Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPL 9 செய்திகள் கருத்துக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: குஜராத் அணி வெற்றி
 
 
 

மும்பை: ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் மும்பையில் நடந்த இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியும், குஜராத் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணியின் ஆரோன் ஃபின்ச் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1503138

  • Replies 209
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கவுதம் கம்பீர் 90 நாட் அவுட்; சன் ரைசர்ஸை பந்தாடிய கொல்கத்தா

 
 
படம்: ஏ.எஃப்.பி.
படம்: ஏ.எஃப்.பி.

ஹைதராபாதில் நடைபெற்ற ஐபிஎல் 2016, 8-வது போட்டியில் கவுதம் கம்பீர் அருமையாக விளையாடி 90 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ரன்களையே எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா மூலம் 12.3 ஓவர்களில் 92 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. ராபின் உத்தப்பா 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஆந்த்ரே ரசல் 2 ரன்களில் வெளியேற கம்பீர் 60 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பாண்டே 11 ரன்கள் எடுத்து அவருக்கு உறுதுணை அளிக்க கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

கவுதம் கம்பீர் 3 போட்டிகளில் 192 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறார். கம்பீர் தனது 28-வது ஐபிஎல் அரைசதம் எடுத்தார், இது ஐபிஎல் சாதனையாகும். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை எடுத்த வீரரானார் கம்பீர்.

கொல்கத்தா அணியில் உமேஷ் யாதவ் அருமையாக வீசி பந்துகளை நன்றாக எழும்பச் செய்தார். மோர்னி மோர்கெலும் அவ்வாறே வீசினார். ஆந்த்ரே ரசல் இறுதி ஓவர்களில் அருமையான யார்க்கர்களை வீசி 4 ஓவர்களில் 19 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

ஆட்டத்தின் 2-வது பந்திலேயே மோர்னி மோர்கெல், வார்னரை புல் ஷாட் ஆடச் செய்தார். பந்து ஸ்கொயர்லெக்கில் சாவ்லாவிடம் கேட்ச் ஆனது (தடுமாறிப் பிடித்தார்) ஆனால் மோர்னி மோர்கெலின் அந்தப் பந்து நோ-பால் ஆனது.

ஷிகர் தவண் இன்னும் தனது பேட்டிங் பார்முக்கு வரவில்லை. மோர்னி மோர்கெல் வீசிய பந்துக்கு மேலேறி வர பார்த்தார் தவண், மோர்கெல் ஷார்ட் பிட்ச் ஆக வீசி எழுப்பினார். பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பாவின் நல்ல கேட்சாக முடிந்தது. தவண் 6 ரன்களில் வெளியேறினார்.

டேவிட் வார்னரை உமேஷ் யாதவ் தனது கட்டரால் கவிழ்க்க அவர் ஷார்ட் கவரில் கேட்ச் கொடுத்து 13 ரன்களில் வெளியேறினார். பிறகு மோய்சஸ் ஹென்ரிக்ஸ் (6) விக்கெட்டையும் அருமையான பந்து ஒன்றில் உமேஷ் யாதவ் எல்.பி. செய்து வெளியேற்றினார். 6 ஓவர்களில் சன் ரைசர்ஸ் 36/3 என்று ஆனது.

ஹூடாவை ரசல் வீழ்த்த 9.4 ஓவர்களில் 50/4 என்ற நிலையில் இயன் மோர்கன், நமன் ஓஜா இணைந்து 5-வது விக்கெட்டுக்காக சுமார் 8 ஓவர்களில் 67 ரன்களைச் சேர்த்து மீட்டனர், ஆனால் 28 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து மோர்கெலிடம் அவுட் ஆனார். இயன் மோர்கன் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் உமேஷ் யாதவ்விடம் வீழ்ந்தார். ஒருவேளை இவர் 20 ஒவர் நின்றிருந்தால் இன்னும் 10 ரன்கள் கூடுதலாக சன் ரைசர்ஸுக்கு கிடைத்திருக்கலாம். சன் ரைசர்ஸ் 142 ரன்களில் முடிந்தது.

உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், மோர்னி மோர்கெல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கவுதம் கம்பீர், ராபின் உத்தப்பா திடமான தொடக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவர்களில் 2 ஓவர்கள் நீங்கலாக ஒவ்வொரு ஓவரிலும் இவர்களால் பவுண்டரி அடிக்க முடிந்தது. இருவரும் இணைந்து 72 ரன்களை 10 ஓவர்களில் சேர்த்தனர். பிறகு கரண் சர்மாவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை கவுதம் கம்பீர் அழகாக அடிக்க ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற ரன் விகிதம் தேவைப்படுமாறு மாறியது.

ஆனால் உத்தப்பா, ஆஷிஷ் ரெட்டி அடுத்தடுத்து ஆட்டமிழந்தவுடன் லேசாக சன் ரைசர்ஸுக்கு நம்பிக்கை கீற்று தோன்றியது. ஆனால் அதன் பிறகு கம்பீர், மணீஷ் பாண்டேயுடனான 49 ரன்கள் கூட்டணியில் 7 பவுண்டரிகளை விளாசினார். இதனால் சன் ரைசர்ஸ் ஒன்றும் செய்ய முடியாமல் சரணடைந்தது. ஒரே ஒரு பந்து அருமையான பந்து என்னவெனில் ஆந்த்ரே ரசலை, துல்லியமான யார்க்கரில் முஸ்தபிசுர் ரஹ்மான் மிடில் அண்ட் லெக் ஸ்டம்பை காலி செய்தது மட்டுமே.

