Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடைந்த நிலாக்கள் - பாகம் 3

Featured Replies

உடைந்த நிலாக்கள் பாகம் 3 - பா. விஜய் எழுதிய கவிதை

தொகுப்பை தொடராய் தருகின்றேன் படித்து மகிழுங்கள்)

ரோமா புரியின் காதல் தேவதை....தொடர் 1

இந்த புமியின் வரலாற்றில் இருக்கும்

நெருப்பும். முதுகில் இருக்கும்

நிலச்சரிவுகளும்

தோளில் இருக்கும் மலைகளும்...

கைய்யில் இருக்கும் மலர்களும்...

யாருடைய வாழ்க்கையாவது

கதையாய் - பாடலாய்க் காற்றிடம்

சொல்லி கொண்டேதான் இருக்கும்.

ஓர் இலையின் நுனியில் பனி

சருக்கி விழும் நேரத்திற்க்குள்

முடிந்து போன

சரித்திரங்களும் உண்டு.

விண்கற்களின் வயதை போலக்

காலம் கடந்து வாழும்

வாழ்விலும் உண்டு !

ஓர் உலக

பேரழகியின் உயிரோட்டமான

உணர்சி குவியல் இது !

""கிளியோ பாட்ரா ""

சொன்னால்

உதடுகளை

தித்திக்க வைக்கும்

தேன் பெயர் !

(தொடரும்

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பு கவிதைக்கு நன்றி

  • தொடங்கியவர்

தொடர் -2.....

கிளியோ பட்ரா என்பவள் ஓர்

அழகியல் மட்டுமல்ல !

அவளொரு 36 ஆண்டுகால

ரோம புரி அரசியல்....

இந்த கிளியோ பாட்ரா என்ற

அழகுப்புயல் நைல் நதிக் கரையிலிருந்து

மையம் கொள்ள ஆரம்பித்து

எத்தனையோ கடல்கள்

கொள்ளையடித்திருக்கிறது.

கிளியோ பாட்ரா என்ற பேரழகி

வெறும் சதை அல்ல! - ஒரு

சரித்திரத்தின் விதை !

கிளியோ பாட்ராவின்

மேனியை இரசிக்க

தயாராகும் அளவுக்கு

அவள் வாழ்க்கையை

இரசிக்கத் தயாராவதில்

சில சிரமங்கள் உண்டு !

முக்கிய சில கசப்புக்களை

ஜீரணிக்க வேண்டும் !

கிளியோ பாட்ராவின்

வெல்வெட் வாழ்க்கைக்குள்

பிரவேசிக்க முன் -அவளின் முன்னணி

பின்னணி பற்றி ஒரு விபரச் சுருக்கம் !

கிளயோ பாட்ரா எகிப்து

நாட்டின் ராணி என்றாலும்

எகிப்து பிரஜை அல்ல !

அவள் மற்றும் அவள் முன்னோர்கள்

""மெக்கடியன"" ; இனத்தைச் சார்ந்தவர்கள் !

முதலாம் பிடோலமி

என்ற பேரரசனால்

சுவிகரிக்கப் பட்டதுதான்

கிளியோ பாட்ராவின் பரம்பரை !

எகிப்து கலாச்சாரப்படி

மன்னராளும் தகுதியுடையவர்

தன் சொந்த சகோதர

சகோதரிகளிடையே

திருமண ஒப்பந்தங்கள் செய்யலாம் !

(தொடரும்...)

  • தொடங்கியவர்

தொடர் -3

அதன்படி !

பன்னிரண்டாம பிடோலமிருக்கும்

அவர் சகோதரியான

ஜந்தாம் கிளயோபாட்ராவிற்கும்

மணம் நிகழ்ந்தது !

ஏழாம் பிடோலமியின் இன்னொரு பெயர் அயுலடஸ்

இவர் ஒரு மிகச்சிறந்த புல்லாங்குழல் மேதை

இவர் மீட்டிய குழலில் பிறந்த ராகங்கள் ஜந்து !

ஆறாம் கிளயோபாட்ரா

ஏழாம் கிளியோபாட்ரா

எட்டாம் கிளியோபாட்ரா

பதின்மூன்றாம் பிடோலமி

பதினான்காம் பிடோலமி !

கி.மு- 69 எகிப்து தலைநகர்

அலெக்சாண்டிரியாவில் தான்

இந்த பிரசவக்கள் நிகழ்ந்தன !

எகிப்தின் அப்போதைய பேரரசன்

பன்னிரண்டாம் பிடோலமியின்

ஆட்சி !

ஒரு இருண்ட நாட்களாய்

வர்ணிக்கின்றன

நைல் நதி ஆய்வுகள் !

