Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சா வேட்டையில் சிக்கிய கிளைமோர் குண்டுகள்; சாவகச்சேரியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விதம்

Featured Replies

கஞ்சா வேட்டையில் சிக்கிய கிளைமோர் குண்டுகள்; சாவகச்சேரியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விதம்
 


தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் தற்­கொலை படை­யணி பயன்­ப­டுத்தும் தற்­கொலை அங்கி உட்­பட  வெடிப்­பொ­ருட்கள்  யாழ். சாவ­கச்­சேரி பகு­தியில் கடந்த செவ்வாய்க்கிழமை 29ஆம் திகதி மீட்­கப்­பட்ட நிலையில், குறித்த வீட்­டுக்கு பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் தொடர்ந்து பாது­காப்பு வழங்­கி­யுள்­ளனர்.

 

15865_jaffna3.jpg


மீட்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­களில்  தற்­கொலை அங்கி, 4 கிளைமோர் குண்­டுகள் - 12 கிலோ கிராம் நிறை­கொண்ட வெடி­பொ­ருட்கள் அடங்­கிய மூன்று பொதிகள், 9 மில்­லி­ மீற்றர் ரவைகள் அடங்­கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதி­களில் 100 ரவைகள் இருந்­தன)   கிளைமோர் குண்டை வெடிக்க வைப்­ப­தற்­கான மின்­கலப் பொதிகள் இரண்டு, சிம் அட்­டைகள் ஐந்தும் அடங்­கு­கின்­றன.


கைது செய்யப்பட்டவர் ரமேஷ் என்றழைக்கப்படும் எட்வட் ஜூலின் (வயது 32) என்றும் அவர்   தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தில்  13 வயதில் இணைந்து கொண்டார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


சம்­பவம் பற்றி விசா­ர­ணை­களில் மேலும் தெரிய வரு­வ­தா­வது:


ஆயு­தங்கள் மீட்­கப்­பட்ட, யாழ்ப்­பாணம், சாவ­கச்­சேரி பகு­தியில் உள்ள குறித்த  வீட்டைச் சேர்ந்­தவர் ஒரு வர்த்­தகர் என்றும் அவ­ரிடம்  சிறிய ரக லொறி ஒன்று இருப்­ப­தா­கவும்  அதி­லேயே அவர், பொருட்­களை ஏற்­றி­யி­றக்கி வர்த்­தக நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­வ­தா­கவும் தெரியவருகிறது.


இவ்­வா­றான நிலையில், கஞ்சா உள்­ளிட்ட போதைப் பொருட்­க­ளையும் அவர் கடத்தி விற்­பனை செய்­வ­தா­கவும் இர­க­சியப் பொலி­ஸா­ருக்குத் தகவல் கிடைத்­துள்­ளது. அத்­துடன் குறித்த நபர் வீட்­டுக்கு வரு­வ­தா­கவும் பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது.  . இத­னை­ய­டுத்து உஷா­ர­டைந்த பொலிஸார்  அவரை மடக்கிப் பிடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டிருந்தனர்.

 

15865_jaffna1.jpg


இருப்­பினும், சந்­தே­க­நபர்  இரவு 9 மணி­யா­கியும் வீட்­டுக்கு வர­வில்லை. இத­னை­ய­டுத்தே அப்­ப­கு­தியை விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருடன் இணைந்து   பொலிஸார் சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர். அதன் பின்னர்  குறிப்­பிட்ட வீட்­டுக்குள் அதி­ர­டியாய் நுழைந்­துள்­ளனர். அப்­போது வீட்டில்  சந்­தேக நபரின் மனைவி மற்றும் அவர்­க­ளு­டைய பிள்ளை மற்றும் சந்­தே­க­ந­பரின் தந்தை ஆகியோர் இருந்­துள்­ளனர். வீட்டில்  கஞ்சா போதைப்­பொ­ருளைத் தேடி   தேடுதல் வேட்டை  நடத்­திய பொலிஸார்  படுக்­கை­ய­றையின் தட்­டி­யி­லி­ருந்தே இந்த வெடி­ பொருட்­களை மீட்­டுள்­ளனர்.


இதன்போது அவ­ரு­டைய மனைவி   மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவர்  பொலிஸ் பாது­காப்­புடன் சாவக்­கச்­சேரி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

15878_claymare-5.jpg

 


பின்னர் சந்­தேக நபர் தொடர்­பி­லான விபரம் அடங்­கிய தகவல் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் வழங்­கப்­பட்­டது.


சந்­தே­க ­ந­பரின் தந்­தையை பொலிஸார்  தடுத்து வைத்து விசா­ரணை மேற்கொண்டனர். மயக்கம் தெளிந்­ததும்  பொலி­ஸாரும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் அப்­பெண்­ணிடமும் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். தனது கணவர், கிளி­நொச்சி அக்­க­ராயன் பகு­திக்கு அடிக்­கடி சென்­று­ வ­ரு­வ­தாக    அப்பெண் தெரி­வித்­த­தை­ய­டுத்து  அப்­ப­கு­தியில் திடீர் சுற்­றி­வ­ளைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது.

15865_jaffna2.jpg


இதன்­போதே  அக்­க­ராயன் பகு­தியில் மறைந்­தி­ருந்த நிலையில் சந்­தே­க­நபர் மறுநாள் கைது செய்­யப்­பட்டு கிளி­நொச்சி பொலிஸ் நிலை­யத்­துக்கு அழைத்­துக்கு வரப்­பட்டார். அங்கு  பயங்­க­ர­வாதப் புல­னாய்வு பிரி­வினர்  அவ­ரிடம் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். அதன் பின்னர் அவர் சாவ­கச்­சே­ரிக்கு அழைத்து செல்­லப்­பட்டார். அங்­கி­ருந்து கொழும்­புக்குக் கொண்டு செல்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.   


சந்­தே­க­நபர்  மன்னார், முருங்கன் பகு­தியைச் சேர்ந்­தவர் எனவும்  முதல் மனைவி இறந்­து­விட்­ட­த­னை­ய­டுத்தே  சாவ­கச்­சேரி மற­வன்­பு­லவில் இரண்­டா­வது தட­வை­யாக திரு­மணம் செய்­துள்ளார் என்றும் விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்ள்து.


மீட்­கப்­பட்ட தற்­கொலை அங்கி  2008 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 29ஆம் திக­திக்­கு­ரிய சிங்­கள பத்­தி­ரி­கையின் தாளொன்­றினா­லேயே சுற்­றப்­பட்­டி­ருந்­தது. இவ்­வாறு மீட்­கப்­பட்ட இந்தத் தற்­கொலை அங்­கியும் வெடி­பொ­ருட்­களும்   பழ­யைவை அல்ல  என்று வடக்கு பாது­காப்புப் பிரி­வினர் அறி­வித்­துள்­ளனர்.


இவை  ஏதா­வது பிர­தே­சத்­தி­லி­ருந்து இங்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னவா? சந்­தே­க­ ந­ப­ருக்கு  இப்­பொ­ருட்கள் எவ்­வாறு கிடைத்­தன என்­பது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இவ்வாறான நிலையில் சந்தேக நபர்  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்பதும் அவர்  புனர்வாழ்வு பெற்றிருக்கவில்லை என்றும் ஆரம்பக்கட்ட விசாரணை களிலிருந்து தெரியவந்துள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=15878#sthash.U28HtMYf.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.