Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட காணாமல் போனோர் சங்கம் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட காணாமல் போனோர் சங்கம் தீர்மானம்

[ Wednesday,20 January 2016, 05:56:33 ]   
va.jpg

கட்டாயப்படுத்தப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மை நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

 

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ள திகதி தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமது சங்கத்துடன் இணைந்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களை, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காணாமல் போனவர்களின் விடுதலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த முற்றுகைப் போராட்டத்தில் அனைத்து சிவில் சமுக அமைப்புகளையும், மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் இணைந்துகொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஆட்கடத்தல் சம்பவங்களினால் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த குடும்பங்களில், இராணுவ மற்றும் பொலிஸ் உடைகளுடன் வீடுகளுக்குள் புகுந்து பிள்ளைகளை இழுத்துச்சென்றதையும், முள்ளிவாய்க்காலில் கணவர்களை, பிள்ளைகளை இராணுவத்தினரிடம் நேரடியாக ஒப்படைத்தவர்களும் கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர்.

2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின் போதும் ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைப்போம்.

சிறைச்சாலைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகளை விடுவித்து தருவோம்’ என்று கூறியே, தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் வாக்குகளை பெற்றுக்கொண்டனர். 

எனினும் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர், எமது பிள்ளைகளின் விடுதலை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது, அரச சலுகைகளை அனுபவித்து அரச உயர் பதவிகளை பெற்று வருகின்றனர் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்காக நீதி கோரி வீதியில் இறங்கிப்போராடாமல், கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்காமல், போராட்டங்களின் நியாயப்பாடுகளை நீர்த்துப்போகச்செய்து, 

‘காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களே இலங்கையில் நடைபெறவில்லை’ என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அரசாங்கத்தை பாதுகாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம்’ என தெரிவித்திருந்தார்.

அவ்வாறாயின் காணாமல் போன எமது பிள்ளைகள் இதுவரை காலமும் எந்த இரகசிய முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்? அவர்களை தடுத்து வைத்திருந்தவர்கள் யார்? அவர்களை சுட்டுக்கொன்றவர்கள் யார்? கொன்றவர்களுக்கு என்ன தண்டனை? பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு என்ன நீநியாயம்?’ என கேள்வியெழுப்பாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உண்மைநிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி, வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகங்களை மாவட்டந்தோறும் ஒரே நேரத்தில் முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

http://ibctamil.com/news/index/17265

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.