Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அறிவிப்பு

Featured Replies

  இந்தியா செல்லவுள்ள இலங்கை அணி அறிவிப்பு

மத்தியூஸ், மாலிங்க, ஹேரத், குலசேகர இல்லை.

இந்தியாவில் T20 போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இலங்கை அணி வீரர்கள்.

12645254_977139545668073_316136137183914

sooriyan FM

 

  • தொடங்கியவர்

அணித்தலைவரானார் சந்திமால் 

 

இந்தியா  அணியுடனான  இருபதுக்கு20   தொடரில்  விளையாடவுள்ள  இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார் .

எதிர்வரும்  பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி முதலாவது போட்டி புனேயிலும் , இரண்டாவது போட்டி பெப்ரவரி 12ஆம் திகதி புது டெல்ஹியிலும்  ,மூன்றாவது போட்டி விசாகபட்டினத்தில் பெப்பிரவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற உள்ளது .

இந்த போட்டிகளில் மெத்தியூஸ்,மலிங்க,குலசேகர,ஹேரத் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர்  காயங்கள் காரணமாக விளையாடுவதில்  சந்தேகம் ஏற்பட்டுள்ளமை  என்பதும் குறிப்பிடத்தக்கது .  

http://www.virakesari.lk/article/2517

  • தொடங்கியவர்
இந்தியாவுக்கு எதிரான இருபது 20 தொடரில் மெத்யூஸ், மாலிங்க, ரங்கன, நுவன் இல்லை - 3 வருடங்களின் பின் தில்ஹார பெர்னாண்டோவுக்கு வாய்ப்பு
2016-01-29 11:20:29

(நெவில் அன்தனி)

 

1451248.jpgஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரில் ஏஞ்சலோ மெத்யூஸ், லசித் மாலிங்க, ரங்கன ஹேரத், நுவன் பிரதீப், நுவன் குலசேகர ஆகிய 5 வீரர்கள் இடம் பெறவில்லை.

 

ஆனால், சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் தில்ஹார பெர்னாண்டோ நீண்ட காலத்தின் பின் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

காயங்கள் காரணமாக ஏஞ்சலோ மெத்யூஸ், லசித் மாலிங்க, ரங்கன ஹேரத், நுவன் பிரதீப், நுவன் குலசேகர  சேர்க்கப்பட முடியாத நிலையில் உள்ளனர் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஆசிய கிண்ணம், சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக இருபது 20 கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளதால் அவர்கள் பூரண ஆரோக்கியம் பெரும் பொருட்டு அவர்களுக்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

எனினும், 36 வயதான தில்ஹார பெர்னாண்டோ இறுதியாக சர்வ தேச இருபது 20 போட்டிகளில் 2011 நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். 

 

2012 ஜனவரியில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய பின் அவர் இலங்கை அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

14512600.jpg

 

 

இதேவேளை, சீக்குகே பிரசன்ன, தசுன் ஷானக, அசேல குணரட்ன, கசுன் ராஜித, பினுர பெர்னாண்டோ ஆகியோரும் இலங்கை இருபது 20 குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கட் தொடர் நடை பெறவுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி (இம் முறை இருபது 20) பங்களாதேஷில் பெப்ரவரி 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

ஆசிய கிண்ண (50 ஓவர்) கிரிக்கட் போட்டிகளில் நடப்பு சம்பியனான இலங்கை தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடவுள்ளது.

 

இலங்கைக் குழாம்:

தினேஷ் சந்திமால் (அணித் தலை வர்), திலக்கரட்ன தில்ஷான், சீக்குகே பிரசன்ன, மிலிந்த சிறிவர்தன, தனுஷ்க குணதிலக்க, திசர பெரேரா, தசுன் ஷானக, அசேல குணரட்ன, சாமர கப்புகெதர, துஷ்மன்த சமீர, தில்ஹார பெர்னாண்டோ, கசுன் ராஜித, பினுர பெர்னாண்டோ, சச்சித்ர சேனநாயக்க, ஜெவ்ரி வண்டர்சே.

 

14512_VRA-20160129-M01-MED.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14512#sthash.O3VxvCLA.dpuf
  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு; விராட் கோலிக்கு ஓய்வு

 

 
இலங்கைக்கு எதிரான டி20 தொடர் கோலிக்கு ஓய்வு. | கோப்புப் படம்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர் கோலிக்கு ஓய்வு. | கோப்புப் படம்.

இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை, அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மணீஷ் பாண்டே அணியில் தேர்வு செய்யப்படுள்ளார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடிய டெல்லி இடது கை ஸ்பின்னர் பவன் நேகி அணியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசியக் கோப்பைக்கு முன்னதாக இலங்கை அணி பிப்ரவரி மாதத்தில் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்திய அணி விவரம்:

தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அஜிங்கிய ரஹானே, மணீஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ் குமார், பவன் நேகி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article8179397.ece?homepage=true

  • தொடங்கியவர்

இலங்கை – இந்­திய T20 தொடர் ஆரம்பம்

 

இந்­தி­யா­வுக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி­ இந்­திய கிரிக்கெட் அணி­யுடன் 3 போட்­டி­களைக் கொண்ட இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் தொடரில் பங்­கேற்­கின்­றது. இதன் முத­லா­வது போட்டி எதிர்­வரும் 9 ஆம் திக­தி­யன்று புனேயில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

