Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தால் நாடாளுமன்றில் மூண்டது சர்ச்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தால் நாடாளுமன்றில் மூண்டது சர்ச்சை!
தமிழீழத்தால் நாடாளுமன்றில் மூண்டது சர்ச்சை!
தமிழீழத்தையும் உலகத் தமிழர் பேரவையையும் ஒப்பிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எழுப்பிய கேள்வியால் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவுக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டது. 

நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல் ஆகியன முடிவடைந்த பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது. இதன்போது உலகத் தமிழர் பேரவை தொடர்பிலும் அதன் தலைவர் சம்பந்தமாகவும் ஏழு வினாக்களை வெளிவிவகார அமைச்சரிடம் உதய கம்மன்பில தொடுத்திருந்தார். இவற்றுக்கு பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா பதில்களை வழங்கினார். 

பிரதியமைச்சர் இவ்வாறு பதில்களை வழங்கிய பின்னர் இடையீட்டுக் கேள்விகளை எழுப்புவதற்குத் தயாரானார் உதய கம்மன்பில. "சபாநாயகரே, நான் தொடுத்திருந்த வினாக்களுக்கு அமைச்சர் உரிய பதில்களை வழங்கவில்லை. 'வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு' என்பது போல்தான் பதிலளித்துள்ளார் என்று சிரித்தபடியே கூறினார் கம்மன்பில. 

இதனால் ஆத்திரமடைந்தார் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா. "கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை பற்றியே இவர் கேட்டுள்ளார். தமிழீழம் பற்றி கேட்கவில்லை. அதுபற்றி எதுவும் இங்கு குறிப்பிடப்படவும் இல்லை. 

எனவே, இல்லாத விடயமொன்றுக்கு எப்படி பதிலளிக்கமுடியும்'' என்று ஹர்ஷ வாதிட்டார். இந்நிலையில், மீண்டும் குறுக்கீடு செய்த கம்மன்பில, "பிரதியமைச்சரே, முதலில் கேள்வியை தெளிவாக வாசித்துவிட்டு தர்க்கங்களை முன்வையுங்கள்'' என்றார். "உலகத் தமிழர் பேரவை என்றுதான் வினா ஆரம்பமாகிறது.

ஆனால், இவர் தமிழீழம் என்று கேள்வியை துவங்குகிறார். அவ்வாறு எதுவும் இங்கு இல்லை. இல்லாதவொன்றுக்கு எப்படி பதிலளிக்க முடியும்'' என்று பதிலடி கொடுத்தார் ஹர்ஷ டி சில்வா. "சபாநாயகரே பிரதியமைச்சர் தெளிவின்றி கதைக்கிறார். "ஆ' பகுதியின் நான் எழுப்பியுள்ள கேள்விக்குப் பதிலளிக்காது வேறெதையோ கூறுகின்றார்'' என்றார் கம்மன்பில. 

இதற்குப் பதிலளித்த பிரதியமைச்சர் அ, ஆ, இ, ஈ என்ற கிரமத்தின்படிதான் கேள்வி தொடுக்கவேண்டும் என விளக்கமளித்தார். ஆனாலும், ஓயவில்லை கம்மன்பில. தான் எழுப்பிய கேள்விக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' என பதிலளிக்குமாறு ஒற்றைக்காலில் நின்றார். இதன்போது குறுக்கீடு செய்த சபாநாயகர், "நீங்கள் இருவருமே கற்றறிந்தவர்கள். எனவே, விடயம் அறிந்து செயற்படுங்கள்'' என்று ஆலோசனை வழங்கினார். எனினும், சர்ச்சை ஓயவில்லை. 

அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டார் என அடித்துக் கூறினார் ஹர்ஷ டி சில்வா. தெளிவில்லையென்றால் செவிகளை சுத்தம் செய்யுமாறு கம்மன்பிலவுக்கு அவர் கிண்டலடித்தார். மறுபுறத்தில் தனது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என்று தொடர்ச்சியாக வாதிட்டார் கம்மன்பில. இதனால் சொற்போர் நீடித்தது. 

சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவுக்கும் தலையிடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பிரதியமைச்சர் வழங்கும் பதிலை ஏற்கவேண்டும். அதை சவாலுக்குட்படுத்த முடியாது'' என்றார் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல. எனினும், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை உதய கம்மன்பில. கேட்கப்படுவது ஒன்று. சொல்லப்படுவது ஒன்றாகவே இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். சர்ச்சை நீடித்ததால், மூன்றாவது இடையீட்டுக் கேள்வியை எழுப்புமாறு உதய கம்மன்பில எம்.பிக்கு பணிப்புரை விடுத்தார் சபாநாயகர். 

சபாநாயகரே, நான் இன்னும் ஓர் இடையீட்டுக் கேள்வியைக்கூட எழுப்பவில்லை. ஆனால், கேட்கப்பட்டதாக நீங்கள் சொல்கின்றீர்கள். இதை ஏற்கமுடியாது. உங்களின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இடையீட்டுக் கேள்விகள் கேட்கப்படுவதை நான் நிறுத்திக்கொள்கிறேன்'' எனக் கூறிவிட்டு அமர்ந்தார் கம்மன்பில. 

http://onlineuthayan.com/news/8677

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.