Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்து மும்பை வீரர் உலக சாதனை!

Featured Replies

"நச்"சுன்னு அடிச்சு ஆடி 652 ரன்களைக் குவித்த ஆட்டோ டிரைவர் மகன்... 15 வயதில் உலக சாதனை!
 
 மும்பை: மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் அபாரமாக ஆடி அடித்து நொறுக்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார் 15 வயதேயான இளம் கிரிக்கெட் வீரர். 199 பந்துகளில் 652 ரன்களை இந்த குட்டிப் பையன் குவித்து அத்தனை பேரையும் வியக்க வைத்துள்ளார்.
 
இந்தப் பையனின் பெயர் பிரணவ் தனவாடே. மும்பையைச் சேர்ந்த தனவாடே, மும்பையில் நேற்று நடந்த பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் பேய்த்தனமாக ஆடி விட்டார். பள்ளிகள் அளவிலான கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களைக் குவித்த வீரராக புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார் தனவாடே. இதற்கு முன்பு 1899ம் ஆண்டு ஏஇஜே காலின்ஸ் என்பவர் எடுத்திருந்த 628 நாட் அவுட் என்பதே தனி ஒரு வீரர் ஒரு இன்னிங்ஸில் அதிகம் குவித்த ரன்னாக இருந்தது. தற்போது அதை தனவாடே முறியடித்துள்ளார்.
 
05-1451972861-05-1451969790-pranav-mumba
கல்யாண் பள்ளி மாணவர்
கல்யாண் பகுதியில் உள்ள திருமதி கேசி காந்தி ஹை ஸ்கூல் பள்ளியில் படித்து வரும் மாணவர் தனவாடே. அந்த அணியின் சார்பில் ஆடிய பிரணவ், தனது ஸ்கோரில் 72 பவுண்டரிகளையும், 28 சிக்ஸர்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட்
பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இது. ஆர்யா குருகுல் பள்ளிக்கு எதிரான போட்டியில்தான் இந்த உலக சாதனையைப் படைத்தார் தனவாடே.
 
அணி ஸ்கோர் 956
தனவாடே போட்ட போடால் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் அவரது அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 956 ரன்களைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆட்டோ டிரைவரின் மகன்
10வது வகுப்பு படித்து வருகிறார் தனவாடே. இதில் விசேஷம் என்னவென்றால் இவரது தந்தை பிராஷந்த் ஒரு ஆட்டோ டிரைவர். நேற்று தனது மகனை ஆட்டோவில் கொண்டு வந்து விட்டுப் போய் விட்டாராம்.
 
நண்பர் கூறியதைக் கேட்டு ஓடி வந்தார்
பிரணவ் 300 ரன்களைக் கடந்து அதிரடி காட்டியதைத் தொடர்ந்து பிரஷாந்த்தின் நண்பர் தகவலைக் கூறியுள்ளார். உடனே ஆட்டோவுடன் போட்டி நடந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளார் பிரஷாந்த். மகனின் அதிரடியை நேரில் கண்டு களித்த அவர் உலக சாதனையையும் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
 
பெருமை மகிழ்ச்சி
எனது மகன் சாதனை படைத்திருப்பது பெருமை தருகிறது. மகிழ்ச்சி தருகிறது. 11 வருடமாக அவன் கடுமையாக உழைத்து வந்தான். அதற்குக் கிடைத்த பரிசுதான் இது என்றார் அவர்.
 
இன்னொரு சச்சினாக வருவாரா?
"சிவாஜி பார்க்"கிலிருந்துதான் சச்சின் டெண்டுல்கர் வந்தார்.. அதேபோ கல்யாணிலிருந்து இந்த குட்டி சச்சின் இந்தியாவின் பெயரை எதிர்காலத்தில் பிரகாசிக்க வைப்பாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12512821_10154211582769578_1617485190364

  • தொடங்கியவர்

ஒரே இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்து மும்பை வீரர் உலக சாதனை!

 

கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரராலும் நிகழ்த்த முடியாத சாதனையை மும்பையை சேர்ந்த வீரர் ஒருவர் நிகழ்த்தியுள்ளார்.

para%20.jpg

மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஹெச்.டி பண்டாரி கோப்பைக்கான பள்ளி அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் நேற்று கே.சி காந்தி பள்ளி அணியுடன் ஆரிய குருகுல அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கே.சி. காந்தி பள்ளி அணி வீரர் பிரணவ் தாணவாடே ஒரே இன்னிங்சில், 1009 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். இதற்கு 323 பந்துகளே தேவைப்பட்டது. இவரது 1000 ரன்களில் 129 பவுண்டரிகளும் 59 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 312.38 ஆகும்.

prrraaa.jpg

கிரிக்கெட் உலகின் எந்த காலக்கட்டத்தில் எந்த ரூபத்திலும்  நிகழ்த்தப்படாத சாதனை இது. இதே வீரர்தான் ஏற்கனவே ஒரே இன்னிங்சில் 199 பந்துகளில் 652 ரன்கள் ஒரே இன்னிங்சில் அடித்து  உலக சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஒரே இன்னிங்சில் கே.சி. காந்தி பள்ளி அணி 1,465 ரன்கள் எடுத்தது. இதுவும் ஒரு உலக சாதனைதான். அத்துடன் எதிர்த்து விளையாடிய ஆரிய குருகுல பள்ளி அணி வெறும் 31 ரன்களுக்கு ஆல்அவுட் ஆக, 1,434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றது. இதுவும் ஒரு உலக சாதனைதான்.

