Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் ! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இலக்கு வைக்கப்படும் ருத்ரகுமாரன் ! 
[Thursday 2015-12-31 08:00]
visivanathan-rudrakumaran-tgte-300-seith

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரும், தமிழீழ விடுதலையின் சனநாயகப் போராட்ட புலம்பெயர் அரசியற் தலைமையுமாகிய விசுவநாதன் ருத்ரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது ஏன் என்ற கேள்வி பொதுவாக மக்கள் மத்தியில் உள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை பின்னோக்கிச் செல்வதன் ஊடாக நாம் விளங்கிக் கொள்ள முடியும். தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியல் பெருவிருப்பின் வடிவமாக இலங்கைத்தீன் தமிழர் தாயகப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசானது சிங்கள தேசத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இலங்கைத்தீவில் தமிழீழம் - சிறிலங்கா என இரண்டு தேசங்கள் என்ற நிலைப்பாட்டினை இது உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தது.

தொடர்ச்சியாக ஒரு நிலப்பரப்பினை தக்கவைத்திருப்பதும் அங்கு ஒரு அரசுக்குரிய நிர்வாக நடைமுறைகளை பேணிவருவதும் இலங்கைத்தீவு முழுவதுமே சிங்களவர்களுக்கு என்ற சிங்கள பௌத்த பேரினவாத அடிப்படை கருத்தியலுக்கு சவாலாகவே இருந்தது.

இந்நிலையில் தமிழர் தேசத்தின் நடைமுறைத் தமிழீழ அரசினை அகற்ற முனைந்த சிங்கள அரசு பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்த ஆக்கிரமிப்பின் ஊடாக ஈழத்தமிழ் மக்களது தாயகம்இ தேசியம்இ தன்னாட்சியுரிமை எனும் அரசியல் விருப்பினை இல்லாது ஒழித்து விட்டதாக சிங்களம் வெற்றி முரசம் கொட்டியிருந்த வேளை இலங்கைத் தீவுக்கு வெளியே தோற்றம் பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது சிங்கள தேசத்துக்கு பேரிடியாக அமைந்தது.

சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் வெளி இல்லை என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோற்றம் வெளிப்படுத்தியிருந்ததோடு தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் தமிழ்மக்களது பெருவிருப்பினை அனைத்துலக அரங்கில் சனநாயக வழியில் உயிர்ப்பித்துக் கொண்டது.

தமிழர் தேசத்தினை தனது இராணுவ கட்டமைப்புக்கள் ஊடாக ஆக்கிரமித்துக் கொண்டாலும் கருத்தியல் ரீதியாக தமிழர்களின் அரசியல் விருப்பினை இல்லாதொழிப்பதில் இங்கே சிங்கள பௌத்த பேரினவாதம் தோல்வி கண்டது.

இத்தகைய நிலையில் அரசியல் ரீதியாக தமிழர்களை பலவீனப்படுத்துகின்ற திட்டங்களை சிங்களம் வகுத்துக் கொண்டது.

தன்னால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தேசத்தில் தனது இராணுவ பிரசன்னம் ஊடாக தமிழர்களின் அரசியற் செயற்பாடுகளை மட்டுப்படுத்தியும் அச்சுறுத்தியும் கண்காணிப்புக்குள்ளும் வைத்திருக்கின்ற சிங்கள அரசுக்கு, இலங்கைத்தீவுக்கு வெளியே புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை பலவீனப்படுத்த வேண்டிய தேவை முதன்மையாக இருந்தது.

போரின் இறுதியமைவுஇ புலம்பெயர் தேசங்களில் மக்களிடத்திலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்த பல்வேறு தாக்கங்களை தனக்கு சாதமாகப் பயன்படுத்த முனைந்த சிங்கள அரசு இதற்கான செயற்பாடுகளை பல்வேறு வழிகளிலும் முடுக்கியது.

குறிப்பாக தமிழ் தேசியத்தின் பெயராலேயே இதனை அரங்கேற்ற முனைந்திருந்தது.

இக்காலப்பகுதியில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட கே.பியினை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது இலக்கு வைத்த சிங்கள அரசுஇ ருத்ரகுமாரன், மனோகரன், சர்வே என தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சனாநாயக அரசியல் இராஜதந்திர தளத்தில் முன்னகர்த்த முனைந்த அனைவர் மீதும் சேறடிப்புகளையும்இ கட்டுத்கதைகளையும் கட்டவிழ்துக் கொண்டே இருந்தது.

