Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளின்போது வன்செயல்களுக்கு இடமில்லை!

Featured Replies

வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளின்போது வன்செயல்களுக்கு இடமில்லை!
 
 
வடக்கின் சமர் கிரிக்கெட் போட்டிகளின்போது வன்செயல்களுக்கு இடமில்லை!
யாழ். நகரப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளின்போது, மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களையும் அனுமதிக்க முடியாது, அத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, யாழ் குடாநாட்டில் கிரிக்கட் போட்டிகளின்போது, கடந்த காலங்களில் இரண்டு கொலைகள் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். 
 
பத்து கிலோவுக்கு மேற்பட்ட அளவு கேரளா கஞ்சா உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கான பிணை வழக்கொன்றிலேயே இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
நீதிபதி தனது எச்சரிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 
 
கிரிக்கட் போட்டிகளின்போது மைதானங்களில் எந்தவிதமான வன்செயல்களில் ஈடுபட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும். கிரிக்கட் போட்டி இடம்பெறும் மைதானத்திற்குள் மதுபோதையில் செல்வது தடை செய்யப்படுகின்றது . 
 
மைதானத்திற்குள் செல்பவர்கள் போதைவஸ்து பாவித்துள்ளனரா என்பது சோதனையிடப்பட்டு, போதைக்கு ஆளாகியிருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். மது போத்தல்கள் பியர் டின்களுடன் மைதானத்திற்குள் செல்வது தடை செய்யப்படுகின்றது. 
 
மைதானத்திற்குள் குழுக்களாக இயங்கி அநாகரிகமான முறையில் மோதல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். மைதானத்தின் வெளி வீதிகள் மற்றும் யாழ் வீதிகளில் ஒழுங்கற்ற முறையில் பேண்ட் வாத்தியங்கள் அல்லது மேளதாளங்களுடன் முறையற்ற விதத்தில் ஊர்வலம் செல்வது சட்டவிரோதமாகக் கூடுவது, போக்குவரத்துக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறு விளைவிப்பது, அரச திணைக்களங்கள், பாடசாலைகள், வைத்தியாசலைகளின் எதிரில் நின்று கூக்குரலிடுவது, கல்லூரி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் வீதிகளில் ஆட்டம் போடுவது போன்ற அனைத்து குற்றச் செயல்களும் தடைசெய்யப்பட்டுள்ளது. 
 
ஒழுங்கு முறையான வாத்தியக் குழுக்கள் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாத்திய மேளதாள கோஷங்கள் என்பவற்றில் தலையீடு இல்லை. 
 
மைதானத்திற்கு வெளியில் உள்ள ஐஸ் கிறீம் வியாபாரிகள் அன்னாசி மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் போதை வஸ்து மற்றும் மது விற்பனையில் ஈடுபடக் கூடாது. இந்த வியாபாரிகள் போதை வஸ்து மற்றும் மது விற்பனையில் ஈடுபடுகின்றனரா என்று அறிந்து அத்தகையோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பதற்காக, பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 
 
வெற்றி தோல்விகளை சகிக்க முடியாத ஆதரவாளர்கள் வன்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கிரிக்கட் போட்டிகள் முடியும் காலம் வரையில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை நீதிபதியின் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன், மிக முக்கியமாக,  கிரிக்கட் போட்டிகளில் பங்கு கொள்ளும் கல்லூரிகளின் அதிபர்கள், ஆசிரியர் குழாம், மாணவர் தலைவர்கள் சாரணர் அமைப்பு, முதலுதவி குழுக்கள், பாடசாலைகளின் விசேட அணிகள், பழைய மாணவர் குழாம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தங்கள் மாணவர்கள், ஆதரவாளர்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கிரிக்கட் போட்டியைப் பார்வையிட வரும் பொதுமக்கள் விடயத்தில் பொலிசார் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 
 
இந்த விடயங்களை பொலிசார் மற்றும் பாடசாலை சமூகங்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சிகரமான உயர்தர ஒழுக்கமுள்ள விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். 
 
போதைவஸ்து கஞ்சா பாவனை விற்பனை மற்றும் மது பாவனை என்பவையே மிக மோசமான குற்றச் செயல்களுக்கு அடிப்படை காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்த வழக்கில் பத்து கிலோவுக்கும் மேற்பட்ட கேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்ததாக 18 நாட்களின் முன்னர் கைது செய்யப்பட்ட நபருக்குப் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நீதிபதி இளஞ்செழியன் அதிவிரைவான பிணை கோரிக்கை மனு எனவும், பொலிஸ் விசாரணைகள் முற்றுப் பெறாத சூழ்நிலையில் பிணை மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்து பிணை மனுவை நிராகரித்தார். 
 
யாழ்ப்பாணத்தில் கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருவதால் இந்தச் சூழ் நிலையில் போதைவஸ்து சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதித்தால், ஒரே இடத்தில் ஒன்று கூடும் மாணவர்களிடையே போதை வஸ்து விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துவிடும் என சுட்டிக்காட்டி நீதிபதி பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.
 
வடக்கின் சமர் என வர்ணிக்கப்படுகின்ற யாழ் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்ற சூழலில் நீதிபதி இளஞ்செழியனின் இந்த எச்சிரிக்கை வெளிவந்திருக்கின்றது.  
 
வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் இலங்கையின் முக்கிய பாடசாலைகளுக்கிடையில் நடைபெறுகின்ற மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டாவது மாபெரும் கிரிக்கட் சமர் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையில் இந்த வாரம் வியாழன், வெள்ளி, சனி ஆகிய  3 நாட்கள் நடைபெறவுள்ளது. கொழும்பு சென் தோமஸ் கல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும் இடையில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டியே, இலங்கையின் முதலாவது மாபெரும் கிரிக்கட் சமர் என அழைக்கப்படுகின்றது. கொழும்பு கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி பட்டில் ஒவ் புளுஸ்  என்றும் யாழ் நகரப் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி பட்டிள் ஒவ் நோர்த் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.