Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்பிலிபிட்டிய படுகொலை… நடந்தது என்ன?

Featured Replies

எம்பிலிபிட்டிய படுகொலை… தள்ளிவிட வேண்டாம் என்றும் சொல்லும் போது பொலிஸ் அதிகாரி எனது கணவா் பிரசன்னவை கீழே தள்ளினார். பிரவன்னவின் 5 மாத கா்ப்பிணி மனைவி கண்ணீருடன் திவயினவுக்கு சொன்னது…. ”

“ஆனாலும் இன்னும் சாதாரண பொது மக்களை சட்டத்தை காக்கும் அதிகாரிகள் தாக்குதல் நடத்தி கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள். அத்துடன் இச்சம்பவத்தை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் வேறு விடுகின்றார்கள்.

இவ்வாறு அடக்கு முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் சட்டத்தின் துணையை நாடுவது கேலிக்கூத்தான ஒன்றாகவே காணப்படுகின்றது.” .

*மருத்துவமனையில் எனது கணவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

* இரத்தினபுரி டி.எஸ்.பி அலுவலகத்தில் என்னை அச்சுறுத்தினார்கள்.

* நான் சொன்ன வாக்கு மூலங்களை எப்படி எழுதிக் கொண்டார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

சமுதாயமொன்றில் மிலேச்சத்தனமான தாக்குதல்கள், மனித படுகொலைகள் நடைபெறுகின்றன. அதிகளவான பைத்தியக்காரத்தனமான குற்றங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய தோற்றப்பாட்டில் மனிதர்கள் மேற் கொண்டுள்ளார்கள்.

ஆனாலும் சமூகத்தில் மீண்டும் மீண்டும் அவ்வாறான படுகொலைகள் நடைபெறுவதை மக்கள் விரும்புவதில்லை. இறுதியில் கொலை செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப்படுவதையும் மக்கள் விரும்புவதில்லை.

எபிலிபிடிய பிரதேசத்தில் பெண் பிள்ளையொருவரின் சாமத்தியச்சடங்கு விருந்தொன்றின் போது பொலிஸாருடன் குறித்த சிலர் ஏற்படுத்திக் கொண்ட கைகலப்பில் கொலையுண்டதாக சொல்லப்படுகின்ற சுமித் பிரசன்ன ஜயவர்தனவின் மனைவி ஷசிகா நிஸாமனி முனசிங்க சொல்வதற்கிணங்க பொலிஸார் இச்சம்பவத்தின் போது சட்டத்தை தம் கையில் எடுத்துசெயற்பட்டுள்ளார்கள்.

சட்டத்தின் உதவி கிடைக்காத ஒருவா் எம்மிடம் கதைக்கிறார். இதோ அவா் சொல்பவை.எனது பெயர் முனசிங்க ஆரச்சிகே ஷசிகா நிஸாமனி முனசிங்க. வயது 29. எனது கணவரின் பெயர் சுமித் பிரசன்ன ஜயவர்தன.

நாங்கள் திருமணம் முடித்து 9 வருடங்கள் ஆகின்றன. நாங்கள் வசித்து வருவது எபிலிபிட்டிய நவ நகரில் அமைந்துள்ள 103 ஆம் இலக்க இல்லத்தில். எங்களுக்கு பெண் குழந்தையொன்று இருக்கின்றது. அவரின் பெயர் டேஷானி சமத்கா ஜயவர்தன.

மகள் எபிலிபிடிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் 3 ஆம் ஆண்டில் கல்வி கற்கின்றார். நான் மற்றுமொரு குழந்தைக்கு தாயாக இருக்கின்றேன். நான் இப்பொழுது 5 மாத கர்ப்பிணி. என கணவருக்கு நிரந்தர தொழில் இருக்கவில்லை.