ஏனைய இரண்டு போட்­டி­களும் 12 ஆம் திக­தி­யன்று ராஞ்­சி­யிலும், 14ஆம் திக­தி­யன்று விசா­க­பட்­டி­ணத்­திலும் இரவு 7.30 மணிக்கு மின்­னொ­ளியில் நடை­பெறும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக லசித் மலிங்க காணப்­ப­டு­கின்ற போதிலும், காயம் கார­ண­மாக அவர் பங்­கேற்­கா­ததால் தினேஷ் சந்­தி­மா­லுக்கு இலங்கை அணியின் தலை­மைத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், காயம் கார­ண­மாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணித்­த­லை­வ­ரான எஞ்­சலோ மெத்­தி­யூஸும் இத் தொடரில் பங்­கேற்­க­வில்லை. அத்­துடன் உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தில்­ஹார பெர்­னாண்டோ, மூன்­றரை ஆண்­டு­க­ளுக்குப் பின்னர். இலங்கை கிரிக்கெட் அணிக்கு உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.

இவர், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திக­தி­யன்று பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ரான டெஸ்ட் போட்­டி­யி­லேயே இறு­தி­யாக விளை­யா­டினார்.

மேலும், உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களில் பந்­து­வீச்சு மற்றும் துடுப்­பாட்டம் என சகல துறை­க­ளிலும் பிர­கா­சித்து வரும் சீக்­கு­ககே பிர­சன்­னவும் இந்­திய அணிக்­கெ­தி­ரான இலங்கை குழாமில் இணைக்­கப்­பட்­டுள்­ளமை விஷேட அம்­ச­மாகும்.

இவர்­களைத் தவிர அசேல குண­ரட்ண, தசுன் சானக்க, கசுன் ரஜித மற்றும் பினுர பெர்­னாண்டோ ஆகியோர் அணிக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். இதில் கசுன் ரஜித்த, அசேல குண­ரட்ண ஆகியோர் முதல் முறை­யாக இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளாவர்.

இத் தொடரில் பங்­கு­பற்றும் இலங்கை குழாத்­திற்கு லஹிரு திரி­மான்ன, அஜந்த மெண்டிஸ், நுவன் குல­சே­கர , ஷெஹான் ஜய­சூ­ரிய, கித்­ருவன் வித்­தா­னகே, சுரங்க லக்மால், இசுறு உதான ஆகியோர் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இந்­தி­யாவின் முன்­னணி வீர­ரான விராட் கோஹ்­லிக்கு இத்­தொ­டரில் ஓய்வு அளிக்­கப்­பட்­டுள்­ளது. அவுஸ்­தி­ரே­லி­யா­வு­ட­னான தொடரில் சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்த மனிஷ் பாண்டே மற்றும் சகல துறை வீர­ரான ஹார்திக் பாண்­டியா போன்ற இளம் வீரர்­க­ளுக்கும் இந்­திய கிரிக்கெட் குழாமில் இடம் கிடைத்துள் ­ளது. அத்­துடன் சிரேஷ்ட வீரர்­க­ளான ஹர்­பஜன் சிங், ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ் சிங் ஆகி­யோ­ருக்கும் வாய்ப்­ப­ளிக்­கப் பட் ­டுள்­ளது. உள்ளூர் போட்­டி­களில் சிறந்த

ஆற்­றல்­களை வெளிப்­படுத்­தி­யுள்ள பவான் நேகிக்கும் இடம் கிடைத்­துள் ­ளது.

இது­வரை இரு அணி­களும் 6 தட­வை கள் ஒன்­றை­யொன்றை எதிர்த்­தாடி தலா மூன்று போட்­டி­களில் வெற்றி பெற்று சம­நி­லையில் உள்­ளன. ஐ.சி.சி தர­வ­ரி­சையில் இந்­தியா முத­லா­வது இடத்­திலும் இலங்கை 3ஆவது இடத்­திலும் உள்­ளது.

இரு அணி­க­ளிலும் இளம் வீரர்கள் உள்­ளிட்ட சக­ல­துறை வீரர்கள் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றனர்.

அத்­துடன் இரு அணிக­ளிலும் அனு­பவ வீரர்­க­ளுக்கும் இடம­ளிக்­கப்­பட்­டுள் ­ளமை குறிப்­பி­டத்தக்கது. இத்­தொ­ட­ரானது, எதிர்­வரும் ஆசியக் கிண்ணத் தொடர் மற்றும் உலகக் கிண்ண இரு­ப­துக்கு இரு­பது

தொட­ருக்கு முன்­னோ­டி­யாக அமையும். ஆகவே, தத்­த­மது அணி­களை பிர­தி­நிதித்­ து­வப்­ப­டுத்­து­வ­தற்கு இளம் வீரர்கள் மற்றும் அனு­பவ வீரர்­க­ளுக்­கி­டையே ஆரோக்­கி­ய­மான போட்டி நிலவும் என்­பதில் எது­வித சந்­தே­கமும் இல்லை.

