Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை

Featured Replies

எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?

ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!

வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 00 A 

  • Replies 70
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உன் 
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!

நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 00 B
 

  • தொடங்கியவர்

நீ தோளில் ...
சாய்ந்த போது....
இதயம் சுமையை ....
இறக்கியது ...!!!

ஒற்றை சிறகோடு ...
பறக்க சொல்கிறாய் ...
உனக்காக அதையும் ...
முயற்சிக்கிறேன் .....!!!

நம் காதல் ....
கண்பட்டுவிட்டது ....
சிதறு தேங்காய் போல் ...
உடைந்து விட்டது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 C

  • தொடங்கியவர்

என்னவளை ...
அழகாக படைத்த ....
இறைவன் ....
காதல் இல்லாமல் ....
படைத்துவிட்டான் ....!!!

என் ...
கவிதைகள் ...
கள்ளியில் உள்ள முற்கள் ....
நீ காதலித்தால் ...
முற்கள் பூவாகும் ....!!!

காதல் இல்லாமல் ....
யாரும் இருக்க முடியாது ....
பிரம்மனின் படைப்பு ...
பிழைக்காக இருக்காது ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 00 D
 

  • தொடங்கியவர்

நீ 
ரெம்ப அழகு ....
காதலையும்  அழகாக ....
மாற்றிவிடு ....!!!

இறைவன் செய்த ....
மகா தவறு ....
எனக்கு காதலையும் ...
உனக்கு அழகையும் ....
கொடுத்தது ....!!!

ஆணை 
தும்பிக்கையால் ....
தலையில் மண் ....
வாரிப்போட்டதுபோல் ...
நான் உன் மேல் வைத்த ...
நம்பிக்கையால் காதலித்து ...
அவஸ்தை படுகிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 00 E

  • தொடங்கியவர்

ஆயிரம் முறை ....
திரும்பி பார்த்தவள் ...
இப்போ ....
குனிந்தபடி செல்கிறாள்....!!!

பூவை கொடுத்து ...
பூவாக வர்ணித்து ....
பூவையை காதலித்தேன் ....
உதிர்ந்து கொண்டிருக்கிறாள் ....!!!

என் கவிதையை ....
எல்லோரும் விரும்பவைத்த ....
உன் வலிகளுக்கு நன்றி ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 F

  • தொடங்கியவர்

குங்குமம் போல் ....
சிவந்த முகத்துடன் ....
சிரித்து பேசியவள் ....
குங்கும பொட்டோடு ...
குனிந்து நிற்கிறாள் ....!!!

கொன்றால் பாவம் ....
அப்போ என்னை ...
காதலால் கொன்றவள் ...
நீயும் பாவி .....!!!

உன் ..
காதல் தோட்டத்தில் ...
என்னை சருகாக ....
ஏற்றுக்கொள் ....
உரமாக என் காதலை ....
வளர்க்கிறேன் ....!!!  

  • தொடங்கியவர்

உன் 
நினைவு வலையால் ...
சிக்கி தவிக்கும் நான் ...
பூச்சி -நீ சிலந்தி 
கௌவ்வி எடுத்துவிடு ....!!!

கடலோர பாதம் ...
கரைந்ததுபோல் ...
நம் காதலும் ...
கரைந்து விட்டது ...!!!

நீ 
எனக்கு பாசக்கயிறா ....?
பாசாங்குவேஷக்கயிறா....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 H 
1008
 

  • தொடங்கியவர்

காதலுக்கு கண் ...
இல்லை என்பார்கள் ....
உனக்கு இதயமே ...
இல்லையே....!!!

என்னை விட்டு போ ....
கவலையில்லை ...
என்னையும் கூட்டி ...
செல்வதில் உனக்கென்ன ...
கவலை ....?

நீ 
என்னருகில் இல்லாத ....
போதெலாம் -நான் 
ஓடாத மணிக்கூடு ....!!!
^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K A 00 I
1009
 

உன் சிரிப்பு ...
மற்றவர்களுக்கு ...
சிதறும் சில்லறை ...
எனக்கு நெற்றி 
பொட்டுக்காசு.....!!!

