஐக்கிய நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கொய்ச்சீரோ மற்சூரா பணிப்புரை விடுத்துள்ளார்

சந்திரிக்கா கடந்த காலத்தில் மேற்கொண்ட பல மனித உரிமைகள் குறித்து பல மட்டங்களில் இருந்து வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இதுகுறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

www.pathivu.com

  • தொடங்கியவர்

சந்திரிகாவின் நியமனத்தை யுனெஸ்கோ இடைநிறுத்தியது.

ஐக்கிய நாடுகளின் தென்னாசியாவிற்கான கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்த சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் நியமனத்தை யுனெஸ்கோ இடைநிறுத்தியுள்ளது.

இவரின் நியமனம் தொடர்பாக சிறிலங்காவிலும், சர்வதேச நாடுகளிலும் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் தொடர்பான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஆசிய நாடுகளுக்கு இவர் மேற்கொள்ளவிருந்த பயணங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

www.puthinam.com

சர்வதேச சமூகம் இலங்கை அரசின் மனிதவுரிமை நடவடிக்கைகளை உன்னிப்பாக ஆராய ஆரம்பித்து இருக்கிறது என்பதுக்கு இது நல்ல உதாரணம்... மகிந்தவுக்கு வயித்தில புளியை கரைச்ச மாதிரி இருக்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிகாவின் ஐ.நா. உயர் பதவி இடைநிறுத்தம் மனித உரிமைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில்

தங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதென்கிறார் யுனெஸ்கோ இயக்குநர் நாயகம்

கொழும்பு,டிசெ.18

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வுக்கு ஐ.நாவில் கிடைக்கவிருந்த மிக உயர் பதவி கடைசி நேரத்தில் கைநழு விப் போயுள்ளது.

சந்திரிகா குமாரதுங்கவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கிடைத் துள்ள முறைப்பாடுகள் மற்றும் பத்திரி கைத்துறை வெளிப்பாடுகள் காரணமா கவே இந்த மதிப்பார்ந்த உயர் பதவிக்கான அவரது நியமனம் இடைநிறுத்தப்பட்டுள் ளது.

ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான மற் றும் கலாசார நிறுவனத்தின் (யுனெஸ்கோ) தென் ஆசியப் பிரிவின் ஆலோசகர் பதவி திருமதி குமாரதுங்கவுக்கு வழங்கப்பட விருந்தது. மனித உரிமை மீறல்களை அவர் புரிந்துள்ளார் என்ற வகையில் கிடைத் துள்ள முறைப்பாடுகளையும், ஏனைய பத்திரிகைத்துறை வெளிப்பாடுகளையும் கருத்தில்கொண்டு இப்பதவி வழங்கு வதை ஐ.நா. நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக "யுனெஸ்கோ' நிறு வன பணிப்பாளர் நாயகம் பணிமனை யில் இருந்து திருமதி குமாரதுங்கவின் லண்டன் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அவர்மீது

தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள். நிறுவனத்தின் நோக் கங்களை சீர்குலைப்பவைகளாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஆசிய நாடுகளுக்கு பதவியின் நிமித்தம் அவர் மேற்கொள்ளவிருந்த பிரயாண ஒழுங்கு களை மாற்றிக்கொள்ளுமாறு கேட்கப்பட் டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

