Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிதி நிறுவனங்களுக்கு கீழ் சட்டவிரோத கும்பல் - நடவடிக்கை எடுக்க வேண்டும்

Featured Replies

நிதி நிறுவனங்களுக்கு கீழ் சட்டவிரோத கும்பல் - நடவடிக்கை எடுக்க வேண்டும்

 

 

நிதி நிறுவனங்களின் கீழ் இயங்கும் சட்ட விரோத கும்பல்களை கட்டுப்படுத்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
யாழில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மேல் நீதிமன்ற நீதிபதி கடும் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். 
 
அதேபோன்று யாழில் இயங்கும் சில நிதி நிறுவனங்கள் தமக்கு கீழ் சில சட்டவிரோத கும்பல்களை வைத்து தமது வாடிக்கையாளர்களை மிரட்டி வருவதாக தெரிவிக்க படுகின்றது. அவ்வாறன நிதி நிறுவனங்கள் மீதும் அந்த நிதி நிறுவனங்களுக்கு கீழ் இயங்கும் சட்ட விரோத கும்பல்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க  வேண்டும். என கோருகின்றனர்.
 
 
தவணைப்பணம் கட்டாததால் மோட்டார் சைக்கிள் பறிமுதல்.
 
யாழில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றிடம் இருந்து "லீசிங்" (கடனடிப்படையில்) அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஒன்றினை ஒருவர் கொள்வனவு செய்து இருந்தார்.
 
குறித்த தவணையில் தவணை கொடுபனவை குறித்த நபர் கொடுக்க தவறியமையால் , அந்த நிறுவனம் தமக்கு கீழ் உள்ள சட்டவிரோத கும்பல் ஒன்றினை அனுப்பி மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளது.
 
மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை கடந்த சனிக்கிழமை கல்வியங்காட்டு சந்திக்கு அருகில் மறித்த கும்பல் ஒன்று தாம் குறித்த லீசிங் நிறுவனத்தில் இருந்து வந்து இருக்கின்றோம். லீஸ் பணம் கட்டாததால் பைக்க பறிமுதல் செய்கின்றோம் என கூறி பலர் முன்னிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை வீதியில் இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை அடாவடியான முறையில் பறித்து சென்றுள்ளனர்.
 
மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்த போது மோட்டார் சைக்கிளினுள் தன்னுடைய முக்கிய ஆவணங்கள் சில இருக்கின்றது அதனை எடுத்து தந்து விட்டு செல்லுங்கள் என கூறிய போதும் அதனை அந்த கும்பல் கவனத்தில் எடுக்காது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்.
 
நடுவீதியில் வைத்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதால் உரிமையாளர் அவமானத்தின் மத்தியில் முச்சக்கர வண்டி ஒன்றினை பிடித்தே வீடு சென்றுள்ளார்.
 
மறுநாள் ஞாயிறுக்கிழமை ஆகையால் அதற்குமறுநாள் திங்கட்கிழமை (நேற்றைய தினம்) குறித்த நிறுவனத்திற்கு சென்று மோட்டார் சைக்கிளுக்கு உரிய தவணை கட்டணத்தை செலுத்த முற்பட்ட வேளை முழு தொகையையும் கட்ட வேண்டும் எனவும் , தவணை கட்டணம் கட்ட தவறியமையால் அதற்காக தண்டபணமும் கட்டினால் மாத்திரமே மோட்டார் சைக்கிள் தர முடியும் என நிதி நிறுவனம் கூறியுள்ளது.
 
உரிமையாளர் நிதி நிறுவனம் கோரிய பணத்தினை கட்ட தயாரான போது மோட்டார் சைக்கிள் வவுனியாவுக்கு ஏற்றி விட்டோம் நீங்கள் அங்கு சென்று எடுங்கள் என கூறியுள்ளனர். அதற்கு உரிமையாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத பட்ட போது மூன்று நாள் அவகாசம் தந்தால் தாம் மோட்டார் சைக்கிளை வவுனியாவில் இருந்து திரும்ப கொண்டு வந்து தருகின்றோம் என கூறியுள்ளனர். 
 
யாழில் இயங்கும் சட்ட விரோத கும்பல்களுக்கு நிதி உதவி.
 
யாழில் இயங்கும் சில சட்டவிரோத கும்பல்களுக்கு நிதி உதவிகளை இவ்வாறன நிதி நிறுவனங்களே மேற்கொண்டு வருகின்றது.
 
தமது நிறுவனத்தில் லீசிங் (கடனடிப்படையில்) அடிப்படையில் வாகனத்தை கொள்வனவு செய்வோர் தவணை பணத்திணை கட்ட தவறும் போது அவர்களிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்வதற்கு தமக்கு கீழ் இயங்கும் சட்டவிரோத கும்பல்களையே பயன் படுத்தி கொள்கின்றனர்.
 
லீஸ் பணம் கட்டாத ஒரு வாகனத்தை பறிமுதல் செய்வதற்கு 5000.00 ரூபாய் முதல் 20000.00 ரூபாய் வரையிலான பணம் அந்த கும்பலுக்கு கமிஷனாக நிதி நிறுவனங்கள் கொடுக்கின்றது.
 
அதனால் அத்தகைய சட்டவிரோத கும்பளுக்கு பெருமளவான பணம் கமிஷன் பணமாக கிடைக்கின்றது.
 
முறைப்பாட்டை ஏற்க பொலிசார் தயக்கம்.
 
வாகனங்களை பறி கொடுத்தவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய முற்பட்டாலும் நிதி நிறுவனங்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் காணப்படும் தொடர்பு காரணமாக அத்தகைய முறைப்பாடுகளை பொலிசார் ஏற்றுக்கொள்வதில்லை என பாதிக்க பப்ட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தாம் முறைப்பாடு செய்ய சென்றால் அந்த நிறுவனத்தோட கதையுங்கள் என கூறி முறைப்பாட்டை ஏற்காது திருப்பி அனுப்புகின்றனர்.
 
நிதி நிறுவனங்களிடம் சென்றால் லீஸ் பணம் கட்டாததால் தான் பறிமுதல் செய்தோம் காசை கட்டிட்டு நீங்கள் உங்கள் வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என கூறுகின்றார்கள்.
 
எனவே இவ்வாறு செய்யப்படும் நிதி நிறுவனங்கள் மீதும் , அந்த நிறுவனங்களின் கீழ் இயங்கும் சட்ட விரோத கும்பல்கள் தொடர்பிலும் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியை கோருகின்றனர்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.