Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸிலிருந்து தமிழ் ஒலிபரப்பு

Featured Replies

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா. தனியே பொழுது போக்கு வானொலியாக நின்றுவிடாமல் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு வானொலியாக மிளிர வாழ்த்துக்கள்.

வாழ்த்துகளுக்கு நன்றி மதன்!

சேர்த்துக் கொள்ளப்படும் அம்சங்கள்

நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.........!

  • Replies 87
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அயீவன் இன்னமும் வானொலி கேட்கவில்லை ஆனாலும் உங்கள் முயற்சி தமிழிற்கும் தமிழர் தேசத்திற்கானதாகவும் இருக்க வாழ்த்துக்கள் . இப்படியானதொரு முயற்சி எத்தனை சிரமங்கள் என்று எனக்கும் தெரியும் எனவே சிரமங்களை தாண்டி வெற்றிநடை போடுங்கள்

நன்றி சாத்திரியாரே..........

  • தொடங்கியவர்

உங்களின் புதிய முயற்சிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அஜீவன்.

ஒரு மணி நேர நிகழ்ச்சி பல மணி நேரங்களாக பயனுள்ளதாக மலர்ந்து மிளிர வேணடும்.

இன்னும் நேரடி நிகழ்ச்சியை கேட்கவில்லை. இன்று மாலை ஆணிவேர் படம் பார்க்க போவதால் தவிர்க்க வேண்டியநிலை.

தொடர்ந்து கேட்டு அபிப்பிராயங்கள் எழுதுவேன்.

நன்றி சண்முகி!

ஆமாம் ஜெர்மனியில் இன்று ஆணிவேர் திரையிடப்பட்டு பார்க்க போனதாக சோழியன் சொன்னார்.

நிச்சயம் எழுதுங்கள்.............

  • தொடங்கியவர்

மனமார்ந்த வாழ்த்துக்கள் அஜிவன். தொடரட்டும் உங்கள் பணி. இன்று ஐரோப்பாவில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வானொலிகளுக்கும் வாழ்வளித்துக் கொண்டிருக்கும் சுவிசிலிருந்து ஒரு முழுநேர வானொலி உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

வாழ்த்துகளுக்கு நன்றி வசம்பு!

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அண்ணா.

இதற்கு மட்டும் நன்றி 'Netfriend'

  • தொடங்கியவர்

இனிய நெஞ்சங்களே!

அனைவருக்கும் நன்றி!

Edited by AJeevan

  • தொடங்கியவர்

இனிய நெஞ்சங்களே!

KanalK

present

Jeevan4U

background-radio-station-01.jpg

2006.12.24ம் நாள்

சுவிஸிலிருந்து முதல் முறையாக

வான் அலைகளில் ஒலித்த

Jeevan4U

தமிழ் ஒலிபரப்பு

நிகழ்ச்சியை கேட்பதற்கு:-

http://www.megaupload.com/?d=DF06M8YE

password: jeevan4

சுவிற்சர்லாந்தின் பனித்தூறல் கலந்த

அல்ப்ஸ்மலைக் காற்றோடு

எம் மூச்சுக் காற்றும்

காற்றினில் கலந்து

உங்கள் இதய தாகமாய் வானில் கலக்கும்

Jeevan4U

உங்கள் எண்ணங்களை சுமந்து வரும் வானோலி நிகழ்ச்சி.

உங்கள் கருத்துகளை

jeevan4you@gmail.com

என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா! நல்லதொரு முயற்சி!

படித்து விட்டு சும்மா இருக்க முடியவில்லை. ஒரு தமிழ் கருத்துக் களத்தில் இலங்கைப் பிரச்சனை சம்மந்தமாக ஒரு விவாதம் போகுது. அதில அஜீவன் அண்ணாவும் கருத்து எழுதுறார். அதில குமரன் எண்டவர் இப்படி எழுதியிருக்கிறார்.

நடுநிலையான் அலசல்கள் அஜீவன் அண்ணாவிடம் பேசியதில் இருந்து எனக்கு கிடைத்தது. அதன் பிறகு போராளிகளை ஆதரிக்கும் எண்ணத்தை கைவிட்டேன்.