தற்போது 15 வயதான பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் . இது குறித்து பிரணவ் கூறுகையில்,'' 900 ரன்களை கடந்ததில் இருந்து எனக்கு கொஞ்சம் பதற்றம் இருந்தது. எனினும் சாதித்து விட்டேன்'' என்றார்.

http://www.vikatan.com/news/sports/57228-first-cricketer-in-history-to-score-1000-runs.art

1003607_10154211778084578_11621237268672

  • தொடங்கியவர்

323 பந்துகளில் 1,009 ரன்கள்: 15 வயது மும்பை பள்ளி மாணவர் வரலாற்றுச் சாதனை!

 
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 1000 ரன்களைக் கடந்து இமாலய சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே. | படம்: சிறப்பு ஏற்பாடு.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 1000 ரன்களைக் கடந்து இமாலய சாதனை நிகழ்த்திய பிரணவ் தனவாதே. | படம்: சிறப்பு ஏற்பாடு.

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 4 இலக்க ரன்களான 1009 ரன்களை 323 பந்துகளில் பள்ளிகளுக்கிடையிலான கிரிக்கெட்டில் விளாசி சாதனை படைத்துள்ளார் மும்பை மாணவர் பிரணவ் தனவாதே.

இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

10-ம் வகுப்பில் படிக்கும், 15 வயது மாணவரான பிரணவ், கே.சி.காந்தி மேனிலைப் பள்ளி மாணவர் ஆவார். இவர் பண்டாரி கோப்பைக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் ஆர்ய குருகுல பள்ளிக்கு எதிரான போட்டியில் 323 பந்துகளில் 1009 ரன்களைக் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளார், மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டித் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 395 நிமிடங்கள் கிரீசில் இருந்த பிரணவ் 1009 ரன்களில் 129 பவுண்டரிகள்டையும், 59 சிக்சர்களையும் விளாசியுள்ளார். ஸ்கோர் 1465 ரன்களை எட்டியபோது காந்தி மேனிலைப்பள்ளி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்த ஸ்கோரும் ஒரு உலக சாதனை. 1926-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக விக்டோரியா 1,107 ரன்களை எடுத்ததே முந்தைய அதிக ஸ்கோருக்கான சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை பிரணவின் இமாலய இன்னிங்ஸினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தற்போது எந்த வகையான கிரிக்கெட்டிலும் பிரணவ்வின் இந்த 1009 ரன்களே வரலாற்று சாதனையாகும். முன்னதாக பிரிட்டனில் ஏ.இ.ஜே.கொலின்ஸ் என்ற வீரர் தனிப்பட்ட முறையில் எடுத்த 628 ரன்களே மிகப்பெரிய சாதனையாக இதுவரை இருந்து வந்துள்ளது.

கடந்த மாலை 652 நாட் அவுட் என்று இருந்த பிரணவ், இன்று அனைத்து கால, அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அதிகபட்ச தனிப்பட்ட மிகப்பெரிய ஸ்கோரை அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்த இன்னிங்ஸ் மூலம் 2013-ம் ஆண்டு பிரிதிவி ஷா என்ற மும்பை ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் மாணவர் எடுத்திருந்த அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரான 546 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார் பிரணவ்.

பிரணவ்வின் இந்த இமாலய சாதனையில் நெகிழ்ச்சியடைந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் இவரது முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது.


பிரணவ் தனவாதேயின் சிறப்பு என்னவெனில் இவர் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென், தோனியை தனது லட்சிய ஆளுமையாக இவர் குறிப்பிட்டுள்ளார். “நான் எப்பவுமே பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பமுள்ளவன். நான் சாதனை நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதாவது முதல் பந்திலிருந்தே அடித்து ஆடுவது என்பதே எனது இயல்பான ஆட்டம்” என்கிறார் இந்த இளம் சாதனை நாயகன்.

சச்சின் டெண்டுல்கர் இந்த வளரும் அதிரடி நாயகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/323-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1009-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article8068752.ece

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் , பிரணவ் தனவாதே....!

கனமான சாதனைதான், கனத்தை தலையில் ஏற்றாமல் கைகளில் தாங்கினால் வெற்றிகள் தொடர்ந்து வரும்...!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..! ஆனாலும் எத்தனை பக்கத்துவீட்டு ஜன்னல்கள் உடைஞ்சதோ தெரியேல்ல.. laugh.png

 

  • தொடங்கியவர்

943823_10153143793270870_916765131836854

உலக சாதனை scorecard இதோ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.