ஆட்ட நாயகனாக கம்பீர் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-90-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/article8483666.ece?homepage=true

  • தொடங்கியவர்

கிங்ஸ்லெவன் பஞ்சாப்புடன் இன்று மோதல்: வெற்றிபாதைக்கு திரும்பும் முனைப்பில் புனே

 

ஐபிஎல் தொடரில் மொஹாலியில் இன்று பிற்பகல் 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தோனி தலைமையிலான புனே சூப்பர்ஜயண்ட்ஸ், டேவிட் மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

புனே அணி முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்திய நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டத்தில் ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் நீக்கப்பட்டு இர்பான் பதான், ஈஸ்வர் பாண்டே சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

பேட்டிங்கில் கடந்த ஆட்டத்தில் டு பிளெஸ்ஸி மட்டுமே சிறப்பாக விளையாடி 69 ரன் எடுத்தார். பீட்டர்சன், மிட்சல் மார்ஷ் ஆகியோரிடம் இருந்து போதிய அளவிலான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை.

புனே அணி பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் கடைசி கட்டத்தில் மந்தமாக செயல்படுவது பலவீனத்தை அதிகரிப்பதாகவே உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கான வியூகம் அமைப்பதில் தோனி மாற்று வழியை கையாளக்கூடும்.

பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் குஜராத் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. அதிரடி வீரர்களான மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் ஆகியோரிடம் இருந்து திறமைக்கு தகுந்தபடியான ஆட்டம் இன்னும் வெளிப்படவில்லை. இவர்கள் விரைவிலேயே ஆட்டமிழப்பது அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

முரளி விஜய், மனன் வோரா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகின்றனர். மனன் வோராவின் ஒரு சில ஷாட்கள் சிறப்பாக இருந்தாலும் வலுவான பந்து வீச்சுக்கு எதிராக அவர் திணறுகிறார். பந்து வீச்சில் மிட்சல் ஜான்சனையே அணி பெரிதும் நம்பி உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87/article8486087.ece

 

  • தொடங்கியவர்

பெங்களூருவை சமாளிக்குமா டெல்லி

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை புரட்டி எடுத்தது. கெய்ல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோருடன் தற்போது இளம் வீரரான சர்ப்ராஸ் கானும் அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ப்ராஸ் கான் 10 பந்தில் 35 ரன்கள் குவித்து மிரட்டினார்.

அவரிடம் இருந்து இன்றும் சிறப் பான ஆட்டம் வெளிப்படக்கூடும். 51 பந்தில் 75 ரன் விளாசிய கோலி யும், 42 பந்தில் 82 ரன்கள் குவித்த டி வில்லியர்ஸூம் இன்றும் ரசிகர் களுக்கு விருந்து படைக்கக்கூடும்.

இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி யடைந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. ஜாகீர்கான், அமித் மிஸ்ரா ஆகியோரது அனுபவம் அணிக்கு பலமாக உள்ளது.

இந்த இருவர் கூட்டணி பெங்களூரு அதிரடி வீரர்களுக்கு சற்று நெருக்கடி தரக்கூடும்.

டெல்லி அணியில் பேட்டிங்கில் குயின்டன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு இளம் வீரர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுத்து விளையாடும் பட்சத்தில் பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முடியும். டுமினி, கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோருடன் இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்ஜூ சாம்சன், கருண் நாயர் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் நெருக்கடி தரலாம்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/article8486089.ece

  • தொடங்கியவர்
 
புனே அணி தோல்வி
 
 
 
 

 

 

மொகாலி: பிரிமியர் லீக் போட்டியில் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட, புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.இந்தியாவில் 9வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், புனே அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற புனே அணி கேப்டன் தோனி, 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

டுபிளசி அரை சதம்:

புனே அணிக்கு ரகானே (9) ஏமாற்றினார். பீட்டர்சன் (15), திசாரா பெரேரா (8) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய டுபிளசி (67) அரை சதமடித்தார். ஸ்டீவ் ஸ்மித் (38) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் தோனி (1), இர்பான் பதான் (2) ஏமாற்றினர். புனே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அஷ்வின் (1) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா 3, சந்தீப் சர்மா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

மேக்ஸ்வெல் அதிரடி:

பின் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முரளி விஜய், வோரா ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். வோரா 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின், முருகன் அஷ்வின் 'சுழல்' ஜாலம் காட்டினார். இவரது பந்துவீச்சில் முரளி விஜய் (53), ஷான் மார்ஷ் (4), கேப்டன் மில்லர் (7) ஆட்டமிழக்க, சிக்கல் ஏற்பட்டது. ஆனால், ரவிச்சந்திர அஷ்வின் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் வெற்றியை உறுதி செய்தார். முடிவில், பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் (32), சகா (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

* ஏற்கனவே குஜராத் அணியிடம் வீழ்ந்த புனே அணி இரண்டாவது தோல்வியை பெற்றது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1503645

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: டில்லி அணிக்கு 192 ரன் இலக்கு
 
 
 