வாடகைக்கு வான் ஹயர் செய்யும் தொழிலை தான் செய்தார். ஆனாலும் நாங்கள் அழகான ஒரு வாழ்க்கையை கொண்டு சென்றோம். எனது கணவா் ஊதாரித்தனமான, குடித்து திரியும் நபர் இல்லை. நல்ல நற்பண்புடையவர். திருமணம் முடித்த நாள் தொடக்கம் அன்பான அழகாதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம்.

கடந்த 5 அம் திகதி எங்கள் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ள மென்டிஸ் மாமாவின் மகளின் சாமத்திய சடங்கு நடைபெற்றது. அந்த நிகழ்வு பகலும், இரவுமாக நடைபெற்றது. அன்றைய தினம் நான் சுகவீனம் காரணதாக அந்த நிகழ்வுக்கு செல்லவில்லை.

எனது கணவர் மட்டும் தான் சென்றார். நான் இரவு 11.15 மணியளவில் நித்திரை கொள்வதற்கு தயார் ஆனேன். அந்நேரத்தில் வைபவம் நடைபெற்ற வீட்டின் திசையிலிருந்து பாரிய சத்தம் ஒன்று கேட்டது. “புது அம்மோ அடிக்க வேண்டாம்… கொல்ல வேண்டாமென்று…” கதறுகின்ற சத்தமென்று கேட்டது நான் நித்திரையில் இருந்த மகளையும் எழுப்பி கூட்டிக் கொண்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றேன்.

அங்கு செல்லும்  போது பாதையின் நடுவே பொல்லுகளுடன் ஒரு குழு சிலரை கீழே தள்ளி அடித்துக் கொண்டிருப்பதை கண்டேன். அதற்கு கொஞ்சம் தூரத்தில் பொலிஸ் ஜீப்பொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

“எங்களுக்கு அடிக்க வேண்டாம்…” என கத்தும் சத்தம் வரும் இடத்திற்கு சென்றேன். மென்டிஸ் மாமாவின் மனைவியும், இன்னொரு மாமியும் மென்டிஸ் மாமாவை தள்ளிக் கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர். நானும் அத்துடன் மேல் மாடிக்கு சென்று என்னுடைய கணவா் எங்கே என்று தேடிப் பார்த்தேன்.

கீழிருந்து எனது கணவரின் குரல் கேட்டது. மேல் தட்டில் இருந்தப்படியே கீழே பார்த்தேன். கணவர் கொலிடோரில் இருந்தப்படியே “பொலிஸ் சீருடையை அணிந்து கொண்டு இவ்வாறு அடிக்க வேண்டாம்…” என்று பொலிஸ் அதிகாரிக்கு சொல்வது கேட்டது.

அப்பொழுது அந்த பொலிஸ் அதிகாரி “இன்னும் சொல்லு… இன்னும் சொல்லு…” என்று கூறி தம் கையில் இருந்த தொலைபேசியில் வீடியோ எடுத்தார். பின்பு நான் “கத்த வேண்டாம்… கத்த வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டே எனது கணவர் இருந்த இடத்திற்கு சென்று என்னுடைய கையால் அவரது வாயை பொத்தினேன்.

அந்ந சந்தர்ப்பத்தில் மென்டிஸ் மாமாவின் மகளும் அந்த இடத்திற்கு வந்து “அண்ணா போவம்…. போவம்…” என்று சொல்லி எங்கள் இருவரையும் என்று கணவரின் கையை பிடித்து இழுத்த வண்ணம் வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றார்.

பிறகு நான் எனது கணவரை உணவு உண்ணும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்தவர்கள் “அண்ணா… சாப்பிட்டு விட்டு தங்கையையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு போக சொன்னார்கள்.

நான் உணவை பரிமாரிக் கொண்டு கணவரின் கைக்கு கொடுக்கும் போது எபிலிபிட்டிய பொலிஸின் உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகா் அந்த இடத்திற்கு வந்தனர்.

அப்பொழுது “ இவன்தான் இவனை பிடித்துக் கொள்ளுங்கள் என்று உதவி பொலிஸ் அதிகாரி சொன்னார். அவரை கொண்டு செல்ல வேண்டாம் நான் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லப் போகின்றேன் என உதவி பொலிஸ் அதிகாரியிடம் சொன்னேன்.

