Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியா வெற்றி

1496978_978904328841663_2518110498106147

  • Replies 71
  • Views 2.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
ஆசிய கிண்ண கிரிக்கெட்: இலங்கை அணியை 5 விக்கெட்களால் வென்றது இந்தியா
2016-03-01 22:29:06

15264kohli---lanka.jpgஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களால் வென்றது.

 

பங்களாதேஷின் மீர்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்களைப் பெற்றது.

 

 நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்புச் செய்யத் தீர்மானித்தது.


அதன்பின் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் தடுமாறியது. தினேஷ் சந்திமால் 4 ஓட்டங்களுடனும் ஷெஹான் ஜயசூரிய 3 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

 

15263chamara.jpg

சாமர கப்புகெதர துடுப்பெடுத்தாடுகிறார்.


 

பின்னர், சாமர கப்புகெதர 32 பந்துகளில் 30 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்தன 17 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்று அணியை ஓரளவு பலப்படுத்தினர்.

 

அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 19 பந்துகளில் 18 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசை வீரர்  திசர பெரேரா 6 பந்துகளில் 17 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சர்ச்சைக்குரிய விதமாக ஆட்டமிழந்தார்.  நுவன் குலசேகர 7 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றார்.

 

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்நதிரன் அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  ஜஸ்பிரிட் பம்ராஹ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடி இந்திய அணி  16 ஓட்டங்களுக்குள் முதல் இரு விக்கெட்களை இழந்தது. எனினும் விராத் கேர்ஹலி, சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங் ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் 19.2 ஓவர்களில் அவ்வணி வெற்றி இலக்கை அடைந்தது. 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15264#sthash.fFIKSLK6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

நானும் மாட்ச் பார்த்தேன்... ஶ்ரீ லங்கா சிம்பாவேயை கூட வெல்லுமோ தெரியாது....!  tw_angry:

  • தொடங்கியவர்

12802739_979409812124448_115912364331972

பங்களாதேஷ்  104/4  17 ஓவரில்

112/5 18 ஓவர்களில்

  • தொடங்கியவர்

127/5 19 ஓவர்களில்

பங்களாதேஷ் வெற்றி

 

So it's an India v Bangladesh in the final on March 6.

12819334_1187048504647577_70723312539228

12804888_979463522119077_194010986201695

12794538_979464362118993_468129557877602

  • தொடங்கியவர்
பாகிஸ்தானையும் வென்றது பங்களாதேஷ்: ஆசிய கிண்ண இறுதிப்போட்டிக்கும் தகுதி
2016-03-02 22:32:54

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை பங்களாதேஷ்  அணி 5 விக்கெட்களால் வென்றது.


இதன் மூலம், இத்தொடரில் இறுதிப் போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியுள்ளது.

 

15285bangaladesh---pakistan.jpg

 

பங்களாதேஷின் மீர்பூர் நகரில் மிக பரபரப்பாக நடைபெற்ற, இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களைப் பெற்றது.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.1  ஓவர்களில் 5  விக்கெட்களை இழந்துவெற்றி இலக்கை அடைந்தது.


எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய - பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன.

 

இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகளும் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பை பெறுவதற்கான சாத்தியத்தை தக்க வைத்திருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி நாளை ஐக்கிய அரபு இராச்சியத்துடன் மோதவுள்ளது.

 

இலங்கை, பாகிஸ்தான் அணிகள்  வெள்ளிக்கிழமை தமது கடைசி போட்டியில் மோதவுள்ளன. எனினும்  அது வெறும் கண்காட்சிப் போட்டியாகவே அமையும்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15285#sthash.39pOqi8R.dpuf
  • தொடங்கியவர்

பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் மோதிய T20 போட்டியின் பரபரப்பு இறுதி 2 ஓவர்களின் பரபரப்பு வீடியோ HD ...

