Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத் தொண்டராசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீடும் முறைகேடுகளும் இடம்பெறுகின்றதா?

Featured Replies

வடமாகாணத் தொண்டராசிரியர் நியமனத்தில் அரசியல் தலையீடும் முறைகேடுகளும் இடம்பெறுகின்றதா?

14 மார்ச் 2016
Bookmark and Share
 

சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவார்களா? பாதிக்கப்பட்டவர்கள் தமது பெயர் விபரங்களை ஆதாரத்துடன் radiokuru@yahoo.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்:-

 


வடமாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக சம்பளம் இன்றி தொண்டராசிரியராக சேவையாற்றியவர்களுக்கு அவர்களின் நிரந்தர நியமனத்துக்கான போராட்டங்களின் பயனாக நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில் குழப்பங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.


குறித்த தொண்டர் ஆசிரியர் நியமணத்தில், பல முறைகேடுகள் இருப்பதாக கூறி, தொண்டராசிரியர் நியமனப் பெயர் தெரிதல் தனது மேற்பார்வையின் கீழ் இடம்பெற வேண்டும் என கூறி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்     தனது அலுவலகத்தில் தொண்டராசிரியர் பெயர் பட்டியலை தயாரிப்பதாக பாதிக்கப்பட்ட சிலர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.


இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்துக்கான பெயர் பட்டியலில் தனது உறவினர்களையும் தனக்கு வேண்டியவர்களையும் தொண்டராசிரியர் நியமனப் பட்டியலில் முறைகேடான வகையில் சேர்த்துள்ளதாக நீண்டகாலமாக தொண்டராசிரியராக சம்பளம் இல்லாமல் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் பலர் கவலை தெரிவிக்கின்றார்கள். இதற்கு வடமாகாண கல்வி அமைச்சும் உடந்தையா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.


சம்பளப் பணம் ஏதுமற்ற நிலையில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைகளில் தொண்டராசிரியராகச் சேவையாற்றியவர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், தனது உறவினர்களையும் தனக்கு வேண்டியவர்களையும் நிரந்தர நியமனத்திற்கான பெயர் பட்டியலில் சேர்த்துள்ளார் எனக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.


தனது அலுவலகத்தில் பணியாற்றும் சிலரையும்; தொண்டராசிரியர் நியமனப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளார். அதேவேளை பல வருடகாலமாக பணியாற்றும் தொண்டராசிரியர்கள் எனது பெயர் நியமனத்துக்கான பட்டியலில் இருக்கின்றதா கேட்கச் சென்றபோது இங்கே ஒண்டும் இல்லை கல்வித் திணைக்களத்தில்தான் இருக்கும் எல்லாத்தையும் அங்கு சென்று பாருங்கள் என்றும் சொல்கிறார்கள். இது என்ன விதத்தில் முறையாகும்.


'கடந்த ஆட்சியில் தொண்டராசிரியர் நியமனத்தின்போது அரசியலால் பாதிக்கப்பட்ட நாம் இம்முறை இவரது சுயநலனால் பாதிக்கப்படப் போகின்றோம் என பாதிக்கப்பட்ட ஒருவர் மின் அஞ்சலில் அறியத் தந்துள்ளார்..

சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவார்களா? கூறினால் முழுமையாக பிரசுரிக்கப்படும்.
 

பாதிக்கப்பட்டவர்கள் தமது பெயர் விபரங்களை ஆதாரத்துடன் radiokuru@yahoo.comன்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் முழுமையாக பிரசுரிக்கப்படும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129985/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.