Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செய்திகளும் கருத்துக்களும்....

Featured Replies

  • தொடங்கியவர்

12920278_1216422561710171_10657038577986

12968087_1216422535043507_25890298250561

12002478_1216422618376832_73425279878871

12916165_1216423645043396_15537519583929

12901177_1216422691710158_67409040841845

12968017_1216422555043505_27747395704280

12901421_1216422758376818_5567167237134612967359_1216422705043490_45087567290706

12890956_1216348025050958_19876408308162

12961334_1216348028384291_42522794438853

12901310_1216348031717624_88216381103515

 

  • Replies 357
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டி20 உலகக்கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!

டி20 உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 என்ற இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியனாக மகுடம் சூடியது.முன்னதாக நடந்த மகளிர் டி20 உலகக்கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது

we1.jpg 

 

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் சமி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். இத்தொடரில் அவ்வணி விளையாடிய ஆறு போட்டிகளிலுமே சமி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பான தொடக்கம் தந்த ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் கூட்டணி ஆட்டத்தைத் துவங்கியது. சாமுவேல் பத்ரி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ராய் போல்டாக, அதிர்ந்தது இங்கிலாந்து. அடுத்த ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் ஹேல்சை ரஸ்ஸல் காலி செய்தார். கேப்டன் மார்கனோ 12 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து பத்ரியின் ஓவரில் வீழ்ந்தார்.ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ, மறுமுனையில் நங்கூரமாய் நிலைத்து நின்றார் ஜோ ரூட். அவரோடு பட்லரும் கைகோர்த்து அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினர். முதலில் இருவரும் பொறுமையாக ரன் சேர்த்தாலும் போகப்போக ஓவருக்கு ஓரிரு பவுண்டரிகள் அடித்தனர்.பென் வீசிய ஒரு ஓவரில் பட்லர் தொடர்ந்து இரு சிக்சர்களைப் பறக்க விட்டார்.

 

ஆட்டத்தில் இங்கிலாந்தின் கை ஓங்கிய சமயம், பட்லரை வீழ்த்தி இங்கிலாந்து மீண்டும் பின்னுக்குத்தள்ளினார் பிராத்வெயிட். 22 பந்துகளில் 3 சிக்சர் உட்பட 36 ரன்கள் எடுத்தார் பட்லர். சளைக்காமல் போராடிய ரூட் 33 பந்துகளில் தந்து அரை சதத்தைக் கடந்தார். அடுத்த ஓவரை வீசிய டுவைன் பிராவோ ஸ்டோக்சையும் (13 ரன்கள்) அலியையும் (0) காலி செய்தார். போட்டியின் அழுத்தம் கூடக்கூட அடித்து ஆட முற்பட்ட ரூட் தேவையில்லாமல் ஸ்கூப் ஷாட் ஆடி விக்கெட்டைப் பறிகொடுத்தார். அவர் 36 பந்துகளில் 54 ரன்களில்வெளியேறினார். பின்னர் ஸ்டோக்ஸ் 13,ஜோர்டான் 12, வில்லி 21 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது இங்கிலாந்து. மேற்கிந்தியத் தீவுகளின் சாமுவேல் பத்ரி சிக்கனமாகப் பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கோ தொடக்கத்திலேயே பேரிடி விழுந்தது. பேட்டிங்கில் கலக்கிய ரூட் பவுலிங்கிலும் அசத்தினார். இரண்டாவது ஓவரை வீசிய அவர் முதல் மூன்று பந்துகளில் சார்லசையும், ஆபத்தான கெயிலையும் வெளியேற்றினார். அரையிறுதி நாயகன் சிம்மன்சோ கோல்டன் டக்காகி பெவிலியன் திரும்பினார். 2012 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அணியைக் காப்பாற்றிய சாமுவேல்ஸ் இம்முறையும் மீட்புப் பணியில் ஈடுபட்டார். சீரான இடைவெளியில் பவுண்டரிகள் விரட்டிய அவர் தனது 9வது டி20 அரைசதத்தைக் கடந்தார்.சிறிது நேரம் நிலைத்த பிராவோ 25 ரன்களில் நடையைக் கட்டினார். ரஸ்ஸல் சமி இருவரையும் ஒற்றை இலக்க ஸ்கோரோடு வில்லி வெளியேற்றினார். கடைசி இரு ஓவர்களில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜோர்டான் வீசிய 19 வது ஓவரில் வெறும் 8 ரன்களே எடுக்கப்பட்டது. 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை வீசிய ஸ்டோக்ஸ் முதல் 4 பந்துகளிலும் சிக்சரை வழங்கினார். சாமுவேல்ஸ் நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருக்கிறார் என்று மகிழ்ந்திருந்த இங்கிலாந்து அணிக்கு ஹாட்-டிரிக் சிக்சர் அடித்து எம்னாய் மாறினார் பிராத்வெயிட். 4 வது பந்திலும் சிக்சர் அடித்துக் கோப்பையை வென்று தந்தார் பிராத்வெயிட்.சாமுவேல்ஸ் 85 ரன்களோடும் (66 பந்துகள்), பிராத்வெயிட் 34 ரன்களோடும் (10 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இவ்வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற முதலணி என்றபெருமையை வெஸ்ட் இண்டீஸ் அடைந்தது. 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 கோப்பை, ஆண்கள் டி20 கோப்பை என அனைத்தையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தன்வயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/61746-wi-win-t20-world-cup.art