பெங்களூரு: பெங்களூருவில் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடரில், இன்று டில்லி அணியும் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டில்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் கேப்டன் விராத் கோஹ்லி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் டில்லி அணிக்கு 192 ரன் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1503647

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 : டி.காக் அதிரடி சதம் ; டில்லி அணி அபார வெற்றி
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 : டி.காக் அதிரடி சதம் ; டில்லி அணி அபார வெற்றி
 
 

டில்லி: டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடரில், இன்று டில்லி அணியும் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்த அணியின் கேப்டன் விராத் கோஹ்லி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டில்லி அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழத்தியது. டில்லி அணி வீரர் டி.காக் 108 ரன் எடுத்து சதம் விளாசினார். மேலும் கருண் நாயர் 54 ரன்கள் எடுத்து இருவரும் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1503801

  • தொடங்கியவர்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: ஐதராபாத் - மும்பை இன்று மோதல்

 

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் கடைசி பந்தில் குஜராத்திடம் வெற்றியை பறிகொடுத்த மும்பை அணி, இன்றைய போட்டியில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்குகிறது. அந்த அணியைப் பொறுத்தவரை மிகப்பெரிய ஸ்கோரை அடிக்க கேப்டன் ரோஹித் சர்மாவையே பெரிதும் சார்ந்துள்ளது. மெக்லினாகன், ஹர்திக் பாண்டியா, பொலார்ட், ஜோஸ் பட்லர், ராயுடு ஆகியோர் இன்னும் சிறப்பாக ஆடினால்தான் அந்த அணியை கரைசேர்க்க முடியும் என்ற நிலை உள்ளது.

யுவராஜ் சிங், கேன் வில்லியம்சன், நெஹ்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியில் இருப்பதால் துவண்டு போயிருக்கும் ஐதராபாத் அணி இதுவரை 2 போட்டிகளில் தோற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவண், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததும் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மோர்கன், டேவிட் வார்னர், நமன் ஓஜா, ஹென்ரிக்கஸ் ஆகியோரின் பேட்டிங் வலிமையை நம்பி ஐதராபாத் அணி இன்று களம் இறங்குகிறது. ஐபிஎல் தொடரில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற 2 அணிகளுக்கும் இன்றைய போட்டியில் வெல்வது முக்கியமாகும்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8488786.ece

  • தொடங்கியவர்

48 பந்துகளில் அதிரடி சதம்: குவிண்டன் டி காக்கிற்கு விராட் கோலி பாராட்டு

 
அதிரடி சதத்தினால் டெல்லிக்கு வெற்றி தேடித்தந்த டி காக். | படம்: ஏ.எஃப்.பி.
அதிரடி சதத்தினால் டெல்லிக்கு வெற்றி தேடித்தந்த டி காக். | படம்: ஏ.எஃப்.பி.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 11-வது போட்டியில் விராட் கோலியின் அதிரடி 79 ரன்களை முறியடிக்கும் விதமாக டெல்லி டேர் டெவில்ஸ் வீரர் குவிண்டன் டி காக் 48 பந்துகளில் அடித்த சதம் பெங்களூருவுக்கு தோல்வி தேடித் தந்தது.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி கோலி (79), டிவில்லியர்ஸ் (55), வாட்சன் (33) ஆகியோர் பிரமாதமாக ஆட 191 ரன்கள் குவித்தது. மொகமது ஷமி 4 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடக்கத்தில் ஜாகீர் கான், கிறிஸ் கெய்லை 0-வில் வீழ்த்தினார். பிராத்வெய்ட் 2 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் 48 பந்துகளில் சதம் அடித்த குவிண்டன் டி காக், 51 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுக்க, கருண் நாயர் 42 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 19.1 ஓவர்களில் 192/3 என்று டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் வாட்சன் மட்டுமே சிறப்பாக வீசி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 22 பந்துகளில் அரைசதம் கண்ட டி காக் அடுத்த 26 பந்துகளில் மேலும் 50 ரன்கள் குவித்து சதம் கண்டார். இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 184 என்று வெற்றியை உறுதி செய்யும் நிலையில் இருந்தது.

இந்தச் சதம் குறித்து குவிண்டன் டி காக் கூறியதாவது:

நான் இந்த இன்னிங்ஸை முழுதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என்று கூற மாட்டேன், ஆனால் அது தேவைப்படும் தருணத்தில் வந்தது. மேலும் இவ்வளவு பெரிய இலக்கைத் துரத்தி வெற்றி கண்டது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

பெங்களூரு அணி 200 ரன்களுக்கும் மேல் சென்றிருக்கும் ஆனால் மொகமது ஷமியின் பந்து வீச்சும் மற்றும் கடைசி 4 ஓவர்களில் 27 ரன்களையே விட்டுக் கொடுத்ததும் பெங்களூருவை மட்டுப்படுத்தியது.

டி காக் மேலும் கூறும்போது, “250 ரன்களை துரத்த வேண்டியிருக்கும் என்றே நினைத்தோம். இலக்கை விரட்டும் போது தன்னம்பிக்கையுடன் ஆடினோம்” என்றார்.

நேற்று அவர் ஆஃப் திசையில் பேக்வர்ட் பாயிண்ட், கவர் திசையில் அதிக ஷாட்களை ஆடினார். கட்ஷாட்கள், பேக்புட் பஞ்ச் ஆகியவற்றை பெங்களூரு பீல்டர்களால் தடுக்க முடியவில்லை.