இலங்கை கிரிக்கெட் அணி விபரம்

தினேஷ் சந்­திமால் (அணித்­த­லைவர்), தில­க­ரட்ண டில்ஷான், தனுஷ்க குண­தி­லக்க, தசுன் சானக்க, சாமர கப்­பு­கெ­தர, அசேல குண­ரட்ன, மிலிந்த சிறி­வர்­தன, சீக்­குகே பிர­சன்ன, திசர பெரேரா, சச்­சித்ர சேனா­நா­யக்க, தில்­ஹார பெர்­னாண்டோ, ஜெப்ரி வென்டர்சே, துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ, கசுன் ரஜித

இந்திய கிரிக்கெட் அணி விபரம்

மஹேந்திர சிங் டோனி (அணித் தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்ப்ரிட் பூம்ராஹ், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், மொஹமட் சமி, பவான் நேகி.

http://www.virakesari.lk/article/2842

  • தொடங்கியவர்

இலங்கையை வீழ்த்தும் முனைப்பில் இந்திய அணி: செவ்வாயன்று முதல் டி20

 
 
dhoni_2729083f.jpg
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-0 என வென்ற நிலையில் தோனி தலைமையிலான இந்திய அணி செவ்வாயன்று இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் மோதுகிறது.

இம்மாத இறுதியில் ஆசிய கோப்பை டி 20 தொடரும், மார்ச் 8ம் தேதி உலககோப்பை டி 20 தொடரும் நடைபெற உள்ளதால் இலங்கைக்கு எதிரான இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸி. தொடரை வென்று ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் உள்ளது. டி 20 உலககோப்பையும் இந்திய மண்ணிலேயே நடைபெறுவதால் அதற்கு சிறந்த முறையில் தயாராகுவதற்கு இந்த தொடர் இந்திய வீரர்களுக்கு உதவும்.

ஆஸி. மண்ணில் ரன்வேட்டை நடத்திய விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, ஷிகர் தவண், தோனி, ரெய்னா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். ஆஸி. தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தாலும் யுவராஜ்சிங் அசத்தினார். இவர் மீது மீண்டும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவர்களுடன் அஜிங்க்ய ரஹானே, மனிஷ்பாண்டே ஆகியோரும் உள்ளனர்.

இலங்கை அணியின் அனுபவம் இல்லாத பந்துவீச்சு. பந்து வீச்சில் நெஹ்ராவின் அனுபவமும், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் துடிப்பான வேகமும் இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி தரக்கூடும். உள்ளூர் தொடர் என்பதால் மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கக்கூடும். எனவே இன்றைய ஆட்டத்தில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார்கள்.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பவன் நேகிக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படும் என்றே தெரிகிறது. மூத்த வீரர் ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். 6 முதன்மை பேட்ஸ்மேன்கள், 5 பந்து வீச்சாளர்கள் அடிப்படையில் இந்திய அணி களமிறங்கினால் ரஹானே அல்லது மனிஷ் பாண்டே ஆகியோரில் ஒருவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். மாறாக 7 பேட்ஸ்மேன்கள், 4 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களம் கண்டால் இருவருக்குமே வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

இலங்கை அணி நியூஸிலாந்து தொடரில் படுதோல்விகளை சந்தித்து இந்திய தொடரை எதிர்கொள்கிறது. டி 20 கேப்டன் மலிங்கா, டெஸ்ட் கேப்டன் மேத்யூஸ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் விலகியுள்ளனர். தொடக்க வீரரான தில்ஷானும் காயம் அடைந்துள்ளார். அணியில் அவர் இடம் பெற்றிருந்தாலும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னணி பந்து வீச்சாளர்களான நுவன் குலசேகரா, ரங்கான ஹெராத் ஆகியோரும் இந்த தொடரில் விளையாட வில்லை. 36 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளரான தில்ஹாரா பெர்னாண்டோ அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் கடைசியாக 2002ம் சர்வதேச போட்டியில் விளையாடியிருந்தார்.

உள்ளூர் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தில்ஷானுக்கு பதிலாக அறிமுக வீரராக நிரோஷன் டிக்வெல்லா களமிறங்கக்கூடும். மண்டல அளவிலான டி 20 தொடரில் நிரோஷன் அதிக ரன்கள் குவித்துள்ளார்.

இவரை தவிர நியூஸி. தொடரில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான துஸ்மந்தா ஷமீரா, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரே வான்டர்ஸே மற்றும் புதுமுக வீரர் பினுரா பெர்னாண்டோ ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களுடன் இந்திய ரசிகர்களுக்கு பிரபலமில்லாத ஸிகுஜ் பிரசன்னா, திஷரா பெரேரா, மிலின்டா ஸ்ரீவர்தனா உள்ளிட்ட ஆல்ரவுண்டர்களும், தனுஷ்கா குணதிலகா, தஸன் ஷனகா, அஸிலா குணரத்னே, ஹஸன் ரஜிதா, ஷஜித்ரா செனநாயகே ஆகியோரும் இலங்கை அணியில் உள்ளனர்.

இரு அணிகளும் கடைசியாக 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டி 20 உலககோப்பை இறுதி போட்டியில் மோதின.

இதில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பின்னர் தற்போது தான் இரு அணிகளும் சந்திக்கின்றன. இதுவரை ஆறு டி 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் தலா மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. இன்று 7வது முறையாக மோதுகின்றன.

அணி விவரம்:

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அஜிங்க்ய ரஹானே, மனிஷ் பாண்டே, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், பவன் நேகி.

இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), ஸிகுஜ் பிரசன்னா, மிலின்டா ஸ்ரீவர்தனா, தனுஸ்கா குணதிலகா, திஷரா பெரேரா, தஸன் ஷனகா, அஸிலே குணரத்னே, ஷமரா கபுகேதரா, துஸ்மந்தா ஷமீரா, தில்ஹாரா பெர்னாண்டோ, ஹஸன் ரஜிதா, பினுரா பெர்னாண்டோ, ஷஜித்ரா செனநாயகே, ஜெப்ரே வான்டர்ஸே, நிரோஷன் திக்வெல்லா.\

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20/article8210026.ece?homepage=true

  • தொடங்கியவர்

இந்தியா  53/6

63/7

 

  • தொடங்கியவர்

72/8
 

  • தொடங்கியவர்

101 Allout

  • தொடங்கியவர்

இலங்கை 92/5

இன்னும் 8 ஓட்டங்கள் தேவை

கைவசம் 5 விக்கெட்கள்

 

இன்னும் 15 பந்துகள் மாத்திரமே

6

4

India 101 (18.5/20 ov)
Sri Lanka 105/5 (18/20 ov)

"Sri Lanka regain the No. 1 T20I spot" -- Yup. India slip down to No. 3.

  • தொடங்கியவர்

12705373_1054087377987257_46657745919036

  • தொடங்கியவர்

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இலங்கை அணி வெற்றி!

 

புனே: முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை தோற்கடித்து, இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் புனேயில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்திய 18.5 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக அஷ்வின் 31 ரன்களும், ரெய்னா 20 ரன்களும் எடுத்தனர்.

t20%20srilanka01.jpg

இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி 17.6 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியில், அதிகப்பட்சமாக சண்டிமால் 35 ரன்களும், கபூகேதரா 25 ரன்களும், ஸ்ரீவர்தனா 21 ரன்களும் எடுத்தனர். அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

http://www.vikatan.com/news/sports/58791-first-20-overs-cricket-match-sri-lanka-team-win.art

  • தொடங்கியவர்

முதல் டி20: கிரீன் டாப் பிட்சில் இலங்கையிடம் இந்தியா தோல்வி

 

 
ரெய்னா, தோனி, பாண்டியாவை அவுட் செய்த இலங்கை இளம் வேகப்பந்து வீச்சாளர் தசுன் ஷனகா. | படம்: பிசிசிஐ
ரெய்னா, தோனி, பாண்டியாவை அவுட் செய்த இலங்கை இளம் வேகப்பந்து வீச்சாளர் தசுன் ஷனகா. | படம்: பிசிசிஐ

புனேயில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 101 ரன்களுக்குச் சுருட்டிய இலங்கை அணி பிறகு இலக்கை எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி 18 ஓவர்களில் 105/5 என்று வெற்றி பெற்று 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தப் பசுந்தரை பிட்சிற்கு உரிய மரியாதை அளிக்காமல் இந்திய பேட்ஸ்மென்கள் விட்டேத்தியான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியாவில் பேட்டிங் சாதக மட்டைப்பிட்சில் அடித்து நொறுக்கி வெற்றி பெற்று வந்த பிறகே புனேயில் பிட்ச் டெஸ்ட் போட்டிகளுக்கான பசுந்தரை ஆட்டக்களமாக அமைய, அதற்கான எந்த வித உத்தியும் இல்லாமல் மட்டையை ஆங்காங்கே சுழற்றி இந்திய பேட்டிங் சரிவுக்கு ஆளானது. இந்தப் பிட்ச் ஐபிஎல் ரக மட்டையடிக்கு ஆதரவானது அல்ல, கொஞ்சம் நிதானித்து சரியான உத்தியுடன் ஆடுவதற்கான பிட்ச். ஆனால் பந்துகளும் நன்றாக ஸ்விங் ஆனதோடு நல்ல பவுன்சும் இருந்தது, இதனை இலங்கை பவுலர்கள் சரியான லெந்த்தில் வீசி பயன்படுத்திக் கொண்டனர். இந்திய வீரர்களின் ஷாட் தேர்வும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

டாஸில் வென்ற இலங்கை கேப்டன் சந்திமால் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்.

ஆனால் முதல் ஓவரிலேயே அதிர்ச்சிக் காத்திருந்தது. ரஜிதா என்ற அறிமுக வேகப்பந்து வீச்சாளரின் முதல் ஓவரிலேயே 2-வது பந்தில் ரோஹித் சர்மா ரன் எடுக்காமல் வெளியேற 5-வது பந்தில் ரஹானே 4 ரன்களில் வெளியேறினார். இருவருமே கிட்டத்தட்ட ஒரே விதமாகவே ஆட்டமிழந்தனர். ரோஹித்திற்கு பந்து கண்சிமிட்டும் நேரம் நின்று வந்ததால் மிட் ஆஃபில் கேட்ச் ஆனது. ரஹானே வந்தவுடன் தேர்ட்மேனில் பவுண்டரி அடித்தார், ஆனால் அடுத்தபந்து சற்றே ஷார்ட் பிட்ச் ஆகி சற்றே வெளியே சென்ற பந்து, ரஹானே லெக் திசையில் ஆட முயன்றார் முன் விளிம்பில் பட்டு எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆனது.

ரெய்னா வந்தவுடனேயே தேர்ட்மேனில் கொடுத்த அல்வா கேட்சை குணதிலக கோட்டை விட்டார். ஆனால் அதன் பிறகு திசரா பெரேரா வர, லெந்த் பந்தை மிக அருமையாக மிட்விக்கெட்டில் தவண் தனது பாணியில் பெரிய சிக்ஸ் ஒன்றை அடித்தார்.