 

  • தொடங்கியவர்

பேட்ஸ்மென்கள், மொகமது சமியால் காலியான பாகிஸ்தான்

 
 
 
 
  • வெற்றியை வங்கதேச அணியினர் புரண்டு கொண்டாட தோல்வியின் ஏமாற்றத்தில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரீடி. | படம்: ஏ.எஃப்.பி.
    வெற்றியை வங்கதேச அணியினர் புரண்டு கொண்டாட தோல்வியின் ஏமாற்றத்தில் பாகிஸ்தான் கேப்டன் அப்ரீடி. | படம்: ஏ.எஃப்.பி.
  • திருப்பு முனை ஏற்படுத்திய சிக்ஸ் அடித்த மஹமுதுல்லா. | படம்: ஏ.பி.
    திருப்பு முனை ஏற்படுத்திய சிக்ஸ் அடித்த மஹமுதுல்லா. | படம்: ஏ.பி.

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் நேற்று வங்கதேச அணி நெருக்கடியை தைரியத்துடன் கடந்து பாகிஸ்தானை வீழ்த்தி இறுதியில் இந்தியாவை மீண்டும் சந்திக்கிறது.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் சொதப்ப, பீல்டிங்கும் மோசமாக அமைந்தது, தேவையில்லாத ஓவர் த்ரோக்கள், மிஸ்பீல்டுகள் சமியின் மோசமான 19-வது ஓவர் என்று பாகிஸ்தான் திக்கித் திணறி தோல்வியடைந்தது, ஆமிர் மட்டுமே மீண்டும் மீண்டும் அணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினார், ஆனால் மஹமுதுல்லா, மொகமது இர்பானை அடித்த எக்ஸ்ட்ரா கவர் சிக்ஸும், மஷ்ரபே மோர்டசா, ஆமிரை அடித்த 2 பவுண்டரிகளும் வங்கதேச வெற்றியை உறுதி செய்தன. பாகிஸ்தான் 129/7 என்று முடிய வங்கதேசம் 131/5 என்று வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது.

முழுதும் புற்களே இல்லாத ஒரு பிட்சில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அஃப்ரீடி, முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் மீண்டும் டாப் ஆர்டர் நொறுங்க பாகிஸ்தான் 8.2 ஓவர்களில் 28/4 என்று தட்டுத்தடுமாறியது. இத்தனைக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லை. டஸ்கின் அகமது, அல் அமின் ஹுசைன் சிறப்பாக வீசினர்.

குரம் மன்சூர் முதல் ஓவரை சாப்பிட்டார், 2-வது ஓவரின் முதல் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே எழும்ப குரம் மன்சூர் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்தார். 4-வது ஓவரில் ஷர்ஜீல் கான், அரபாத் சன்னி பந்தை சுற்று சுற்றினார் சிக்கவில்லை பவுல்டு ஆனார். இவர் 10 ரன்களில் ஒரு பவுண்டரி 1 சிக்சர் அடித்தார். மொகமது ஹபீஸ் 2 ரன்களில் மஷ்ரபே மொர்டாசாவிடம் எல்பி ஆனார். ஆனால் நிச்சயம் பந்து ஸ்டம்புக்கு மேலே செல்வது, அது நாட் அவுட், ஆனால் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. உமர் அக்மல் 4 ரன்களில் டஸ்கின் அகமதுவிடம் வீழ்ந்தார்.

பிறகு சர்பராஸ் அகமது (58 நாட் அவுட்), ஷோயப் மாலிக் (41) ஆகியோர் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 50 பந்துகளில் 78 ரன்களைச் சேர்த்தனர். ஷாகிபை மாலிக் நேராக நூல்பிடித்தாற்போல் ஒரு சிக்ஸ் அடித்தார், ஆஃப் திசையில் 3 பவுண்டரிகள் விளாசினார். பல ஷாட்கள் இந்திய முன்னாள் ஸ்டைலிஷ் வீரர் மொகமது அசாருதீனை நினைவூட்டியது. சர்பராஸ் அகம்து 2 சிக்சர்களை மிட்விக்கெட்டில் விளாசினார். 30 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அணியை மீட்ட ஷோயப் மாலிக் 5-வது விக்கெட்டாக வெளியேறினார். சர்பராஸ் அகமது லெக் திசையில் ஒதுங்கிக் கொண்டு அடித்த பவுண்டரி மூலம் அரைசதம் எட்டினார்.

ஷாகித் அப்ரீடி புல்டாஸை நேராக கேட்ச் கொடுத்து ஒரு கேப்டனாக டக் அவுட் ஆனதும் பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் அணி ஒரு வழியாக 20 ஓவர்களில் 129/7 என்று முடிந்தது.