யுனெஸ்கோ செயலாளர் நாயகம் பணி மனையில் பேச்சாளர் மியுரிவ் டி பீறே போர்க் இது குறித்து "சண்டே ரைம்ஸ்' பத்திரிகைக்குத் தகவல் தருகையில், யுனெஸ்கோ சார்பில் குமாரதுங்கவிற்கு வழங்கப்படவிருந்த பதவியானது பல்வேறு மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகளின் மோசமான கண்டனங்களுக்குள்ளாகி யிருப்பதுடன் அவர் கடும் விமர்சனங்களுக் கும் பத்திரிகைகளின் வெளிச்சப்படுத்தல் களுக்கும் உள்ளாகியுள்ளார் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ புதிய ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் அதிபர் பதவியை இழந்துவிட்ட சந்திரிகா, ஐ.நா வின் மேற்படி பதவியை அடைவதற்கு முன்னாள் ஐ.நா. செயலாளர் கோபி அனான் மூலமாகப் பெரும் முயற்சி எடுத்துக் கொண் டார் என்று கூறப்படுகின்றது. மேலும் பிரெஞ்சு அதிபர் ஜக்ஸ் சிராக்கின் ஆத ரவையும் அவர் பெற்றுக்கொண்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் மற் சுறா சந்திரிகாவுக்கு எழுதிய கடிதத்தில்

மனித உரிமை அமைப்புகள் தெரிவித் திருக்கும் குற்றச்சாட்டுக்கள், கருத்துக்கள் களின் பின்னர் எதிர்கால உறவுகள் தென் னாசியப் பிரிவில் நீங்கள் பணிபுரிவதற்கு சுமுகமானதாக இருக்கமாட்டாது என்றே நான் கருகிறேன்.

இத்தகைய சூழ்நிலையில் நான் உங்க ளுடன் செய்து உத்தேசித்திருந்த உடன் பாட்டை மீள்பரிசீலனை செய்யவேண்டி யுள்ளது. அதன் பின்னர் நான் உங்களுடன் தொடர்புகொள்வேன்.

இப்போதைய நிலை உங்களுக்கு ஏற் பட்டுள்ள அசௌகரியம் எங்கள் கட்டுப் பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றும் தீதும் பிறர்தர வாரா!

`

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவுக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச மட்டத்திலான மதிப்பார்ந்த பதவி, பறிபோகும் ஆபத்து நிலை உண்டாகி இருக்கிறது.

ஆம். ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) என்ற உலகளாவிய பெருமைக்குரிய நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான ஆலோசகர் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டு, அதிலிருந்து அவர் நீக்கப்படும் பாதகமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அவரது பதவி நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதினொரு வருடங்கள் பணியாற்றியவர் சந்திரிகா. தாம் நினைத்ததைச் செய்துகொண்டு தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் வசதியையும் வாய்ப்பையும் பெருக்கிக் கொண்டு அதிகாரம் பண்ணியவர் அவர். அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து மக்களுக்குத் துரோகம் செய்ததாகப் பத்திரிகைகள் அவரைப் பிய்த்து வாங்கியதும் உண்டு. அதனால் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்களைப் பழிவாங்கவும் துணிந்தவர்.

ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களைப் பாதிக்கும் விடயங்களைப் பத்திரிகைகள் வெளிச்சம் போட்டுக் காட்டியபோதெல்லாம், சந்திரிகா, அவசரகாலச் சட்டம் என்ற கேடயத்தை வைத்துக்கொண்டு அவற்றை வெட்டி வீழ்த்த முயன்றார். ஏன், பத்திரிகை அலுவலகங்களை மூடிச் ""சீல்'' வைக்கவும் செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக , தன்னை ஒரு சமாதானத் தேவதையாக அலங்கரித்துக் காட்டிக்கொண்டு, தமிழர்களுக்குச் சேரவேண்டிய உரிமைகளை வழங்காது, அது விடயத்தில் சிறிதும் விசுவாசம் இல்லாமல் ஆயிரக்கணக்கானோரின் மரணத்துக்கு ரிஷிமூலமாக இருந்தவர்.

தனது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் ஒரு முன்னேற்றவாதியாகக் காட்டிக்கொண்டு, தமிழர்களின் விவகாரத்தில் அவர்களின் அழிக்கவொண்ணா பிரிக்கவொண்ணா உரிமைகளை வழங்குவதில் தாராளவாதியாக வேடம் பூண்ட வர்.

