Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிசயக்குழந்தை

Featured Replies

  • தொடங்கியவர்

மெல்லிய .....
வலியால் பிரசவித்ததே ......
கஸல் கவிதை ..........!!!

கவிதையை .....
ரசிக்கிறாய் என்றால் .....
நீயும் என்னைப்போல் ....
வலியை சுமக்கிறாய் .....!!!

அவள் கண்ணில் ....
இப்போ தான் பட்டாள்......
இதய சேதவிபரம் ......
இன்னும் தெரியவில்லை .....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 
மெல்லிய வலி கவிதை

வீசும் காற்றில் ....
மரம் அசைகிறது .....
அழகாக இருக்கிறது ....
மரத்தின் வலி .....
யாருக்கு புரியும் ......!!!

கல்லில் கூட ஈரம் ....
இருப்பதால் பாசி .....
படர்கிறது .....
உன் இதயம் கல் கூட .....
இல்லையே .......!!!

கண்ணீரில் வேறுபாடு .....
இருப்பதே இல்லை .....
மனதின் வலிதான்.......
கண்ணீரை வேறுபடுத்தும் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 

  • Replies 53
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

காதல் செய்தேன்.....
திருமணம் செய்தேன்.....
பெண் தான் மாறி ....
விட்டது ...............!!!

தேவை என்றால் ....
பேசு என்கிறாய் .....
அப்போதே புரிந்து ....
விட்டது உன்னில் .....
இருந்து என்னை .....
விலக்குகிறாய்........!!!

கண்ணுக்கு மட்டும் ....
தான் தூர பார்வை .....
குறைபாடு இல்லை .....
இதயத்துக்கும் ......
இருப்பதை உன்னில் ....
கண்டேன் ............!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 07

  • தொடங்கியவர்

காதலில் நான் நாவல்...
நீயோ குறுங்கதை......
என்றாலும் சுவையாக.....
இருக்கதானே செய்கிறது....!!!

எனக்கு தெரியும்....
நம் காதல் தோற்கும்....
என்றாலும் காதல் ....
செய்தேன் நினைவோடு.....
வாழ்வதற்கு...........!!!

நினைவுகள் உனக்கு.....
குப்பையாக இருக்கலாம்.....
நான் குப்பை தொட்டியாக.....
இருந்து விட்டு போகிறேன்....!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 08

  • தொடங்கியவர்

இப் பிறப்புக்கு .......
எனக்கு கிடைத்த .....
பாவ விமோசனம் நீ.....!!!

என்னை பார்த்ததும்......
முகம் திருப்புகிறாய்........
முடிந்தால் உன் இதயத்தை.....
திருப்பு...................!!!

நான் விடும் மூச்சு.....
உன்னை சுடும் என்று.....
சந்தோசப்படவில்லை....
சுட்டு விடுமோ என்று.....
பயப்பிடுகிறேன்...............!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 09

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கவிப்புயல் இனியவன் said:

இப் பிறப்புக்கு .......
எனக்கு கிடைத்த .....
பாவ விமோசனம் நீ.....!!!

என்னை பார்த்ததும்......
முகம் திருப்புகிறாய்........
முடிந்தால் உன் இதயத்தை.....
திருப்பு...................!!!

நான் விடும் மூச்சு.....
உன்னை சுடும் என்று.....
சந்தோசப்படவில்லை....
சுட்டு விடுமோ என்று.....
பயப்பிடுகிறேன்...............!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 09

நோ... சான்ஸ். கவிப்புயல் இனியவன்.  
இப்படி... எல்லாம்,  காதலிப்பார்களா..... என்று, என்னால், உண்மையாக.....  நம்ப முடியவில்லை. :shocked:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
On 2/11/2017 at 3:49 AM, தமிழ் சிறி said:

நோ... சான்ஸ். கவிப்புயல் இனியவன்.  
இப்படி... எல்லாம்,  காதலிப்பார்களா..... என்று, என்னால், உண்மையாக.....  நம்ப முடியவில்லை. :shocked:

சில இடங்களில் கற்பனை அதிகமாகும்
அவளவுதான்
 ஹி ஹி ஹி ஹி ஹி 

  • தொடங்கியவர்

காதல் ...........
கிடைப்பது பாக்கியம்...............
காதலி ................
கிடைத்ததும் பாக்கியம் ..............
நீ ...................
இரண்டுமாய் கிடைத்தது............. 
பெரும் பாக்கியம் ..............!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்னை சுற்றி 

ஈசல் பறக்கிறது.........

மெல்லியதாய்மின்னல்......

சின்னதாய் ஒரு இடி......