சவுமியா சர்க்கார், மஹமுதுல்லா அபாரம்:

தொடர்ந்து இறங்கிய வங்கதேச அணியில் சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிம் இக்பால் தொடக்கத்தில் களமிறங்கியதை காண முடிந்தது. அதோடு மட்டுமல்லாமல் அச்சுறுத்தும் மொகமது ஆமீரை முதல் ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஜெயசூரியா பாணி லெக் திசை பிளிக்கில் சிக்ஸ் அடித்தது ஆமீரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் 7 ரன்களில் இவர் மொகமது இர்பானின் அபாரமான இன்ஸ்விங்கருக்கு எல்.பி.ஆனார்.

அப்போது சபீர் ரஹ்மான், சவுமியா சர்க்காருடன் இணைந்தார். இருவரும் பொறுமையாக ஆடினர், விக்கெட்டுகளை மளமளவென இழக்காமல் பார்த்துக் கொண்டு ஸ்கோரை 46 ரன்கள் வரைக் கொண்டு சென்றனர். சபீர் ரஹ்மான் 15 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த போது ஷாகித் அப்ரீடி பந்தில் பவுல்டு ஆனார்.

முஷ்பிகுர் ரஹிம் களமிறங்கிய போது சவுமியா சர்க்கார் சில ஸ்ட்ரோக்குகளை ஆடத் தொடங்கினார், ஆமீர லெக்திசையில் அபார பவுண்டரி அடித்த அவர் அன்வர் அலியின் ஒரு ஓவரை தாக்கத் தொடங்கினார். குறிப்பாக மேலேறி வந்து மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ் அற்புதமானது என்பதோடு, எந்த பவுலரை அடித்துப் பார்க்கலாம் என்ற சாதுரியமும் தெரிந்ததற்கான அறிகுறியானது. பிறகு அதே ஓவரில் ஒரு பவுண்டரி வர அந்த ஓவரில் 15 ரன்களை வழங்கினார் அன்வர் அலி. இவர் 2 ஓவர்களில் 21 ரன்களை கொடுத்தார்.

பிறகு அப்ரீடி தவறாக லெக் திசையில் வீச ஒரு சக்தி வாய்ந்த ஸ்வீப் பவுண்டரி விளாசினார் சவுமியா சர்க்கார். இப்படியாக சவுமியா சர்க்கார் 47 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்த போது 13-வது ஓவரில் வங்கதேசம் 82/2 என்று இருந்தது வெற்றிக்கு 42 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போதுதான் மொகமது ஆமிர் ஆட்டத்தில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தினார். 14-வது ஓவரின் 2-வது பந்து அதிவேக யார்க்கராக மிடில் ஸ்டம்பில் அமைய ஸ்டம்ப் எகிறியது. முஷ்பிகுர் ரஹிம் 12 ரன்கள் எடுத்து ஷோயப் மாலிக்கின் ஒன்றுமில்லாத பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆனார்.

15 ஓவர்களில் 90/4 என்று சற்றே நெருக்கடி ஏற்பட்டது. 16-வது ஓவரில் மொகமது சமி 5 ரன்களையே கொடுத்தார். 16-வது ஓவரில் 95/4. வெற்றிக்குத் தேவை 35 ரன்கள். கிரீஸில் மஹமுதுல்லா மற்றும் ஷாகிப் அல் ஹசன்.

இந்நிலையில்தான் மொகமது இர்பானின் பந்து ஒன்றை மஹமுதுல்லா அடித்த சிக்ஸ், இந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலேயே சிறந்த ஷாட் என்று கூறவைத்தது. தன்னைக் குறுக்காகக் கடந்து செல்லும் இர்பானின் பந்துக்கு சற்றே ஒதுங்கிக் கொண்டு அருமையாக மிட் ஆஃப் எக்ஸ்ட்ரா கவருக்கு மேல் அடித்த ஷாட் சிக்ஸ் ஆனது, அதிர்ச்சிகரமான ஷாட், சற்றும் எதிர்பாராத ஷாட்.

