Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு - தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு - தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 12:39.28 AM GMT ]
exam_result_out_001.jpg
2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/home.jsf  இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி முதல் 29ம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர் தர பரீட்சை 2,180 பரீட்சை நிலையங்களில் நடைபெற்ற மேற்படி பரீட்சையில் 309,069 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப்பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளநிலையில் மீள்திருத்தங்களுக்கான விண்ணப்பங்களும் கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய முடிவுகளின் திருப்தியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம்  5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கணித பிரிவில் ரோயல் கல்லூரி மாணவன் முதலிடம்

2015 ஆம் ஆண்டின் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபெறுகளின்படி கணிதப்பிரிவில் கொழும்பு 7, ரோயல் கல்லூரியின் தசுன் ஜெயசிங்க என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் ஏனைய பிரிவுகளின் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

விஞ்ஞானப் பிரிவில் கம்பஹா மாவட்ட மாணவி முதலிடம்

2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகளின்படி விஞ்ஞானப்பிரிவில், கம்பஹா ரட்னாவெலி மகளிர் வித்தியாலய மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

தெபுலி உமேஷா கருணாவலபா என்ற மாணவியே விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தக பிரிவில் குருணாகல் மாவட்ட முஸ்லிம் மாணவன் முதலிடம்

2015 ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி வர்த்தக பிரிவில் முதலிடத்தை குருநாகல் மலியதேவ வித்தியாலம் பெற்றுள்ளது.

இதன்படி மலியதேவ வித்தியாலயத்தின் மாணவரான எப்.எம் அகில் மொஹமட் என்ற மாணவர் வர்த்தப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

கலைப்பிரிவில் குருணாகல் மாவட்ட மாணவி முதலிடம்

2015ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் குருணாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.

ஜீவா நயனமாலி என்ற மாணவியே கலைப்பிரிவில் முதல் இடம்பெற்றுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்

2015ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தை புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியின் மாணவர் ஜே.எம் மொஹமட் முன்சிப் பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வத்சலா சிறிவர்த்தன பெற்றுள்ளார்.

கணிதப்பிரிவில் இரண்டாம் இடத்தை குருணாகல் மலியதேவ வித்தியாலயத்தின் தனஞ்செய திஸாநாயக்க பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை இரத்தினபுரி சிவலி மத்திய கல்லூரியின் சச்சித் கஸ்தூரியாராச்சி பெற்றுள்ளார்.

வர்த்தகப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை கொழும்பு தேவிபாலிகா வித்தியாலயத்தின் சதனி இரங்கா வித்தானகே பெற்றுள்ளார். மூன்றாம் இடத்தை மொரட்டுவை சென் செபஸ்தியன் கல்லூரியின் ரன்தி ரமேஸ் சில்வா பெற்றுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmuyBTXSWjr0A.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெயர் ஒன்றையும் காணவில்லை ????....................:mellow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மாணவி முதலிடம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 04:14.16 AM GMT ]
nuvara_1st.jpg
இன்று வெளியான க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் தமிழ்  மாணவி, விஞ்ஞான பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஹற்றன்  ஹைலண்ஸ் கல்லூரின் சந்தரன் சஜிதா என்ற மாணவியே 3A என்ற பெறுபேற்றைப் பெற்று  நுவரெலியா  மாவட்டத்தில் முதல் நிலைபெற்றுள்ளார். மேலும் அகில  இலங்கை ரீதியில் 113ம் இடத்தினை பெற்றுள்ளார். 

இவர் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மற்றும்  ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

பி.சந்தரன்,  கே.சுமதி  தம்பதியரின் புதல்வியான இவரை, ஹற்றன் ஹைலண்ஸ்  பாடசாலை அதிபர்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

http://www.tamilwin.com/show-RUmuyBTXSWjr1E.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.