இருட்டை அவ்வப்போது கிழித்து

புரட்சியின் வெளிச்ச ஊசிகள்

அப்போது அலக்ஸ்சாண்டிரியாவில் இருந்து

ஆடிப்போனான் பன்னிரண்டாம் பிடோலமி!

அவனோடு மகள் ஆறாம் கிளியோபாட்ராவும்

வேறு தேசத்திற்குள் வேர் பெயர்ந்தாள் !

அங்கே ஆர்சேலஸ் என்ற பிரபுவுடன்

திருமணமாகி மூன்றாண்டுகளில் முற்றுப்புள்ளி ஆனாள்

ஆறாம் கிளியோபாட்ரா !

கி.மு - 51ல்

பன்னிரெண்டாம்

பிடோலமி அன்னிய மண்ணில்

அனாதைச்

சவமாய்க் கிடக்க வேண்டிய காலம் தோன்றியது !

இப்போது

எகிப்து அரசாங்கத்தில்

குருமார்களின்

மந்திர ஓதுதல்கள் ஓய்ந்து

எகிப்தின் ராணியாகும் நேரம்

ஏழாம் கிளியோபாட்ராவுக்கு வாய்த்தது !

தொடரும்.......

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்- 4

[color="#006400"]ஆனால் பதவியேற வேண்டுமெனின்

சகோதர திருமணம் அவசியம்

இந்த சகோதர திருமணம்

ஏழாம் கிளியோபாட்ராவிற்கு

எதுக்களிப்பாக இருந்தது !

சுமார் 17-18 வயதில்

ஏழாம் கிளியோ பாட்ராவிற்கும்

பதின்மூன்றாம் பிடோலமிக்கும்

அலெக்சாண்டிரியா

அரண்மணையில் திருமணம் தீர்ந்தது !

ஒரு சம்பிரதாயமாக...

ஒரு மூட நம்பிக்கையாக..இதை ஏற்றாள்

ஏழாம் கிளியோ பாட்ரா !

அப்போது பதின்மூன்றாம் பிடோலமிக்கு வயது

பத்து மட்டுமே... !

மூன்றாண்டு கால ஆட்சி

புல்வெளி பயணமாய் கழிந்தது !

ஏழாம் கிளியோ பாட்ராவின் தங்கை

எட்டாம் கிளியோபாட்ரா

அர்சினோ என்று அழைக்கப்பட்டாள் !

பதினான்காம் பிடோலமி அப்போது

பூப்பந்து விளையாடும் பாலகன் !

இந்த இடத்தில் இருந்து வாசகர்கள் தெளிவிற்காக...

ஜந்தாம் -ஆறாம் -ஏழாம் கிளியோபாட்ராக்களையும்

பிடோலமிக்களையும் விட்டுவிட்டு அவர்களின்

மறுபெயர்களினால் அழைக்க ஆரம்பிப்போம்....

இங்கே ஏழாம் கிளியோ பாட்ரா தான்

உலகின் கோடானா கோடி ஆண்களின்

கனவு தேவதை ! - கற்பனை போதிமரம்

கட்டழகு கடல் கவிதை மண்டலம்

களவியல் பிரபஞ்சம் காதல் கட்டில்

கதையின் நாயகி.....[/color]

நாளை தொடரும்...

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடைந்த நிலாக்கள் கவிதைதொகுப்பு நானும் வாசித்து ஒஇருக்கிறன் இணைப்புக்கு நன்றி வன்னிமைந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது நீக்கப்பட்டுள்ளது

Edited by iniyaval

  • தொடங்கியவர்

நன்றி தமிழன்பு.....

அப்படியா நல்லது...ஆனால் இங்கே சுகோதரங்கள் தீரமண முடிப்பதை

பார்த்வுடன் கொஞ்சம் வியந்தே போனேன்...

இப்படி இன்னும் எத்தனை உள்ளதோ...???

மிக்க நன்றி வந்து கலந்து பதில் தந்தமைக்கு...இனியவள்

  • தொடங்கியவர்

தொடர் - 5

இந்த ஏழாம் கிளியோ பாட்ராவே !

இன்று நாம் வியக்கும் உலகப் பேரழகி கிளியோபாட்ரா

கி.பி. 48 !

அரசியல் சக்கரம் பொதுவாக

சுற்றிய நாட்களை விட

அலைக்கழிக்கப்பட்ட நாட்களே அதிகம் !

கலவரம் என்பது வன்முறையாளர்களால்

ஏற்படும் ஒன்று மட்டுமல்ல !

சொந்த இரத்த சம்பந்த முடையவர்களாலும்

ஏற்படுத்தப்படும் ஒன்று தான் !

