Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான்

Featured Replies

 

இசை தேடும் இசைப்புயல் ஏ,ஆர்.ரஹ்மான்

 

ஹாலிவுட் படங்களை மட்டுமே தமிழன் பார்த்துக்கொண்டிருக்க, ஹாலிவுட்டின் மிகப்பெரிய விழா மேடையில் செம்மொழியாம் நம் தாய்மொழியில் பேசி தமிழர் நமக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிவந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் இன்று.

a-r-rahman-4f5b7bfc9607b.jpg

மேற்கத்திய இசை, கர்நாடிக் சங்கீதம், ராப், கிளாசிக்கல் இசை என இசையின் ஒவ்வொரு பிரிவையும் தன் ரத்தநாளங்களில் கலந்து வைத்திருக்கும் ஒரு மேதை தான் இந்த அல்லா ரக்கா ரஹ்மான். ஏறாத மேடைகள் இல்லை, இவர் கையை அலங்கரிக்காத விருதுகள் இல்லை, இவரிடமிருந்து பிறக்காத இசையும் இல்லை. ‘சிநேகிதனே’ என்று உருகவைப்பார், ‘போராளே பொன்னுத்தாயி’யென்று அழவைப்பார், ‘மன மன மன மென்டல் மனதில்’ என குதூகலிப்பார், ‘காதல் ரோஜாவே’யென கலங்கடிப்பார். இவரது இசை வெறும் சப்தம் அல்ல. அது உணர்வுகளின் வேறொரு பரிணாமம். அது தென்றலோடு சேர்ந்து வரும் மலர் வாசம். எளிமையே இவர்க்கு அடையாளம். இவரே தமிழகத்தின் மிகப்பெரிய அடையாளம்.

இசையை உண்டவர்

    ரஹ்மான் இசையைப் பயிலவில்லை. சுவாசிக்கவில்லை. அவர் இசையைத் தான் உணவாய் உண்டார். இசையமைப்பாளரான தனது தந்தை முதல் படம் வெளியான நாளன்றே மறைந்துவிட, வறுமையின் பிடியில் வாடிய ரஹ்மானின் குடும்பம் அந்த இசைக்கருவிகளை விற்றே குடும்பம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இசை அவர் ரத்தத்திலேயே கலந்திருந்தது. ஆனால் அதை தனது ஒவ்வொரு செல்களுக்கும் பாய்ச்சியவர் ரஹ்மான். வறுமையில் வேலை செய்துகொண்டே தனது இசைஞானத்தை வளர்த்துக் கொண்டார். டிரினிடி கல்லூரியின் ஸ்காலர்சிப்பால் இசை பயின்ற ரஹ்மான, இளையராஜா, எம்.எஸ்.வி போன்ற முன்னனி இசையமைப்பாளர்களின் இசைக்குழுவில் பணியாற்றியுள்ளார்.

AR_%20Berklee_edu%20photo.jpg

ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு டியூன் போட்டிக்கொண்டிருந்த ரஹ்மானை, 1992ம் ஆண்டு தனது ரோஜா படம் மூலம்  திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் மனிரத்னம். முதல் படமே மாபெரும் வெற்றி. பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகனை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டின. அதன் விளைவு – முதல் படத்திற்கே தேசிய விருது பெற்று பட்டையைக்கிளப்பினார் ரஹ்மான். பாம்பே படத்திற்கு அவர் போட்டிருந்த பின்னனி இசை உலகப் பிரசித்தி பெற்றது. 120 லட்சம் பிரதிகள் விற்றது இப்படத்தின் பாடல் கேசட்டுகள். அவ்விசையை பாலஸ்தீனியத்தின் ‘டிவைன் இன்டர்சேஞ்ச்’ படத்திலும், ஹாலிவுட்டின் முன்னனி நடிகர் நிகோலஸ் கேஜின் ‘லார்ட் ஆஃப் வார்’ படத்திலும் பயன்படுத்த உலகின் பார்வையில் பட்டது இந்த சென்னைப் புயல். 1992 முதல் 2000 வரை தொடர்ந்து தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார் (1998ல் அவர் எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இசையமிக்கவில்லை).