அப்பொழுது உதவி பொலிஸ் அதிகாரி தகாத வார்த்தையால் திட்டி என்னை தள்ளி விட்டார். “நான் கா்ப்பிணித்தாய்…” என்று கத்தினேன். அந்த சந்தர்ப்பத்திலும் அங்கிருந்த பொலிஸ் அதிகாரி என் கணவரை அடித்து கீழே தள்ளி இழுத்துக் கொண்டு சென்றனர்.

அத்துடன் நான் அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த இரு அண்ணாக்களுக்கும் பொலிஸார் பொல்லுகளால் தாக்குவதை கண்டேன். நான் அந்த சந்தர்ப்பத்தில் தொலைபேசியில் என் கணவரின் தாய்க்கு நடக்கும் சம்பவங்கள் பற்றி கூறினேன்.

அவ்வாறு சொல்லிவிட்டு பொலிஸார் எனது கணவரை இழுத்து கொண்டு சென்ற திசையில் நானும் சென்றேன். மென்டிஸ் மாமாவின் வீட்டில் மேல் மாடிக்கு ஏறும் படிக்கட்டின் அருகில் நான் பொலிஸாரிடம் கூறினேன். “நாங்கள் வீட்டுக்கு செல்லதானே ஆயத்த மானோம். எங்களை விட்டு விடுங்கள்…” என்று.

அப்பொழுதும் பொலிஸார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி என்னை கீழே தள்ளி விட்டார்கள். “நான் ஒரு கர்ப்பிணித்தாய்… என் கணவரை அடிக்க வேண்டாம்…” என்று கதறி அழுதேன்.

அப்பொழுது ஒரு பொலிஸ் அதிகாரி என்னை நோக்கி துப்பாக்கியை நீட்டி தகாத வார்த்தைகளால் திட்டினார். அத்துடன் பொலிஸார் என்னை தள்ளிவிட்டு எனது கணவரை இழுத்து கொண்டு மேல் மாடிக்கு கொண்டு சென்றனர். “எனக்கு அடிக்க வேண்டாம்” என்று கணவா் கத்துவது எனக்கு கேட்டது.

அத்துடன் கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டது. நான் மேல் மாடிக்கு ஓடினேன்.அப்பொழுது ஏ.எஸ்.பி அவா்கள் இரண்டாம் மாடி கொலிடோரின் முனையில் இருந்துக் கொண்டு என் கணவரை கீழே தள்ளி விட முனைகின்றார்.

”ஐய்யோ… என்னை தள்ளிவிட வேண்டாம்…” என்று எனது கணவா் கூக்குரலிட்டார்.நான் எனது கணவரை நோக்கியோடினேன். அந்த இடத்தை நோக்கி போகும் போது ஏ.எஸ்.பி அவா்கள் எனது கணவர் மாடியில் இருந்து கீழே தள்ளினார்.

“ஐய்யோ… என்ன காரியம் செய்தீர்கள்…” என நான் கத்தினேன். அதேசமயம் ஏ.எஸ்.பி அவா்கள் அந்த இடத்தை விட்டு அகன்று சென்றார். அந்த இடத்தில் சிவப்பு நிற சுருக்கம் உள்ள கேர்டின் ஒன்று இருந்தது. நான் கேர்டின் இருக்கும் இடத்திற்கு சென்ற போது மென்டிஸ் மாமாவின் மனைவியும் அங்கு இருந்ததை கண்டேன்.

நான் அவரிடம் என் கணவரை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்கள் என்று சொன்னேன். அபொழுது “மகனே என்ன நடந்தது..” என்று அவர் கதறினார். “ ஏன் இவ்வளவு பெரிய அநியாயத்தை செய்தீர்கள் என…” இருவரும் கூக்குரல் இட்டோம்.