கிளியோபாட்ரவின் கணவனும் சகோதரனுமான

பதின்முன்றாம் பிடோலமியின் செவியில்

சில மதகுருக்கள் வழக்கம் போல்

பக்திக் கோப்பையில் விஷ சாரயம்

பாசனம் செய்தனர் !

கிளியோபாட்ராவின் அலைக்சாண்டிரிய ஆட்சிக்குள்

பிரிவினை பாம்புகள் படமெடுத்தன !

ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில்

கிளியோபாட்ராவின் அழகும் - அறிவும்

மூவாயிரம் மடங்கு கூடியிருந்தது !

கொஞ்சம் கொஞ்சமாய் கிளியோ பாட்ராவின்

சிம்மாசனக் கால்கள் ஆட்டம் கண்டன

பதின்மூன்றாம் பிடோலமியின் ஆட்சி வெறி

கிளியோ பாட்ராவின் கழுத்தை குறிவைத்தது !

கிளியோ பாட்ரா உடனே ஒரு முடிவெடுத்தாள் !

பதின்மூன்றாம் பிடோலமி உயிருடன் உள்ளவரை

அலைக்சாண்டிரியாவிற்குள் பிரவேசிப்பதில்லை என்று !

கிளியோ பாட்ராவின் நவநாகரிகக் கப்பல் ஒன்று

சிரியாவிற்குப் பயணமானது !

தொடரும்....

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

[color="#00008

தொடர்...

ஆனாலும் பதின்மூன்றம் பிடோலமி

ஒரு சம்பங்குப் படையை

கிளியோ பாட்ராவின் தலையை

எடுத்துவர அனுப்பினான் !

காலம் நடந்தது !

அதன் காலடியில் எப்போதும் போல்

இப்போதும்

சிம்மாசனங்கள் நசுங்கின !

ஆம் ! பதின்மூன்றம் பிடோலமியின்

பதிவியேற்ப்பு முடிந்ததும்

எகிப்து எல்லையில் ஒரு மாபெரும்

புயல் பிரவேசித்தது !

அது சாதாரண புயல் அல்ல !

மாமன்னன் - பேரரசன் - உலகசக்கரவர்த்தி

வீரத்தலைவன் என்று வரலாறு புத்தூவும்

சீசரின் ரோமபுரி புயல் அது !

எல்லா வெற்றிகளும்

சிகரங்கள் நோக்கி

ஆனால் சிகரங்களும்

பாதாளங்களை நோக்கி...

எப்போது யாருடைய காPடம்

கீழே உருண்டு விழும் என்பதும் -

உருண்டு விழும் கீரிடம் ஒரு

தெருவாசியின் தலையில்

மாட்டி கொள்ளும் என்பதும்

சரித்திரத்தின் புரியாத சித்தாந்தம் !

வெற்றிகளும் நிரந்தரமல்ல..

தோல்விகளும் நிரந்தரமல்ல...

இரண்டிற்கும் இடையே ஆன

போராட்டம் மட்டும் நிரந்தரம்...!

தொடரும்....

  • தொடங்கியவர்

எகிப்து தலைநகரில்

ஆயிரம் ஆயிரம் வீரர்கள் முன்னிலையில்

டாம்பீகரமான வீதிகளில் எகிப்து மன்னனாய்த்

தன்னை அறிவித்துகொண்டு உலா வந்த

பதின்மூன்றாம் பிடலோமியின் ஊர்வலப் புக்கள்

உதிர்வதற்குள்...

அலைக்சாண்டிரியாவின் எல்லை பகுதி முதல்

எல்லாப் பகுதிகளிலும் அபாய அறிவிப்புக்கள்

அலறின...

மக்கள் - இமைகளில் தீப்பிடித்து போல

திணறினார்கள் !

அலெக்சாண்டிரியாவின் படை

ஆங்காங்கே திரட்டப்பட்டது .

அந்த பாலை வன காற்று

செஞ்சிவப்பாய்ச் சுருள்சுருளாய் வீசிக்கொண்டிருக்க...

தூரத்தே எரியும் அரண்மனை வீதிகளில்

அலறல் சத்தமும் - ரத்தச் சகதியின் வாசனையும்

காற்றில் மிதந்தன !

அரசியல் என்பதே

ஒன்றை அழித்தலில் இருந்து

ஒன்றை உருவாக்குதல்தானே !

ஒரு பேரரசனின் புன்னகை என்பது

பல்லாயிரம் படை வீரர்களின்

இல்லத்து கண்ணீர்தானே !

எகிப்து மண்ணின் நிறத்தையே

வானமும் பிரதிபலித்தது!

