Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது: முதல்வர் கருணாநிதி பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுக்க இயலாது: முதல்வர் கருணாநிதி பேச்சு

விழுப்புரம், டிச. 18: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள இயலாது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறினார்.

2-வது கட்ட இலவச நிலம் வழங்கும் விழாவை விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:

"துணைக் கண்டமான இந்தியாவுக்கு, "கண்டம்" வராமல் பாதுகாக்க வேண்டும். பக்கத்து நாடால் "கண்டம்" வரக்கூடாது என்பதற்காகச் சிந்தித்துச் செயல்படுகிறோம். இலங்கைப் பிரச்சினையில் இதே நிலையைக் கையாள்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதால், அங்கிருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருவது தொடர்கிறது. அண்மையில் தில்லிக்குச் சென்றபோது இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசினேன்.

இதுவரை நடந்தவை நடந்ததாக இருக்கட்டும், இனி, நடக்கப்போவது நல்லவையாக இருக்க வேண்டும் என்று சோனியாவிடம் கூறினேன்.

எத்தனை துயரம் வாட்டி வதைத்தாலும், அதை மறந்துவிட்டு, மனித நேயத்துடன் இப்பிரச்சினையை அணுக வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

இப் பிரச்சினை தொடர்பாக சோனியா காந்தி எனக்கு எழுதிய கடிதம், இப் பிரச்சினை விரைவில் தீரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாண எல்லோரையும் துணையாக வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

-தினமணி

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

  • கருத்துக்கள உறவுகள்

மெழுகுவோமே பூசி மெழுகுவோமே..

ஆனந்தப் பதவியை அடைந்துவிட்டோமென்று..

:lol:

:P கருனாநிதி நினைத்தால் அமெரிக்காவுக்கே அல்வா கொடுக்கலாம்.....அமெரிக்காவின் வளர்ச்சியில் தமிழரின் பங்கு என்ன என்பது அமெரிக்காவுக்கே தெரியும்...

ஆனாலும்..எங்கேயோ உதைக்குது.....வெள்ளயனனோடு மேல் மட்டத்தில்வேலை செய்பவர்களுக்கு ஒன்று விளங்கியிருக்கும்....அவன் நல்லவன்....எப்ப அவனுக்கு மேலால கதைக்காம....அடக்கி வாசித்தா....ஆனால்....நாமோ அவன்....வன்முறையை விட சொல்லியும்....விடமுடியாத நிலை.....என்வே அவன்...நிச்சயமாக உறுதியாக எம்மை ஒரு கை பார்கவே நினைப்பான்....ஆகவே தமிழ்நாட்டின் ஒவ்வொரு குரலும்.....பெறுமதியான காலம் இது.....சும்மா குரைத்தாலும் பரவாயில்லை.....கள்ளர் கை வைக்க பயப்பிடுவீனம். :P

வைக்கோ, விஜயகாந்த, ராமதாஸ் திருமா......... இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும் ஈழத்தமிழர்கள் ஆதறவு எங்கே நாம் பின் தங்கிவிடுவோமோ என்ற பதைபதைப்பில் இவர் அளறுகிறார் கருணாநிதி. மற்றப்படி இவரால் பலன் பூஜ்யம்தான்.

Mr Chief Minister,

WE NEED ACTION NOT WORDS

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்வர் கருணாநிதி மேலும் ஈழத் தமிழருக்குச் செய்ய வேண்டும் என்பது அனைவரினதும் எதிர் பார்ப்பு! அவர் அதைச் செய்வார் என நம்புவோம்.

முன்னைய தமிழக அரசுகளோடு ஒப்பிடும் போது, அவரது நடவடிக்கைகள் வரவேற்கப் பட வேண்டியவை.

அவர் செய்வதை நாம் யாவரும் போற்ற வேண்டும். போற்றா விட்டாலும், தூற்றாமலாவது இருப்போம்.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இனவாத சிங்கள அரசுக்கு தனது மாநிலத்திலிருந்து வெடிமருந்து ஏற்றுமதிசெய்யப் படுகிறது என்பதைப் பற்றி தெரிந்திருக்காத ஒரு முதலமைச்சர்தான் இதைச் சொல்கிறார். சரி அதை விடுவோம் அப்படியொன்று நடந்தாலும் அதை காட்டமாக தட்டிக்கேட்டு உண்மையை வெளியில் கொண்டு வந்து சம்பந்தப்பட்டவர்களை நீதிக்குமுன் நிறுத்தி தனக்கு இதில் எதுவித சம்பந்தமுமில்லை என்பதை சாட்சியத்துடன் நிரூபித்தால் அன்றி இந்த வெடிமருந்து ஏற்றுமதி விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதிக்கும் பங்குண்டு என்றுதான் நான் சொல்வேன். இதை விட்டு வெறும் வாய்சவடால் விடுவதில் எதுவித அர்த்தமுமில்லை. கருணாநிதி வழமைபோலவே வெறும் வார்த்தை ஜாலத்தால் நடந்ததை மூடிமறைப்பதற்கு முயற்சி செய்கிறார்.