இதற்கு அஜீவன் அண்ணா பதிலளிப்பார் என நம்பலாம். ஒரு விடுதலைப் போராட்டத்தைப் பற்றி, தப்பாக நினைக்கும் அளவுக்கு, அல்லது அதை ஆதரிப்பதைக் கைவிடும் அளவுக்கு சொல்லப்பட்ட பதிலானால், மிகவும் வருந்தத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் ஒரு காலத்தில் மூலைக்கு மூலை சுப்ப சோக்கள் என்று தனியார் ஒளிபரப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது போல..புகலிடத்திலும் ஒலி ஒளி பரப்புகளுக்கு குறைவில்லை. இருந்தாலும் சம கால உலகியல் ஒழுங்கோடு பன்முக நோக்கோடு எந்த ஒரு தமிழர்களின் ஒலி ஒளி பரப்பும் அமையந்திட்டதாக குறிப்பிட முடியவில்லை. ஒலி பரப்பில் ஐபிசியை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசிய ஆதரவு என்பதையே மையப்படுத்தி நிற்கிறது. ரிபிசி..பிபிசி என்றால் அவர்கள் தங்கள் தங்கள் அரசியல், அரசுகளின் காழ்ப்புணர்சிகளுக்கு இடமளிக்கும் ஒலி பரப்பை மட்டுமே செய்கின்றனர். அந்த வகையில் புதிது புதிதாக முளைப்பவையும் தனிமனித எண்ணங்களை மட்டுமே வானலையில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கங்களுக்கு அப்பால் பன்முக நோக்கோடு..அரசியல் சர்வதேசம் பொருளாதாரம் கல்வி சமூகவியல் விளையாட்டு அறிவியல் பொழுதுபோக்கு மொழியியல் என்று பல நோக்கோடு நிகழ்சிகளை எளிமையாகவும் வினைத்திறனுள்ள வகையிலும் வடிவமைக்கக் கூடிய வகையில் அமைவது சிறப்பு. புலிகளின் குரல் வானொலி இதில் சிறிதை என்றாலும் செய்த திருப்திக்குரியது. அவர்களின் தளம் அரசியலுக்கும் அப்பால் சமூக நோக்கோடும் விரிந்திருந்தது. உதாரணமாகக் காட்டக் கூடியதாக புலிகளின் குரல் இருந்ததால் இங்கு முன்வைக்கப்பட்டது..!

முயற்சிகள் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியது கட்டாயம். ஆனால் நாளை அவையே தமிழர்களுக்கு எதிரான இலக்கு நோக்கி நகரவும் கூடலாம் என்பதையும் அதை செய்யக் கூடாது என்பதையும் கேட்டுக் கொள்வது தமிழர்களின் தலைவிதியை நொந்து கொண்டு சொல்ல வேண்டியதாக இருக்கிறது..! :huh:

இது ஈழத்தமிழருக்கு மிகவும் ஆபத்தானதாகவே எனக்கு தெரிகிறது.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா! நல்லதொரு முயற்சி!

இதற்கு அஜீவன் அண்ணா பதிலளிப்பார் என நம்பலாம். ஒரு விடுதலைப் போராட்டத்தைப் பற்றி, தப்பாக நினைக்கும் அளவுக்கு, அல்லது அதை ஆதரிப்பதைக் கைவிடும் அளவுக்கு சொல்லப்பட்ட பதிலானால், மிகவும் வருந்தத்தக்கது.

ஒருவரோடு பேசிக் கொண்டிருக்கிறோம்.

நாம் செய்தது தவறு என்று ஒருவர் வாதாடுகிறார்.

அப்போது நாம் பேசுபவை ஒருவரைக் காயப்படுத்தலாம்

அல்லது

வெறுப்பை உருவாக்கலாம்.

பின்னர்

உங்களை பிடிக்கவில்லை என்று கூறலாம்.

அதையே ஒருவர் வேறு ஒரு இடத்தில்

அவரால் நான் அவர்களை வெறுக்கிறேன் என்பதற்கு

யாரும் உடந்தையாக முடியாது.

அது அவரது மனதில் உதித்த கருத்தாக இருக்கலாம்.

ஒரு தமிழன் திருடன் என்றால்

முழு தமிழினத்தையே திருடர்கள் என்பது போல...................?

வேறு கருத்துகள் இல்லை.

  • தொடங்கியவர்

ஒவ்வொரு மனிதனின் தனி முயற்சியும்தான்

ஒரு சமுதாயத்தின் வெற்றியாகிறது.