அலெக்சாண்டிரியாவின் எல்லையில்

ஒட்டகங்கள் குவிந்துகிடக்க

அந்த கந்தக வெய்யிலையும் பொருட்படுத்தாது

ஒரு சிவந்த விழி இமையடித்து நின்றிருந்தது !

தொடரும்...

  • தொடங்கியவர்

தொடர்....-8

சுற்றிலும் ஒரு சமுத்திரமாய்ப்

படைவீரர்களின் கூடாரங்களும் - ஆயுதங்களும்

குவிந்து கிடக்கின்றன ...!!

யுத்தம் மூன்று வகை !

சுற்றி வளைவது ஒன்று !

சுற்றாமல் ஊடுருவுவது ஒன்று !

உள்நாட்டுச் சதியை உபயோகித்துக் கொள்வதென்று !

இப்போது அலெக்சாண்டிரியாவில் நிகழ்வது

மூன்றாம் வகை யுத்தம் என்று ஒரு

புயல் குரல் பிரசங்கம் பண்ணி கொண்டிருந்தது !

ஒரு வாளின் நீண்ட மெல்லிய

கூர்மையான புன்னகையைச்

சிதறவிட்ட சீசர் தன் பேச்சை

ஒரு அடைப்புக்குறிக்குள் அடைத்துவிட்டுத்

தூரத்தை அளந்தார் !

அங்கே... வெகு தொலைவில்

இரண்டு புள்ளிகள் விரைந்து கொண்டிருந்தன !

பார்க்கும் இடத்தை எல்லாம்

பாதங்கள் மிதித்து கொண்டு

சீசர் ஆரம்பித்த யுத்தப் பயணம்

எகிப்து எல்லையில் இப்போது இருக்கிறது !

உலகம் மூன்று பங்கு நீரும்

ஒரு பங்கு நிலமும் கொண்டது !

அந்த ஒரு பங்கு நிலத்தில்

மூன்று பங்கு சீசருக்கு அடிமையிலிருந்த

காலம் அது !

தூரத்தில் இருந்த புள்ளிகள்

இரு குதிரைகளாகி நெருங்கின !

குதிரைகளை ஓடோடிப் பிடித்துக் கொண்டனர் சிலர் !

தொடரும்.....

  • தொடங்கியவர்

இறங்கியவருள் ஒருவன்

ஒரு பெரிய சூறாவளியின் உருவில் வந்து

ஒரு குறும் புயலாய் சீசரின் முன்

மண்டியிட்டு வணங்கி கொண்டான்

அவன் முகத்தில் எவ்வித

உணர்ச்சியும் இல்லை !!

உணர்சி வசப்படுபவனை விட

உணர்ச்சி வசப்படுபவனே வீரன் !

சீசரின் கண்கள் எதிரே வணங்கிய

வீரனின் விழிகளை வாசித்தது

விஷயத்தைக் கிரகித்து -ஒரு

விஷம சிரிப்பை உதிர்த்தது !

சீசரின் புருவங்கள் உயர்ந்து வளைந்து

என்ன? என்று கேள்வியை தள்ளியது !

வணங்கிய வீரன் எழுந்து ..

உலகப் பேரரசர் சீசருக்கு வணக்கம் !

தங்கள் கட்டளைப்படி

வீழந்தது எகிப்து சாம்ராஜ்யம்""

கடகடவென மின்னல் இடியாய்

கர்ஜித்து சிரித்த சீசர்

உதடுகளை திறந்து

எனக்கு தெரியும் ஆன்டனி என்றார் !

பதின்மூன்றாம்

பிடலோமி படிந்து விட்டான் !

அலைக்சாண்டிரியாவினல் உள்நாட்டு கலவரம்

அலெக்சாண்டிரிய படைகள் சிதறிவிட்டன !

என்றான் மற்ரொரு வீரன் !

தன் முன்னே நின்ற

முப்பதிற்கும் மேற்பட்ட தளபதிகளை

உற்று நோட்டமிட்டு வந்த சீசர்

தன் கைகளை உயாத்தி ....

தொடரும்....

  • தொடங்கியவர்

தொடர்...10

ஆன்டானி !

நம்படைகளை அலெக்சாண்டிரியாவின்

வீதிகளில் உல்லாசத்திற்கு அழைத்துச்

செல்லுங்கள் ! என்றார் கம்பீரமாய் .

அலெக்சாண்டிரியாவின் வீதிகளும்

மாளிகைகளும் ஒரு சில நாழிகைகளில்

அல்லோலப்பட்டன !

ராணுவம் ஒன்று அன்னிய தேசத்தினுள்

வெற்றி வாகோடு உள்ளே நுழைந்ததும்

செய்யும் முதல் கடமை !