  • தொடங்கியவர்

சீருடைக்கே தவித்தோம்... சீரிய வெற்றியை கொண்டாடுகிறோம்: சமி உணர்வுபூர்வ பேச்சு

 
வெற்றிக் கொண்டாட்டத்தில் டேரன் சமி | படம்: ஏபி
வெற்றிக் கொண்டாட்டத்தில் டேரன் சமி | படம்: ஏபி

உலகக் கோப்பைட் டி20 தொடர் முழுதும் நம்பமுடியாத அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி கோப்பையை வென்றது மேற்கிந்திய தீவுகள். அதன் கேப்டன் டேரன் சமி வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்க தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

"நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் இல்லையென்றால் எதுவும் சாத்தியமாகியிருக்காது. எங்கள் அணியில் பாதிரியாராக ஆந்த்ரே பிளெட்சர் இருக்கிறார். அவர் எப்போதுமே வேண்டுதல் நடத்திக் கொண்டேதான் இருந்தார். எங்கள் அணியே கடவுளை வழிபாடு செய்யும் அணி. இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை நாங்கள் நீண்ட நாட்களுக்குக் கொண்டாடவே செய்வோம்.

15 மேட்ச் வின்னர்களை வைத்திருக்கிறோம் என்று கூறினேன். எங்களுக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் பொறுப்பைச் சுமந்தனர். தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே பிராத்வெய்ட் இப்படி ஆடுவது உண்மையில் புல்லரிக்கச் செய்கிறது. கரீபிய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் ஆழத்தை வெளிப்படுத்துகிறது இந்த வெற்றி. நல்ல அமைப்பும் வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பும் இருக்குமேயானால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கூட தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

இந்தத் தொடரில் நாங்கள் விளையாடுவோமா என்று பலரும் பேசினர். எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. எங்கள் வாரியமே எங்களை மதிக்கவில்லை என்பதாகவே உணர்ந்தோம். மார்க் நிகலஸ் எங்கள் அணியை மூளையில்லாதவர்களின் அணி என்று கேலி செய்தார். தொடருக்கு முன்பாக இத்தகைய விஷயங்கள் எங்களை நாங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ள உதவியது.

உண்மையில் இந்த 15 வீரர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ எங்களைப் பற்றி பேசப்பட்டது, இந்த எதிர்மறை விஷயங்களை கடந்து வந்து இத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதுவும் உணர்வு மிக்க ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது அருமையிலும் அருமை.

பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மேலாளர் ரால் லூயிஸ், அவர் எங்களுக்காக பட்ட கஷ்டம் அதிகம். எங்களுக்கு சீருடை கூட இல்லை. அவர் துபாயில் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டது முதல் எங்களுக்காக பாடுபட்டார், அங்கிருந்து கொல்கத்தா வந்தார். எங்களுக்கு இந்த சீருடையைப் பெற்றுத்தர அவர் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும், அவருக்கு எனது நன்றிகள். எங்களது இந்த வெற்றியை மேற்கிந்திய தீவுகள் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.