கருணாநிதி செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான் - உருவாகப்போகும் தமிழீழத்திற்கு இந்தியா இடைஞ்சல் தராமல் பார்த்துக்கொள்வது.

இவரின் வார்த்தை ஜாலங்களை நாம் நம்பக்கூடாது. எல்லாம் ஒரு அரசியல் லாபத்துக்காக. ஆனால் நாம் அதை நம்புவது போல் pretend பண்ண வேண்டும். அதைத்தான் நம் medias செய்கிறது என்று நம்புகிறேன். முள்ளை முள்ளால்த்தான் எடுக்க வேண்டும்.

முற்றிலும் குழறுபடிகள் நிறைந்ததுதான் இந்திய அரசியல். அப்படியிருக்க யார் யாரைக் கேட்பது, மாநிலத்தையா மத்திய அரசையா? மாநிலத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பார் மைந்தர்களும் பேரர்களும் நாட்டை ஆளுவார்கள். மத்திய அரசு என்ன இதற்குச் சளைத்தவர்களா என்றால் இல்லவேயில்லை மன்மோகன் வெறும் கைப்பொம்மைபோல் இருக்க சோனியா முழு அதிகாரங்களையும் வைத்திருப்பார். நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பாகிஸ்த்தானும் சீனாவும் சொல்லத்தான் அவர்களுக்கே தெரியவரும்.

இலங்கையில் இனப்படுகொலை நிறுத்தப்படவேண்டும் - கருணாநிதி

சிறீலங்காவில் இனப்படுகொலை நிறுதத்ப்படவேண்டும் அதேவேளை உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி மீண்டும் மத்திய அரசை கோரியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைதெரிவித்தார். தற்போது சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள நிலமைகள் தொடர்பில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி - பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் பாதிக்கப்படுவதை தடுப்பது தமிழகத்தின் பொறுப்பு

அதிலிருந்து விலகமாட்டோம் என்கிறார் கருணாநிதி

""சேர, சோழ, பாண்டிய மன்னர்க ளின் வழித்தோன்றல்களான ஈழத் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்து, அவர்களைப் பாது காப்பது தமிழகத்தின் பொறுப்பு. அதிலிருந்து நாம் விலகமாட்டோம்'' இப்படித் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி.

நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசும் போதே கருணாநிதி இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

""இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனப்படுகொலை கள் நிறுத்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப் பட வேண்டுமென தமிழக அரசு, மத்திய அரசைக் கோரியுள்ளது.

இலங்கையில் பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கு உலகமெங்கும் கதவுகள் திறந் துள்ளன. தமிழகத்தில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் தமிழர்களின் அவல நிலை குறித்து காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இது குறித்து அவர் சாதகமான பதிலை அறிவித்துள்ளார்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்களான ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பு. அதிலிருந்து நாங்கள் விலக மாட்டோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

-உதயன்

கருணாநிதியின் வார்த்தைகள் ஈழத்தமிழர்களை மேலும் அகதிகளாவதையே பார்க்கவேண்டுமென்ற பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது. அவர் வெறுமனே பேச்சுமேடைகளில் சொல்வதை நிறுத்தி ஈழத்தமிழருக்குச் சார்பான செயலில் இனியாவது இறங்கவேண்டும். இவ்வாறான பேச்சுக்கள் தமிழகத்தில் வேண்டுமானால் கைதட்டல்களையும் கோசங்களையும் பெற்றுத்தரலாம் ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இவையொன்றும் தற்போது உதவாது. ஈழத்தமிழர்களை சேர, சோழ, பாண்டியர்களின் வழித்தோன்றல்களென்று இப்போது நினைவுகூருவதை விடுத்து ஈழத்திலிருந்துகொண்டு போர், பட்டினிச்சாவு, கடத்தல், கொலை ஆகிய அனைத்துக் கொடூரங்களையும் சிங்களஅரசிடமிருந்து சமகாலத்தில் அனுபவித்துக்கொண்டிருக்கும் இலட்சோபலட்சம் தமிழ்த் தாய்மார், தந்தைமார் மற்றும் குழந்தைகளை தனது இனம், உறவுகளென்று கருணாநிதி சொல்லவேண்டும்.