கணவரை தள்ளி விட்ட இடத்தில் இருந்து கீழ் நோக்கி பார்க்கும் போது நான் கண்டேன் கணவர் மேல் நோக்கிய வண்ணம் நிலத்தில் விழுந்திருப்பதை.

அந்நேரத்தில் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி கீழே இருந்த பொலிஸ் அதிகாரியிடம் தலையால் சைகை பண்ணுவதை பார்த்தேன். அந்த பொலிஸ் அதிகாரி எனது கணவரின் தலையை காலால் அங்கும் இங்கும் அசைத்து பார்த்தார்.

அதன் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சொன்னார் உடலை முச்சக்கர வண்டியில் போடச்சொல்லி சொன்னார்.

“வேகமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுங்கள்” என்று மேல் மாடியில் இருந்த படியே கத்தினேன். ஆனாலும் அவரை ஒரு வானத்தில் போட்டுச் செல்வதை பார்த்தேன்.

45 நிமிடங்களுக்கு பின்னர் நானும், எனது கணவரின் அம்மாவும், அக்காவின் மகனும், மகளும், என்னுடைய மகளையும் அழைத்துக் கொண்டு எபிலிபிட்டிய வைத்தியசாலைக்கு சென்றோம்.

நாங்கள் எல்லோருமாய் சேர்ந்து சென்றது தனியாக செல்ல பயமாய் இருந்தமையினால்.ஆனாலும் வைத்தியாசாலை காவலர்கள் என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நோயாளி ஒப்ரேசன் தியட்டரில் இருப்பதாகவும்.

நோயாளியை வைத்தியர்கள் பார்வையிடுவதால் அங்கு செல்ல முடியாது என கூறினார்கள். வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையில் துப்பாக்கிய ஏந்திய பொலிஸார்கள் நின்றிருந்தார்கள்.

நான் வைத்தியசாலையின் முற்றத்தில் 2 மணித்தியாலங்கள் ஒப்பாரி வைத்து அழுதேன். அந்நேரத்தில் எனது கணவருக்கு இரத்தம் கொடுத்தார்கள் என்று அறிந்து கொண்டேன். ஆனாலும் என் கணவரை பார்க்க யாருக்கும் அனுமதிக்க வில்லை.

அடுத்த நாள் காலை 6 மணியளவில் நோயாளியின் நிலை கவலைக்கிடமடைந்துள்ளதாக கூறி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். இருந்தும் போகும் வழியில் எனது கணவரின் நிலை கவலைக்கிடம் அடைந்ததால் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தார்கள்.

அங்கு சத்திரசிகிச்சை ஒன்றை மேற் கொண்டு வலது கையை நீக்கியிருந்தார்கள். என் கணவரின் உயிரை காப்பாற்ற வைத்தியசாலைகள் இரண்டிலும் வைத்தியர்கள் இயலுமானவரை முயற்சித்திருந்தார்கள்.

ஆனாலும் என் கணவா் 7 ஆம் திகதி அதிகாலை எங்களை தனிமை படுத்திவிட்டு சென்று விட்டார்

எனது கணவர் இறந்தது எபிலிபிட்டிய பொலிஸின் உதவி பொலிஸ் அதிகாரி தாக்குதல் மேற் கொண்டு மேல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதன் காரணமாக.

சம்பவம் நடந்த தினத்திற்கு அடுத்த நாள் (5 ஆம் திகதி) எங்களுக்கு நடைபெற்றது அநீதி என்று கூறி முறைப்பாடொன்றை மேற் கொள்ள ரத்தினபுரி பொலிஸ் டி.ஐ.ஜி அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்றோம்.

அவ்வதிகாரி அவ்வேளையில் அலுவலகத்தில் இருக்க வில்லை. வேறு பொலிஸ் அதிகாரிகள் தான் இருந்தார்கள். நான் எமிலிபிடியவில் இருந்து முறைபாடொன்றை மேற் கொள்ள வந்ததாக கூறினேன். அப்பொழுது அந்த பொலிஸ் அதிகாரி எம்பிலிபிடிய பொலிஸ் பிரச்சினையா என்று கேட்டார்.

