Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும்! - அமைச்சர் சரத் அமுனுகம

Featured Replies

மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணையின் போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வரும் என்று கருத்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

'உள்ளக விசாரணையில் இராணுவ வீரர்கள் பற்றிய விவாதம் ஆரம்பிக்கும் போது பல திடுக்கிடும் தகவல்களை மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா முன்வைக்கவுள்ளார். இதன்போது இராணுவ வீரர்களை சுடுவதற்காக துப்பாக்கி தாரிகளுக்கு பணம் கொடுத்தது யார்? எல்.ரீ.ரீ.ஈ.னருடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்? எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு பணம் வழங்கியது யார்? அதில் எல்.ரீ.ரீ.ஈ.யினர் கொள்வனவு செய்த துப்பாக்கியின் வகைகள்? உள்ளிட்ட பல தகவல்கள் குறுகிய காலத்திற்குள் அடுத்தது வெளிரவுள்ளதால் உண்மையை தெரிந்து கொள்வதற்காக பொறுமையுடன் காத்திருக்குமாறும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேஜர் ஜெனரல் சிறையில் அடைக்கப்பட்டார். பாராளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டார். அவரது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அவருடைய காணி பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கை வரலாற்றில் மன்னன் துட்டகைமுனுவிற்கு பிறகு வந்த சிறந்த இராணவு வீரருக்கு அவமானத்தை தேடித்தந்தமைக்காக நான் உள்ளிட்ட அனைவரும் ஒப்புதல் வாக்குமூலம் வழங்க வேண்டும். இதற்காக நாம் வெட்கி தலைகுனிவதாகவும் அமைச்சர் சரத் அமனுகம தெரிவித்தார்.

ஒரு சிறந்த இராணுவ வீருக்கு அவமானத்தை தேடித்தந்த எவருக்கும் ஏனைய இராணுவ வீரர்களின் நலன் குறித்து பேச அதிகாரமோ உரிமையோ இல்லை. மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக்காவை சிறையில் வைப்பதற்கு பதிலாக கடற்படை தளத்தில் தடுத்து வைக்குமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். அதற்காக நாம் அவருக்கு நன்றிகளை கூற வேண்டும். இருப்பினும் அந்த வேண்டுதலும் பின்னர் நிராகரிக்கப்பட்டது. கடந்த காலத்தில் இதுபோன்று இடம்பெற்ற பல விடயங்களுக்கு நியாயம் தேடப்படும். இலங்கை வந்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் உள்நாட்டின் இஷ்டப்படியே விசாரணைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளார். இது அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் முன்னெடுத்து வந்த வெளிநாட்டுக் கொள்கை முற்றிலும் தோல்வி கண்டிருந்தது. இதனால் சர்வதேசத்தில் இலங்கை ஒதுக்கப்பட்டதொரு நிலையை அடைந்தது. இதனையே ஆங்கிலத்தில் ‘பறயா ஸ்டேட்’ என்று அழைப்பார்கள். இதன் காரணமாக நாம் ஜி.எஸ்.பி. பிளஸ் போன்ற சலுகைகளை இழக்க நேரிட்டது. ஆனால் தற்போது இந்நிலைமை மாறியுள்ளது. ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் பொருளாதாரத்தில் பாரிய திருப்புமுனையாக அமையுமெனவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

http://www.whathits.com/seithy

 
  
 
   Bookmark and Share Seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.