Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது அழிவடைந்த பிரதேசங்கள் மீண்டும் புதுப்பொலிவினை அடைய வேண்டும்! :மாவை எம்.பி

Featured Replies

எமது அழிவடைந்த பிரதேசங்கள் மீண்டும் புதுப்பொலிவினை அடைய வேண்டும்! :மாவை எம்.பி
 
 
எமது அழிவடைந்த பிரதேசங்கள் மீண்டும் புதுப்பொலிவினை அடைய வேண்டும்! :மாவை எம்.பி
உலக வளர்ச்­சிக்கு ஈடாக எமது அழி­வ­டைந்த பிர­தே­சங்கள் மீண்டும் புதுப்­பொ­லிவு அடை­ய­ வேண்டும். அதற்கு ஏற்ப அனை­வ­ரது செயற்­பாடும் அமை­ய ­வேண்டுமென இலங்கை தமி­ழ­ரசுக்கட்­சியின் தலை­வரும் மாவட்ட ஒருங்­கி­ணைப்புக் குழுவின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான மாவை சேனா­தி­ராஜா எம்.பி. தெரி­வித்தார்.
 
யாழ்ப்­பாணம் பிர­தேச செய­ல­கத்தின் ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம் அண்­மை யில் பிர­தேச செய­ல­கத்தில்
நடை­பெற்­ற போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.
 
மேலும் அவர் அங்கு தெரி­விக்­கையில்,
பல­வ­கை­யான நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் இருந்த நாம் கடந்த வருடம் ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற
ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்­றி­ய­டைய செய்­துள்ளோம்.
 
அவரின் தலை­மையின் கீழான நல்லாட்­சியில் பங்­கா­ளி­க­ளாக நாம் இல்­லா­விட்­டாலும் எமது கொள்­கையின்
அடிப்­ப­டையில் சரி­யான சந்­தர்ப்­பத்தில் அரசாங்­கத்தை ஆத­ரித்­தி­ருக்­கின்றோம்.
 
இதன் அடிப்­ப­டையில் வடக்கு கிழக்கில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு அத்­துடன் எமது பகு­தியை பொரு­ளா­தார வளர்ச்சிப் பாதைக்கு முன்­கொண்டு செல்­வ­தற்கும் திட­சங்­கற்பம் எடுத்­துள்ளோம்.
 
இதற்­காக ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் பேச்சு­வார்த்­தை­யிலும் ஈடு­பட்டு வரு­கின்றோம். குறிப்­பாக வரவு செலவுத்
திட்­டத்தில் எமது பகு­தி­க­ளுக்கு போதிய நிதி ஒதுக்­கீடு வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இது தொடர்­பிலும் பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்டு இதற்­கான விட­யத்தை ஆரா­ய­வுள்ளோம்.
 
எமது மக்­களின் தீர்ப்­பினால் நாம் இங்கு இணைத் தலை­வர்­க­ளாக நிய­மனம் பெற்­றுள்ளோம். எமது குறிக்கோள்
அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்ட அதே­நேரம் எமது மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள், இனப்­பி­ரச்­சினை தீர்வு, காணாமல் போன­வர்கள் பிரச்­சினை, அர­சியல் கைதிகள் விடயம் போன்ற எமது மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும்
என்­பதே. இவற்­றுக்­காக தொடர்ந்து உழைத்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.
 
இன்­றைய சூழலில் சர்­வ­தே­சத்தின் பார்வை எம்­மீது திரும்­பி­யுள்­ளது. இதனை நாம் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும். அது மட்­டு­மன்றி ஐ.நா. தீர்மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி அதனை செயல் ­வ­டிவம் கொடுப்­பது போன்ற பல விட­யங்கள் கையாளப்­ப­ட­வேண்டும்.
 
ஆகவே எமது மக்­களின் தேவைகளை நிறை­வேற்­று­வ­தற்கு அனை­வ­ரது ஒத்­து­ழைப்பும் தேவை. எனவே கடந்த
காலங்களைப் போல் ஒருங்கிணைப்புக் குழுவைக் கூட்டினோம் எழுந்து சென்றோம் என இருக்காது இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், முடிவுகள் தொடர்பில் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக்காணிகளில் கடைகளும் ,கோயிலும் கட்டினால் எமது பிரதேசம் புதுப்பொலிவுடன் திகழும்....tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.