“நாங்கள் அதிகம் எதையும் யோசிக்கவில்லை, பிட்ச் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது இதனால் நேராக ஷாட்களை ஆடினாலே போதும் என்று முடிவெடுத்தோம்” என்றார்

விராட் கோலி புகழாரம்:

மிகவும் அருமையான இன்னிங்ஸ். அதுவும் ஸ்பின்னர்களை அவர் எதிர்கொண்ட விதம் அற்புதம். அவர் பந்துக்காக காத்திருந்து ஆடினார். ஒரு விக்கெட் கீப்பராக பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார். அது ஆட்டம் பற்றிய அவரது விழிப்புணர்வை எடுத்துரைக்கிறது. அவர் ஒரு முதன்மையான தரம் வாய்ந்த வீரர்.

சர்வதேச கிரிக்கெட்டில் சமீபகாலங்களாக அவர் தென் ஆப்பிரிக்காவுக்காக சிறப்பாக ஆடிவருகிறார். பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் அவர் மிக மிக அபாயகரமான வீரர். முன்னால் வந்து பவுலர்களை அடித்து நொறுக்குவதில் அவர் வல்லவாராகத் திகழ்கிறார். அவர் களத்தில் தனக்கான இடத்தையும், தனக்கான பவுலர்களையும் சிறப்பாகக் குறிவைத்து ஆடினார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

http://tamil.thehindu.com/sports/48-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8489656.ece

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: ஐதராபாத் அணி வெற்றி
 
 
Tamil_News_large_150449820160418232546.j
 

ஐதராபாத்: ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரி்ல் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் அம்பதி ராயுடு 54 ரன்னும், பாண்டியா 49 ரன்னும் எடுத்தனர். இதனையடுத்து தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 90 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1504498

  • தொடங்கியவர்

Kings XI Punjab 138/8 (20/20 ov)

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: கோல்கட்டா அணி வெற்றி
 

மொகாலி:கோல்கட்டா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கோல்கட்டா அணியும் மோதின. டாஸ் வென்ற கோல்கட்டா அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன் எடுத்தது. பஞ்சாப் அணியின் சான் மார்ஸ் 56 ரன் எடுத்தார்.
தொடர்ந்து களமிறங்கிய கோல்கட்டா அணி 17.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பி்ற்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்கட்டா அணியின் ராபின் உத்தப்பா 53 ரன்கள் எடுத்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1505240

  • தொடங்கியவர்

வெற்றி தேடிக்கொடுத்த வார்னர்

 
 
59 பந்தில் 90 ரன்கள் விளாசிய டேவிட் வார்னர்.
59 பந்தில் 90 ரன்கள் விளாசிய டேவிட் வார்னர்.

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. மார்ட்டின் கப்தில் 2, பார்த்தீவ் படேல் 10, ரோஹித் சர்மா 5, ஜோஸ் பட்லர் 11 ரன்கள் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

கிருனால் பாண்டியா கடைசி கட்டத்தில் 28 பந்தில், 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 49 ரன் விளாசியதால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது. 49 பந்தில் 54 ரன்கள் சேர்த்த அம்பாட்டி ராயுடுவின் மந்தமான ஆட்டமும் அணியின் ரன் குவிப்பு உயராததற்கு காரணமாக அமைந்தது.

143 ரன்கள் இலக்குடன் விளையாடிய ஐதராபாத் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற் றது. முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணிக்கு இது முதல் வெற்றி யாகவும் அமைந்தது. கேப்டன் டேவிட் வார்னர் 59 பந்தில், 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். ஹெண்ட்ரிக்ஸ் 20, மோர்கன் 11, ஹூடா 17, ஷிகர் தவண் 2 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 17 ரன்னில் இருந்தபோது கொடுத்த கேட்ச்சை ரோஹித் சர்மா ஒற்றைக் கையால் பாய்ந்து பிடிக்க முயன்றார். ஆனால் பந்து கையில் பட்டு நழுவியது.

49 ரன் சேர்த்த நிலையில் வார்னரை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பையும் மும்பை வீரர்கள் கோட்டை விட்டனர். இருமுறை தப்பிப்பிழைத்த வார்னர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி களத்தில் நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றித்தேடிக்கொடுத்தார்.

ஐதராபாத் அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article8497435.ece

  • தொடங்கியவர்

ஐபிஎல்-லில் விளையாடி வந்த கெய்லுக்கு திடீர் ஓய்வு கொடுத்த மகன்!

 

gayle-wifelong.jpg

 

ஐபிஎல் கிரிக்கெட்டில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்லின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கெய்ல்  ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். பெங்களூரு அணி இரண்டு ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (ஹைதராபாத்), ஒன்றில் தோல்வியும் (டெல்லி) கண்டுள்ளது.

இந்நிலையில், இந்த அணியில் இடம்பெற்றிருந்த கெய்லின் மனைவி நடாஷா பெரிட்ஜிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கெய்ல் அவசரமாக தாயகம் திரும்பி உள்ளார். கெய்ல்-நடாஷா தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும்.

ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் புனே அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு போட்டிகளிலும் கெய்ல் கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெய்ல் இல்லாத நிலையில் அணித்தலைவர் கோலி, டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோரைத்தான் அந்த அணி மலைபோல் நம்பி உள்ளது. கெய்லுக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

http://www.vikatan.com/news/sports/62769-chris-gayle-flies-back-home-for-child%E2%80%99s-birth.art

  • கருத்துக்கள உறவுகள்

சமீப ஆட்டங்களில் கெய்ல் ஒரே சொதப்பல்தான். சன்னைப் பார்த்து விட்டு வந்த பின்னாவது பந்துகள் சன்னுக்கும், மூனுக்கும் பறக்கட்டும்....!  tw_blush:

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: மும்பை அணி அசத்தல் வெற்றி
 
 

மும்பை: ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 62 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1506011

  • தொடங்கியவர்

ராஜ்கோட்டில் இன்று மோதல்: குஜராத் வெற்றிக்கு தடைபோடுமா ஐதராபாத்

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடை பெறும் ஆட்டத்தில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ், டேவிட் வார்னர் தலைமை யிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி மோதிய 3 ஆட் டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திருமணம் காரணமாக கடந்த இரு ஆட்டத்திலும் பங்கேற்காத ரவீந்திர ஜடேஜா இன்று களமிறங்குகிறார். தொடக்க வீரரான ஆரோன் பின்ச் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் (74, 50, 67*) அடித்து நல்ல பார்மில் உள்ளார். 3 முறை ஆட்ட நாயகனாக தேர்வான அவரிடம் இருந்து இன்றும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

பிரண்டன் மெக்கலத்திடம் இருந்து பெரிய அளவிலான ரன்குவிப்பு இன்னும் வெளிப்பட வில்லை. புனே அணிக்கு எதிராக மட்டும் 49 ரன்கள் சேர்த்தார். இதே நிலைமையில் தான் கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் உள்ளார். சொந்த மைதானத்தில் ரெய்னா கூடுதல் ரன்கள் சேர்க்க முயற்சிக் கக்கூடும்.

தினேஷ் கார்த்திக், டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் பேட் டிங்கில் கைக்கொடுக்கக்கூடியவர் களாக உள்ளனர். வேகம் மற்றும் மிதவேகப்பந்து வீச்சில் ஜேம்ஸ் பாக்னர், பிராவோ, பிரவீன் குமார் ஆகியோர் நேர்த்தியாக செயல்படக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சில் ஜடோஜாவுடன், பிரவீன் தாம்பே, ஷதாப் ஜகதி வலுசேர்ப்பவர்களாக உள்ளனர்.

ஐதராபாத் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றுள்ளது. கடைசியாக மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது. வார்னர் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஹென்ரிக்ஸ், தீபக் ஹூடா, மோர்கன் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கும் வீரர்களாக உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் ஷிகர் தவண் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவர் 3 ஆட்டத்தில் 16 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். காயம் காரணமாக நெஹ்ரா அவதிப்படுவதால் புவனேஷ்வர் குமார், முஸ்டாபிஸூர் ரஹ்மான், பரிந்தர் ஷரண் ஆகியோரை நம்பியே வேகப்பந்து வீச்சு உள்ளது.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article8502476.ece

  • தொடங்கியவர்

உலக லெவன் பேட்டிங்... உளுத்துப்போன பவுலிங்... கரை சேருமா ஆர்.சி.பி?

banvc1.jpg

ட்டுமொத்த இந்தியாவிலேயும் அதிக ரசிகர்கள் கொண்டிருந்த ஒரு ஐ.பி.எல் அணி என்றால் அது சி.எஸ்.கே தான். தோனி, ரெய்னா, பிராவோ போன்ற வீரர்களெல்லாம் சி.எஸ்.கே வெளியேற்றத்திற்குப் பிறகு ஒவ்வொரு அணியாகச் சென்றுவிட்ட நிலையில், இப்போ ஐ.பி.எல் லின் மோஸ்ட் ஃபெமிலியர் டீம் எது தெரியுமா? சந்தேகமா வேண்டாம் ஆர்.சி.பி தான்.

இதற்குக் காரணம் உலகின் அனைத்து பவுலர்களுக்கும் சிம்ம சொப்பனமாய் விளங்கும் விராத் கோலி மட்டுமல்ல, சூறாவளி கிறிஸ் கெயில், அதிரடி வாட்சன், ஆக்ரோஷ ஸ்டார்க், இவையனைத்தையும் தாண்டி, ‘ஏண்டா இவன் நம்ம நாட்ல பொறக்கல’ என அனைவரையும் ஏங்க வைக்கும் ஏ.பி.டிவில்லியர்ஸ் என சற்றும் குறைவில்லாத இந்த நட்சத்திரப் பட்டாளம்தான் காரணம்.

எல்லாம் சரி, ஆனாலும் இன்னும் கோப்பையைக் கைப்பற்ற முடியலயே என்று கேட்டால், அவ்வணி ரசிகர்கள் சொல்லும் பதில், “ஏற்கனவே நாங்க அப்படி. இப்போ வாட்சன் வேற இருக்காப்ல. கப் எங்களுக்குத்தான்” என்பதுதான்.

கோப்பையை வெல்வதற்குத் தகுதியான அணிதானா ஆர்.சி.பி?

