Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபர் என்ற வகையில் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்படவில்லை

Featured Replies

கொடூரக் கொலைகள் தொடர்­பாக துப்­புத்­து­லக்கி குற்­ற­வா­ளி­களை தண்­டணை பெறச்­செய்த ஏ.எஸ்.பி. ஷானி அபே­சே­கர தற்­போது காணா­மற்­போன ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட தொடர்­பான விசா­ர­ணையை மேற்­கொண்­டுள்­ளது பிரகீத் எக்­னெ­லி­கொ­டயின் குடும்­பத்­தா­ருக்கும் ஊட­க­வி­ய­லா­ள­ருக்கும் மட்­டு­மின்றி இந்­நாட்டு மக்­க­ளுக்கும் பெரும் நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை திறமை மிக்க புல­னாய்­வா­ள­ரான இவ­ரி­ட­மி­ருந்து குற்­ற­வா­ளிகள் தப்­பிக்க முடி­யா­தென்ற எண்­ணத்­தையும் தோற்­று­வித்­துள்­ளது.

 

ஏ.எஸ்.பி. ஷானி அபே­சே­கர கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், நட­ராஜா ரவிராஜ் ஆகி­யோரின் படு­கொ­லைகள் குறித்தும் புல­னாய்வு செய்து, சூத்­தி­ர­தா­ரி­களை கைது செய்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தில் பணி­யாற்றும் ஷானி அபே­சே­கர, அந்த திணைக்­க­ளத்தில் இருக்கும் முதல் தர புல­னாய்­வாளர். அண்­மைக்­கால வர­லாற்றில் பெரும் பரப்­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய எந்த குற்றச் செய­லாக இருந்­தாலும் அந்த விசா­ர­ணை­க­ளுக்கு ஷானி அபே­சே­க­ரவே தலைமை தாங்­கி­யி­ருந்தார். இவர் மேற்­கொண்ட அனைத்து விசா­ர­ணை­க­ளிலும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

உதவி சுங்க அத்­தி­யட்­சகர் சுஜித் பிர­சன்ன, றோயல் பார்க்­கி­லுள்ள வெளி­நாட்டு யுவ­தியின் கொலை, அங்­கு­லான இரட்­டைக்­கொலை, மொஹமட் சியாம் கொலை, ஹசித மட­வல கொலை, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­காவை குறி வைத்து கொழும்பு மாந­கர சபை மைதா­னத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­குதல், கொள்­ளுப்­பிட்டி பித்­தளை சந்­தியில் கோத்­த­பாய ராஜ­பக்­ஷவை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்டு தாக்­குதல், களனி திஸ்ஸ மின் உற்­பத்தி நிலை­யத்தின் மீதான தாக்­குதல் போன்ற நாட்டில் மிகவும் பரப்­ப­ரப்­பாக பேசப்­பட்ட கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் உட்­பட பல சம்­ப­வங்­களின் விசா­ரணை அதி­கா­ரி­யாக ஷானி அபே­சே­க­ரவே செயற்­பட்டார்.

அங்­கு­லான கொலை சம்­பவம் தொடர் பில் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கிய அங்­கு­லான பொலிஸ் நிலைய பெறுப்­ப­தி­காரி உட்­பட பொலிஸார், சியாம் கொலை வழக்கில் குற்றம் சுமத்­தப்­பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்­தன உட்­பட தனது மேல­தி­கா­ரி­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்கும் வகையில் ஷானி அபே­சே­க­ரவின் விசா­ர­ணைகள் அமைந்­தி­ருந்­தன.

பொலிஸ் அதி­காரி என்ற வகையில் தனக்கு வழங்­கப்­பட்ட பொறுப்பை செவ்­வனே நிறை­வேற்­றுவார் என பொலிஸ் திணைக்­க­ளத்தில் பணி­யாற்றும் பெரும்­பா­லானோர் தெரி­விக்­கின்­றனர்

ஷானி அபே­சே­கர தற்­போது பெரும் பரப்­ப­ரப்­பாக பேசப்­படும் ஒரு­வ­ராக மாறி­யுள்ளார். சுதந்­திர ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போன சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களின் பிர­தி­ப­ல­னாக இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் சிலர் கைது செய்­யப்­பட்­ட­மையே இதற்கு காரணம்.