வானோலியை கண்டுபிடித்தவன்

அவனுக்குள் அதை வைத்திருந்தால்

இன்றைய நிலை என்ன?

அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபடுவதற்கு முன்

அடுத்தவனை அடிமையாக்கா நிலை

நமக்குள் ஏற்பட வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மனிதனின் தனி முயற்சியும்தான்

ஒரு சமுதாயத்தின் வெற்றியாகிறது.

வானோலியை கண்டுபிடித்தவன்

அவனுக்குள் அதை வைத்திருந்தால்

இன்றைய நிலை என்ன?

அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபடுவதற்கு முன்

அடுத்தவனை அடிமையாக்கா நிலை

நமக்குள் ஏற்பட வேண்டும்?

அடிமைத்தனம் என்று பேசும் போதே அடிமையாக்கும் எண்ணமும் வெளிப்படுகிறது.

மக்கள் இரண்டு வகையில் அடிமைப்படுத்தப்படுகின்றனர். ஒன்று..நேரடியான அடக்குமுறைகள் மூலம். இரண்டு மக்கள் இலகுவாக உணர முடியாத அளவுக்கு நகர்த்தப்படும் தந்திரமான செயற்பாடுகள் மூலம். முதலாவதில் இருந்து மக்களை விழிப்புணர்த்துவது இலகு. இரண்டாவது கடினமானது. குறிப்பாக இந்த இரண்டு அணுகுமுறைகளையும் கிட்லர் கடைப்பிடித்தார். முதலாவது யூதர்களுக்கு எதிரா இரண்டாவது ஜேர்மனியர்களுக்கு எதிராக...! ஆக எங்கள் மக்களையும் அவர்களின் விடுதலை உணர்வையும் அடிமைப்படுத்த என்னென்னெ வழிகள் எங்கெங்கு இருந்து முளைக்குமோ யார் அறிவார்..??!

வானலையைக் கண்டிபிடித்தவன் இப்படி எல்லாம் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எனது ஆக்கத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றிருந்தால் இன்று..பல வானலைகள் வானில் தவிழ்ந்திருக்கவும் முடியாது...! :huh:

வாழ்த்துக்கள் அண்ணா....

அஜீவன்,

தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா.........

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் அண்ணா.........

அஜீவன்,

தங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள் அஜீவன் அண்ணா

வாழ்த்துக்கள் அண்ணா....

வாசகன்

சோழன்

ஈழவன்

SUNDHAL

உங்கள் அனைவரது வாழ்த்துகளுக்கும்

நன்றி.............

Edited by AJeevan

  • தொடங்கியவர்

jeevan4u

வானோலியை நேரடியாக கேட்பதற்கு

கீழே உள்ள குறியீட்டின் மேல் அழுத்துங்கள்.

jeevan4u.jpg

நன்றி:தமிழமுதம்

  • தொடங்கியவர்

அன்பு நெஞ்சங்களே!

அடுத்த

ஜீவன்4யூ

வானோலி நிகழ்ச்சி

சுவிஸிலிருந்து

21.01.2007

சுவிஸ் நேரம்

மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை

ஒலிக்க இருக்கிறது.

மறு ஒலிபரப்பாக

22.01.2007 ஐரோப்பிய நேரம் மாலை 8.00மணி முதல் 9.00 மணி வரை

ஐரோப்பிய தமிழ் வானோலி

TAMILRADIO EU

Hotbird 13° , 11013 H , 27500

செய்மதியூடாக

ஊடாக ஒலிக்கும்.

உங்கள் ஆக்கங்களை

jeevan4you@gmail.com

எனும் மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள்!

நன்றி!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

21.01.2007

ஜீவன்4யூ

நிகழ்ச்சியை

தரவிறக்கம் செய்து கேட்பதற்கு:-

http://www.megaupload.com/?d=O1EY13U5

மேலதிக விபரங்களுக்கு:-

http://ajeevan.blogspot.com/

வாழ்த்துக்கள் அஜீவன்

  • தொடங்கியவர்

நன்றி சின்னக்குட்டி

புதிய நேர மாற்றங்கள் மற்றும் விபரங்கள்:

http://jeevan4uswissradio.blogspot.com/

நீங்கள் தந்த இணைப்பில் தரவிறக்கி கேட்டேன் நல்லா இருந்தது மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேட்டேன்.நன்றாக இருக்கின்றது.மேன்மேலும் உயர அடியேனின் வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.