ஆர்.சி.பி யை பொறுத்தவரை எல்லாமே இருக்குற மாதிரி இருக்கும். ஆனா ஏதாவது ஒன்று இருக்காது. முதல் மூன்று சீசன்ல அதிரடி ஆட்டக்காரர் இல்ல. அப்புறம் கெயிலும் ஏ.பி யும் வந்தாங்க. வேகப்பந்து வீச்சு அட்ரஸ் இல்லாம இருந்துச்சு. ஜாகிர், ஸ்டார்க் லாம் இருந்தப்போ. நல்ல ஆல் ரவுண்டரும் மிடில் ஆர்டரும் இல்லாம இருந்துச்சு. இப்ப எல்லாம் செட் ஆன நேரத்துல, மறுபடியும் பவுலிங் படு கேவலமாகி நிக்குது. டாப் பவுலர்களான ஸ்டார்க், பத்ரி இருவரும் காயத்தால் அவதிப்பட, ஆரோன், சஹால், ஹர்ஷல், அபு நெகிம், அப்துல்லா என அனுபவமே இல்லாத இந்த வீரர்கள்தான் இப்போதைய ஆர்.சி.பி யின் பவுலிங் யூனிட். இவர்கள்தான் அணியின் மிகப்பெரிய வீக் பாயின்ட்.

banvc2.jpg

எந்த அணிக்கும் கிடைத்திடாத ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ராயல் சேலஞ்சர்சுக்கு அமைந்துள்ளது. கோலி, கெயில் என கிளாஸ் + மாஸ் கூட்டணியோடு தொடங்கி, 360 டிகிரி மன்னன் டிவில்லியர்ஸ் வழியாக நீள்கிறது அவ்வணியின் அசாத்திய பேட்டிங் படை. சமீபத்தில் ஓய்வு பெற்ற ஆஸியின் அதிரடி ஆல்ரவுண்டர் வாட்சன், பிக் பேஷில் சதமடித்துள்ள இளம் நம்பிக்கை நட்சத்திரம் ட்ராவிஸ் ஹெட் போன்றோர் அசுர பலம். அட என்னப்பா நாங்கெள்ளாம் அதுக்கும் மேல என கடைசி கட்டத்தில் சுனாமியாய் சீறும் ‘சோட்டா பீம்’ சர்ஃபராஸ், ரஞ்சி நாயகர்கள் கேதர் ஜாதவ், மன்தீப் என இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது பேட்டிங் டிப்பார்ட்மென்ட்.

பார்த்தா ஐ.சி.சி வெளியிடுகிற உலக லெவன் அணியோட பேட்டிங் ஆர்டர் மாதிரிதான் இருக்கு ஆர்.சி.பி யோட பேட்டிங். ஒவ்வொரு போட்டியின் போதும் எதிரணி கேப்டனின் இலக்கு இவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென்பதாகும். முதலில் பேட் செய்தால் இவர்களுக்கு என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பது எதிரணிக்கு தண்ணி பட்டபாடுதான். டெல்லிக்கு எதிரான போட்டியின்போது, “விராட்டை சேஸிங்கில் கட்டுப்படுத்துவது கடினம். எனவே முதலில் பவுலிங் செய்கிறோம்” என்று ஓப்பனாகவே சொன்னார். முதலிரண்டு போட்டியில் கெயில் சோபிக்கவில்லை. ஆனால் கோலி, ஏ.பி, வாட்டோ, சர்ஃபராஸ் என அனைவரும் பொளந்து கட்டினர். மும்பைக்கு எதிராக அனைவரும் சொதப்ப,  சர்ஃபராசும் ஹெட்டும் அணியை நிலை நிறுத்தினர். அதுதான் ஆர்.சி.பி-யின் பலம்.

எல்லாம் சரி. 190 அடிச்சும் தோக்குது, 170 அடிச்சும் தோக்குது. என்னதான்பா பிரச்சனை? அந்தப் பாழாய்ப்போன பவுலிங் யூனிட்தான். ஸ்டார்க்கும் இல்ல, பத்ரியும் இல்ல. யாரைத்தான் பயன்படுத்துறது? இந்தக் கேள்விக்கான பதில் வெட்டோரிக்கும் டொனால்டுக்குமே இல்ல போல. மூன்று போட்டிகளில் மொத்தம் 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியுள்ளது அவ்வணி. தகுதியான ஸ்பின்னரும் இல்லை. தரமான வேகப்பந்துவீச்சாளரும் இல்லை. இந்திய அணிக்காக விளையாடிய ஒரே பவுலர் ஆரோன் மட்டுமே என்பதுதான் கவலையான விஷயம். மற்றவர்களெல்லாம் ரஞ்சியில் கூட சிறப்பாய் செயல்படாதவர்கள். தனது முதல் தொடரில் சிறப்பாய் செயல்பட்ட சஹால், பின்னர் சிக்சர்களாக வாரி வழங்கத் தொடங்கிவிட்டார். ரசூலிடமோ, இக்பால் அப்துல்லாவிடமோ ‘கன்சிஸ்டென்சி’ சுத்தமாக இல்லை. மில்னே, ரிச்சர்ட்சன் போன்றோரும் அவ்வளவாக சோப்பிக்கத் தவறுகின்றனர். மும்பைக்கு எதிராக முதலிரண்டு ஓவர்களை நன்றாக வீசிய ரிச்சர்ட்சனும் ஆரோனும் அடுத்த ஓவர்களில் சிக்சர்களை வாரி வழங்கினர்.