3 ஓவர்களில் 26 ரன்கள் என்று இந்த சிக்ஸுக்கு பிறகே வங்கதேசத்துக்குச் சாதகமான தருணத்தில் மொகமது ஆமிரே மீண்டும் நம்பிக்கை அளித்தார். 18-வது ஓவரின் முதல் பந்து யார்க்கர் ரன் இல்லை. அடுத்த பந்து 8 ரன்கள் எடுத்த ஷாகிப் அல் ஹசன் பவுல்டு ஆனார். வெறுப்படைந்து ஸ்கூப் ஷாட்டைத் தேர்வு செய்து பந்தை கோட்டை விட்டார். ஆமிரிடம் எப்போதும் அத்தகைய ஷாட்கள் பலிக்கப்போவதில்லை.

சரி பாகிஸ்தானை ஆமிர் தன் கடைசி ஓவரில் வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் மஷ்ரபே மோர்டசா ஆமீரை அடித்த 2 பவுண்டரிகள் ஆட்டத்தை திசை திருப்பின.

ஷாகிப் அவுட் ஆனவுடன் அடுத்த பந்தை மோர்டசா சற்றே ஒதுங்கிக் கொண்டு ஒரு விளாசு விளாச பவுலருக்கும் மிட் ஆஃபுக்கும் இடையே பந்து பறக்க மொகமது சமியின் காலதாமதமான டைவால் பந்து பவுண்டரிக்குப் பறந்தது. இந்த இடத்தில் ஷாகித் அப்ரீடி கொஞ்சம் யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும், காரணம் யார்க்கர்களை வீசுகிறார் ஆமிர், நிச்சயம் ஒரு பந்தோ, இரண்டு பந்தோ ஓவர் பிட்சாக மாற வாய்ப்புள்ளது அப்போது ஆஃப் திசையில் செல்லவே வாய்ப்பு, இந்நிலையில் லாங் ஆஃபில் மொகமது சமியை நிறுத்தியிருந்தால் அது ஒரு ரன்னாகவே ஆகியிருக்கும், ஆனால் பவுண்டரியானது.

அடுத்தபந்தை ஆமிர் பவுன்சராக வீச லெக் திசையில் ஒதுங்கிய மோர்டசா, ஒதுங்கிய நிலையில் குனிந்த படியே மட்டையை மட்டும் சுழற்ற பைன் லெக் திசையில் ஒரு பவுண்டரி ஆனது. 8 ரன்கள் இந்த ஓவரில் வர, ஸ்கோர் 18 ஓவர்கள் முடிவில் 112/5.

2 ஓவர்கள் 18 ரன்கள் என்றால் அது எந்த அணியும் வெற்றிபெறும் வாய்ப்புள்ள நிலையே. அப்போது மொகமது சமி மோசமாக ஒரு ஓவரை வீச நேர்ந்தது. முதல் 3 பந்துகள் யார்க்கர்கள் 3 ரன்களே வந்தது. 4-வது பந்து மஷ்ரபே அடித்த ஷாட் லாங் ஆஃபில் கேட்ச் ஆனது ஆனால் சமி மிக நீண்ட நோபாலை வீசியிருந்தார். அது 2 ரன்களானது. அதாவது பீல்டர் நோ-பாலை கவனிக்காமல் கொண்டாட்டத்தில் பந்தை தூக்கி எறிய இன்னொரு ரன் வந்தது. ஃப்ரீ ஹிட்டில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5-வது பந்தை மஹமுதுல்லா நேராக தூக்கி அடித்து 2 ரன்கள் ஓடினார். அடுத்த பந்தும் சமி நோ-பால் வீச அது தேர்ட் மேன் திசையில் பவுண்டரி ஆனது மஹமுதுல்லா விளாசினார். ஷாகித் அப்ரீடி தேர்ட் மேன் இல்லாமல் பீல்டிங் அமைத்தது தவறாக முடிந்தது. 15 ரன்கள் அந்த ஓவரில் வர ஆட்டம் வங்கதேச வெற்றியை உறுதி செய்தது. கடைசி ஓவரை அன்வர் அலி வீச மிடில் ஸ்டம்பில் புல்டாஸ் மிட்விக்கெட் பவுண்டரியுடன் மஹமுதுல்லா வெற்றியைச் சாதித்தார் வங்கதேசம் இறுதிக்கு முன்னெறியது.

ஆட்ட நாயகனாக சவுமியா சர்க்கார் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article8309501.ece

  • தொடங்கியவர்

ஆசியக்கோப்பை டி20 : இந்தியா வெற்றி!

