Jump to content

சப்பாத்திக் கொத்து

Recommended Posts

பதியப்பட்டது
சப்பாத்தி உப்புமா

சப்பாத்திக் கொத்து

தேவையான பொருட்கள்

சப்பாத்தி – 4
வெங்காயம் – 2
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள், உப்பு – சிறிதளவு.

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சப்பாத்தியை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி… மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக நறுக்கி வைத்திருக்கும் சப்பாத்திகளைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு

காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி கொத்து செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்சேபிக்கின்றேன்....!

உப்புமா என்பது காலையில், இரவில் ரசித்துச் சாப்பிடக் கூடிய ஸ்ரார் அந்தஸ்து உள்ள அருமையான உணவு.அதற்கு தனிச் சுவை தருவது ரவை மட்டுமே. ரவையிலும் மெலிதான , மத்திமமான, மொத்தமான ரகங்கள் உண்டு.

இட்டலியிலும் ரவை இருப்பதால் அதையும் உலுத்தி உப்புமாவாக்கிப் பேர் வாங்கிய உலுத்தர்களும் உண்டு. உபயம்: சூரிய வம்சம். அதையே கிடக்கட்டும் கழுதை என்று அரை மனத்துடன் அனுமதித்திருக்கின்றோம்.

கானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலும்

கொத்துச் சப்பாத்தியும்  உப்புமாவாகும்...!

மேலே இருப்பது சப்பாத்திக் கொத்து என்று வேண்டுமானல் கத்தலாம்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வயசு கூடக்கூட குசும்பும் கூடுது .அண்ணாச்சிக்கு tw_blush:

Posted
17 minutes ago, suvy said:

சரி உங்கள் கோரிக்கையை ஏற்று பெயர் மாற்றபடுகிறது..tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நந்தன் said:

வயசு கூடக்கூட குசும்பும் கூடுது .அண்ணாச்சிக்கு tw_blush:

இந்த வைகாசி பொறந்தா 36 . இது ஒரு பெரிய வயதா....!  :unsure:  tw_blush:

நவீன் முதல் பேரே இருக்கட்டும், இது ஒரு ஜாலிக்குத்தானே...!

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.