“நீங்கள் சொல்வதற்கு முன்னரே எங்களுக்கு பிரச்சினை பற்றி தெரியும். நீங்கள் செய்யப் போவதன் பாரதூரம் பற்றி தெரியுமா? நீங்கள் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்தாலும் உங்களுக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முறைப்பாட்டின் பிரதியை தரமுடியாது.

நாங்கள் பொலிஸாரின் பக்கத்தில் நடைபெற்றதை தேடிப் பார்க்கின்றோம். நீங்கள் சொல்பவற்றை ஒரு எழுத்து கூட குறையாமல் அனைத்து இடங்களிலும் சொல்ல வேண்டிவரும்.

இல்லாவிட்டால் நீங்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்வீர்கள். உங்களின் கணவர் வைத்தியசாலையில் இருந்தாலும் அவர் மிகப்பெரிய குற்றவாளி என்பது உங்களுக்கு தெரியாதா? உங்கள் கணவர் தாக்கி 4 பொலிஸ் அதிகாரிகள் வைத்தியசாலையில் இருக்கின்றார்கள்.

அந்த பொலிஸ் அதிகாரி பொலிஸார் சார்பாகத்ததான் கதைத்தார். “ஒரு பொலிஸ் அதிகாரி மட்டுமட்டும்தான் தன் இரண்டு விரல்களிலும் கட்டு போட்டு இருந்தார். காயமடைந்த வேறு யாரையும் காணவில்லை.” என்று நான் அந்த பொலிஸ் அதிகாரியிடம் கூறினேன்.

அதன்பிறகு தொடந்தும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவரிடம் தெரிவித்த போது. அவர் “சிவில் உடையில் இருந்தவர்கள் பொலிஸார் தான் என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நான் இந்த உடையை கழற்றி விட்டு வேறு உடையில் வந்தேன் என்றால் உங்களால் நான் ஒரு பொலிஸ் அதிகாரி என்று எப்படி தெரியும்? என்று கேட்டார்.

எங்கள் குடும்பத்தில் யாரும் பொலிஸ் பெடன் (பொலிஸ் குண்டாந்தடி) கொண்டு செல்லவில்லை என்று சொன்னேன். உங்கள் எப்படி தெரியும் வந்தது உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்று?

மீண்டும் அந்த பொலிஸ் அதிகாரி என்னிடம் கேள்வி கேட்டார். அப்பொழுது நான் சொன்னேன்.கொஞ்ச காலத்துக்கு முன்னர் எச்.கியூ.ஐ(பொலீஸ் தலைமை கண்காணிப்பாளர்) ஆகி வந்த போது பாடசாலையில் கூட்டமொன்றுக்கு வந்தார். அதன் பின்பு சில காலங்களின் பின்னர் அந்த அதிகாரியே உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவியுயர்வு பெற்று எபிலிபிடியவுக்கு வந்துள்ளார் என்றுஅறிந்து கொண்டேன்.

பிறகு பொலிஸ் அதிகாரி என்னிடம் சொன்னார். “நீங்கள் சொன்ன விடயங்களில் அந்த கதை மட்டும் தான் உண்மை. உதவி பொலிஸ் அத்தியட்சகரை உங்கள் முன்னிலையில் கொண்டு வந்தால் நீங்கள் சொல்லும் இந்த விடயங்களை இவ்வாறே சொல்லுவீர்களா? என்று கேட்டார் நான் ஆமாம் என்று சொன்னேன்.

“எனக்கு மயக்கம் வருவது போல் உள்ளது. முறைபாட்டை பதிவு செய்ய இன்னும் நேரம் செல்லுமா என்று பொலிஸ் அதிகாரியிடம் கேட்டேன். அப்பொழுது அந்த பொலிஸ் அதிகாரி “ நோயாளிகள் வைத்தியசாலைக்கு செல்லாமல் ஏன் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் வந்தீர்கள்?“ என்று கேட்டார்.