கலவரத்தை கட்டுபடுத்துவது !

ஆம் !

கன்னிப்பெண்கள் கற்பைக் காப்பாற்ற

கத்திக் கலவரம் செய்வார்கள் !

அந்த கலவரத்தை கட்டுபடுத்தும்!

அடுத்துப்

போராட்டத்தை தடுத்து அமைதி ஏற்படுத்துவது !

அதாவது. சீரழிக்கப்பட்ட குடும்பங்களிலில் இருந்து

சீறி எழும் இளைஞர்களை நசுக்கி

அiதி ஏற்படுத்தும் !

பிறகு .

கட்டு பாட்டுக்குள் வைத்திருப்பது !

இது என்னவெனில்

திறக்கப்பட்ட உடைக்கப்பட்ட மதுக்கோப்பைகளில்

நீந்தி நித்திலம் ஊறிக்கிடந்தும்

தங்கள் சுயநினவைக் கட்டுபாட்டுக்குள்

வைத்து கொள்வது!

இவை அணைத்தும் நடந்தேறின...

படு அமர்களமாய்...துரிதமாய்...துல்ல

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்... - 11

பேரரசர் சீசரின் புருவ உயர்வைக் கண்டு

தலைமைத் தளபதி ஆன்டனி அவர்

காதுகளில் கிசு கிசுத்தார்...!

இந்த அரண்மனை நம்

ரோமபுரிக்கு இணையாகவும்

சில இடங்களில் அதற்கு மிகையாகவும்

உள்ளதல்லவா?

முப்பதிற்கு மேற்பட்ட தளபதிகளில் சகிதம்

அரச சபைக்குள் பிரவேசித்த சீசர்

கொஞ்சம் மிரண்டுதான் போனார் !

அரச சபையின் அலங்காரம்

ரோமபுரியின் விட இரண்டு மடங்கு

கூடுதலாய் இருந்தது !

இதுதான் உலகிப் பேரழகி

கிளியோ பாட்ராவின் அரண்மனை.

ஆன்டனியின் இந்த வாசகம்

சீசரை சட்டென நிற்க வைத்து !

பின்தொடர்ந்தவர்கள்

ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர்...

சிறிது நேரத்தில் ராஜ்ஜிய

பரிபாலன்கள் அடங்கிய

வரைபடங்களும் - விபரக் குறிப்புகளும்

மேஜைக்கு வந்தன....!

அப்போது தான் ஒரு செய்தி வந்தது...!

பதின்மூன்றாம் பிடலோமி பேரரசர் சீசரைப்

பேட்டி காண வந்திருப்பதாக....

சீசர் கடுமையான முகத்தை

இனிமையாக்கி கொண்டர்....!

தொடரும்.....12

  • தொடங்கியவர்

தொடர் -13

உள்ளே வந்த பதின்மூன்றாம் பிடோலமியும்

சில மத குருக்களும் வணங்கினார்கள் !

பதின்மூன்றாம் பிடோலமி

ஒரு ஒட்டகத் தோலால் ஆன

பையை நடுவில் வைத்து....

பேரரசருக்கு என் பணிவும்

என் பரிசும் என்றான் !

தளபதிகளில் ஒருவனான மெடிகோலஸ்

அந்த பையை திறந்தான்!

அவன் முகத்தில் கனமான அதிர்வு!

உள்ளே உதிரம் தோய்ந்த ஒரு

மனித தலை!

பதின்மூன்றாம் பிடோலமி சொன்னான்!

Nhரரசே! இது என் சகோதரி

உலகப் பேரழகி என்று வர்ணிக்கப்படும்

கிளியோ பாட்ரவினுடையது !

சீசர் முகம் இனிமையிலிருந்து

இருட்டுக்கு போனது....

ஒரு நண்பன்

சக நண்பனைச் சந்திக்கும் சந்திப்பு

உணர்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும்!

ஒரு தலைவனும்

இன்னொரு தலைவனும் சந்திக்கும் சந்திப்பு

அறிவு புர்வமான சந்திப்பாக இருக்கும்.

ஓர் எதரியும்

சம எதிரியும் சந்திக்கும் சந்திப்பு

பதட்டமான சந்திப்பாக இருக்கும்....!

தொடரும் 14

  • தொடங்கியவர்

தொடர்... -14

ஆனால்

சீசருக்கும்- பதின்மூன்றாம் பிடோலமிக்கும்

இடையே ஆன சந்திப்பு

பதட்டமானதாக இல்லை

ஏனெனில்

எதிரி சமமான எதிரியாக இல்லை!

