Jump to content

30 வகை கோடை உணவுகள்


Recommended Posts

30 வகை கோடை உணவுகள்

 

 

p101.jpg

‘இந்த முறை எப்படி வாட்டி எடுக்கப் போகுதோ...'  கோடை தொடங்கும்போதே மக்கள் மனதில் இந்த பீதியும் தொடங்கிவிடும். ”மற்ற சீஸன்களைப் போலவே கோடையும் என்ஜாய் பண்ண வேண்டிய ஒன்றுதான். நீண்ட விடுமுறை, புது இடங்களைப் பார்க்கும் வாய்ப்பு, நெருங்கிய உறவினர்களைச் சந்தித்து மகிழ்தல் என கோடை பல சந்தோஷத் தருணங்களை உங்கள் வாசற்படிக்கு கொண்டுவந்து சேர்க்கும்.

p103.jpgஇந்த பருவத்துக்கேற்ப நம் பழக்கவழக்கங்கள், உணவு முறையை கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதிக சிரமமின்றி எளிதில் கடந்துவிடலாம்'' என்று கூறும் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால், உடலுக்குக் குளிர்ச்சி தரும் பொருட்களைக் கொண்டு 30 வகை கோடை உணவுகளை இங்கே வழங்குகிறார்.

ஹேவ் எ நைஸ் சம்மர்!


கொத்தமல்லி கார பால்ஸ்

தேவையானவை: அரிசி ரவை - 2 கப், கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு, பச்சை மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், புளி - சிறிதளவு, கடுகு - ஒன்றரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  எண்ணெய், உப்பு,  - தேவையான அளவு.

p104.jpg

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும்போது, அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து  ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.


மேத்தி ரைஸ்

தேவையானவை: முளைகட்டிய வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பாசுமதி அரிசி (அ) புழுங்கல் அரிசி - ஒரு ஆழாக்கு, தக்காளி - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2 (கீறிக்கொள்ளவும்), மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  - சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு  - தேவையான அளவு.

p105.jpg

செய்முறை: தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, முளைகட்டிய வெந்தயம் சேர்த்து வதக்கி... மஞ்சள்தூள், மல்லித்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கி, 2 ஆழாக்கு நீர் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியை சேர்த்துக் கலந்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை ‘சிம்’மில் 10 நிமிடம் வைத்து திறந்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


வெஜ் - ஃப்ரூட் சாலட்

தேவையானவை: வேகவைத்த உருளைக்கிழங்கு, வேகவைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, மாதுளை முத்துக்கள் - ஒரு கப்,  தேன் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சாட் மசாலா, உப்பு - தேவைக்கேற்ப.

p106.jpg

செய்முறை: வேகவைத்த உருளைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். தக்காளி, வெள்ளரிக்காய், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். இவற்றை ஒன்று சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, ஜில்லென்றும் பரிமாறலாம்.


ஃபிரெஷ் கோஸ் சாலட்

தேவையானவை: முட்டைகோஸ், கேரட், பச்சை திராட்சை - தலா 100 கிராம், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

p107.jpg

செய்முறை: கோஸ், கேரட்டை மெல்லியதாக, நீள நீளமாக நறுக்கி, ஒரு பவுலில் சேர்த்து... அதனுடன் பச்சை திராட்சை, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள், ஆலிவ் ஆயில், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்றும் பரிமாறலாம்.


மிக்ஸ்டு ஜிஞ்சர் ஜூஸ்

தேவையானவை: ஆரஞ்சு - ஒன்று (உரித்து தோல், விதை நீக்கவும்), பைனாப்பிள் - 2 ஸ்லைஸ் (நறுக்கவும்), இஞ்சி - சிறு துண்டு, சர்க்கரை - தேவையான அளவு

p108.jpg

செய்முறை: ஆரஞ்சு, பைனாப்பிளுடன் சர்க்கரை, தோல் சீவி நறுக்கிய  இஞ்சி சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்து, ஐஸ் க்யூப் போட்டுப் பரிமாறலாம்.

ஜூஸ் திக்காக இருந் தால், சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.