பிறகு 2 விக்கெட் எடுத்த ரஜிதாவை ஒரே ஓவரில் ரெய்னா ஒரு ஃபைன் லெக் பவுண்டரியும், பிறகு லெந்தில் விழுந்த ஒரு பந்தை மிக அருமையாக கிளீனாக மிட்விக்கெட் மேல் சிக்ஸ் விளாசினார். அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது. ஆனால் தவண் 9 ரன்கள் எடுத்த நிலையில் தேவையில்லாமல் ஒரு சுழற்று சுழற்ற பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு தேர்ட்மேனுக்கு பறந்தது, அதனை குணதிலக அருமையாக பிடிக்க தவண் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

அதாவது ரெய்னா அடித்தது போல் மிட்விக்கெட்டைக் குறி வைத்தார் தவண், ஆனால் ரெய்னா பந்து சற்றே உள்ளே வர அவருக்கு வாகாக அமைந்தது சிக்ஸ் அடித்தார், ஆனால் தவணுக்குப் பந்து சற்றே வெளியே ஸ்விங் ஆனதால் மிட்விக்கெட்டில் அடிக்கப் பார்த்தது மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு தேர்ட்மேனில் கேட்ச் ஆனது.

யுவராஜ் களமிறங்கியவுடன் சேனநாயகவை மேலேறி வந்து அழகான முறையில் நேராக ஒரு சிக்ஸ் அடித்தார். அந்த ஷாட்டில் அவர் கண்களில் உறுதி தெரிந்தது.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர் சமீரா வந்து யுவராஜைப் படுத்தினார், தனது வேகம், கோணம் மற்றும் லெந்த் ஆகியவற்றால் யுவராஜ் சிங் பந்தை தொடமுடியாது செய்தார். 3 ரன்களே அந்த ஓவரில் வந்தது. 7 ஓவர்கள் முடிவில் 43/3 என்ற நிலையில் ரெய்னாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு நழுவ விடப்பட அதனை அவர் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஷனகா என்ற வேகப்பந்து வீச்சாளரும் அருமையான வேகத்துடன் வீசினார். அவரது பந்து ஒன்று நேராக உள்ளே ஸ்விங் ஆக ரெய்னா பவுல்டு ஆனார். 20 ரன்களில் அவர் வெளியேற அதே ஓவரில் தோனி அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்து அதற்கு அடுத்த ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்தை ஹூக் செய்ய முயன்றார் பந்து மட்டையில் விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது, அது அருமையான கேட்ச், எம்பிப்பிடித்தார் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா.

அதற்கு அடுத்த ஓவரில் யுவராஜ் சிங் 10 ரன்களில் அருமையான சமீரா பவுன்சரில் தாமதமாக புல் ஆட பந்து சமீராவிடமே கேட்ச் ஆனது. ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் ஷனகா பந்தில் எல்.பி. ஆனார். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 58/7 என்று ஆனது.

அதன் பிறகு அஸ்வின் இறங்கி பந்து வந்த பிறகு ஆடினார். இதனால் அவர் 24 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஜடேஜா 6 ரன்களில் சேனநாயகவின் நேர் நேர் தேமா பந்துக்கு எல்.பி.ஆனார். 18.5 ஓவர்களில் இந்தியா 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ரஜிதா, ஷனகா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சமீரா என்ற மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

102 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு இறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் டிக்வெல்லா, நெஹ்ராவை அருமையாக ஒரு மிட் ஆஃப் பவுண்டரி அடித்தார், ஆனால் அதே ஓவரில் நன்றாக எழும்பிய ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்று தவணிடம் மிட் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பும்ராவின் பந்து வீச்சு உண்மையில் அச்சுறுத்தலாக அமைந்தது. முதல் ஓவரை அவர் மெய்டனாக வீசினார், பந்து பேட்ஸ்மெனின் மட்டைக்கும் உடலுக்கும் இடையிலெல்லாம் புகுந்து சென்றது, அவரை இலங்கை வீரர்களால் சரியாக ஆட முடியவில்லை. அவ்வளவு ஸ்விங், நல்ல வேகம் அவரது பந்து வீச்சு ஆக்சன் வேறு வித்தியாசமான கோணங்களை ஏற்படுத்தியதால் கடுமையாக இலங்கை அணியினர் திணறினர்.

இந்நிலையில் நெஹ்ரா மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தில் குணதிலகவை 9 ரன்களில் வீழ்த்தினார், மீண்டும் தவண் கேட்ச்.

ஆனால் அதன் பிறகு பும்ராவைத் தவிர மற்ற அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லை. சந்திமால் 35 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுக்க, கபுகேதரா 26 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுக்க இருவரும் 3-வது விக்கெட்டுக்காக 39 ரன்களை 7 ஓவர்களில் சேர்த்தனர்.

ஜடேஜா அருமையாக பீல்டிங் செய்தார், அவர் பீல்ட் செய்து எடுத்து ஸ்டம்பில் அடித்த பந்துகள் ஸ்டம்பில் பட்டிருந்தால் ரன் அவுட்களுடன் இலங்கையை கொஞ்சம் நெருக்கியிருக்கலாம் ஆனால், அது ஸ்டம்பை நூலிழையில் தவறவிட்டுச் சென்றது.