கிரெனடாவிலிருந்து பிரதமர் கெய்த் மிட்செல் எங்களை உத்வேகப்படுத்த போட்டி தினத்தன்று மின்னஞ்சல் செய்தார். அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார், வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார், ஆனால் மே.இ.தீவுகள் வாரியத்திடமிருந்து இன்னும் கூட வாழ்த்துச் செய்தி வரவில்லை, இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

இன்று நான் இந்த 15 வீரர்கள், பயிற்சியாளர்கள் அணி ஆகியோருடன் இந்த சீரிய வெற்றியைக் கொண்டாட போகிறேன். மீண்டும் இவர்களுடன் நான் எப்போது ஆடுவேன் என்று தெரியவில்லை. எங்களை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள். மீண்டும் டி20 எப்போது விளையாடுவோம் என்று தெரியவில்லை. எனவே இந்த வெற்றிக்காக என் அணிக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கிந்திய தீவுகள்தான் சாம்பியன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே" என்றார் டேரன் சமி.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article8432396.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஷேன் வார்ன், பென் ஸ்டோக்ஸை தாக்கிப் பேசி 'முன்பகை' தீர்த்த சாமுவேல்ஸ்

 
களத்தில் பென் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் | படம்: கெட்டி இமேஜஸ்
களத்தில் பென் ஸ்டோக்ஸ், சாமுவேல்ஸ் | படம்: கெட்டி இமேஜஸ்

உலகக் கோப்பை டி20-யில் 2-வது முறையாக சாம்பியனாகி வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் மர்லன் சாமுவேல்ஸ், ஷேன் வார்ன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மீதான முன்பகையை தீர்த்துக் கொண்டார்.

பிக்பாஷ் லீக் டி20 போட்டிகளின்போது ஷேன் வார்ன், சாமுவேல்ஸ் மோதல் வெடித்தது. இருவரும் கைகலப்பு வரை சென்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது கொதிப்பைக் கொட்டித் தீர்க்க, ஆட்டம் முடிந்த கையோடு கால்காப்பைக் கூட அவிழ்க்காமல் வந்தார் மர்லன் சாமுவேல்ஸ்.

தனது ஆட்ட நாயகன் டிராபியைக் காண்பித்து, “இது ஷேன் வார்னுக்கு. நான் எந்த அணிக்காக ஆடினாலும் ஷேன் வார்ன் என்னுடன் பிரச்சினை செய்கிறார். அது என்னவென்றுதான் எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் அவரை மரியாதை குறைவாக மதிப்பிட்டதில்லை. அவர் உள்மனதில் இருக்கும் நிறைய விஷயங்களை வெளியில் கொண்டு வரவேண்டிய தேவை அவருக்கு உள்ளதாகவே எனக்குப் படுகிறது.

அவர் தொடர்ந்து என்னைப்பற்றி பேசிவரும் விதமும் அவர் செய்து வரும் காரியங்களும் எனக்கு அறவே பிடிக்கவில்லை. எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, என் முகம் நிஜமானது அவரது முகம் நிஜமற்றது என்பதனால் கூட இருக்கலாம்" என்றார்.

அதேபோல் நேற்று கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விளாசப்பட்ட பென் ஸ்டோக்ஸுடன் கூட சாமுவேல்ஸுக்கு தகராறுகளுக்கான வரலாறு உள்ளது.

நேற்று, சாமுவேல்ஸுக்கு பிடிக்கப்பட்ட கேட்ச் தரையில் பட்டுச் சென்றது, சாமுவேல்ஸ் அவுட் என்று இங்கிலாந்து கொண்டாட, ரீப்ளேயில் அந்த கேட்ச் தரையில் பட்டு பிடித்தாக முடிவாக ஆட்டத்தின் திருப்பு முனைத் தருணமாக சாமுவேல்ஸ் மீண்டும் கிரீஸுக்கு வந்தார். இதில் ஸ்டோக்ஸுக்கும் சாமுவேல்ஸுக்கும் இடையே சில கோபாவேச வார்த்தைகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனையடுத்து மே.இ.தீவுகள் வெற்றி பெற்றவுடன் தனது மேல் சட்டையை கழற்றிய சாமுவேல்ஸ் இங்கிலாந்து ஓய்வறைக்கு சென்று சில செய்கைகளை செய்ய முயன்றார். பிறகு சாமுவேல்ஸுக்கு 30% தொகை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மர்லன் சாமுவேல்ஸ் தொடர்ந்து கூறும்போது, "ஸ்டோக்ஸ் பதற்றமானவர். அதனால் கடைசி ஓவருக்கு முன்பாக நான் பிராத்வெய்ட்டிடம், உறுதியுடன் ஆடுமாறு கூறினேன், எப்படியிருந்தாலும் அவர் இரண்டு புல்டாஸ்களை வீசுவார், அது எப்பவும் போல நமக்குச் சாதகமாக முடியும் என்றேன்.