மொத்த அணியும் சார்ந்திருக்கும் ஒரே பவுலர் ஷேன் வாட்சன். முதலிரண்டு போட்டிகளில் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி, சிக்கனமாகவும் பந்து வீசிய அவரும் கூட மும்பை இந்தியன்சிடம் காலை வாரி விட்டார். இப்படி உள்ளூர் அணியை விட மோசமான பவுலிங்கை வைத்து என்னதான் செய்வது? எவ்வளவு ரன்கள் குவித்தாலும் அதைக் காப்பதென்பது அரிது. இன்னும் யாரை எப்போது பயன்படுத்துவதென்ற டெசிஷன்,  அணி நிர்வாகத்திற்கே பெரும் தலை வலியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை பத்ரி வந்த பிறகு பந்துவீச்சு சற்று முன்னேற்றம் காணலாம். ஆனால் மீதமுள்ள 16 ஓவர்கள்? சரியான காம்பினேஷனை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் அவசியம்.

கெயில் தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சீசனில் ஒரு போட்டியில் நன்றாக ஆடுவதற்காக அவரை 14 போட்டிகளிலும் வைத்துக்கொண்டிருப்பது பெரும் முட்டாள்தனம். அவர் அணியில் இருப்பதால் சிங்கிள், டபுள்ஸ் எடுப்பதிலும் ஃபீல்டிங்கிலும் சற்று பின்னடைவுதான். அவர் ஒழுங்காய் ஆடாவிட்டாலும் அணி சிறப்பாய் செயல்படும் என்பது முதலிரண்டு போட்டிகளிலேயே தெரிந்தது. போன சீசனில் சில போட்டிகளில் மன்தீப் தனியாளாக வெற்றி தேடித்தந்தார். எனவே கெயிலுக்குப் பதிலாக அவரை களமிறக்கிவிட்டு, இரண்டு வெளிநாட்டுப் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்குவதுதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற நீண்ட நாள் கனவை நனவாக்க ஒரே வழி.

நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில் 170 ரன்கள் எடுத்தாலும், 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது ஆர்.சி.பி. இத்தோல்வியின் மூலம் மூன்று போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது அவ்வணி.

தங்கள் நீண்ட நாள் பிரச்னையான பவுலிங் கோளாறை இனிவரும் போட்டிகளிலாவது  ஆர்.சி.பி சரி செய்தால்தான்,  கோலியின் கையில் கோப்பை ஏறும்.

http://www.vikatan.com/news/sports/62857-will-rcb-bounce-back-with-power.art

 

  • தொடங்கியவர்
6000 ரன்களை கடந்தார் சுரேஷ் ரெய்னா
 
 

ராஜ்கோட்; குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் குஜராத் அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் இடையே நடக்கும் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, 6000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1506574

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: ஐதராபாத் அணி அசத்தல் வெற்றி
 
 
 
 

ராஜ்கோட்: ஐதராபாத் அணி10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணியும், ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்தது. குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா 75 ரன்கள் எடுத்தார்.இதனையடுத்து களமிறஙகிய ஐதராபாத் அணி 14.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் 74 ரன்களும் சிகர் தவான் 53 ரன்னும் எடுத்தனர். புவனேஸ் குமார் 4 விக்கெட்களை கைப்பற்றினார்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1506660

  • தொடங்கியவர்

மெக்கல்லத்தை ஆட்டிப் படைத்த முஸ்தபிசுர் ரஹ்மான்: குஜராத்தை நொறுக்கிய ஹைதராபாத்

 
 
முஸ்தபிசுர் ரஹ்மான் | கோப்புப் படம்: ஏ.பி.
முஸ்தபிசுர் ரஹ்மான் | கோப்புப் படம்: ஏ.பி.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் லயன்ஸ் அதிரடி நியூஸி. வீரரான பிரெண்டன் மெக்கல்லத்தை வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆட்டிப் படைத்தார்.

இன்றைய பந்துவீச்சு உலகில் மொகமது ஆமிர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தங்களது பல்வேறு தினுசான பந்துவீச்சின் மூலம் சிறந்த பேட்ஸ்மென்களையும் அச்சுறுத்தும் அதிரடி வீரர்களையும் மிரட்டி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முஸ்தபிசுர் ரஹ்மான் தனது குறைவான வேகத்திலும் பந்தின் தையலை அபாரமாகப் பயன்படுத்தி மெதுவான, வேகமான கட்டர்களை வீசி மிரட்டி வருகிறார். ஏற்கெனவே அவர் தன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமற்ற வங்கதேச பிட்சில் இந்திய அணியையும் தென் ஆப்பிரிக்க அணியையும் ஒருநாள் போட்டிகளில் படுத்தி எடுத்தது நினைவிருக்கலாம், தென் ஆப்பிரிக்க அணியை டெஸ்ட் போட்டி ஒன்றிலும் ஆட்டிப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று ராஜ்கோட்டில் குஜராத் லயன்ஸின் பிரெண்டன் மெக்கல்லமிற்கு கடும் தொல்லைகள் கொடுத்தார்.