ஆனால் பின்னர்

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான ""சமாதானத்துக்கான போர்'' என்ற மிகப் பயங்கரமான எடுகோளை முன்னெடுத்து, அங்கு ""இராணுவ ஆட்சி''யை நிலைநிறுத்தியவர். ஜனநாயகக் கோட்பாடுகளையும் மனித உரிமைகளையும் துச்சமாக மதித்துத் தனது காலின் கீழ் நசுக்கிப் பிழிந்து சிதைத்தவர்.

தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கு இருந்த வாழ்வுரிமைகளைக்கூட பறித்தெடுக்கும் மிகப் பாதகமான நிலையை உண்டாக்கி, அவர்களைப் பேரவலத்திற்குள்ளும் அவஸ்தையான வாழ்வுக் குள்ளும் தள்ளி வீழ்த்தி முன்னுதாரணம் காட்டியவர் சந்திரி காவே. சட்டத்தையும் ஒழுங்கையும் நீதிமுறையையும் பொசுக்கி ஒரு புறத்தே தள்ளி, தமிழ் மக்களின் அடிப்படை உரிமை களையே துவம்சம் செய்தவர்.

பேரினவாதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்; சமாதான சகவாழ்வில் அதிக நம்பிக்கை கொண்டவர் என நம்பவைத்து மோசம் செய்தவர். நாட்டின் உயர் பதவியில் அமர்வதற்கு மிக முன்னதாகத் தமிழர்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவரே சந்திரிகா என்று நம்பும் விதத்தில் செயற்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி.

ஆனால், அதிகாரக் கதிரையில் அமர்ந்ததும், அதீத பேரினவாதியாக மாறித் தமது பதவியை நீண்ட காலத்துக்கு அதற்குரிய இரண்டு தடவைகளையும் அனுபவித்துக் கோலோச்சவேண்டும் என்ற ஆசையினால் உந்தப்பட்டு, தமிழ் மக்களின் உரிமைகளை அவமதிக்கும் வகையில் எள்ளிநகையாடும் விதத்தில் செயற்பட்டவர் அவர்.

தினை விதைத்தவன் தினை அறுப்பான்

வினை வினைத்தவன் வினை அறுப்பான் என்பது முதுமொழி. அது மிக மொத்தமாகவும் முழுமையாகவும் சந்திரிகாவுக்குப் பொருந்தி உள்ளது.

மனித உரிமைகளை மீறியமை, அதிகார துஷ்பிரயோகம் குறித்துப் பத்திரிகைகளில் வெளிச்சப்படுத்தப்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே சந்திரிகாவுக்குக் கிடைத்த அனைத்துலக மதிப்பார்ந்த பதவி பறிபோவது அனேகமாக உறுதியாகிவிட்டது.

அவர் மீதான பிரதான குற்றச்சாட்டு, பதவியில் இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் அதிகமாக ஈடுபட்டார் என்பதாகும்.

அதாவது, தமிழ் மக்கள் மீது கூரிய சட்ட விதிகளையும், இராணுவ அடக்குமுறைகளையும் கையாண்டு அவர்களை திறந்த வெளிச்சிறையில் வைத்தும் எண்ணில் அடங்காத சித்திரவதைகள், கொலைகளை நடத்தியும் இம்சைக்கு ஆளாக்கியவை எல்லாமே மனித உரிமை மீறல்களே.

யுனெஸ்கோவின் உயர் பதவிகளில் ஒன்றான தென்னாசியாவுக்கான ஆலோசகர் பதவியைப் பெறுவதற்குக் கூட, அவர் பிரெஞ்சு ஜனாதிபதி ஜக் சிராக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இம்மாத இறுதியுடன் நீங்கிச் செல்லும் கொபி அனான் ஆகியோரிடம் ""பின்கதவு''ச் செல்வாக்கு பெற்றே அடைந்தார் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் சேர்ந்துள்ளது.