அப்போதும்

அந்த அலெக்சாண்டிரியா

அரண்மணையின்

அரசசபை பதட்டமடைய காரணம்

பதின்மூன்றாம் பிடொலமியின்

பரிசாக வந்த கிளியோ பாட்ராவின் தலையே !

தளபதி மெடிகோலஸின் அதிர்ச்சி

அத்தனை தளபதிகள் முகத்திற்கு

குடி பெயர்ந்தது !

சந்தனையின் பாதளத்தில்

சீசரின் கண்கள்!

ஒரு சில கண்கள்

கனமானதாகக் கடந்தது !

மெல்லத் தலமைத் தளபதி ஆன்டானியின்

அதிகாரக் குரல் வந்தது !

பதின்மூன்றாம் பிடோலமியைக்

கைது செய்யுங்கள்.

உத்தரவு உதட்டை விட்டு

உதிர்ந்ததும்

பிடோலமியின் கைகள்

பிணைக்கப்பட்டன ...

பிடோலமியோடு வவந்திருந்த

மதகுரு போத்தினஸ் என்ற கிழம்

மமதை வீசியது !

தொடரும்...15

  • தொடங்கியவர்

தொடர்... - 15

கிளியோபாட்ராவின் தலையைப்

பரிசாகத் தந்ததற்குச்

சிம்மாசனமா?

சிறைவாசமா..??

ஒரு மேகம் ஒரு மேகத்தைக்

கடந்து செல்லும் நேரத்திற்கு பின்

ஆன்டனி பேசினான்.

பிடோலமி கைதுக்குக் காரணம்

உலக பேரரசர் சீசரை

ஏமாற்ற முயன்றதற்காக....''

சபை கலகலத்தது!

பிடோலமியின் கைகள் இலேசாய்

வெல வெலத்தன !

மதகுருவின் நரம்புகள் உடனே

பொல பொலத்தன!

''புலிகளின் சீற்றங்களையே

புருவத்தால் அடக்கியவர் சீசர்!

எலிகளின் தந்திரம் எப்படி நிற்கும்...???

என்ற ஆன்டானி.

''இது உன்மையான

கிளியோ பாட்ராவின் தலையல்ல!

கிளியோ பாட்ராவின் தங்கையுடையதாக

இருக்கலாம்""

சபை முடிந்தது !

நிலா - நீலவிண்ணில்

நிர்வாணக் குளியல் நடந்து வந்தது !

இரவின் வெதுவெதுப்பில்

போர் ஆடைகள் இல்லாமல்

போதைக் களத்தில் இருந்தார் சீசர் !

தொடரும்... - 16

  • தொடங்கியவர்

தொடர்.- 16

சீசரின் மெய் காப்பாளன் மினார்

என்னும் ஊமையன்

சீசரின் நெஞ்சுக்கு

மூலிகை தடவி கொண்டிருந்தான் !

எப்படி ஆன்டனி?

அது கிளியோபாட்ராவின் தலை அல்ல

என்று கண்டுபிடித்தாய்?

கிளியோபாட்ராவை பற்றி

ஒரு நூலகமே இருக்கிறது பேரரசே!

ஒரு சில விசயங்கள்

நினைவில் உண்டு!

கிளியோ பாட்ரா ஒரு

கறுப்பான காந்த மங்கை!

அவள் கழுத்து நீண்டது

கூந்தல் குறுகியது!

இமை முடிகள் மினுமினுக்கும்!

உதட்டுக்கு நடுவே ஒரு

மெல்லிய பிளவு இருக்கும்!

இவையெல்லாம் அந்த தலையில் இல்லை""

சீசரின் சிரிப்பு சத்தத்தில்

சில மதுக் கோப்பைகள் சரிந்தன...

ஏது?

கிளியோபாட்ராவை பற்றி ஒரு

ஆராய்ச்சி நடந்திருக்கிறதா?''

ஒரு சில வினாடிகளில்

சில குறிப்பேடுகள் குவிந்தன!

எல்லாம் கிளியோபாட்ராவை குறித்தவை!

கிளியோ பாட்ராவிற்குப்

பதினான்கு தேசத்தின் மொழிகள் தெரியும்!

உலக வரைபடத்தை வரைய தெரியும்!

நாடுகளின் உட்பிரிவுகள் தெரியும்!

வான சாஸ்திரம் தெரியும்!

தொடரும்....17

((யம்மா...நம்பவே முடியல இம்புட்டு தெரியுமா...???

ஆமா நம்ம கொண்டலிசா ரைஸ்சுக்கு தெரியுமா....???))

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்...17

அழகியல் குறிப்புக்கள் தெரியும்!

கப்பல் படையை வழிநடத்த தெரியும்!

ஆவிகளுடன் உரையாடத் தெரியும்!

காம சூத்திரம் தெரியும்!