ஸ்டோக்ஸ் எதையும் கற்றுக் கொள்வதில்லை. எனக்கு எதிராக விளையாடும்போது என்னிடம் பேசக்கூடாது என்று அவருக்கு பலரும் அறிவுறுத்தியிருந்தனர். என்னிடம் பேசினால் நிச்சயம் நான் சிறந்த ஆட்டத்தை ஆடுவேன் என்பதை அறிந்திருந்தனர். ஆனால் ஸ்டோக்ஸ் கற்றுக் கொள்ளவில்லை. நான் பந்தை எதிர்கொள்ள தொடங்கும் முன்பே அவர் என்னிடம் ஏகப்பட்ட வார்த்தைகளை பேசினார். இதனால் கடைசி வரை நின்று பார்த்து விடுவது என்ற உறுதி என்னிடம் ஏற்பட்டது.

இத்தகைய செயல்களால்தான் நான் இன்னமும் நீடிக்கிறேன். இதனால் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் நான் நீண்ட காலம் ஆடமுடிவதற்கு எதிரணியினர் என்னைத் தொடர்ந்து உசுப்பேத்தி வருவதுதான் காரணம்" என்றார்.

ஏனோ இந்தச் செய்தியாளர் சந்திப்பு பாதியிலேயே முடிந்தது. ஆனால் மர்லன் சாமுவேல்ஸ் மேலும் பேசவே ஆசைப்பட்டார். அவர் இன்னமும் பேசினால் என்னெல்லாம் பேசுவாரோ என்ற அச்சம் காரணமாக பாதியிலேயே முடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B7%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article8432374.ece?homepage=true

  • தொடங்கியவர்

எங்கள் வாரியத்தை விட பிசிசிஐ-யிடம் கிடைத்த உறுதுணையே அதிகம்: பிராவோ நெகிழ்ச்சி

பிராவோ | படம்: ராய்ட்டர்ஸ்
பிராவோ | படம்: ராய்ட்டர்ஸ்

மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் டேரன் சமியை தொடர்ந்து, டுவைன் பிராவோவும் அவர்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார். மே.இ.தீவுகள் வாரியத்தை விட பிசிசிஐ தங்களுக்கு அதிக உதவி செய்துள்ளதாக அவர் பேசியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பிராவோ அளித்த பேட்டியில், "எங்கள் நாட்டின் கிரிக்கெட் மேலாண்மை சரியானவர்களிடம் இல்லை. எங்கள் கிரிக்கெட் வாரியத்திலிருக்கும் அதிகாரிகள் இயக்குநர்கள் என யாரும் இதுவரை எங்களை கூப்பிட்டு பாராட்டவில்லை. இது நல்லதல்ல.

நாங்கள் இந்த கோப்பையை வெல்வோம் என்று அவர்கள் நம்பவோ, நினைக்கவோ இல்லை. அடிப்படையில் இது வீரர்களுக்கும் வாரியத்துக்கும் இடையிலான மோதல். (ஒப்பிட்டுப் பார்க்கும் போது) பிசிசிஐ எங்களுக்கு அதிக உதவி செய்துள்ளது.

எங்கள் அட்டவணையை பார்த்தால், இந்த வருடம் எங்கள் நாட்டுக்கு வேறெந்த டி20 போட்டியும் திட்டமிடப்படவில்லை. நான், கெயில், ரஸ்ஸல் யாரும் ஒரு நாள் போட்டிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர் இருக்கிறது. ஆனால் நாங்கள் அந்த நேரத்தில் இங்கிலாந்து டி20 லீக்கில் விளையாடிக் கொண்டிருப்போம். எங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அன்பைப் பாருங்கள். எங்கள் வாரியத்தை விட பிசிசிஐ எங்களுக்கு நிறைய செய்கிறது" இவ்வாறு பிரவோ கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article8432434.ece?homepage=true

  • தொடங்கியவர்

'ஸ்டோக்ஸின் வலியைப் பகிர்வோம்'

Comments     Insto4LEAD-Box-2.jpg

 

 இறுதி ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட வேண்டிய நிலையில் பந்துவீசிய இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸின் ஓவரில், முதல் நான்கு பந்துகளுமே ஆறு ஓட்டங்களாக விளாசப்பட்டு, இங்கிலாந்து அணி சம்பியனாகும் வாய்ப்பு இல்லாமற்போன நிலையில், பென் ஸ்டோக்ஸின் வலியை, இங்கிலாந்து அணி பகிர்ந்துகொள்ளுமென, இங்கிலாந்து அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

 

  'என்னைப் பொறுத்தவரை, இது மிகவும் இலகுவானது. ஸ்டோக்ஸ், மிகவும் வருத்தமடையவுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அவர் அதனால் பாதிக்கப்படுவார். ஆனால், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் நாங்கள் பகிர்கிறோம், அணியாகவே நாம் இணைந்து காணப்படுகிறோம். வலிகளை நாம் பகிர்கிறோம், வெற்றிகளை நாம் பகிர்கிறோம் - இப்போதும் எதிர்காலத்திலும்" என்றார்.