காதல் 
இழப்பை கொண்டுவரும் ....
உன்னையே இழக்கவைக்கும் ...
என்று நினைக்கவில்லை ....!!!

என்றோ ...
ஒருநாள் நீ என்னை ....
திரும்பி பார்ப்பாய் ....
அப்போது நான் ....
மாலையுடன் இருப்பேன் ...
உயிரோடு இருக்கமாட்டேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K  A 0AO
1010
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காதலித்தால் ....
மனிதனாகலாம் ....
அவள் காதலோடு ....
இருந்தால் ....!!!

நானும் ......
பாவத்தை ....
சுமக்கும் சிலுவை ....
நாதன் தான் .....
அவள் வலியை ....
சுமக்கிறேன் .....!!!

அவளிடம் ....
காதல் நிறைந்து ....
இருக்கிறது ...
அவள் வீட்டில் ....
காசு நிறைந்திருகிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AA
1011
 

  • தொடங்கியவர்

அடுத்த ....
ஜென்மத்தில் ....
காதலிபப்தற்காக ....
இந்த ஜென்மத்தில் ....
வலிகளை தருகிறாள்....!!!

கண்களால் சித்திரம் ....
வரைந்தவள் .....
கண்ணீரால் சித்திரம் ....
வரைய வைக்கிறாள் ....!!!

காதலுக்காக ...
நமக்குள்  நாமே ....
காதல் செய்வோம் ....
காதல் என்றாலும் ....
இன்புறட்டும் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AB
1012

  • தொடங்கியவர்

என் ......
கவிதைகளை ...
வலிமையாக்க -நீ 
இன்னும் வலிகளை....
தந்துவிடு .....!!!

உன்னை 
காதலிப்பதும் .....
மணல் வீடு கட்டுவதும் .....
ஒன்றுதான் .....!!!

யார் சொன்னது ...
காதலுக்கு கண் இல்லை ...
என்று - அப்போ கண்ணீர் ....
எப்படி வருகிறது ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AC
1013

  • தொடங்கியவர்

நான் காதலில் ...
கனவு காண்கிறேன் ...
நீ தூக்கத்தில் 
கனவு காண்கிறாய் ....!!!

ஈசலின் வாழ்வும் ....
ஒருசில மணிநேரம் ...
காதலின் இன்பமும் ....
ஒருசில மணிநேரம் ....!!!

பகலின் முடிவு இருள் ....
காதல் இதயத்தின் அருள் ...
காதலின் முடிவு இருள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AD
1014

  • தொடங்கியவர்

இறந்த காலம் சில ...
வேளை இனிமையாகும் .
இறந்த காதலும் சில ...
வேளை இனிமையாகும் ....!!!

தண்ணீர் ஊற்றி ....
செடியை வளர்க்கிறேன்.
கண்ணீர் விட்டு ....
காதலை  வளர்க்கிறேன்....!!!

நீ அதிசயப்பிறவு ....
காதலின் தொடக்கத்திலும் ...
இறுதியிலும் சிரித்த ...
முகத்தோடு செல்கிறாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AE
1015

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உன்னை காதலிக்க .....
எழுதிய கவிதைகள் .....
கண்ணீர் கவிதையாக .....
மாறி வருகிறது ....!!!

மறந்துபோய் உன்னை ....
மறந்து நினைத்துவிட்டேன் ...
காதலில் மட்டும்தான் ....
மறதி தொழிற்படாது .....!!!

கண்ணுக்குள் பூவாக ....
இருந்த -நீ 
முள்ளாய் ஏன் மாறினாய் ...?
கண்ணீரை எதற்காக ....
வரவழைக்கிறாய் ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AF
1016

  • தொடங்கியவர்

நீ 
காதல் தூண்டில் ....
நான் 
சிக்கிய மீன் ......!!!

இறைவன் ...
அழகாக படைக்கும் ....
போது அவஸ்தையையும் ....
படைக்கிறான் ....!!!