அஸ்வினை 10 ஓவர்கள் கழித்து கொண்டு வந்தார் தோனி, அவர் 3 ஓவர்களில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கபுகேதராவையும், ஷனகாவையும் அவர் வீழ்த்தினார். ஆனால் சந்திமால் அவுட் ஆகும் போது ஸ்கோர் 84 ரன்கள் என்று நெருங்கியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சந்திமாலை ரெய்னா எல்.பி.செய்தார். சிரிவதனா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து நாட் அவுட்டகா இருக்க பிரசன்னா 3 ரன்களில் நாட் அவுட்டாக நிற்க 18 ஓவர்களில் இலங்கை 105 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடைசியில் பும்ராவை சிரிவதனா ஒரு பவுண்டரி, பிறகு ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை அருமையாக புல் ஆடி சிக்ஸருக்கு விரட்டி வெற்றி ரன்களை எடுத்தார். அஸ்வின், ஜடேஜா, நெஹ்ரா தங்களது ஓவர்களை முடிக்கவில்லை. தோனி இன்னமும் கொஞ்சம் நெருக்கியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஆகியோர் இருந்திருந்தால் இலங்கை தோற்றிருக்கவும் வாய்ப்புள்ள பிட்ச் ஆகும் இது.

மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பந்து வீச்சு சவாலாக அமைந்த ஒரு பிட்சில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மோதிய ஒரு சவாலான டி20 ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது.

ஆட்ட நாயகனாக தனது அறிமுக போட்டியில் முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா, ரஹானேயை வீழ்த்திய ரஜிதா தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article8215029.ece

  • தொடங்கியவர்

தோல்வி குறித்து தோனி கூறியது

தோல்வி குறித்து தோனி கூறியது

February 10, 2016  09:49 am

Bookmark and Share
 
புனேயில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை தோற்கடித்தது. இந்தநிலையில் இது குறித்து இந்திய அணித் தலைவர் தோனி கூறுகையில், ‘சமீபத்தில் நாங்கள் விளையாடிய ஆடுகளங்கள் போன்று இல்லாமல் இது முற்றிலும் வித்தியாசமான ஆடுகளமாக இருந்தது.

சொல்லப்போனால் இங்கிலாந்து ஆடுகளங்கள் போன்று காணப்பட்டது. நிறைய புற்கள் இருந்தன. விதவிதமாக பவுன்ஸ் ஆனது. இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் இதைவிட சிறப்பான ஷாட்டுகளை அடித்திருக்க வேண்டும். 130 முதல் 135 ஓட்டங்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்து விட்டோம்’ என்றார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதல் ஓவரிலேயே இந்தியாவிற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 2-வது பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரகானே வௌியேறினார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய துடுப்பாட்ட வீரர்களை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மீளவிடவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. அதிக அளவில் ஸ்விங்கும், பவுன்சும் இருந்தது.

இதனால் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அஸ்வின் மட்டும் சிறப்பாக ஆடி 31 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் இந்தியா 18.5 ஓவரிலேயே 101 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதையடுத்து 102 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை, குறிப்பிட்ட இடைவேளைகளில் விக்கெட்களை இழந்த போதும், 18-வது ஒவரில் 5 விக்கெட்களை மட்டும் இழந்து 105 ஓட்டங்களை எடுத்து வெற்றியை எளிதாக பெற்றது.
  • தொடங்கியவர்
இலங்கை, இந்­திய அணிகள் மோதும் இரண்­டா­வது இருபது 20 போட்டி இன்று
2016-02-12 11:59:30

14827India-vs-Srilanka-T20-series-2016.jஇலங்கை, இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­லான மூன்று போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்டி ரன்ச்சி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் இன்று இரவு மின்­னொ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது.

 

பூனேயில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் வெற்­றி­பெற்­றதன் மூலம் சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தரப்­ப­டுத்­தலில் முத­லி­டத்­திற்கு முன்­னே­றி­யுள்ள இலங்கை இன்­றைய போட்­டி­யிலும் வெற்றி பெறு­வ­தற்கு முயற்­சிக்­க­வுள்­ளது. மறு­மு­னையில் முத­லி­டத்தை இழந்­துள்ள இந்­தியா இரண்­டா­வது போட்­டியில் என்ன விலை­கொ­டுத்­தேனும் வெற்­றியை சுவைக்க முயற்­சிக்கும்.

 

 

இலங்கை குழாம் :தினேஷ் சந்­திமால் (அணித் தலைவர்), நிரோஷன் டிக்­வெல்ல, தனுஷ்க குண­தி­லக்க, சாமர கப்­பு­கெ­தர, தசுன் ஷானக்க, மிலிந்த சிறி­வர்­தன, அசேல குண­ரத்ன, திசர பெரேரா, சிக்­குகே ப்ரசன்ன, சச்­சித்ர சேனா­நா­யக்க, ஜெவ்றி வெண்­டர்சே, கசுன் ரஜித்த, பினுர பெர்­னாண்டோ, டில்­ஷார பெர்­னாண்டோ, துஷ்­மன்த சமீர.