 

 இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் தவறுகளெதனையும் காண முடியவில்லை எனத் தெரிவித்த ஒய்ன் மோர்கன், பந்துவீச்சிலேயே தவறிழைத்ததாகக் குறிப்பிட்டார். குறித்த ஆடுகளத்தில், 180 தொடக்கம் 190 வரையிலான ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏறத்தாழ 40 ஓட்டங்கள் குறைவாகப் பெற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 

தோல்வியின் பின்னர் கருத்துத் தெரிவித்த பென் ஸ்டோக்ஸ், 'ஏமாற்றந்தரும் இறுதி ஓவரின் பின்னர், கிடைக்கப்பெறும் எல்லா ஆதரவாலும் திணறுகிறேன். எனது நாட்டை, உலகக் கிண்ணமொன்றின் இறுதிப் போட்டியில் பிரதிநிதித்துவப்படுத்தியமை குறித்துப் பெருமையடைகிறேன். எங்களுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. மிகச்சிறந்த இறுதிப் போட்டியொன்றை வெற்றி கொண்டமைக்காக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.

http://tamil.wisdensrilanka.lk/article/3281

  • தொடங்கியவர்

12916226_1217087511643676_50192458576131

12967279_1217087514977009_78746253070779

12888526_1217087984976962_34632158666381

12970856_1217088014976959_19286112460494

12671743_1217088091643618_63190294495289

 

  • தொடங்கியவர்

உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்

April 04, 2016

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி பற்றி டுவிட்டரில் வலம் வரும் சில டுவிட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. CricInsider என்ற டுவிட்டர் பக்கத்தில் இறுதிப் போட்டி பற்றி சில டுவிட்டுகள் போடப்பட்டுள்ளது. அவை அனைத்தும் இறுதிப் போட்டிக்கு முன்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

eng_wi_001

அதில் பிராவோ 3 விக்கெட் எடுப்பார், 2 ஓவரில் கெய்ல் ஆட்டமிழப்பார், மேற்கிந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெறும் என அனைத்து சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், இந்தப் போட்டி ஏற்கனவே பிக்சிங் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஏற்றார் போல் தான் இரு அணிகளும் விளையாடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டுவிட்கள் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முன்னதாகவே எப்படி கணிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

http://www.onlineuthayan.com/sports/?p=11797&cat=2

சங்கக்காராவின் சாதனைனையை சமன் செய்த சாமுவேல்ஸ்

April 04, 2016

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடைசி வரை போராடி அரைசதம் (85 ஓட்டங்கள்) விளாசிய மர்லன் சாமுவேல்ஸ், 2012ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் அரைசதம் (78 ஓட்டங்கள்) அடித்திருந்தார்.

Marlon-Samuels

இதன் மூலம் உலகக்கிண்ண இறுதிச்சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த 2வது வீரர் என்ற பெருமை பெற்றார் முன்னதாக இலங்கையின் சங்கக்காரா 2009, 2014ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டங்களில் அரைசதம் எடுத்திருக்கிறார்.

மேலும், இந்த ஆட்டத்தில் சாமுவேல்ஸ் எடுத்த 85 ஓட்டங்களே, டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஒரு வீரரின் அதிகபட்சமாகும். முந்தைய சாதனையும் அவரது வசமே (78 ஓட்டங்கள்) இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.onlineuthayan.com/sports/?p=11784&cat=2

நாணய சுழற்சியில் சாதனை படைத்த சமி

 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டேரன் சமி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த தொடரில் விளையாடிய 6 ஆட்டங்களிலும் டேரன் சேமியே நாணய சுழற்சியில் ஜெயித்திருக்கிறார். அத்துடன் அவர் முதலில் பந்து வீச்சையே தேர்வு செய்திருக்கிறார்.ஒட்டுமொத்தத்தில் டி20 அணியின் தலைவராக அவர் தொடர்ந்து 10 ஆட்டங்களில் நாணய சுழற்சியில் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=11788&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.