முளைக்கீரை ஊத்தப்பம்

தேவையானவை: தோசை மாவு - 2 கப், முளைக்கீரை - ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p108a.jpg

செய்முறை: தோசை மாவுடன் கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடாக்கி, மாவை சற்று கனமான ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.


ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி

தேவையானவை: ஜவ்வரிசி - அரை கப், சர்க்கரை - தேவையான அளவு, காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

p109.jpg

செய்முறை: ஜவ்வரிசியை வாணலியில் போட்டு நன்கு பொரியும் வரை வறுத்து, பிறகு மிக்ஸியில் பொடிக்கவும். பொடித்த மாவுடன் சிறிதளவு கொதிக்கும் நீர் விட்டுக் கரைத்து... அத்துடன் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.


வெள்ளரி சாப்ஸ்

தேவையானவை: வெள்ளரிக்காய் - கால் கிலோ (தோல் சீவி, வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன், மாங்காய்த்தூள் (ஆம்சூர் பொடி) - அரை டீஸ்பூன், சிறிய பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெய் - சிறிதளவு,  உப்பு - தேவைக்கேற்ப.

p110.jpg

செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், சர்க்கரை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு வெள்ளரி துண்டுகளை சேர்த்து வதக்கி... மிளகாய்த்தூள், மல்லித்தூள், ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 2 நிமிடம் மூடிவைக்கவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம். சாதத்துக்கும் தொட்டு சாப்பிடலாம்.


புடலங்காய் ராய்த்தா

தேவையானவை: இளசான புடலங்காய் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, சின்ன வெங்காயம் - 8, கடுகு - அரை டீஸ்பூன், உளுந்து - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

p111.jpg

செய்முறை: புடலங்காய், சின்ன வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் புடலங்காயை சேர்த்து லேசாக வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும். இதனைப் பரிமாறும்போது கெட்டித் தயிர், உப்பு சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.


சிவப்பு முள்ளங்கி சட்னி

தேவையானவை: சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) - கால் கிலோ, பொட்டுக்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), புளி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

p112.jpg

செய்முறை: சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத் தெடுக்கவும்.


ஆந்திரா ஸ்பெஷல் கீரை கடையல்

தேவையானவை: அரைக் கீரை - ஒரு கட்டு, தக்காளி, பச்சை மிளகாய் - தலா 2, கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, பூண்டு - 4 பல் (நசுக்கிக்கொள்ளவும்), எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

p113.jpg

செய்முறை: கீரையை சுத்தம் செய்து நறுக்கி, அதனுடன் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு  தாளித்து, கீரைக் கலவையோடு சேர்த்து, உப்பு போட்டு நன்கு கடைந்து பரிமாறவும்.


பனானா ஐஸ் ஷேக்

தேவையானவை: ரஸ்தாளி வாழைப்பழம் - 2 (பொடியாக நறுக்கவும்), பனானா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒரு கப், ஐஸ் க்யூப் - 2, வெனிலா ஐஸ்க்ரீம் - சின்ன கப்.

p113a.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் (வெனிலா ஐஸ்க்ரீம் நீங்கலாக) மிக்ஸியில் சேர்த்து நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஒரு டேபிள்ஸ்பூன் வெனிலா ஐஸ்க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.


சின்ன வெங்காய குழம்பு

தேவையானவை: பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - அரை டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு, புளிக்கரைசல், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p114.jpg

செய்முறை: வாணலியில் நல்லெண் ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

சின்ன வெங்காயம் உடல் சூட்டை தணிக்கும்.


மல்ட்டி ஃப்ரூட் சாலட்

தேவையானவை: ஆப்பிள் - ஒன்று, அன்னாசிப்பழம் - 2 ஸ்லைஸ், ஆரஞ்சு சுளைகள் - 4, சின்ன மாம்பழம் - ஒன்று, கறுப்பு அல்லது பச்சை திராட்சை - அரை கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப், டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு.

p115.jpg

செய்முறை: பழங்களை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சர்க்கரையை லேசாக பாகு காய்ச்சவும். அகலமான பவுலில் நறுக்கிய பழங்களை நிரப்பி, மேலே சர்க்கரைப்பாகை ஊற்றவும். அதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீமை பரப்பி, டூட்டி ஃப்ரூட்டியைத் தூவிப் பரிமாறவும்.