அப்புறம் என் அம்மா அந்த இடத்து்ககு வந்து ”இவர் நோயுற்ற நிலையில் இருக்கின்றார். இவரை துன்புறுத்த வேண்டாம்…” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார். அப்பொழுது அந்த அதிகாரி நீதிமன்றத்திலும் இவ்வாறு குறுக்கு கேள்விகளை கேட்பார்கள் என்று சொன்னார்.

இது ஐந்து, பத்து நிமிடங்களில் செய்யும் வேலை இல்லை. என்று அம்மாவுடனும் கடுமையாக நடந்து கொண்டார். என்னுடைய முறைப்பாட்டை பல தாள்களில் எழுதி இறுதி பக்கத்தில் கையொப்பம் இடச் சொன்னார்.  முறைப்பாட்டை எனக்கு வாசிக்க தரவில்லை. பிறகு நாங்கள் வீட்டுக்கு சென்று விட்டோம்.

கடந்த 6 ஆம் திகதி பெல்மடுல்லவில் என் வீட்டில் இருக்கும் பொழுது இரத்தினபுரி பொலிஸ் அதிகாரி ஒருவா் வந்து டி.ஐ.ஜி அதிகாரி சொன்னார் என்று என்னிடம் நடந்த சம்பவங்களை கேட்டார்.

அப்பொழுது நாங்கள் சொன்னோம் நாங்கள் டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்று முறைபாடு ஒன்று செய்தோம். அந்த முறைப்பாட்டினை பதிவு செய்த அதிகாரி எங்களுக்கு வாசிக்கவும் தரவில்லை என்று. அப்பொழுது அந்த பொலிஸ் அதிகாரி கூறினார். அப்பொழுது அந்த அதிகாரி கூறினார். “ அந்த முறைப்பாட்டில் பிரயோசனம் இல்லை. இப்பொழுது அனைத்து விடயங்களையும் சொல்லுங்கள் என்று.

நான் சம்பவத்தை சொல்லும் முன்னர் அந்த அதிகாரி என்னிடம் கேட்டார் இந்த முறைப்பாட்டை நீங்கள் வாசித்து பார்க்க வேண்டுமா? இல்லாவிட்டால் நான் உங்களுக்கு தெரியும் வகையில் எழுதவா என்று.

எம்பிலிபிட்டிய படுகொலை...  நடந்தது என்னபின்னர் நான் சொன்ன அனைத்து விடயங்களையும் பதிவு செய்து கொண்டார். நான் முறைப்பாட்டை கேட்டவுடன் பார்க்க தந்தார். ஆனாலும் அந்த அதிகாரி எழுதியிருந்த எழுத்துக்கள் தெளிவாய் இல்லாமல் இருந்தமையினால் வாசிக்க கஸ்டமாய் இருந்தது.

பிறகு அந்த அதிகாரி உங்களுக்கு தெரியத்தானே முறைப்பாட்டை எழுதினேன் என்று என்னிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றார்கள். நான் சொல்கின்ற வாக்குமூலங்களை பொலிஸார் எவ்வாறு பதிவு செய்து கொள்கொள்கின்றார்கள் என்று எனக்கு பெரிய ஒரு சந்தேகம் உள்ளது.

ஏனென்றால் பதிவு செய்த வாக்குமூலங்களை வாசிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.அதனால் பொலிசாருக்கு வழங்கும் வாக்குமூலங்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளேன்.

ஆனால் என் கணவரை கொலை செய்தவா்களில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனது கணவருக்கு தாக்குதல் நடத்தி மேல் மாடியில் இருந்து. கீழே தள்ளிவிட்ட எபிலிப்பிடிய உதவி பொலிஸ் அத்தியட்சகர், எச்.கியூ.ஐ அதிகாரி உட்பட இன்னும் 15 பேர் வரையில் இருக்கின்றார்.

அவா்களுள் இருந்தவர்களில் சிலரிடம் துப்பாக்கிகள் இருந்தன. மற்றவர் கையில் பெட்டன்பொல் மற்றும் வேறு பொல்லுகளை வைத்திருந்தனர். அவர்களில் 2 பேர் மட்டுமே சீருடை அணிந்திருந்தனர்.