இஞ்சேரும் ஸ்ராலின் என்ன நிந்தாவோ.....வரும் கால முதல்வர் உங்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம்.....உங்கள் கன்னிப்பேச்சை இலங்கை தமிழர் சார்பாக எடுத்துவிட இது ஒரு அருமையான சந்தர்ப்பம்....சில நேரம் அப்பன் 10 அடி பாய்ந்தால் பிள்ளை 100 அடி பாயிறதுகள்.....கனிமொழி தங்கைக்கு உண்மையான அன்பு எங்களில உண்டு எண்டு பார்த்தனியல் தானே....உங்கட சிலமன கானேல அது தான் ஒருக்கா கேட்பம் என்று எழுதுறன்.....தமிழ்நாட்டு அரசியல் வேற....எங்கட பிரச்சனை வேற எண்டு நினையுங்கோ......இது மனிதாபிமானம் கலந்த.....வீரத்தமிழின்.....விடுதல

பொதுவாய் சொல்லலாமா?

தற்போதைய தமிழ் நாட்டு அரசையோ

அதன் முதல்வரையோ விமர்சிக்காதீர்கள்!

அதனால் - பெரிதாய் தீமை -அவர்களுக்கு ஒன்றும் வர போவதில்லை!

முன்னைய ஆட்சி என்ன எமக்கு செய்ததென்று - நீங்க விளங்க- முயற்சித்தால்

விடை கிடைக்கலாமோ - என்னமோ!!

அதே தமிழ் நாட்டவர் - எலி கறி தின்று சாகும்போது - நாம் ஏதும் செய்தோமா?

பிறகு ஏன் - நிறைய - எதிர் பார்க்கிறோம்?

Edited by வர்ணன்

உண்மையில் எமது தமிழீழ தேசியத்திற்கும் தனிநாட்டு இலட்சியத்துக்கும் ஆதரவாக, இந்திய மண்ணிலிருந்து குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து கிடைக்கும் அனைத்து உதவிகளும் வரவேற்கத்தக்கவை. ஈழத்தமிழர்களைத் தமது உறவுகளாக நினைத்து தமிழ்நாடும் அதன் அரசும் அவ்வாறான உதவிகளைச் செய்தால் அனைத்துத் தமிழக உறவுகளுக்கும் ஈழத்தமிழர்கள் என்றுமே தமது இதயத்தில் ஒரு நிலையான இடத்தைக் கொடுப்பார்கள். கடலுக்கு இரு கரையிலுமிருக்கும் தமிழினத்தின் பாரம்பரிய உறவையும் காலாதிகாலத்துக்கு மறவாது போற்றுவார்கள்.

ஈழத்தமிழர்களாகிய எம்மைப் பொறுத்தவரை இரண்டில் ஒன்று தெரியவேண்டிய காலமிது. எனவே தமிழக அரசியல்வாதிகள் சொல்வதைக் காலம் தாழ்த்தாமல் செய்துகாட்ட இதுவே தருணம். ஈழத்தமிழினம் படும் அல்லல்களை தமது அரசியல் இலாபமாக்கி எக்காளமிடும் பம்மாத்துக் கூட்டத்தை இனங்கண்டு தூக்கி எறியவேண்டியது தமிழகத்தில் வாழும் எமது உறவுகளின் இன்றைய கடமை.

சிங்கள இராணுவத்துக்கு தமிழகத்திலிருந்து வெடிமருந்தை அனுப்ப அனுமதித்தது தமிழக அரசின் குற்றம். இந்த வெடிமருந்தால் எப்படியும் எமது தாயகத்தில் ஒரு தமிழனோ அல்லது ஒரு தமிழிச்சியோ கட்டாயம் பாதிக்கப்பட்டிருப்பாள். முன்னர் ராஜீவ் காந்தியைத் தேடிவந்ததுபோல் இதிலும் பொறுப்பானவர்களைத்தேடி சில வேளை அவர்கள் இந்தியாவுக்கு வருவதற்கும் வாய்ப்புண்டு. இந்த விடயத்தில் உண்மைகளை வெளிக்கொண்டுவர தமிழக அரசு வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடவேண்டும்.

இன்று ஈழத்தமிழனுக்கு கைகொடுத்துதவ முன்வராத எந்த ஒரு தமிழகத் தமிழனும் தன்னைத் தமிழனென்று சொன்னால் அது கேள்விக்குறிதான். பெருந்தலைவர் அறிஞர் அண்ணாவின் வழிகாட்டலில் வந்த உங்களின் கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு என்ற கொள்கை எங்கே போயிற்று?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.