முதலில் ஒரு வேகம் குறைந்த ஆஃப் கட்டரை முஸ்தபிசுர் ரஹ்மான் வீச மெக்கல்லம் ஆட முற்பட்டு தோல்வி அடைந்தார். அடுத்த பந்து சற்றே வேகம் கூடி சற்றே கூடுதலாக எழும்ப மெக்கல்லம் பொதுவாக தன் நிலையிலிருந்து திரும்பாதவர், பாயிண்டில் அடிக்கும் முயற்சியில் ‘ஸ்கொயர்’ ஆனார், மட்டையின் விளிம்பை உரசிச் சென்றது. 3-வது பந்து வேறு விதமாக சற்றே ஃபுல் லெந்தில் வீசப்பட மெக்கல்லம் அடிக்க கவரில் ஷிகர் தவண் மிஸ் பீல்ட் செய்ய மெக்கல்லம் ஒரு ரன் எடுத்தார்.

ரெய்னா அடுத்த பந்தில் ஒரு ரன் எடுக்க, மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்த மெக்கல்லம், மீண்டும் ஒரு முஸ்தபிசுர் ஸ்பெஷல் கட்டரில் பந்து எழும்ப பீட் ஆனார். அடுத்த பந்தை ஆடும் போது மெக்கல்லம் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு உரிய மரியாதை கொடுத்து ஆடினார். பிற்பாடு இவர் ஜடேஜாவை பவுல்டு செய்த பந்து... பாவம் ஜடேஜாவுக்கு கொஞ்சம் டூ மச் தான்.

4 ஓவர்களில் 19 ரன்களையே இவர் விட்டுக் கொடுத்தது குஜராத் லயன்ஸ் 135 ரன்களுக்கு மட்டுப்பட்டு தோல்வி தழுவியது.

முஸ்தபிசுர் ரஹ்மான் மெக்கல்லத்தை ஆட்டிப்படைத்ததைப் பார்த்தும் சன் ரைசர்ஸ் வீச்சாளர் பரீந்தர் ஸ்ரன் கற்றுக் கொள்ளவில்லை, வந்து மெக்கல்லமிற்கு ஒரு அல்வா லெந்த் பந்தை வீச ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் ஆனது, மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து அரக்கத்தனமாக பவுண்டரி விளாசினார் மெக்கல்லம்.

2 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக் கொடுத்த ஸ்ரண், பிராவோ விக்கெட்டுடன் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தார்.

ஏரோன் பிஞ்ச்சை பவுல்டு செய்த புவனேஷ் குமார்:

நடப்பு ஐபிஎல் தொடரில் 3 வெற்றிகரமான துரத்தலில் 3 அரைசதங்கள் அடித்து தொடக்க வீரர்கள் சாதிக்கும் ஐபிஎல் தொடராக இதனைத் தொடங்கியவர் ஏரோன் பிஞ்ச். அன்று மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்று சன் ரைசர்ஸ் அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்து பார்மை மீட்டுக்கொண்ட புவனேஷ் குமார், நேற்று இன்ஸ்விங்கர்களை அபாரமாக வீசினார். முதல் பந்து இன்ஸ்விங்கரை பிஞ்ச் பிளிக் ஆட முயன்று கால்காப்பில் வாங்கினார், அடுத்த பந்தும் குட் லெந்த்தில் இன்ஸ்விங்கராக மட்டையின் உள்விளிம்பில் ஆடினார். அதன் பிறகு புவனேஷ் எதிர்பார்த்த பெரிய இன்ஸ்விங் விழுந்தது. மட்டைக்கும் கால்காப்பிற்கும் இடையே புகுந்து லெக் ஸ்டம்பை தொந்தரவு செய்தது. ரன் எடுக்காமல் பிஞ்ச் அவுட் ஆனார்.

கடைசியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை புவனேஷ் கைப்பற்ற 4 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு வீழ்த்தினார்.

குஜராத் லயன்ஸ் அணி 135 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்ததையடுத்து தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 14.5 ஓவர்களில் 137 ரன்களை விளாசி வென்றது. சிக்சர்களே இல்லாத பார்ட்னர்ஷிப்பில் டேவிட் வார்னர் 48 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுக்க ஷிகர் தவண் 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தார். சன் ரைசர்ஸ் தனது 2-வது வெற்றியை ஈட்டியது. ஆட்ட நாயகனாக புவனேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/article8507846.ece?homepage=true

  • தொடங்கியவர்
ஐ,பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: புனே அணிக்கு 186 ரன் இலக்கு
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட்: பெங்களூரு அணி அசத்தல் வெற்றி
  • தொடங்கியவர்

ஐதராபாத்- பஞ்சாப் இன்று மோதல்

 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி, டேவிட் மில்லர் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

முதல் இரு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணிக்கு அடுத்த இரு ஆட்டத்திலும் கேப்டன் வார்னர் அதிரடியாக விளையாடி வெற்றி தேடிக்கொடுத்தார். ஷிகர் தவணும் பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை அதிகரித்துள்ளது.

மோர்கன், நமன் ஓஜா, ஹென்ரிக்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், முஸ்டாபிஸூர் ரஹ்மான் நெருக்கடி தரக்கூடும்.

பஞ்சாப் அணி 4 ஆட்டத்தில் 3 தோல்வி, ஒரு வெற்றி பெற்றுள்ளது. மனன் வோரா மட்டுமே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார். மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் ஆகியோர் பொறுப்பை உணர்ந்து அதிரடியாக விளையாடினால் வலுவான ஸ்கோரை குவித்து வெற்றிக்கு முயற்சிக்கலாம்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article8512745.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.