Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் வீடொன்றிலிருந்து தற்கொலைகுண்டு அங்கிகள், கிளைமோர் குண்டுகள், வெடிமருந்துகள் மீட்பு

Featured Replies

வீட்டின் உரிமையாளர் தப்பியோட்டம் என்கின்றனர் பொலிசார்: குளோபல் தமிழ் செய்தியாளர்:-

சாவகச்சேரியில் வீடொன்றிலிருந்து தற்கொலைகுண்டு அங்கிகள், கிளைமோர் குண்டுகள், வெடிமருந்துகள் மீட்பு:

 
சாவகச்சேரியில் வீடொன்றிலிருந்து தற்கொலைகுண்டு அங்கிகள், கிளைமோர் குண்டுகள், சி4 வெடிமருந்துகள் போன்றவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறிப்பிட்ட ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது குறித்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சென்ற புலனாய்வு பிரிவினரின் குழுவினர் சோதனைகளை மேற்கொண்ட வேளை இந்த ஆயுதங்களை மீட்டுள்ளனர். நூற்றிற்கு மேற்பட்ட 9 எம்எம் துப்பாக்கிரவைகளும், கிளைமோர் குண்டு பற்றறிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தப்பியோடி விட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130574/language/ta-IN/article.aspx

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி சிங்கள பத்திரிகையில் சுற்ற்றப்பட்டுள்ளது:

தப்பியோடிய வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சியில் கைது:-

சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி சிங்கள பத்திரிகையில் சுற்றப்பட்டுள்ளது:

 


சாவகச்சேரியில் வீடொன்றிள் வெடிமருந்துகள் மற்றும் தற்கொலை அங்கி மீட்கப்பட்டு உள்ளதால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இதேவேளை இந்த சம்பவத்தினை தொடர்ந்து தப்பியோடிய வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட வெடிபொருட்கள் யுத்தம் இடம்பெற்றவேளை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறிப்பிட்ட வீட்டில் போதைப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தாங்கள் அந்த வீட்டில் சோதனை நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த வீட்டில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கிகள் சிங்கள பத்திரிகையில் சுற்றப்பட்டு இருந்தமையினை ஒளிப்படங்கள் உறுதி செய்துள்ளன. ஆயின் அந்தப் பத்திரிகைகள் வெளியாகிய திகதி ஆண்டு என்பவற்றை வெளிப்படையாக விசாரிப்பதன் மூலம் இதன் பின்னணியை அறிய வாய்ப்பு இருக்கும் என  பலர் குறிப்பிட்டு உள்ளனர்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130590/language/ta-IN/article.aspx

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய எட்வேர்ட் ஜூட் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியா?

கைது செய்யப்பட்டவர் 31 வயதுடைய எட்வேர்ட் ஜூட் எனும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியா?

 சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.

குறித்த வீட்டில் இருந்த நபர்  தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து புதன் கிழமை மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,  

குறித்த வீட்டினுள் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு  இருக்கின்றன என சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை சுற்றி வளைத்தனர். 

குறித்த வீட்டில் இருந்த நபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் ஆவார். மறவன்புலவில் வாடகைக்கு எடுத்து அவருடைய மனைவி மற்றும் தந்தையார் உடன் இருந்துள்ளார். பொலிசார் வீட்டை சுற்றி வளைத்ததும் வீட்டில் இருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.

அதனை அடுத்து வீட்டினுள் நுழைந்த பொலிசார் வீட்டினை சோதனை இட்ட பொழுது, தற்கொலை அங்கி ஒன்று, கிளைமோர் குண்டுகள் 4, கிளைமோர் குண்டுக்கு பயன்படுத்தும் பற்றரிகள் 4, வெடி மருந்து 12 கிலோ, 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ரவைகள் 100 , மற்றும் சிம்கார்ட் 5 என்பன பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து வீட்டில் இருந்த ( தப்பியோடிய நபரின்) தந்தையார் மற்றும் மனைவியிடம் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டார்கள். 

அத்துடன் தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்தனர். 

அந்நிலையில் புதன் கிழமை காலை கிளிநொச்சி வன்னேரி பகுதியில் சந்தேக நபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கிளிநொச்சி பொலிசாரின் உதவியுடன் சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார், 

கைது செய்யப்பட்டுள்ள நபர் 31 வயதுடைய எட்வேர்ட் ஜூட் எனும் நபராவார் எனவும் இவர் ஒரு முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளி எனவும் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் விசாரைனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


இதேவேளை யாழ்.நல்லூர் யமுனா எரி பகுதியில் உள்ள வெற்றுக் காணிக்குள் வீடு கட்டும் நோக்குடன் அத்திவாரம் வெட்டிய  போது மூன்று பரல் வெடிமருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டன.அவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் வைத்து அழிக்கப்பட்டன.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130591/language/ta-IN/article.aspx

சிங்களப் பேப்பரில்தான் சுற்றியிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.