மழை வரப்போகிறது.......

என்னவனே உன்னில்.....

இருந்து காதல் மழை.....

பொழியப்போகிறது.......

வனாந்தரமாய் இருந்த.....

இதயத்தை சோலையாக்க.....

வந்துவிடடா..............!!!

 

^^^

என்னவனே என் கள்வனே 01

காதல் ஒரு அடிப்படை தேவை

கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

இலைகள் 
அற்ற மரகிளையில்.......
ஒரு வண்ணாத்தி பூச்சியை.....
கற்பனை செய்து பார்......
எத்தனை அழகோ அழகு.....
அப்படிதானடா - நீ
வெறுமை கொண்ட என்.....
இதயத்தில் வந்தமர்ந்து......
என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!
^^^
என்னவனே என் கள்வனே 02
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

மழை பெய்யும் போது.....
இரு கரத்தை குவித்து......
உள்ளங்கையில் மழை.....
துளியை ஏந்தும்போது....
இதயத்தில் ஒரு இன்பம்....
தோன்றுமே அதேபோல்.....
உன்னை யாரென்று.....
தெரியாமல் இருந்த நொடியில்.....
நீ என்னை திடீரென பார்த்த.....
கணப்பொழுது........!!!
என்னவனே என்னை.....
புதைத்துவிட்டேன் உன்னில்....!!!

^^^
என்னவனே என் கள்வனே 03
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எத்தனை காலம்.....
உன் நினைவுகளை.....
சுமந்து கொண்டு வாழ்வது,.....?
அதற்குஎல்லை இல்லையா...?

வருகிறாய் பார்கிறாய்......
பேச துடிக்கிறாய்......
போசாமல் போய் விடுகிறாய்.....
மது கோப்பைக்குள்........
விழுந்த புழுவாய் துடிகிறேன்....
என்னவனே என் மன்னவனே.....!!!

^^^
என்னவனே என் கள்வனே 06
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

உன் வரவுக்காக ஏங்கி.....
கண் வழியே பாதை......
அமைத்து  தெருவையே.......
அமைத்து விட்டேன்.........!!!

நீயோ......
வருவதாய் இல்லை.........
என் தூரபார்வையில்.....
கோளாறு வந்தால் - நீ
தான் அதற்கு காரணம்....
வைத்தியரிடம் முறையிடுவேன்....!!!

^^^
என்னவனே என் கள்வனே 07
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ
பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்....
பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்......
பாதி தூக்கம் உன் வீட்டில் - நான்
மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!!

அப்பப்போ சண்டை.......
தடியெடுத்து அடிகும் மனதைரியம்.....
எனக்கும் இல்லை உனக்கும் இல்லை.....
ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்....
மாவீரர் நாம்...........................!!!

சற்று நேரம் கூட ஆகாது.........
வீட்டில் கிடைத்த இனிப்போடு.......
ஓடிவருவேன் உன் வீட்டுக்கு..........
பாதி கடித்த இனிப்பை.......
உன்னிடம் தர பறந்து போகும்.....
சண்டையின் பகை......................
நட்பென்பது எப்போதும் இனிமை.....!!!

&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நட்புக்கு வசந்த காலம்......
மழைக்காலம் தானே......
வேண்டுமென்றே நனைவதும்......
சேற்றுக்குள் உருளுவதும்......
வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்.....
மழைகாலம் வசந்த காலந்தானே.....!!!

வடிந்தோடும் வெள்ளதில்.......
பாய்ந்தோடும் காகித கப்பல்......
அப்போதுதான் படித்த குறிப்பு......
சற்றும் தாமதிக்காமல்.......
கிழித்து விடும் காகித கப்பல்.......
அடுத்த நாள் இருவருக்கும்.....
கிழிந்த கால்சட்டைமேல்.....
விழும் செமபூசை..........................!!!

வாற்பேத்தையை மீன் குஞ்சென.....
ஓடியோடி பிடித்து வீட்டுக்கு.....
கொண்டுவருவதும் வந்த கையோடு......
அம்மா பறித்தெறிவதும்..........
கடுப்போடு கத்தி பிரழுவதும்......
இன்றுவரை நினைவில் இருக்கும்....
வசந்த காலம்...............................!!!

&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

முயற்சி மனிதனின்.....
மூலவேர் -அதை.......
விருட்ஷமாக்குவது........
பயிற்சி.......................!!!

பயிற்சி போதாதெனின்......
தோல்வியென்னும்............
கிளை தோன்றும்..................
முயற்சி  தோற்பதில்லை.......!!!