மஹிந்த ஆட்­சிக்­கா­லத்தில் சட்­டமா அதி­ப­ரா­கவும் பிர­தம நீதி­ய­ர­ச­ரா­கவும் இருந்­தவர் பிரகீத் எக்­னெ­லி­கொட வெளி

நாட்டில் வாழ்ந்து வரு­வ­தற்­கான தக­வல்கள் இருப்­ப­தாக ஐ.நா. மனித உரிமை பேர­வையில் தெரி­வித்­தி­ருந்தார்.

பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போன சம்­பவம் குறித்து மைத்­திரி அர­சாங்கம் ஆரம்­பத்தில் இருந்து விசா­ரணை நடத்த தொடங்­கி­யதை அடுத்து, எக்­னெ­லி­கொட தொடர்­பாக அன்­றைய அர­சாங்கம் கூறி­யது அனைத்தும் அப்­பட்­ட­மான பொய் என தெரி­ய­வந்­தது.

கடத்­தப்­பட்­ட­தாக நாட­க­மாடி பிரகீத் எக்­னெ­லி­கொட நாட்டில் இருந்து தப்பிச் சென்று விட்டார் என்றும் இவரை பாரிஸ் நாட்டில் தான் கண்­ட­தா­கவும் மஹிந்த அரசின் முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரொ­ருவர் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.

இப்­போது பிரகீத் நாட்டில் இருந்து தப்பிச் செல்­ல­வில்லை அவரை இரா­ணு­வத்தின் புல­னாய்வு பிரி­வினர் கடத்திச் சென்று காணாமல் போக செய்­துள்­ளனர் என்­பது தெளி­வான சாட்­சி­யங்கள் மூலம் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்த விசா­ர­ணை­களில் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் போன சம்­பவம் மாத்­தி­ர­மல்­லாமல், தெஹி­வ­ளையில் கொலை செய்­யப்­பட்ட சுதந்­திர ஊட­க­வி­ய­லாளர் சம்பத் லக்மால் கொலை தொடர்­பான மர்­மமும் வெளி­யா­கி­யமை விசேட அம்­ச­மாகும்.

அத்­துடன் பிரகீத் எக்­னெ­லி ­கொட காணாமல் போன சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­யுடன் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ், நாரா­ஹேன்­பிட்­டியில் வைத்து சுட்­டுக்­கொல்­லப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணையும் தொடங்­கி­யது.

நட­ராஜா ரவிராஜ் கொலை தொடர்­பாக விசா­ரணை நடத்த அன்­றைய மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் ஸ்கொட்லண்ட் யார்ட் பொலி­ஸாரின் உத­வி­யையும் பெற்­றுக்­கொண்­ட­மையும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் இலங்­கைக்கு வந்து இந்த கொலை சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை நடத்­தி­யது முக்­கி­ய­மான விட­ய­மாகும். எனினும், உலகில் மிக சிறந்த குற்­றப்­பு­ல­னாய்வு பொலிஸார் எனக் கூறப்­படும் ஸ்கொட்லண்ட் யார்ட் பொலி­ஸாரால் கூட ரவிராஜ் கொலை மர்­மத்தை கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை.

மேலும், அப்­போது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய மற்­று­மொரு கொலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தின் கொலையாகும். நத்தார் ஆரா­த­னையில் கலந்து கொண்­டி­ருந்த அவர், தேவா­ல­யத்­திற் குள் வைத்தே அதி­காலை சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

பல கால­மாக மர்­ம­மாக இருந்து வந்த இந்த கொலை சம்­பவம் மட்­டு­மல்­லாது எக்­னெ­லி­கொட காணாமல் போன சம்­ப

வம் ஆகிய சம்­ப­வங்கள் குறித்த விசா­ர­ணை­களை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் உத்­த­ரவின் பேரில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைத்தார்.

இந்த விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பாக குற்றப் புல­னாய்வு திணைக்­களம் ஷானி அபே­சே­க­ரவை நிய­மித்­தது.