 

ஆசியக்கோப்பை போட்டியில் இன்று நடந்த யூ.ஏ.இக்கு எதிரான லீக் ஆட்டத்தில்,  9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

235635_3.jpg

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த யூ.ஏ.இ 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து  81 ரன்களை குவித்தது. அந்த அணியின் அன்வர் அதிகபட்சமாக 43 ரன் குவித்தார் மற்ற‌ அனைவரும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பந்து வீசிய அனைத்து பந்துவீச்சாளர்களுமே விக்கெட் வீழ்த்தினர். புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும், பூமராஹ், ஹர்பஜன், நெஹி, யுவராஜ், பாண்ட்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன் பின்னர் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 10.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 39, யுவராஜ் சிங் 25, தவான் 16 ரன்கள் எடுத்தனர்.

ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை நடந்த 4 லீக் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வரும் 6-ம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில் வங்காள தேச அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

http://www.vikatan.com/news/sports/59989-aisa-cup-t20-india-win.art

  • தொடங்கியவர்

இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவர் 

ஆசிய தொடரின் கிரிக்கெட் போட்டி தொடரின் பத்தாவது போட்டியில்  இன்றைய  தினம் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.இன்றைய போட்டியில் சந்திமாலே அணி தலைவரராக செயற்படவுள்ளார் .

லசித் மலிங்க மற்றும் அன்ஜெலோ மேதிவ்ஸ் இருவரும் காயங்களினால் இப்போட்டியில் விளையாடவில்லை.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரின் மூன்றாவது இடத்தினைப் பெற்றுக் கொள்ளும். ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளுடன் சமமான நிலையிலுள்ளன.

ஆசியா கிண்ண இறுதிப்போட்டி  எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறும்.

http://www.virakesari.lk/article/3855

  • தொடங்கியவர்

12809547_980689338663162_540071171921378

  • தொடங்கியவர்

12803139_980737528658343_587570933752898

  • தொடங்கியவர்

பாகிஸ்தான் அணியை கலாய்க்கும் ரசிகர்

March 04, 2016

ஆசியக்கிண்ணத் தொடரில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மோசமாக விளையாடி 5 விக்கெட்டுகளால் தோற்ற பாகிஸ்தான், வங்கதேச அணிக்கு எதிராகவும் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.

CcjSyy0W8AEJJIK

இதனால் பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களும், அந்நாட்டு ரசிகர்களும் அந்த அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் இந்தியாவுக்கு எதிராகவும் சொதப்பியிருந்த நிலையில், இப்படி அணி மொத்தமாக வீழ்ச்சியடையும் என்று நினைக்கவில்லை என்று முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பா- உல்-ஹக் கூறுகையில், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், துடுப்பாட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதேபோல் ஜாவித் மியாண்டட், முகமது யூசுப் போன்ற பல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதற்கிடையில் பாகிஸ்தான் ரசிகர்களே வீரர்களை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவுகளை போட்டு வருகின்றனர்

http://www.onlineuthayan.com/sports/?p=10140&cat=2

  • தொடங்கியவர்

வெற்றி நிச்சயம் வங்கதேச அணி தமீம் இக்பால்

March 05, 2016

எங்களுக்குள் மறைந்திருக்கும் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்து இந்தியாவிற்கு எதிராக நிச்சயம் வெற்றி பெறுவோம் என வங்கதேச அணியின்  தெரிவித்துள்ளார்.  ஆசியக் கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் நாளை இந்தியா- வங்கதேச அணிகள் மோதுகின்றன.

Tamim+Iqbal+India+v+Bangladesh+ICC+Twenty20+RbePbexBj6Ql

இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் வங்கதேசம் அணியை இந்தியா 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனவே மீண்டும் இரு அணிகளும் மோதுவதால் இந்தியாவிற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவிற்கு எதிராக மறக்க முடியாத போட்டிகளை நாங்கள் விளையாடியுள்ளோம். கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தினோம்.

எங்களுக்குள் மறைந்திருக்கும் முழுத்திறமையையும் வெளிக்கொண்டு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம். வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்தவொரு காரணமும் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/sports/?p=10205&cat=2

  • தொடங்கியவர்

இறுதிப் போட்டி குறித்து இரு அணித் தலைவர்களும் கூறியது என்ன?

இறுதிப் போட்டி குறித்து இரு அணித் தலைவர்களும் கூறியது என்ன?