வாள் சண்டைகள் தெரியும்!

ஜோதிடக் கலை தெரியும்!

எதிராளியைப் பேசியே வளைக்கத் தெரியும்!

ஆட்சி செய்யத் தெரியும்!

ராஜதந்திரங்கள் மொத்தமும் தெரியும்!

கிளியோ பாட்ரா போன்ற பெண்

இதுவரை பிறந்ததில்லை!

இனி பிறக்கப் போவதுமில்லை!

கிளியோபாட்ரா

கட்டடக் கலைக் கற்றவள்!

நடனக் கலை பயின்றவள்!

இசைக் கலை தேர்ந்தவள்!

போர்க்கலை உணர்ந்தவள்!

நினைத்ததை அடைபவள்!

சீசரின் முகமே வியர்த்தது!

ஒரு பெண்ணுக்குள்

ஒரு பிரபஞ்சமா?

ஒரு மீனுக்குள்

ஒரு கடலா?

என்ன ஆச்சரியம்?

ஒரு வாலிப விருந்து மேஜையில்

அரசியல் அறிவன் வாசமா?

எப்படிப்பட்டவள் அவள்? என்ற வினா

தேய்ந்து தேய்ந்து

பாய்ந்து பாய்ந்து

எப்படி இருப்பாள் அவள்? என்ற

வினாவில் நின்றது!

தொடர்...18

  • தொடங்கியவர்

தொடர்...- 18

எப்படி இருப்பாள் என்ற வினா

மங்கி மங்கி

வீங்கி வீங்கி

எங்கே இருப்பாள் என்ற வினாவில்

குத்திட்டது!

அழகான பெண்கள் உண்டு!

அறிவான பெண்கள் உண்டு!

அரசாளும் பெண்கள் உண்டு!

அலங்காரப் பெண்கள் உண்டு!

அத்தனையும் அத்தனையும் சேர்ந்த

ஒரே ஒரு பெண்ணா?

உலக பேரரசன் சீசரின் கண்கள்

சுவர்களையும் - விரிப்புகளையும்

வண்ண ஓவியங்களையும் -அங்கிருந்த

சிற்பஙகளையும் -கட்டட நுணுக்கங்களையும்

எகிப்து நாட்டின் வளர்சிகளையும்

படைப்பிரிவுகளின் நுணுக்கங்களையும் ஆராய்ந்து.

சிசர் ஒரு முடிவுக்கு வந்தார்!

கிளியோ பாட்ரா ஓர்

உலகி பேரழகி மட்டுமல்ல.

உலக பேரரசியும் கூடத்தான்.

அவரின் கற்ப்பனையைக் கலைத்தது

ஆன்டானியின் குரல்!

''பேரரசே! ஒரு விசேச செய்தி!

கிளியோ பாட்ராவின் அடிமை

நிகோலஸ் என்பவன்

ஒரு பரிசோடு வந்திருக்கிறான்''

அடிமை நிகோலஸ் வரவழைக்கப் பட்டான்!

அவன் கையில் ஒரு நீளமான

ரத்தினக் கம்பளம் ஒன்று சுருண்டிருக்கிறது!....

தொடரும்...-19

((ஒரு கையில் எப்படி அவளை தூக்கி வந்திருப்பான் இதை நம்ப முடியலயே....))

  • தொடங்கியவர்

தொடர்....- 19

அதன் மதிப்பு ஒரு

நகரத்தை வாங்கும் அளவு இருந்தது!

என்ன, என்ன? இது?

ஆன்டனி அச்சுறுத்தினான்!

இது பேரரசுக்கு

எங்கள் பேரரசி அனுப்பியது!

அரசர் தனிமையில் இதைத்

தரிசிக்க வேண்டும்மென்பது

கிளியோபாட்ராவின் கட்டளை''

கடைசி வார்த்தை அனவரையும்

காயப்படுத்தினாலும்

சீசர் சிரித்த காரணத்தால்

சின சிவப்பு ஒளிந்து கொண்டது!

சீசர் அனைவரையும்

வெளியே போகச் சொன்னார்!

படைவீரர்கள்- பிரபுக்கள்-தளபதிகள்

வெளியேற்றினர்!

ஆன்டனியும் - மெய்க்காப்பாளன் மினாரும்

இருந்தனர்!

''நீங்களும்...'' என்று

கதவை காட்டினார் சீசர்...''

இல்லை அரசே!

ரத்தினக் கம்பளத்தினுள் ஏதாவது

வி~ம் வாய்ந்த மலைபாம்பும் இருக்கலாம்!

கிளியோபாட்ரா ஒரு ராஜதந்திரி! அதனால்...''