எல்லயைக் கடந்த புயல்


    தமிழில் மட்டும் நிற்கவில்லை ரஹ்மானின் வெற்றி. மொழிகள் கடந்து, எல்லைகள் கடந்து, தேசங்கள் கடந்து அவர் இசை ஒலித்தது. உலகின் மிகப்பெரிய இசைத்துறையான ஹாலிவுட் பக்கமும் வீசியது இந்தப் புயல். உலகின் பல நாடுகளிலும் இசைக்கச்சேரிகளை வெற்றிகரமாக நடத்தினார் ரஹ்மான். பாப் உலகின் மன்னன் மக்கேல் ஜாக்சனோடு இனைந்து பிரபு தேவா, ஷோபனா ஆகியோரை கொண்டு மாபெரும் இசை நிகழ்வை ரஹ்மான் நிகழ்த்த ‘மெட்ராஸ் மொசார்ட்’ என்று ரஹ்மானை அழைத்தது இசையுலகம். இசைத்துறையின் ஆஸ்கர் எனப்படும் கிராமி விருதையும் இரண்டு முறை கைப்பற்றி அலப்பரிய சாதனை படைத்தார் ரஹ்மான்.


ஆஸ்கர் நாயகன்:

    கடைக்கோடி ஏழை இந்தியச் சிறுவனைப் பற்றிய ஹாலிவுட் படம் ‘ஸ்லம்டாக் மில்லியினர்’. படமே நம் நெஞ்சைக் கரைக்க குவிக்க அதன் உணர்வுப்பூர்வமான இசையால் உருக்கினார் ரஹ்மான்.  பல ஆண்டுகளாய் இந்தியன் ஏங்கிக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதை இரு கைகளிலும் ஒவ்வொன்றாய்ப் பிடித்து “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிய அக்கனம் ஒவ்வொரு இந்தியனும் உச்சிமுகர்ந்து போனான். திரைத்துரையின் மிகப்பெரிய மனிமகுடத்தைச் சூடிய முதல் தமிழனானார் ரஹ்மான். அதுமட்டுமின்றி கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகளையும் வெல்ல, ஹாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குநரானார் ஏ.ஆர்.ஆர்.

 

arrahman.jpg


    இன்று இந்தியாவைப் பற்றிப் பேசும்போது பின்னனியில் ஜன கன மன ஒலிக்கிறதோ இல்லையோ ‘ஜெய் ஹோ’வும் வந்தே மாதரமும் நிச்சயமும் ஒலிக்கும். அந்த அளவிற்கு அப்பாடல்களில் உயிர்ப்பைக் கூட்டியிருப்பார் ரஹ்மான். 2010ல் நடந்த தமிழ் செம்மொழி மாநாட்டிற்கான பாடலை இசையமைக்கும் பொருப்பை தமிழக அரசு இவரிடம் கொடுத்தது. இவரது ஆளுமையைப் பயன்படுத்தி தனியாக அந்தப் பாடலை அவர் பதிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழ்த் திரையுலகின் முன்னனி பாடகர்கள் மட்டுமின்றி சக இசையமைப்பாளர்களையும் அதில் ஈடுபடுத்தி மாபெரும் மனிதனாய் நின்றார். திரைப்படப் பாடல் செல்போனில் ரிங்டோனாக வைக்கப்படுவது சாதாரனம். ஆனால் அந்த செம்மொழிப் பாடலே பலரது செல்போனில் ரிங்டோனாய் ஒலிக்கிறது என்றால் அதுதான் ரஹ்மானின் மேஜிக்கல் டச். 