சிலர் அரை காற்சட்டை அணிந்திருந்தார்கள். சிலர் முழு நீள காட்சாட்டை அணிந்திருந்தனர். நான் சொல்லும் இந்த  கதையை நாட்டின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு தெரியத்தக்க வகையில் பத்திரிகையில் எழுதியாவது எனக்கொரு நீதியை பெற்றுத்தாருங்கள். அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும்.

எனது கணவர் பொலிஸாரின் தாக்குதலில் தான் மரணம் ஆனார்.

இது பிரசன்னவின் மனைவி சொல்லும் கதை… தொடரும் இக்கதையை கேட்பதென்பது மிகவும் கொடூரமாகவுள்ளது.

தாங்கள் மிலேச்சத்தனமான மிருதனமான ஒரு வாழ்கின்றோமா என்று நினைக்கும் அளவுக்கு அசிங்கமானது.

பொலிஸாரின் தாக்குதலின் சாதாரண பொது மகன் கொல்லப்பட்டது இது முதல் தடவையல்ல. மொறடுவ பிரதேசத்தில் நடைபெற்ற படுகொலையில் குற்றஞ் சாட்டபட்ட பொலிஸ் அதிகாரிகள் தூக்கு மேடைக்கு போனார்கள்.

ஆனால் பொலிஸார் அதை பாடமாய் கொள்ளவில்லை.  பொலிஸார் தொடர்ந்தும் தங்கள் மிலேச்சத்தனத்தை காட்டி வருகின்றனர்.

இப்பொழுது அன்றைய நாளையை விடசட்டத்தை பொலிஸார் தங்கள் மடியில் எடுத்த சம்பவமாகவே எபிலிபிட்டிய சம்பவம் நீதிமன்றத்தில் பிரசன்னவின் வழங்கு விசாரணைக்கு வந்த போது ஊடகவியலாளரின் குறிப்பு புத்தகங்கள் பொலிஸ் அதிகாரியொருவரால் சேகரிக்கப்பட்டதில் இருந்து அறிய கூடியதாக இருந்தது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் எம்பிலிபிட்டிய பிரன்னவின் கொலை வழக்கில் பொலிஸார் சார்பாக வக்கீலாக முன்னிலை யானதில் இருந்து அதன் உச்சம் தெரிந்தது. நல்லத்தான் இருக்கு. திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்க போனது போல.

நாட்டின் மக்கள் நல்லாட்சியை விரும்கின்றார்கள் என்கிறார்கள் என்றால் அது இராணுவமயமாக்கலில் இருந்து விடுபடத்தான். சுதந்திரதாக சுவாசிக்கத்தான்.

ஆனாலும் இன்னும் சாதாரண பொது மக்களை சட்டத்தை காக்கும் அதிகாரிகள் தாக்குதல் நடத்தி கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் இச்சம்பவத்தை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் வேறு விடுகின்றார்கள். இவ்வாறு அடக்கு முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் சட்டத்தின் துணையை நாடுவது கேலிக் கூத்தான ஒன்றாகவே காணப்படுகின்றது. .

இந்த சம்பவத்தையடுத்து நாட்டின் மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருப்பது நல்லாட்சி நடப்பதாய் சொல்லும் நாட்டில் நீதியை பாதுகாக்க வேண்டிய பொலிஸார் மீண்டும் நிர்வாணமாய் குளித்ததுதான். இன்னும் இந்த நிர்வாணத்தை மறைப்பதற்காய் மண்ணெய் பட்ட சாரைப்பாப்புகளை போல் துடித்துக் கொண்டும் இருப்பதுதான்….

திவயின பத்திரிகைக்காக – தரங்க ரத்தினவீர (செய்தி சேகரிப்பு – சேன.வீ.கமகே)

தமிழில் – ஜீவிதன்

 

http://thuliyam.com/?p=11585

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.