காதலை விட ....
கண்ணீர் வலுவானது ....
நிச்சயம் வரும் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AG
1017

  • தொடங்கியவர்

காதலில் பாத சுவடு  .....
எதிரும் புதிருமாக ....
காணப்படுவது ....
நம்மில் தான் ....!!!

உன்னை நினைக்கும் ...
போதேல்லாம் ...
என் எழுதுகருவி ....
தீப்பந்தமாகிறது .....!!!

உனக்காக ....
கல்லறையில் ....
காத்திருக்கிறேன் ....
என்றோ ஒரு நாள் ....
நீயும் அங்கு வருவாய் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
K இ K - A 0AH
1018

  • தொடங்கியவர்

நெருப்பாக நீ இரு ....
நீராக நான் வந்து ....
அணைக்கிறேன் ...
காதல் ....
கருகிப்போகட்டும் ......!!!

என் புருவத்தில் ....
ஊஞ்சல் ஆடியவலே ....
இப்போ கண்ணில் ...
இருந்து........
வெளியேறுகிறாள் ....!!!

உச்ச கட்ட காதல் ....
காட்சி முடிவுக்கு ....
வந்தது .....
காட்சியை பார்ப்பவர் ....
கண்களில் கண்ணீருடன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1019

  • தொடங்கியவர்

காதல் 
கடல் போன்றது ....
உண்மைதான் ...
கண்ணீர் உவர்க்கிறது ....!!!

நீ 
பேசிய நாள் ...
பௌணமி ...
பேசிய வார்த்தை ...
அமாவாசை .....!!!

காதல் ...
திருமண அழைப்பிதல் ...
வரும் வரை தான் ....
இன்பம் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1020

  • தொடங்கியவர்

காதலின் ..
கல் வெட்டு ....
திருமண அழைப்பிதழ் ....!!!

காதல் 
ஒரு முக்கோணம் .....
எந்தப்பக்கம் ....
உடைந்தாலும் ....
குப்பைதொட்டி ....!!!

உனக்காக வாழ்ந்தேன் ....
காதல் இனித்தது ....
உனக்காகவே வாழ்ந்தேன் ....
உவர்க்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1021

  • தொடங்கியவர்

தென்றல் காற்றாய் ....
வீசிய நீ 
எதற்காய் கண்ணில்...
தூசியை கொட்டினாய் ...?

காட்டாறு வெள்ளம் -நீ 
கொஞ்சம் இரக்கப்படு....
சிறு படகாக உன்னில் ....
மிதக்கிறேன் ....!!!

எனக்கு நீ மட்டுமே ...
உனக்கு நான் ...?
நான் மட்டுமா ....?

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1022

  • தொடங்கியவர்

ஈரமான நாக்கில் 
எரிகிறது ...
காதல் வார்த்தை .....!!!

காதல் ஒரு 
பயிரிடல் பருவம் ...
அறுவடை ...
திருமணம் ....!!!

உன் மனதில் ...
வில்லனாக நான் ...
தூக்கி எறிந்து விடாதே ...
வலியை நீயும் ....
சுமக்க வேண்டும் ...!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1023
 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காதலாலும் உன்னை ....
காணமுடியும் .....
கண்ணீராலும் உன்னை ...
காணமுடியும் ....!!!

உன்னை பார்க்க .....
ஆசைப்படும் போது ....
கவிதையால் பார்ப்பேன் ...
இல்லையேல் கண்ணீரால் ....
பார்ப்பேன் ......!!!

நினைவுகள் எல்லாம் .....
தண்ணீர் போல்  ஆவியாகி ....
கண்ணீராய் மழை போல் ....
கொட்டிக்கொண்டே இருக்கிறது ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1024

  • தொடங்கியவர்

உன்னை காதலித்தது ...
முதல் என் ஆயுள் ரேகை ....
தேய்த்துக்கொண்டே ......
வருகிறது ......!!!

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!

காதலில் சொல்லுவதை ....
சொல்லவேண்டும் ....
சொல்லாததை சொல்ல ...
கூடாது .....
அந்த வார்த்தை எது ...?
என்பது புரியாத புதிர் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 
1025

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.