 

பங்களாதேஷில் நடைபெற்று வரும், ஆசியக் கிண்ண 20க்கு இருபது கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இன்று, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

இந்தநிலையில் ஆசிய கிண்ணத்தை இந்திய அணி 6–வது முறையாக கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ண ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 முறை பட்டம் வென்று இருந்தது. இந்திய அணி பங்களாதேஷை ‘லீக்’ ஆட்டத்தில் 45 ஓட்டங்களால் வீழ்த்தி இருந்தது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

பங்களாதேஷ் ‘லீக்’ ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகளை வீழ்த்தி இருந்தது. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணி கூடுதல் பலத்துடன் உள்ளது. இந்திய அணிக்கு பங்களாதேஷ் எல்லா வகையிலும் சவால் கொடுக்கும் என்று அந்நாட்டு இரசிகர்கள் கருதுகிறார்கள்.

இறுதிப்போட்டி குறித்து இந்திய அணி தலைவர் தோனி நிருபர்களிடம் கூறியதாவது:–

பங்களாதேஷ் அணியை நாங்கள் ‘லீக்’ ஆட்டத்தில் வென்று இருந்தோம். ஆனால் அதை வைத்து எதுவும் கூறிவிட இயலாது. நாங்கள் அந்த அணியை சாதாரணமாக கருதவில்லை. பங்களாதேஷை நாங்கள் மதிக்கிறோம். அந்த அணியை குறைத்து மதிப்பிடவில்லை. இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்தியாவுக்குத்தான் ஆசிய கிண்ணத்தை வெல்ல வாய்ப்பு இருப்பதாக அந்த அணியின் தலைவர் மொர்தாசா தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் பங்களாதேஷ் இரசிகர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள படம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பங்களாதேஷ் அணி இந்தியாவை வீழ்த்தி விடும் என்பது போல சித்தரிக்கும் விதமாக அந்நாட்டு வேகப்பந்து வீரர் தஸ்கின் அகமதுவின் கையில் தோனியின் துண்டிக்கப்பட்ட தலை இருப்பது போன்று அந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தரம் தாழ்ந்த விமர்சனத்தின் தாக்கம் இறுதிப்போட்டியில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
  • தொடங்கியவர்

பலத்த காற்றுடன் மழை பெய்வதால் போட்டி தொடங்காது...:(

index.jpeg

Cc3aYHUUUAAyUu3.jpg

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் 120/5 15 ஓவர்களில்

 

12790937_981864198545676_773337754619500

  • தொடங்கியவர்

இந்தியா வெற்றி..

  • தொடங்கியவர்

12814700_981892748542821_777525517752178

12821378_503242676525306_666872964835087

12791094_981897921875637_776744799178012

  • தொடங்கியவர்
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியது
2016-03-06 23:46:53

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 8 விக்கெட்களால் இந்திய அணி வென்றது.

 

15359india-600.jpg


பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.


முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் 5  விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்றது.  மஹ்மதுல்லா 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் , ஷபீர் ரஹ்மான் 29 பந்துகளில் 32 ஓட்டங்களையும் குவித்தனர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

 

ஷிகர் தவான் 44 பந்துகளில்  60 ஓட்டங்களை குவித்தார். விராத் கோஹ்லி 28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ஓட்டஙக்ளையும் இந்திய அணித்தலைவர் மஹேந்திரசிங் தோனி  6 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களையும் குவித்தனர்.


இந்திய அணி 6 ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=15359#sthash.qDBInkwl.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
201603071505123159_Its-just-not-cricket-
புதுடெல்லி

நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில்  வங்கதேசத்தை பந்தாடிய இந்தியா, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றியை சுவைத்து கோப்பையை கைப்பற்றி அசத்தியது. 

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த இந்தியா-வங்கதேச ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்திய முக்கிய வீரர்களின் தலையை பாதி மொட்டையடித்ததை போல ஒரு படத்தை அந்த நாட்டு ரசிகர்கள் உலவவிட்டனர்.அதுபோல்  போட்டோ ஷாப்பில் டோனி தலையை வங்க தேச வேகப்பந்து வீச்சாளர் தஷ்கின் அகமது வெட்டி வைத்ததை போல படத்தை வங்கதேச ரசிகர்கள் போட்டோ உருவாக்கியிருந்தனர்.