வெற்றியின் போது........
ஓரக்கண்ணில் வருவது........
ஆனந்த கண்ணீரல்ல..........
தோல்வி தந்த வெள்ளை நிற.......
இரத்தம்...................!!!

&
தோல்வியை ரசி வெற்றியை ருசி
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ஆகாய எரிகல்......
கண்ணில் விழுந்தால்.....
அடுத்த நாள் அதே நேரம்....
வரைக்கும் கண்ணில்.....
இருந்து வலிதருமாம்.....!!!

ஆகாய எரிகல்லாய்.....
வந்துவிடு என்னவனே......
அப்போதாவது கண்ணுக்குள்.....
இருந்துகொண்டிருப்பாயே.....!!!

பாறையில் இருந்து கூழாங்கல்.....
உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு.....
இதயத்தை உடைக்கிறேன்......!!!

^^^
என்னவனே என் கள்வனே 08
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என் ......................
இதய ஊஞ்சலை......
ஆடவைத்துவிட்டு அதில்....
ஏறமாட்டேன் என்று  ஏன் ......
அடம்பிடிகிறாய்........?
எத்தனை காலம் தான்.....
வெறும் ஊஞ்சலாடும்.....?

சுற்றும் பம்பரத்துக்கு கூட.....
ஓய்வுண்டு என் இதயத்தை......
பம்பரமாய் சுற்றிவிட்டு.......
பார்த்து கொண்டே இருகிறாய்........!!!

^^^
என்னவனே என் கள்வனே 09
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்
 

என் இதய வீட்டுக்கு......
எப்போது குடிவர போகிறாய்....?
எண்ணத்தால் தினமும் கோலம்....
வண்ண வண்ணமாய் போடுகிறேன்.....
தினமும் என் ஏக்க மூச்சு.....
அழித்து கொண்டே போகிறது......!!!

கோலங்கள் மாறுகின்றன......
உன் கோலம் ஏன் மாறவில்லை........
இறைவா இவன் காணும்......
கனவை நிஜமாக்கி என்னை......
காதலிக்க வைத்துவிடு............!!!

^^^
என்னவனே என் கள்வனே 10
காதல் ஒரு அடிப்படை தேவை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் 
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது 
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே

&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09

  • தொடங்கியவர்

தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10

  • தொடங்கியவர்

இவையே  எனக்கு சிறந்தவை
------------------------------------

பிறந்த நாட்டில் ....
பிறந்த ஊரில் ....
ஒருபிடி மண் தான் ....
எனக்கு ....
பொன் விளையும் பூமி .....!

பேசும் மொழிகளில் ....
எந்த மொழியில் ....
கலப்படம் இல்லையோ ....
அந்த மொழி ....
எனக்கு தாய் மொழி ..........!

பேசும் போது எவரின்.....
மனம் புண்படவில்லையோ ......
எந்த சொல் மனதை ......
காயப்படுத்தவில்லையோ ......
அந்த மொழியே எனக்கு .....
செம்மொழி ..............!

பேசிய வார்த்தைகளால் .....
கிடைத்த புகழைவிட.....
பேசாமல் விட வார்த்தைகளால் .....
நான் பெற்ற இன்பமும் .....
நன்மையும் எனக்கு .....
நோபல் பரிசு ................!

நாடார்த்திய விழாக்களில் ......
உறவுகள் நட்புகள் .......
முகம் சுழிக்காமல்......
நாடார்த்திய விழாவே .......
எனக்கு .......
பொன் விழா .........!

பாடிய பாடல்களில் ......
இசையமைக்காமல் .....
பாடிய பாடல் .....
அம்மா இங்கே வா வா ....
ஆசை முத்தம் தா தா ......
என்ற பாடல் தான் ......
எனக்கு ......
தேசிய விருது பாடல் ....!

என் சராசரி அறிவை .....
சாதனையாளர் கற்கும் ....
கூடத்தில் என்னையும் .....
கற்பிக்கவைத்து .....
என்னை இன்று ஒரு .....
சாதனையாளனாக்கிய .....
என் ஆசானே எனக்கு ......
முழு முதல் கடவுள் .....!

பசிக்கும் குழந்தையின் .....
அழுகுரல் கேட்க்காமலும் .....
கை நீட்டி பசிக்காக .....
உதவி கேட்காத ...
முதியவரையும் .......
தெருவில் காணாத நாள் ....
எனக்கு .....
சொர்க்கத்தில் தூங்கிய நாள் .....!