என்றும் குற்­ற­வா­ளி­களை கண்­டு­பி­டிக்க முடி­யாது எனக் கூறப்­பட்ட இந்த சம்­ப­வங்கள் குறித்து விசா­ர­ணை­களை நடத்தி குற்­ற­வா­ளி­களை சாட்­சி­யங்­க­ளுடன் அடை­யாளம் கண்டு, அவர்கள் ஒவ்­வொ­ரு­வ­ராக கைது செய்­யப்­படத் தொடங்­கி­யதும் ஷானி அபே­சே­க­ர­வுக்கு என்­று­மில்­லா­த­வாறு நெருக்­க­டிகள் ஏற்­ப­டத் ­தொ­டங்­கி­யுள்­ளன.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ரவிராஜ், ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் ஆகியோரின் கொலை மற்றும் எக்­னெ­லி­கொட காணாமல் போன சம்­பவம் ஆகி­ய­வற்­றுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு விட்­டனர்.

இந்த கொலைகள் மற்றும் காணாமல் போன சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் மற்றும் குற்றம் சுமத்­தப்­படும் அனை­வரும் இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் உறுப்­பி­னர்கள்.

இவர்­களில் விடு­தலைப் புலிகள் அமைப்பில் இருந்து வில­கிய கருணா மற்றும் பிள்­ளையான் தரப்­பி­னரும் உள்­ளனர். இத­ன­டிப்­டை­யி­லேயே கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக இருந்த பிள்­ளை­யானும் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை கொலை செய்­த­தாக பிள்­ளையான் மற்றும் அவ­ரது சகாக்கள் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதில் இரா­ணுவப் புல­னாய்வு பிரி­வுக்குத் தொடர்­பி­ருப்­ப­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­துடன் கொலைக்குப் பயன்­ப­டுத்­திய துப்­பாக்கி இரா­ணுவ புல­னாய்வு பிரி­வுக்கு சொந்­த­மா­னது என்றும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய பாது­காப்பு அச்­சு­றுத்­த­லான நபர் என்ற வகையில் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் கொலை செய்­யப்­ப­ட­வில்லை எனவும், அர­சியல் தேவைக்கு அமை­யவே இந்த கொலை நடந்­துள்­ள­தா­கவும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

அதேபோல் இரா­ணுவ புல­னாய்வு பிரிவின் முழு­மை­யான திட்­டத்­திற்கு அமை­யவே கொழும்பு நார­ஹேன்­பிட்­டியில் வைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

கருணா மற்றும் பிள்­ளை­யானின் குழு­வினர், இரா­ணுவப் புல­னாய்வு பிரி­வினர், பொலி­ஸாரும் இந்த கொலை­யுடன் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­பது முக்­கிய அம்­ச­மாகும். இவர்­களும் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

மேலும் இந்த விசா­ர­ணை­களின் பிர­தி­ப­ல­னாக, கொழும்பு வர்த்­த­கர்­களின் பிள்­ளைகள் கடத்திச் செல்­லப்­பட்டு கப்பம் பெறப்­பட்­டமை, அந்த பிள்­ளைகள் கொலை செய்­யப்­பட்ட சட­லங்கள் கட

லில் மூழ்­க­டிக்­கப்­பட்டு காணாமல் போக செய்­தமை போன்ற சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்­களும் தெரி­ய­வந்­துள்­ளன.

இந்த கொலைகள் தேசிய பாது­காப்பு கருதி மேற்­கொள்­ளப்­பட்­டதா அல்­லது எவ­ரது தேவைக்­காக மேற்­கொள்­ளப்­பட்­டதா என்­பதை கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வு பிரிவு உறுப்­பி­னர்கள் மாத்­தி­ர­மல்­லாது, கருணா மற்றும் பிள்­ளையான் தரப்­பி­னரும் வெளி­யி­டு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்த சம்­ப­வங்­களில் பிரகீத் எக் ­னெ­லி­கொட கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பான விசா­ரணை சம்­பந்­த­மா­கவே ஷானி அபே ­சே­க­ர­வுக்கு எதி­ராக கடும் நெருக்­க­டிகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

பிரகீத் எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்ட சம்­பவம் முதல் அவர் காணாமல் போக செய்­யப்­பட்ட சம்­பவம் வரை­யான அனைத்து விட­யங்­க­ளுடன் தொடர்­பு­டைய­வர்கள் அனை­வரும் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­தினால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களின் ஆறு பேர் இரா­ணுவப் புல­னாய்வு பிரிவை சேர்ந்­த­வர்கள்.

விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்த கார­ணத்­தினால், எக்­னெ­லி­கொட கடத்­தப்­பட்­ட­தாக விசா­ர­ணை­களின் போது இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவு உறுப்­பி­னர்கள் முதலில் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும், அன்­றைய மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­திற்கு எதி­ராக எக்­னெ­லி­கொட எழு­திய புத்­தகம், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு ஆத­ர­ வாக எழு­திய கட்­டு­ரைகள், அர­சாங்­கத்தை விமர்­சித்து எழு­தப்­பட்ட கவி­தைகள் அடங்­கிய இறு­வட்டு என்­ப­னவே எக்­னெ­லி­கொ­டவின் கடத்­த­லுக்கு காரணம் என்­பது இரா­ணுவ புல­னாய்­வுப்­பி­ரிவு உறுப்­பி­னர்­களின் வாக்­கு­மூலம் மற்றும் சாட்­சி­யங்கள் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

எக்­னெ­லி­கொ­ட­விடம் தேசிய பாதுகாப்பு சம்­பந்­த­மான பிரச்­சினை குறித்தோ, விடு­தலைப் புலி­க­ளுடன் இருந்த தொடர்பு பற்­றியோ விசா­ரணை நடத்­தி­ய­மைக்­கான சாட்­சி­யங்கள் எதுவும் கிடைக்­க­வில்லை.

கிரித்­தலே பிர­தே­சத்தில் உள்ள மூன்­றா­வது இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவின் முகாமில் வைத்தே பிரகீத் எக்­னெ­லி­கொட விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

எக்­னெ­லி­கொ­டவை முகா­முக்கு கொண்டு வந்­த­வர்கள், அவ­ரிடம் விசா­ரணை நடத்­திய சில புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் பதிவு செய்த குறிப்­புகள் தற்­போது குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்­திடம் உள்­ளன. பிரகீத் எக்­னெ­லி­கொட விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்தார் என்­பதை உறு­திப்­ப­டுத்தும் எந்த சாட்­சி­யங்­க­ளையும் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­திடம் வழங்­க­வில்லை என்­பதும் இங்கு முக்­கி­ய­மான விட­ய­மாகும்.

எக்­னெ­லி­கொட கடத்திச் செல்­லப்­பட்டு காணாமல் போக செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக கைது செய்­யப்­பட்­டுள்ள இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களின் இரண்டு இரா­ணுவ கேர்­ணல்­களும் அடங்­கு­கின்­றனர்.

தற்­போது மேற்­கொள்­ளப்­படும் விசா­ர­ணை­களில் கிடைத்­துள்ள தக­வல்­களின் படி எக்­னெ­லி­கொ­டவை கடத்திச் செல்ல உத்­த­ர­விட்­டது யார் என்­பதை குற்றப் புல­னாய்வு திணைக்­களம் கண்­ட­றிந்­துள்­ளது.

எக்­னெ­லி­கொட காணாமல் போன சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களில் சகல தக­வல்­களும் வெளி­யாகும் என்­ப­துடன் கிரித்­தலே முகாமில் புலனாய்வுப் பிரிவு கோப்ரல் ஒருவர் கொலை செய் யப்பட்டு முச்சக்கர வண்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட சம்பவம் பற்றிய தகவலும் வெளியாகும்.

ஆஜின் பிரேமகுமார என்ற இந்த இராணுவ புலனாய்வுப் பிரிவு கோப்ரல் 2007 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் திகதி பொலன்னறுவை கல்லேல்ல பிரதேசத் தில் வைத்து கடத்திச் சென்று கொலை

செய்து முச்சக்கர வண்டியுடன் புதைக் கப்பட்டதாக கூறப்படுகிறது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இந்த கோப்ரல், இனத்துரோகி அல்லது காட்டிக்கொடுத்தார் என்பதற்

காக கொலை செய்யப்படவில்லை.

கிடைத்துள்ள தகவல்களின்படி கொலை செய்யப்பட்ட கோப்ரல், இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியின் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோப்ரல் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் பரிசோதகர் மர்மமான முறையில் தன்

னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சுட்

டுக்கொல்லப்பட்டாரா? என்பதை அறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஷானி அபேசேகர யுத்தம் நடைபெற்ற 1985 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியதுடன் போரில் நேரடியான பங்களிப்பை வழங்கிய அதிகாரியாவார். நன்றி: லக்பிம  VIRAKESARI

http://www.supeedsam.com/?p=25946

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.