 

 

இந்­திய குழாம் :எம். எஸ். தோனி (அணித் தலைவர்), ரவிச்­சந்­திரன் அஷ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஷிக்கர் தவான், ஹர்­பஜன் சிங், ரவீந்த்ர ஜடேஜா, புவணேஸ்வர் குமார், பவன் நெசி, அஷிஷ் நெஹ்ரா, மனிஷ் பாண்டே,, ஹர்திக் பாண்டியா, அஜின்கியா ரஹானே, சுரேஷ் ரெய்னா, ரோஹித் ஷர்மா, யுவ்ராஜ் சிங்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14827#sthash.XFL2OOsY.dpuf
  • தொடங்கியவர்

இலங்கை முதலில் துடுப்பாட்டம்

 

February 12, 2016  07:17 pm

Bookmark and Share
 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20க்கு இருபது போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி இந்திய அணி முதலில்  துடுப்பெடுத்தாதாடத் தீர்மானித்துள்ளது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
இலங்கை அணிக்கு 197 ஓட்ட இலக்கு: திசர பெரேரா ஹெட்ரிக்
2016-02-12 21:22:17

இந்திய அணியுடனான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 197 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

14839Thisara-Perera-600.jpg


ரன்சி நகரில் தற்போது நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய அணி 20 ஓவர்களில் 6  விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களைக் குவித்தது.

 

ஷிகர் தவான் 25 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 36  ரோஹித் சர்மா  பந்துகளில்  43 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் திசர பெரேரா ஹெட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


19 ஆவது ஓவரை வீசிய அவர், பான்ட்யா, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். அவர் மொத்தமாக 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

துஷ்மந்த சமீர 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14839#sthash.yL93FyQ7.dpuf
  • தொடங்கியவர்

12662663_968653073200122_211816951252529

12670276_968657506533012_427182419156729

  • தொடங்கியவர்

12687802_984713574910670_591429806877398

  • தொடங்கியவர்
இலங்கைடனான இரண்டாவது இருபது20 போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி
2016-02-12 22:51:14

இலங்கை அணியுடனான சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வென்றது.

 

148412nd-t20-600.jpg

 

இந்தியாவின் ரன்சி நகரில் நடைபெற்ற  இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்திய அணி 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களைக் குவித்தது.

 

ஷிகர் தவான் 25 பந்துகளில் 51 ஓட்டங்களையும் 36  ரோஹித் சர்மா  பந்துகளில்  43 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் திசர பெரேரா ஹெட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


19 ஆவது ஓவரை வீசிய அவர், பான்ட்யா, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தினார். அவர் மொத்தமாக 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை கைப்பற்றினார். துஷ்மந்த சமீர 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

14841Thisara-Perera-600.jpg

 

பதிலுக்குத் துடப்பெடுத்தாடிய இலங்கை அணியின் முதல் 3 விக்கெட்டுகளை சொற்ப ஓட்டங்களுடன் இழந்தது. துனுஷ்க குலதிலக்க (2), திலகரட்ன தில்ஷான் (0) சீக்குகே பிரசன்ன (1) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

 

அதன்பின் அணித்தலைவர் தினேஷ் சந்திமால்(31), சாமர கப்புகெதர (32), மலிந்த சிறிவர்தன (28) , தசுன் ஷானக்க (27) ஆகியோர் குறிப்பிடத்தக்களவு ஓட்டங்களைக் குவித்தனர்.

 

14841_second-t20-600.jpg


எ னினும் பின்வரிசை விக்கெட்களும் வேகமாக வீழ்ந்ததால் 20 ஓவர்களில் 9  விக்கெட் இழப்புக்கு  127 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி.

 

இந்திய பந்துவீச்சாளர்களில ரவிச்சந்திரன் அஸ்வின்  14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரிட் பம்ரா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்,  ரவீந்திர ஜடேஜா 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்,  ஆஷிஸ் நெஹ்ரா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

 

ஷிகர் தவான் இப்போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவானார். 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் தற்போது இரு அணிகளும் 1-1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. 3 ஆவது போட்டி எதிர்வரும் ஞாயிறன்று   நடைபெறவுள்ளது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14841#sthash.siuWCBO0.dpuf
  • தொடங்கியவர்
 

விசாகப்பட்டிணத்தில் இன்று கடைசி டி 20 ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

 
 
கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ்.
கோப்புப் படம்: கே.பாக்யபிரகாஷ்.

இலங்கைக்கு எதிரான இரண் டாவது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் விசாகப் பட்டிணத்தில் இன்று கடைசி ஆட்டம் நடைபெறுகிறது.

மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் புனேவில் நடை பெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து ராஞ்சியில் நேற்றுமுன்தினம் நடை பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா பதிலடி கொடுத்தது.

197 ரன்களை இலக்காக கொடுத்த இந்திய அணி 69 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற் றது. இந்நிலையில் டி 20 தொடரை வெல்வது யார் என்பதை தீர் மானிக்கும் கடைசி ஆட்டம் விசாகப்பட்டிணத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

பசுந்தரை ஆடுகளத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததால் ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டனர். பேட் டிங்கில் ஷிகர் தவண், ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்து வீச்சாளர்களும் ஆட் டத்தை தங்களது கட்டுப்பாட்டி லேயே வைத்திருந்த நிலையில், எந்த ஒரு தருணத்திலும் இலங்கை பேட்ஸ்மேன்களை சுதாரிக்க விடவில்லை. மேலும் பந்து வீச்சு, பேட்டிங்கில், கேப்டன் தோனி மேற்கொண்ட பரிட்சார்த்த முறைகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து இந்திய வீரர்கள் செயல்பட்ட நிலையில் தங்களது திட்டங்களையும் சரியான முறை யில் செயல்படுத்தினர். ஷிகர் தவண்-ரோஹித் ஜோடி அதிர டியாக ஆடி நல்ல தொடக்கம் கொடுத்ததால் தான் இறங்க வேண்டிய இடத்தில் ஹர்திக் பாண்டியாவை தோனி களமிறக் கினார். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 27 ரன் விளாசி மிரட்டி னார். அவரது ஷாட் தேர்வுகளும் சிறப்பானதாகவே இருந்தது.