எளிமையின் சிகரம்:

    எப்பேர்ப்பட்ட வெற்றியானாலும் அதை தன் கரங்கள் தாண்டி சிரம் செல்ல அனுமதிப்பதில்லை இவர். ஆஸ்கர் விழாவின் போது கூட “எனக்கு விருது கிடைக்காமலிருந்தாலும், என் தாயின் அன்பு குறையாது. எனக்கு அதுவே போதும்” என்று கூறியவர் ரஹ்மான். சிறிதும் நகைகள் அணிய விரும்பாதவர். தனது இசை சிறகுகள் விரித்துப் பறக்க வேண்டுமென்று இலவச இசைப் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். குடும்பத்திற்காக அதிக நேரம் செலவழிப்பவர்.

a-r-rahman-getty-resized.jpg

    ரஹ்மான் மிகவும் மெதுவாக இசையமைக்கும் பழக்கம் உடையவர். அதனால் சில இயக்குநர்கள் சங்கடப்பட்டதுண்டு. “நான் ஒவ்வொரு பாடலையும் ரசித்து தான் இசையமைப்பேன். அப்போதுதான் அதை சிரப்பாகக் கொடுக்கமுடியும்” என்று வெளிப்படையாகக் கூறியவர். மிகவும் இலகிய மனசுக்காரர் இவர் சமீபத்தில் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நல உதவிக்காக பல்வேறு நகரங்களில் இசைக்கச்சேரி செய்து, அதில் வசூலிக்கப்படும் பணத்தில் ஒரு பகுதியை அம்மக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார் ரஹ்மான். ரஹ்மானின் வெற்றிகள் எளிதில் கிடைத்தவையல்ல. அவை வறுமையை வென்ற வெற்றிகள். காலத்தை வென்ற காவியங்கள். ஒருமுறை பாடகர் ஜேசுதாசிடம் ரஹ்மான் பற்றிக் கேட்டபோது, “அவர் மௌனத்திலிருந்து கூட இசையை உருவாக்குவார் என்றார்”. அதுதான் இசை உலகில் ரஹ்மானின் அடையாளம். யாரும் நிணைத்துப்பார்க்காத ஒன்றை முடித்துக் காண்பிப்பார் இந்த இசைப்புயல்.

    உலக மேடையில் இந்தியாவையும் தமிழையும் பெருமைப்படுத்தி சாதனைகளைத் தன் பின்னே காத்திருக்க வைத்திருக்கும் இந்த இசைப்புயல் தன் வலுவை இழக்காமல் உலகெங்கும் வீசிக்கொண்டேயிருக்கும். வெற்றிகள் குவிந்த வண்ணம் இருக்கும். 

http://www.vikatan.com/news/miscellaneous/57256-ar-rahman-celebrates-his-49th-birthday.art

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்

இசைப் புயலின் விருது க்ளாஸிக்ஸ்!

 

a31920a6-d9b0-4141-87bb-c1e5475ab5f1_192

முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றவர் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்...பிறந்தநாள் சிறப்பாக அவருடைய மற்றும் அவரால் தேசிய விருது பெற்ற பாடல்கள் ஒரு ரீவைண்ட்....

roja%20j.jpg

”சின்னச் சின்ன ஆசை” - ரோஜா ”

வைரமுத்து எதார்த்தமாக எழுதி வைத்திருந்த கவிதை எங்கே கொடுங்கள் , இதை நான் பாடலாக்கிக் காட்டுகிறேன் என பாட்டுக்கு மெட்டுப் போட்டு அதற்கு தேசிய விருதும் வாங்கிய பாடல். மேலும் இந்தப் பாடலின் வரிகள், சில இசையமைப்பாளர்களால், என்ன இது ஆழமாக இல்லையே என்று உதாசீனப்படுத்தப்பட்ட வரிகள். ஏ.ஆர்.ரஹ்மானின் வித்யாசமான தண்ணீர் சப்தங்களும், சின்னச் சின்ன ஓசைகளும் இணைந்து தேசிய விருதைக் கொண்டு வந்தது!”

karutthama.jpg

”போறாளே பொண்ணுத்தாயி” - கருத்தம்மா 

"கருத்தம்மா படத்தின் போறாளே பொண்ணுத்தாயி பாடலுக்காக ஸ்வர்ணலதாவுக்கு சிறந்த பாடகி விருது கிடைத்தது. அதே பாடலுக்கு வைரமுத்து சிறந்த வரிகளுக்கான விருதும் பெற்றார். பாடகி ஸ்வர்ணலதா பெற்ற ஒரே ஒரு தேசிய விருதும் இதுதான்!”

