Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எக்நெலிகொட விசாரணைகளில் முக்கிய திருப்பம்?

Featured Replies

எக்நெலிகொட விசாரணைகளில் முக்கிய திருப்பம்?



லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக வட்டாரத் தகல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான இரண்டு சந்தேக நபர்கள், யாரின் உத்தரவிற்கு அமைய கடத்தல் இடம்பெற்றது என்ற உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் அதி உயர் பதவியொன்றை வகித்த நபர் ஒருவர் உள்ளிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிக நீண்ட விசாரணைகளின் பின்னர் யார் கடத்தலுக்காக உத்தரவிட்டார்கள் என்பது பற்றிய விபரங்களை இரண்டு சந்தேக நபர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்நெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பில் பத்துக்கும் மேற்பட்ட இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரண்டு நாட்களுக்கு முன்னதாக ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து எக்நெலிகொட கடத்தப்பட்டிருந்தார்.

இந்த கடத்தல் தொடர்பில் கைதான சந்தேக நபர்களுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் அவரது விசுவாசிகளும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஸ, கைதாகி வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்களை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்நெலிகொட கொழும்பில் கடத்தப்பட்டு பின்னர் கிரித்தலே முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் பேணிய தொடர்புகள் குறித்து எக்நெலிகொடவிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்களிடம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே இந்த கடத்தலுக்கு உத்தரவிட்டார் என கூறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு கூறினால் அவர்கள் விடுதலையாவர்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127575/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.