53BF32E9-941B-4ACD-B548-62ADB8895EBB_L_s

அதுபோல் நேற்று இறுதி போட்டியின் போது வங்காளதேச கிரிக்கெட் ரசிகர்கள் நடந்துண்ட விதமும் சர்ச்சைக்கு உள்ளனது. வங்கதேச பவுலர்கள் விக்கெட் எடுக்கும்போதும், அந்த அணியினர் பேட் செய்தபோது பவுண்டரி அடித்தபோதும், காதே கிழியும் அளவுக்கு சத்தம்போட்டு சியர்ஸ் செய்த வங்கதேச ரசிகர்கள், இந்திய அணி அவற்றை செய்யும்போது ஊசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு, வாயை இறுக்க மூடிக்கொண்டனர்.

கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல், திறமைக்கு மரியாதை தராமல், ஒருதலைபட்சமாக வங்கதேச ரசிகர்கள் நடந்துகொண்டது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
111914D1-64AA-40F7-AD7F-1EED821D8D53_L_s
நேற்றைய ஆசிய கோப்பை இறுதி போட்டி வெற்றியின்மூலம், வங்கதேசத்துக்கு தக்க பாடம் கற்பித்த இந்திய அணியின் எழுச்சியால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் வங்கதேச வீரர்கள் தலைகளை பாதி மொட்டையடித்து அந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் உலவவிட்டுள்ளனர்.

http://www.dailythanthi.com/News/Cricket/2016/03/07150521/Its-just-not-cricket-Image-of-Taskin-holding-Dhonis.vpf

  • தொடங்கியவர்

'ஆசியக்கிண்ண வெற்றி விசேடமானது'
 
 

article_1457349589-TamilAsiChaLEAD-1.jpgஇடம்பெற்றுவந்த ஆசியக் கிண்ணப் போட்டிகளில், போட்டிகளை நடாத்திய பங்களாதேஷ் அணியைத் தோற்கடித்து, சம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி, அவ்வெற்றியை விசேடமானது என வர்ணித்துள்ளார்.

மழை காரணமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெற்ற இப்போட்டி, 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட பங்களாதேஷ் அணி, 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. மகமதுல்லா ஆட்டமிழக்காமல் 33 (18), சபீர் ரஹ்மான் ஆட்டமிழக்காமல் 32 (29) ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலளித்தாடிய இந்திய அணி, 13.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஷீகர் தவான் 60 (44), விராத் கோலி ஆட்டமிழக்காமல் 41 (28), மகேந்திரசிங் டோணி ஆட்டமிழக்காமல் 20 (7) ஓட்டங்களைப் பெற்றனர்.

வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த டோணி, 'இது விசேடமானதொரு வெற்றி" என்றார். 'இறுதிப் போட்டியில் இந்தியா தோற்பதென்பது, இறுதிப் போட்டியொன்றில் இந்தியா வெல்வதை விடப் பெரிய தலைப்புச் செய்தி" எனத் தெரிவித்த டோணி, 'நீங்கள் வெல்வீர்களானால், 'பெரிதாக ஒன்றுமில்லை: நீங்கள் பங்களாதேஷிடம் தோற்பீர்களானால், 'நீங்கள் பங்களாதேஷிடம் தோற்றுவிட்டீர்களா?" என மக்கள் சொல்வர்" என்று தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணி, அண்மைக்காலமாக வெளிப்படுத்திவரும் சிறப்பான பெறுபேறுகளுக்கு மதிப்பளித்த டேணி, 2004ஆம் ஆண்டு இருந்த பங்களாதேஷ் குழாமைப் போன்றதல்ல இதுவெனவும், தற்போதைய பங்களாதேஷ் குழாம், மிகச்சிறப்பான வீரர்களைக் கொண்டது எனவும் தெரிவித்தார்.

இந்தத் தொடரில், ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சிறப்பாகச் செயற்பட்டுள்ள போதிலும், மொஹமட் ஷமி, தனது முழுமையான உடற்றகுதியை அடைவாராயின், உலக இருபதுக்கு-20 தொடரின் போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ராவே அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவென, டோணி தெரிவித்தார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/167635/-%E0%AE%86%E0%AE%9A-%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%A4-#sthash.NNGbYUev.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.