இலங்கை அணியால் முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போனது. ரஜிதா, துஸ்மந்தா ஷமீரா, ஷனகா ஆகியோரை கொண்ட இளம் வேகப்பந்து வீச்சு கூட்டணி புனே ஆட்டத்தில் இந்திய வீரர்களை திணறடித்தனர்.

ஆனால் ராஞ்சி போட்டியில் அனுபவம் வாய்ந்த இந்திய பேட்ஸ் மேன்கள் சுதாரித்து ஆடியதால் இந்த மூவர் கூட்டணி அதிக ரன்களை வாரி வழங்க வேண்டிய திருந்தது. கடைசி கட்டத்தில் பெரேரா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த் தினாலும் அது வெற்றிக்கு பலன ளிக்கவில்லை.

முன்னணி வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்காத நிலையில் மூத்த வீரரான தில்ஷானை நம்பியே பேட்டிங் உள்ளது. இன்று அவர் கைகொடுக்கும் பட்சத் தில் வலுவான ஸ்கோரை சேர்க்க லாம். போட்டி நடைபெறும் விசாகப் பட்டிணம் மைதானத்தில் காற்றின் ஈரப்பதம் காரணமாக பந்து நன்கு ஸ்விங் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜஸ்பிரிட் பும்ரா, அஸ்வின் நெருக்கடி தரக்கூடும்.

தொடர் 1-1 என சமநிலை வகிப் பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆசியகோப்பை டி 20 தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இரு அணிகளுமே முயற்சிக்கும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article8236937.ece

  • தொடங்கியவர்

கடைசி டி20 போட்டி இந்தியா பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்

 

இந்திய இலங்கை மோதும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளும் ஒரு போட்டிகளில் வெற்றி பெற, தொடர் சமனில் உள்ளது. எனவே இந்த போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் களம் இறங்குகின்றன. இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

ashwin_640_vssa.jpg

முதல் ஓவரை அஸ்வினை கொண்டு ஆரம்பித்த தோனிக்கு மூன்றவது பந்திலும்,  கடைசி பந்திலும் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். தோணி கடைசி இரண்டு போட்டிகளிலும் அஸ்வினை முதல் ஓவர் வீச வைப்பது குறிப்பிடத்தக்கது.

vikatan

54/7 10.4 overs

  • தொடங்கியவர்
இலங்கையுடனான 3ஆவது போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழத்தினார் அஸ்வின்; இந்திய அணிக்கு 83 ஓட்ட இலக்கு
2016-02-14 20:46:57

இலங்கை அணியுடனான 3 ஆவது இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 83 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

14860ravichandran-ashwin.jpg


விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடப்பெடுத்தாடிய இலங்கை அணி18  ஓவர்களில் 82  ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
இப்போட்டியில் இலங்கை அணியின்முன்வரிசை வீரர்கள் ஐவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.  


நிரோஷன் டிக்வெல்ல, திலகரட்ன தில்ஷான் ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். தினேஷ் சந்திமால் 8 ஓட்டங்களுடனும் அசேல குணரட்ன 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். இவ்வீரர்கள் நால்வரும் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


 மிலிந்த சிறிவர்தன ஆஷிஸ் நெஹ்ராவின் பந்துவீச்சில் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.  தசுன் ஷானக்க 19 ஓட்டங்களுடன் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சீக்குகே பிரசன்ன 9 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

 

சச்சித்ர சேனநாயக்க 8 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சுரேஷ் ரெய்னாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். திசர பெரேராவும் 12 ஓட்டங்களுடன் ரெய்னாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


 

தில்ஹார பெர்னாணடோ ஓர் ஓட்டத்துடன் பம்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துஷ்மந்த சமீர ஆட்டமிழக்காமல் 9 ஓட்டங்களைப் பெற்றார்.

 

இந்திய பந்துவீச்சாளர்களில் அஸ்வின் 8 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார். சுரேஷ் ரெய்னா 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 


இப்போட்டியில் நடுவர்களின் சில தீர்ப்புகள் சர்ச்சைக்குரியனவாக உள்ளன.


இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய "நடுவர்களின் தீர்ப்புகள் முழுமையாக ஏமாற்றமளிக்கின்றன. இந்தியாவுக்காக 13 பேர் விளையாடியதைப் போன்று உணர்ந்தேன்" எனத் தெரிவித்துள்ளார். இலங்கை அணியினரின் மோசமான ஷொட் தெரிவுகளையும் அவர் விமர்சித்துள்ளார்

- See more at: http://metronews.lk/article.php?category=sports&news=14860#sthash.1tJqww4w.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12744502_969700859762010_544597312066871

12744518_969740293091400_424447117892083

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

12705371_1106244266061480_28148734716443

1525415_969709376427825_7059133554752410

 

12744312_10152916158989364_8270225351033

:grin::grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.