Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைக்காக குரல்கொடுத்த யோகேஸ்வரனை தனிமைப்படுத்திய கூட்டமைப்பு?

Featured Replies

3244_1458810259_yokes.jpg

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தமிழர்களின் உரிமை தொடர்பாக பேசுவதற்கு மாவடட்த்தில் சீ.யோகேஸ்வரன் மட்டுமா உள்ளார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அண்மையில் யோகேஸ்வரன் அவர்கள் சிறுபான்மையின மக்களுக்கு மட்டக்களப்பில் உள்ள அதிகாரங்களை விட பெரும்பான்மையின மக்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள அதிகாரங்கள் மிகக்குறைந்தது எனவும் அதற்கு காரணமான அமைச்சர்கள் தொடர்பாகவும் பேசியிருந்தார்.

அதனை ஏற்றுக்கொள்ளாத அமைச்சர் அமீரலி மாகாணசபை உறுப்பினர் சிப்லிபாறுக் ஜீனைட் நளீமி போன்றவாகள் யோகேஸ்வரன் ஐயா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று ஒட்டுமொத்த தமிழர்களையும் மிகக்கேவலமாக பொதுநிகழ்வுகளிலும் செய்திமாநாட்டை கூட்டியும் பேசிவருகின்றனர்.

இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில தலைமைகளிடம் கேட்டபோது அவர்கள் வழங்கிய பதில்கள் மிகவும் அதிர்ச்சியானதாகவும் கவலைக்குறியதாகவும் அமைந்திருந்தது.

“பொல்லைக் கொடுத்து நல்லா அடிவாங்குகிறார்” “இவர் அவரது வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கலாம் தானே”  “நல்லா மாட்டித்தார் வாங்கி கட்டட்டும்” “இவர் ஏன் மதவாதம் பேசவேனும்” “அவனுகளுடன் சேர்ந்துதான் போகவேனும்” “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” “சினத்தில் அறுத்த மூக்கு சிரித்தாலும் வராது”  “கோபமானாது பாவமாகும்”  “தனி மனிதன் ஒருவன் தவறாக சாடியிருந்தால் அம்மனிதனை நாகரிகமான முறையில் விமர்சிப்பதற்கும் உணர்த்துவற்கும் பாதிக்கப்படவனுக்கு உரிமையுண்டு. அல்லது தவறாகச் சாடியவரின் கட்சிக்கு முறையிட்டு அவ்வாறான பேச்சுகளைத் தவிர்த்துக் கொள்வற்கும் கட்டுப்படுத்துவற்கும் நாகரிக அரசியலில் இடமும் உண்டு” என்றெல்லாம் யோகேஸ்வரனை தனிமைப்படுத்தி அவர் ஏதோ கொலைக் குற்றம் செய்தவர் போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு தலைமைகளும் இணைந்து அவருக்கு துணைநிற்க தவறியுள்ளனர்.

வரலாற்றில் ஒற்றுமைப்படாத சமூகத்திற்கு என்ன நடக்கும் என்பதற்கு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காட்சிகளே சாட்சி.

அப்படியென்ன யோகேஸ்வரன் தவராக பேசினார்? 

தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றது மதமாற்றம் நடைபெறுகின்றது நிர்வாக சீர்கேடுகள் நடைபெறுகின்றது வரலாற்றில் தமிழர்கள் இழந்த நிலம் எங்கே உள்ளது. விகிதாசார அடிப்படையில் மட்டக்களப்பில் தமிழர்கள் எப்படி புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். உள்ளிட்ட தமிழர்களின் உரிமை குறித்தும் அதனை தடுக்கின்ற தடுத்த அமைச்சர்கள் குறித்து மிகவும் துணிச்சலுடன் பேசியிருந்தார்.

இதில் என்ன தவறு கண்டார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தலைமைகள்?

காலாகாலமாக தமிழர்களின் உரிமை பற்றி பேசுகின்ற போது அதனை எற்க மறுக்கின்ற சிங்கள தலைமைகளும் முஸ்லீம் தலைமைகளும் எதிர்த்து பேசியுள்ளதுடன் அதனை ஏற்கவும் மறுத்துள்ளனர் இது வரலாறு.

ஆனால் காலாகாலமாக தமிழர்களும் தங்களது உரிமைக்காக குறித்த தலைமைகளுக்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தியே வந்துள்ளனர்.

ஆனால் வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பில் உள்ள ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து ஒரு அரசாங்க அமைச்சரை விமர்சித்ததை அவருடைய கட்சியை சேர்ந்தவர்களே எதிர்க்கின்ற அல்லது அவருக்கு ஏன் தேவையில்லாத வேலை என்று கூறிக்கொண்டு ஒதுங்கி நிற்கின்ற காட்சியை மட்டக்களப்பில் காணக்கூடியதாகவுள்ளது.