கறுப்பு என்ற பெயரில் மின்னஞ்சல் பரப்புரை இதழ்களையும், சேரமான் மாயமான் போன்ற புனைப் பெயர்களில் நபர்களையும் புலம்பெயர் தேசங்களில் சிங்களம் களமிறக்கியது.

நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தினை பலவீனப்படுத்த இரண்டு தேர்தல்கள் சனநாயக அணி என ஏற்பட்ட குழப்பங்களை எல்லாம் தனக்கு சாதகமாக்க முனைந்த சிங்கள அரசுக்கு தோல்வியே மிஞ்சியது.

செயற்பாட்டுரீதியாக பல சவால்களை எதிர்கொண்டவாறு முன்னகர்ந்து வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழீழ விடுதலையின் மீதான உறுதிதளராத நிலைப்பாடு இற்றை வரை சிங்கள ஆட்சியாளர்களுக்கு சவாலாகவும் எரிச்சலாகவும் உள்ளது.

இந்த உறுதியான செயற்பாட்டுக்கு முதன்மையாக இருப்பவர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள். இவரே நாடுகடந் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராகவும் இருக்கின்றார்.

இந்த பின்புலத்தினை புரிந்து கொள்வதன் ஊடாக ருத்ரகுமாரன் ஏன் இலக்கு வைக்கப்படுகின்றார் என்ற கேள்விக்கான பதிலை நாம் ஒரளவு புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக உலக வல்லாதிக்க அரசுகள் பலவும் தான் ஆள நினைக்கின்ற அல்லது ஆக்கிரமிக்க நினைக்கின்ற தேசங்களிலோ அல்லது பகுதிகளிலோ ஓர் வலுவான அரசியற் தலைமை இருப்பதனை விரும்புவதில்லை. உரிமைக்காக போராடுகின்ற இனங்களுக்கும் வலுவான தலைமை இருப்பதனை விரும்புவதில்லை.

சமீபத்திய உதாரணங்களாகஇ அரபு வசந்தத்தின் ஊடாக அரபு தேசங்களில் மேற்குலகம் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களில் அத்தேசங்களின் மக்கள் தமக்கான தலைமையற்றுஇ தங்களுக்குள் தாங்களே மோதிக் கொள்கின்ற நிலையினை நாம் அவதானித்துக் கொள்ளலாம்.

இன்றையாக சமகால உலக ஓட்டத்தில் தேசங்கள் மீதான ஆக்கிரமிப்பு என்பது இராணுவ ரீதியானதல்ல. மாறாக தங்களுடைய பொருளாதார வர்த்தக தேவைகளின் நிமித்தம் சுரண்டல்களுக்கான பல்வேறு வகையிலான ஆக்கிரமிப்புக்களை சனநாயக மீட்பு என்ற பெயரில்இ வல்லாதிக்க சக்திகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்கு சரியான எடுத்துக் காட்டாக அரபு வசந்தத்தின் ஊடாக அரபு நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களையும் வல்லாதிக்க சக்திகளின் எண்ணொய் வளச் சுரணடல்களையும் இங்கு பொருத்திப் பார்க்க முடியும்.

இதுபோல் மியான்மாரில் ரொகிங்கா மக்கள் மீதான பௌத்த இனவாதிகளின் இனஅழிப்பில்இ ரொகிங்கா மக்களது அலைந்துழலும் நிலை என்பது அவ்வின மக்களுக்கான அரசியற் தலைமை இல்லை என்பதனை நாம் காணக்கூடியதாக உள்ளது.

இவ்விரு சமீபத்திய உதாரணங்களோடு ருத்ரகுமாரன் அவர்கள்இ சிங்களத்தினாலும் சிங்களக் கைக்கூலிகளினாலும் இலக்கு வைக்கப்படுவதன் முதன்மையான விடயங்களில் ஒன்றாக புலம்பெயர் தேச தமிழ்மக்களின் அரசியற் தலைமைத்துவத்தினை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கான அழுத்தங்களை கொடுப்பதில் புலம்பெயர் தமிழர்கள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றனர்.

சிறிலங்காவினை மையப்படுத்தி அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைச்சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்காவினை வசிப்பிடமாக கொண்ட ருத்ரகுமாரன் இருந்தததாக சிங்கள தேசம் தனது சந்தேகத்தினையும் குற்றச்சாட்டியுனையும் தனது ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தியிருந்தது.

தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்த போரின் நாயகனாக சிங்கள தேசம் கொண்டாடுகின்ற மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராகவும்இ அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கினைத் தொடுத்திருந்ததும் ருத்ரகுமாரன் என்பதும் சிங்கள அரசுக்கு இனிப்பானதாக இருந்ததில்லை.

பல்வேறு தமிழர் அமைப்புக்கள் மீது பயங்கரவாத மூலாமிட்டு தனது முதற்தடைப்பட்டியலை சிங்கள அரசு வெளியிட்ருந்த வேளை மகிந்த ராஜபச்ச, சந்திரிகா, சரத் பொன்சேகா, கோத்தபாய என சிங்கள தேசத்தின் பன்னிருவரை இனப்படுகொலையாளிகாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பட்டியலிட்டு அனைத்துலக வெளியில் வெளியிட்டிருந்தமையும் சிங்களதேசத்துக்கு இனிப்பானதாக இருந்திருக்கவில்லை.

இத்தகைய நிலையில் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் நல்லிணக்கம் என்ற மாயமந்திர வினையாக இனப்படுகொலைக்கான பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிக்கும் தந்திரமாகவும் தமிழர்கள் மீது தீர்வுத்திட்டம் என்ற பெயரில் ஒன்றைத் திணிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் முனைந்திருக்கும் இவ்வேளையில் சிங்கள ஆட்சியாளர்களுக்குப் பேரிடியாக ருத்ரகுமாரனின் அறிவிப்பொன்று விழுந்தது.

அது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாப்பதாவது ஆண்டான 2016ம் ஆண்டில் மெய்நிகர் தமிழீழ அரச செயன்முறையொன்றின் ஊடாக தமிழீழ தனியரசுக்கான அரசியல் யாப்பு வரையப்படவுள்ளது என்ற அறிவிப்பாகும்

சிங்களம் தனது அரசியல் யாப்புத் திருத்தம் ஊடாக தமிழாகள் மீது திணிக்க நினைக்கின்ற ஆண்டும் 2016 என்பதும இதன் எதிர் எதிர் நிலையாகவுள்ளது.

இவ்வாறு அரசியல் சனநாயக இராஜதந்திர தளத்தில் முன்னகரும் ருத்ரகுமாரனின் செயற்பாட்டினை முடக்குவதன் ஊடாக புலம்பெயர் தமிழ்மக்களுக்கான அரசியற் தலைமையினை இல்லாது ஒழிக்கலாம் என சிங்கள அரசு கங்கணம் கட்டுகின்றது.

சமீபத்தில் தன்னால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள்இ தனிநபர் பெயர்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மீளவும் உள்ளடக்கியிருந்த சிறிலங்கா அரசுஇ நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனிநபர் பெயர்களில் ருத்ரகுமாரனை மட்டுமே உள்ளடக்கியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

இதேவேளை ருத்ரகுமாரன் மீதான தடைப்பட்டியல் அரச ஆணையினை மூலமாகக் கொண்டு ருத்ரகுமாரனை அமெரிக்கா கைது செய்ய வேண்டும் அல்லது தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் சிறிலங்கா அரச ஊடகங்களில் வெளிப்படுத்தியும் வருகின்றது.

ருத்ரகுமாரனை இலக்கு வைக்கும் முயற்சிகள் கடந்த காலங்களில் தோல்வி கண்ட சிங்கள அரசானது விழுந்தும் மீசையில் மண்படாத கதையாக புதிய புதிய வியாக்கியானங்களுடன் புலம்பெயர் தேசங்களில் தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றது.

அன்று தமிழர் தேசத்தில் தனது ஆழ ஊடுருவும் படையணிகள் ஊடாக பல தமிழீழ விடுதலைத் தளபதிகளை வீழத்திய சிங்கள அரசு தற்போது கருத்தியல் தளத்தில் புலம்பெயர் தேசங்களில் ஆழ ஊடுருவுகின்றது.

தமிழர்களின் போராட்டத்தினைப் பலவீனப்படுத்தும் தந்திரச் செயற்பாட்டில் கெட்டிக்காரரான சிறிலங்காவின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் வருகையும்இ ருத்திரகுமாரனை இலக்கு வைக்கும் சேரமான் மாயமான் கும்பலின் கட்டுக்கதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.

சிங்களத்தின் இச்சதிகளை அறிவுக்கண்கொண்டு சிந்திப்பதும் விழிப்பாக இருப்பதுமே இன்றைய தேவையாகவுள்ளது.

-அகரதன்-

http://www.seithy.com/breifArticle.php?newsID=148210&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.