இந்தப் பதவியை வைத்துக்கொண்டு, இலங்கைக்கு வராது புதுடில்லியில் இருந்தவாறே இலங்கை அரசியலில் தமது செல்வாக்கையும் ஆதரவையும் பெருக்கிக்கொள்ளும் திட்டம் சந்திரிகாவிடம் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

கழன்றுவிழப்போகும் என எதிர்பார்க்கப்படும் யுனெஸ்கோ பதவியை வைத்துக்கொண்டு, மஹிந்தவிடம் தற்போதுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியைப் பறித்து மீண்டும் அரசியலில் தமது செல்வாக்கைச் செலுத்துவதற்குச் சந்திரிகா திட்டம் வைத்திருந்தார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

எப்படியோ, தன்வினை தன்னைச் சுடும் என்ற பாடத்தைப் பயின்று கொள்வதற்கு யுனெஸ்கோ உயர் பதவி விவகாரம் சந்திரிகாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.

பலரைச் சில காலம் ஏமாற்றலாம்

சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம்,

எல்லோரையும் எல்லாக் காலமும்

ஏமாற்றமுடியாது என்பதற்கு இணங்க

இலங்கையின் அரசியல் தலைவர்கள் தமிழர்களின் விடயத்தில் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதனை உணர்வது நல்லது. சொல் ஒன்றும் செயல் வேறாகவும் முரணாகவும் செயற்பட்டுத் தப்பித்துக்கொள்ள இயலாது என்பதற்கு சந்திரிகாவின் நிலைமையை ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்.

நன்றும் தீதும் பிறர் தர வாரா!

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

This is a shame to Bandaranayake family and a warning to Mahinda and his his peoples.

உலகின் பல நாடுகளிலும் உள்ள அரச தலைவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் இன அழிப்பு, நிதி மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றில் ஈடுபட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்து தமது ஆட்சிக்கால முடிவில் வேறு வழியின்றி நாட்டிலிருந்து வெளியேறி ஐ.நா போன்ற சர்வதேச இஸ்தாபனங்களில் பதவிகளைப் பெற்று உயர் அந்தஸ்துடன் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்புடன் உலகவலம் வருவது ஒன்றும் புதிதல்ல.

இதுபோன்ற வசதிகள் சந்திரிகாவுக்கும் ஏன் சதாம், முகாபே போன்ற சர்வாதிகாரிகளுக்கும் கூட கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வசதிகளை அராஜக ஆட்சிசெய்யும் அரச தலைவர்கள் தமது ஆட்சிக்காலம் முடிவதற்குள் குறித்த இஸ்தாபனத்திலிருக்கும் முக்கியஸ்தர்கள் அதிகாரிகளுடன் முற்கூட்டியே பேரம்பேசி வைத்துக்கொள்வது வழக்கம். இதில் கொடுக்கல், வாங்கல், பரிந்துரைப்பு, விட்டுக்கொடுப்புகள் என்பன முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

சந்திரிகா விடயத்தில் இப்போது பதவிக்காலம் முடிந்து செல்லும் ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் மற்றும் ஆயுதபோரினால் பாதிக்கப்பட்ட சர்வதேச சிறார்களுக்கான ஐ.நா பிரதிநிதி ராதிகா குமாரசாமி ஆகியோர் முக்கிய பங்கெடுத்துச் செயற்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் ஐ.நாவில் புதிதாக பதவிக்கு வந்துள்ள பொதுச்செயலாளர் திரு. பான் கி-மூன் சந்திரிகா விடயத்தில் திருப்தியடைந்ததாகத் தெரியவில்லை. எனவேதான் அவர் பதவிக்கு வந்ததும் வராததுமாய் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச தொடர்புள்ள "நோர்வேஜிய" நண்பர்கள் மூலம் அறியமுடிகிறது.

வினை விதைத்தால் வினைதானே அறுக்க வேண்டும். தாய் தந்தை தமிழருக்கு செய்த அநியாயங்கள் அறுவடையாகின்றன. இது பண்டா பரம்பரைக்கு மட்டுமல்ல சிங்கள தேசத்திற்கே அவமானம்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.