kadhalan.jpg

”என்னவளே அடி என்னவளே” - காதலன்

”வருடா வருடம் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்”... என காதலியை பொக்கிஷமாக பாதுகாக்கும் ஆணின் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்த பாடல். உன்னி கிருஷ்ணனை முதல் பாடலிலேயே தேசிய விருது பெற வைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதே வருடம் இரண்டு பாடல்களுக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார். பவித்ரா படத்தின் உயிரும் நீயே பாடல். இந்தப் பாடல் வைரமுத்துவுக்கும் சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றுத் தந்தது!"

10270.jpg

”மானா மதுர மாமரக் கிளையிலே” - மின்சார கனவு

”மின்சாரக் கனவு படத்தின் பாடல். மென்மையாக பாடிக்கொண்டிருந்த சித்ராவுக்கு ஜாலியான , கொஞ்சம் குறும்புத் தோரணை கொடுத்து குழந்தைகளைக் கூட முணுமுணுக்க வைத்த பாடல். ஏ.ஆர்.ரஹ்மானின் இன்னொரு மாஸ்டர் பீஸ் இந்தப் பாடல்!”

160791.jpg

”தங்கத் தாமரை மகளே” - மின்சார கனவு

”அதே மின்சாரக்கனவு படம் தமிழ் சினிமாவுக்கு மூன்று இசை விருதுகளை 1994ல் கொண்டு வந்தது. சிறந்த பாடகராக எஸ்.பி.பாலசுப்ரமணியம், சிறந்த இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் மேலும் மானாமதுரை பாடலால் சிறந்த பாடகிக்கான விருதுகள் ஆகியன. இதனால், இந்திய சினிமா  தமிழ் சினிமா மீது பார்வையை அதிகம் செலுத்தத் துவங்கியதெனலாம். 

mudhal.jpg

”முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்” - சங்கமம்

”வைரமுத்துவின் வரிகளால் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு அழகு சேர்த்த இந்தப் பாடல் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 2002ம் ஆண்டு கொண்டு வந்தது. ”எந்தன் தாயின், கர்ப்பம் தாண்டி, மறுமுறை உயிர் கொண்டேன்” என பிரிவின் துடிப்பை சங்க கால ஸ்டைலில் காட்டிய  பாடல்!”

100804TabuKandukondain.jpg

”என்ன சொல்லப் போகிறாய்” - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

”சிறந்த பாடகருக்காக நான்கு முறை தேசிய விருது பெற்ற ஷங்கர் மகாதேவனை முதல் முறை விருது பெற வைத்த பெருமை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் பாடலுக்குத்தான். காதலைச் சொல்லி விட்டுப் பதிலுக்குக் காத்திருக்கும் ஆணின் ஏக்கத்தை திரையில் அழகாகக் காட்டிய பாடல்!”

53526.jpg

”வெள்ளைப்பூக்கள்” - கன்னத்தில் முத்தமிட்டால்

”இந்தப் பாடல் என இல்லாமல் மொத்தப் படத்தின் பாடலுக்காகவும் சிறந்த இசை, சிறந்த வரிகளுக்காக தேசிய விருது பெற்ற படம் கன்னத்தில் முத்தமிட்டால். அதிலும் வெள்ளைப் பூக்கள் பாடல் கேட்கும் போது நம்மையும் அறியாமல் மனது அமைதியாவதைத் தடுக்க முடியாது!”

இப்படி ஏ.ஆர்.ரஹ்மான் பலருக்கும் தேசிய விருது இதோ கைக்கெட்டிய தூரம் தான் என அவ்வளவு சுலபமாக்கினார். ஹாட்ஸ் ஆஃப் ஜீனியஸ்! 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/57268-arrahmans-national-award-winning-songs-list.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.