யோகேஸ்வரன் ஐயா கூறிய மேற்படி கருத்துக்களில் என்ன தவறு இருக்கின்றது மட்டக்களப்பில் அப்படி ஒன்றும் நடக்கவில்லையா? யோகேஸ்வரன் ஐயா பேசுகின்றது பொய்யா? எனபதை முதலில் ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைகள் கூறியாகவேண்டும்.

தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க விரும்பாத அல்லது குரல்கொடுக்க தெரியாத தலைமைகளிடமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டக்களப்பு தமிழர்கள் வழங்கியுள்ளனர்.


இனவாதம் மதவாதம் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் நிலங்களும் மதங்களும் அதிகாரங்களும் பரிபோய்க்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் தமிழர்கள் தங்களுக்கான தனி அடையாளங்களை இழந்துகொண்டிருக்கும் போது அமைச்சர்களைப் போன்று அபிவிருத்தி என்ற மாயைக்குள் நின்றுகொண்டு படம்பிடிப்பதும் போஸ்கொடுப்பதுமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காலத்தை கடத்திக்கொண்டிருக்கின்றனர்.

மட்டக்களப்பில் தமிழர்களுக்கு எதிராக எத்தனையோ சதித்திட்டங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கையில் கூட்டமைப்பில் சிலர் எதுவுமே நடக்கததுபோல் எல்லாம் கிடைத்துவிட்டதாக கருதி ஊமையாக இருக்க நினைக்கின்றனர் என்பதையே இன்றைய போக்கு காட்டுகின்றது.

மட்டக்களப்பின் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கின்ற தைரியமும் போக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லையா அல்லது அமைச்சர் அமீரலி சொன்னதைபோன்று அவர்கள் கொழும்பில் நாக்கு வழித்துவிட்டார்களா? என்பதுதான் இன்னும் புரியாமல் உள்ளது.

கிழக்கில் தனி அலகு வடகிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு எங்களுக்கு கிழக்கில் காணி ஒதுக்கப்படவேண்டும் என்று தங்களது முஸ்லீம் சமூகம் சார்ந்து பேசுவது எப்படி அவர்களது உரிமையோ அதைபோன்று தமிழர்கள் தங்களது சமூகம் சார்ந்து பேசுவது அவர்களது உரிமை.

 முஸ்லீம் தலைமைகள் பேசினால் உரிமை தமிழ் தலைமைகள் பேசினால் இனவாதமா? இந்த பூச்சாண்டிக்கு புதிய தமிழ் தலைமைகள் அடிமைப்பட்டு தமிழினத்தை அடிமையாக்காது எந்த இடத்திலும் யாருக்காகவும் தங்களது சோந்த பிரச்சினைகளுக்காக தமிழர்களின் உரிமைக்காக எல்லோரும் ஒற்றுமையுடன் குரல்கொடுங்கள் இல்லையெனில் உங்களது அரசியல் செயற்பாடுகளை தமிழ் மக்கள் கண்காணித்துக்கொண்டு இருக்கின்றார்கள் உங்களது செயற்பாடுகளுக்கான பதிளை தமிழர்கள் எதிர்காலத்தில் தருவார்கள் என்பதை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

“உரிமைகளுக்காக போராட துணிந்த தமிழ் சமூகத்தை சலுகைகளுக்காக அடிமையாக்க முனையாதிர்கள”; என்பதே தமிழர்களின் வேண்டுகோளாகவுள்ளது.

 

http://battinaatham.com/description.php?art=3244

இனமானமில்லாதவன் தமிழன் ; தெருநாய்கள், மடையர்கள் என விமர்சனம்

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Athavan CH said:

“பொல்லைக் கொடுத்து நல்லா அடிவாங்குகிறார்” “இவர் அவரது வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கலாம் தானே”  “நல்லா மாட்டித்தார் வாங்கி கட்டட்டும்” “இவர் ஏன் மதவாதம் பேசவேனும்” “அவனுகளுடன் சேர்ந்துதான் போகவேனும்” “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” 

சபாஷ்டா .......அப்படித்தான் இருக்கணும் ...வந்தமா ...போராட்டம், தலைவர், 2016 தீர்வு  என்று கதையடிச்சமா ...எல்லாத்தையும் சுருட்டி பாக்கட்டில் போட்டுவிட்டு
பிராடோவில் பறந்தமா என்றில்லாமல் தேவைக்கில்லாத விடயங்கள் கதைத்தால் இப்படித்தான் நடக்கும்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.