எனக்கு வயது பத்து .....
என் தம்பிக்கு வயது எட்டு .....
தம்பியை அடித்த அவன் ....
நண்பனை நான் அடித்தேன் ....
அந்த நாள் நான் ஏதோ....
மாவீரன் போல் நினைத்த ....
நாள் - எனக்கு மனதில் ...
மல்யுத்த வீரன் நினைப்பு ......!

நாற்பது பேர் கொண்ட .....
வகுப்பறையில் .....
முதல் மாணவனாய் வந்து ....
பரிசுபெற்று மேடையை ....
விட்டு இறங்கியபோது ....
நான் நடந்த நடை தான் 
எனக்கு ......
ராஜ நடை .........!

&
கவிப்புயல் இனியவன் 
 

  • தொடங்கியவர்

நான் எழுதும்
எழுதுகருவியில்....
கண்ணீர் வலிகள்....
மன்னித்து கொள்...
கவிதை வலித்தால்....!!!

திருமணம் ஒன்றுக்கு....
மொய் எழுதபோனேன்......
மெய் மறந்தேன் திருமணம்....
அவளுக்கு...............!!!

புல்லுக்கும் நிலாவுக்கும்
காதல் தோல்வி
புல் நுனியில் பனித்துளி..........!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 10 

  • தொடங்கியவர்

விழியால் அனுமதி கொடுத்தாய்......
மொழியால் இதயம் நுழைந்தாய்....
அசைவுகளால் ஆட்டிப்படைக்கிறாய்....
துடிக்கும் இதயத்தை வலிக்கவைக்கிறாய்....
எப்போது நொடிக்கு நொடி பார்ப்பது...?

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை

  • தொடங்கியவர்

காதல் கனவாகும் போது....
உனக்காக விடும் கண்ணீர் ...
ஆயிரம் மழை துளிக்கு நிகர் .... 
ஒருமுறை தோளில் சாய்கிறேன்.......
சுகத்துக்காகவில்லை சுமைக்காக.....!

^^^
கவிப்புயல் இனியவன்
பஞ்ச வர்ணக்காதல் கவிதை 02

  • தொடங்கியவர்

உயிர் காக்கும் விவசாயின் உயிர்
------------------------------------------------

ஆண்டவன் படைப்பில் அதிசயப்பிறவி.......
உலகுக்கே உணவுகொடுக்கும் விவசாயி........
தன் கையில் சேற்றுடன் சோற்றை உண்பார்.....
எம் சோற்றில் ஒருகல் வராமல் காத்திடுவார்.....!
............................ஆளவேண்டிய விவசாயியின்று
............................அடங்கிகிடக்கிறான் வீட்டினிலே
............................கூழைபிசைந்து குடிக்கவழியில்லாமல்
............................குறுகிக்கிடக்கிறான் குடிசையிலே
நிலத்தை பண்படுத்தியவன் வாழ்க்கை.......
நிலைகுலைந்து போனதெதனால்.........
பணத்தை பத்துவட்டிக்கு கொடுக்கும்.....
பாழாய்போன பணப்பிணம் தின்னிகளால்.......
..........................ஒட்டு துணியோடு வயலிலே
..........................உச்சிவெயிலில் உலாவிவருவர்
..........................நட்டு நடு ராத்திரியில் காவலிருந்து
..........................அறுவடையை காத்திடுவர் கண்விழித்து
பயிருக்கு அடிக்கும் நஞ்சை எதற்காய்....
பாடையில் போகவதற்கு குடிக்கிறார்கள்
பயிர்கடனை கொடுக்க வழிதெரியாமல்
பாதியிலே உயிரை மாய்க்கிறார்கள்.......!

&
என் உயிர் விவசாயிகளுக்கு
உங்கள் மகனின் கவிதை
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ
மின்னல்
இதயத்தை
கருக்கிவிட்டாய்.......!

தலை குனிந்தாய்
நாணம் என்றுநினைத்தேன்....
நாணயம் இல்லாததை....
புரிந்தேன்...............!

நான் ....
மெழுகுதிரி ஒளி......
நீ மின்னொளியை........
எதிர்பார்கிறாய்................!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 11 

  • தொடங்கியவர்

என் மனம் 
சொறணை கெட்டது....
உன்னையே நினைக்கிறது....!

நிலவை
காட்டி சோறு ஊட்டலாம்.....
காதல் செய்ய முடியாது.....
நிலவோடு உன்னை....
ஒப்பிட்டதே தவறு..........!

என்னோடு...
இணைந்து பயணம்செய்.....
காதல் கோட்டை தொடலாம்...
நீ அன்ன நடை போடுகிறாய்.......!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
காதல் கஸல் 12
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.