என்று முடிப்பதற்குள்

சீசரின் கட்டளை கண்களால் பிறந்தது!

கதவு மூடப்பட்டது!

சீசர் ரத்தினக் கம்பளத்தின் சுருளை

நெருங்கினார்....!

தொடரும்...20

  • தொடங்கியவர்

தொடர்...- 20

ஓர் இலேசான எச்சரிக்கை உணர்வு

உந்தித் தள்ளத் தன் கைகத்தியை உருவி

அந்தக் கத்தியின் மூலம்

கம்பளத்தை பிரித்தார் !

மெதுவாக மிக

மெதுவாக!

கம்பளம் உருண்டு ஓடிப் பிரிந்தது!

உள்ளே!

கம்பளத்தின் உள்ளே

கிளியோபாட்ரா அனுப்பிய

ரத்தினக் கம்பளத்தின் உள்ளே

கிளியோ பாட்ராவே இருந்தள்!

மனோ நிலை என்பது

ஒரே ஜதியில் இயங்காது !

ஒரு சமயம்

நீர்வீழ்ச்சியின் சத்தத்தில் இருக்கும்!

ஒரு சமயம்

தியான மண்டபத்தின் அமைதியல் இருக்கும்!

ஒரு சமயம்

அடர்ந்த இரவின்

அந்தகாரத்தில் இருக்கும்!

தெரியும் ஒன்று

தெளியும் போது

தத்துவம் பிறக்கிறது!

தெளிந்த ஒன்று

தேரும் போது

தனித்துவம் பிறக்கிறது!

தொடர்...- 21

  • தொடங்கியவர்

தொடர்....21

சீசரின் அப்போதைய மனோநிலை

சத்தமம்- புத்துணர்ச்சியுமாய் இருந்தது!

ரத்தினக்கம்பளச் சுருள் விரிந்து

உள்ளே இருந்த கிளியோபாட்ரா

உருண்டு விழுந்தபோது

தெரிந்த ஒன்று தெளிந்தது

தெளிந்த ஒன்று தேர்ந்தது!

ரத்தினக்கம்பளத்தில் உள்ளேயிருந்த

கிளியோபாட்ரா ஓர்

அனாயசமான ஆச்சர்யப் பார்வையோடு

ஆசனத்தில் போய் அமர்ந்தாள்!

கையில் இருந்த கத்தி

சிரிப்பாய் தோன்றியது சீசருக்கு!

உறையில் தள்ளினார்!

ஓர் அழகான பெண்ணை

ஓர் ஆண்

அசட்டையாக பார்ப்பதில்லை!

ஓர் அழகான பெண்

ஓர் ஆணை

மரியாதையாக பார்ப்பதே இல்லை!

கிளியோ பாட்ரா அமர்ந்திருந்த தோரணை!

இன்னும் அவள் எகிப்து சாம்ராஜ்ஜித்தின்

சீசர் ஒரு சிறைக்கைதி போலவுமே

இருந்தது!

சீசர் இரசித்தார்!

கிளியோ பாட்ரா என்ற

பேரழகியின் பெருமிதப்பைப்

பொறுமையாய் இரசித்தார்!

தொடரும்... - 22

Edited by vanni mainthan

  • தொடங்கியவர்

தொடர்..- 22

ஒரு கோபுரமமய் உயர்த்தி

அடுக்கடுக்காய் பின்னப்பட்ட

கன்னங்கரேல் கூந்தல்!

அதில் நெசவு செய்யப்பட்ட

பலவண்ணம் கொண்ட

பவள மத்துக்கள்!

ஆறாம் பிறையை

அறிந்து வந்து ஒட்டியது போல்

மிக நேர்தியான முன் நெற்றி!

சற்றே கூர்மையான

ஒரு விரல் நீளமுள்ள நாசி!

ஒரு லட்சம் வீரர்களை

உருக்குலையச் செய்து விடும்

உணர்ச்சிவசமிக்க விழிகள்!

பால்கோசம் புரளப்புரளப்

பதுங்கிகிடக்கும்

செவிப் பகுதிகள்!

இலேசாய் ஒடுங்கிய

நிலாத் தண்டுகளாய்

வளவளப்பான கன்னச் செழிப்புகள்!

சதைப்பிடிப்பு குறைந்து

மினுமினுப்பு கூடிய

மோவாய்!

தோல் உரித்த ஆரஞ்சுச் சுளைகளைச்

சின்ன இடைவெளி விட்டு

அடுக்கியது போல

அதரங்கள்!

மெதுமெதுவென்று

வழக்கத்திற்கு மாறாய் நீண்டு

புஜம் உயர்ந்த கழுத்துப் பகுதி!

தொடரும்...23

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.