Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Featured Replies

வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!
 
வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை!
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து, இன்று  தீர்ப்பளித்துள்ளார்.
 
அத்துடன் 30 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் மாணவி ஒருவரை, அதிகாலை 3 மணிக்கு கடத்திச் சென்று முல்லைத்தீவில் வைத்து பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்ததாக மார்க்கண்டு செல்வகிருஸ்ணன் அல்லது செல்லப்பா என்ற 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றம் புரிந்தார் என்ற அடிப்படையிலேயே சட்டமா அதிபரினால் இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது. எதிரி பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்குத் தப்பியோடி அங்கு ஒளிந்து வாழ்கின்றார். இதனால் எதிரியின்றி வழக்கு விசாரணை நடைபெற்றது.
 
கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது, அந்த மாணவி 15 வருடங்கள் ஒரு மாத வயதுடையவராக  இருந்தார். பாதிக்கப்பட்ட அந்த மாணவி தனக்கு நேர்ந்தது என்ன என்பதைத் தனது சாட்சியத்தில் நீதிமன்றத்திற்கு விளக்கிக் கூறினார். பாதிக்கப்பட்ட மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமையை, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர், நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தில் உறுதிப்படுத்தினார். 
 
விசாரணையின் முடிவில் எதிரியைக் குற்றவாளியாகக் கண்ட நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது,
16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளையைப் பாதுகாவலரின் அனுமதியின்றி அழைத்துச் செல்வது ஆட்கடத்தல் குற்றமாகும். அதேநேரம், 16 வயதுக்குக் குறைந்த சிறுமியை அவருடைய சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ உடல் உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தண்டனைச் சட்டக்கோவை கூறுகின்றது.
விசாரணையின்போது சாட்சியங்களின் மூலம் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகிய இரண்டு குற்றங்களையும் எதிரி புரிந்தார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
எதிரியைக் குற்றவாளியாகக் கண்டுள்ள இந்த நீதிமன்றம் ஆட்கடத்தல் குற்றத்திற்கு 5 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், பத்தாயிரம் ரூபா தண்டமும், கட்டத்தவறினால் ஒர் ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கின்றது. 16 வயதுக்குக் குறைந்த சிறுமியுடன் உடலுறவு கொண்டதன் மூலம் பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் தண்டப்பணமும் கட்டத் தவறினால் 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகின்றது.
 
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபா நட்டஈடு செலுத்த வேண்டும். தவறினால் 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது. குற்றம் சாட்டப்பட்ட எதிரி இந்தியாவில் இருப்பதாக மன்றில் சாட்சியமளிக்கப்பட்டிருப்பதனால், சர்வதேச பொலிஸாரின் ஊடாக அவரைக் கைது செய்யுமாறு பகிரங்கப் பிடியாணை பிறப்பித்து பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடப்படுகின்றது.
 
அதேபோன்று, சார்க் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையைப் பாவித்து, இந்தியாவில் உள்ள எதிரியை நாடு கடத்துமாறு இந்திய வெளியுறவு அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்து எதிரியை இலங்கைக்கு நாடு கடத்தி அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
 
பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் வன்செயல்கள், பாலியல் கொலைகள் என்பவற்றிற்கு நீதி கேட்டு, சர்வதேச மகளிர் தினத்தை, இந்த வருடம் பெண்கள் இருண்ட தினமாகவும், மார்ச் மாதத்தை இருண்ட மாதமாகவும் பிரகடனப்படுத்தி ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடத்திய மறுநாள் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு கொண்ட குற்றத்திற்காக அதிகபட்ச தண்டனையை யாழ், மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.