மேங்கோ பன்னா

தேவையானவை: மீடியம் சைஸ் மாங்காய் - 3, பொடித்த வெல்லம் - கால் கிலோ, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், கேசரி பவுடர் - தலா ஒரு சிட்டிகை, கல் உப்பு - ஒரு டீஸ்பூன்.

p116.jpg

செய்முறை: மாங்காய்களைக் கழுவித் துடைத்து, குக்கரில் 10 நிமிடம் வேகவிட்டு... தோல், கொட்டை நீக்கி, நன்கு மசித்து, கூழாக்கிக்கொள்ளவும். பொடித்த வெல்லத்துடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கம்பிப்பதம் வந்தவுடன் மாங்காய்க் கூழ், துருவிய இஞ்சி, கல் உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு... கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். ஆறியதும், பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும்.
தேவைப்படும்போது 2 ஸ்பூன் பன்னாவோடு வேண்டிய அளவு ஜில் தண்ணீர் சேர்த்து பருகினால்... தாகம் தணியும்; உடலுக்கும் குளுமை தரும்.


அன்னாசி சல்ஸா

தேவையானவை: பொடியாக நறுக்கிய அன்னாசிப்பழம் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் - தலா 2 (பொடி யாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை தோலின் துருவல் - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.

p117.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து 20 நிமிடம் ஊறவிட்டு பரிமாறவும்.


பெரிய நெல்லி சட்னி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 4 (கொட்டை நீக்கி பொடியாக நறுக்கவும்),  உதிர்த்த கறிவேப்பிலை - அரை கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு கப், பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக்கேற்ப), பூண்டு - 2 பல், உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு  - தேவையான அளவு.

p117a.jpg

செய்முறை: வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும் அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். பிறகு, வாணலியில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய நெல்லிக்காயை போட்டு வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும். வதக்கியவற்றை ஒன்றுசேர்த்து, மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்.


தால் இட்லி

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா கால் கப், வெந்தயக் கீரை - சின்னக்கட்டு, பச்சை மிளகாய் - 3 (அல்லது காரத்துக் கேற்ப), இஞ்சி - சிறு துண்டு (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், எண்ணெய் ­- சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

p118.jpg

செய்முறை: வெந்தயக் கீரை, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். துவரம்பருப்பு, பச்சரிசி, உளுத்தம் பருப்பை ஒன்றாக ஊறவைத்து சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் பச்சை மிளகாய், கீரை, இஞ்சி, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள், உப்பு,  நெய் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, இட்லித்தட்டில் எண்ணெய் தடவி மாவை விட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

இந்த இட்லிகளை சதுரம் சதுரமாக கட் செய்து சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.


ராடிஷ் ஸ்வீட் அல்வா

தேவையானவை: துருவிய ராடிஷ் (சிவப்பு முள்ளங்கி) - ஒரு கப், பனங்கற்கண்டு - ஒன்றரை கப், (மிக்ஸியில் நன்கு பொடிக்கவும்), நெய் - தேவையான அளவு

p119.jpg

செய்முறை: பனங்கற்கண்டை மிக்ஸியில் நன்கு பொடிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சிவப்பு முள்ளங்கி துருவலுடன் சிறிதளவு நீர் சேர்த்து வேகவிட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில்போட்டு மையாக அரைக்கவும். அடிகனமான வாணலியில் பனங்கற்கண்டு பொடியைப் போட்டு அது மூழ்கும் வரை நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். பனங்கற்கண்டு கரைந்ததும் வடிகட்டி, பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும். லேசான கம்பிப்பதம் வந்ததும் அரைத்த முள்ளங்கி விழுதைப் போட்டு  கிளறவும். அவ்வப்போது சிறிதளவு நெய் சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.


சாதக் கஞ்சி

தேவையானவை: இரவில் மிகுந்து போன சாதத்தில் நீர் விட்டு வைத்தது - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்), தயிர் (அ) மோர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

p120.jpg

செய்முறை: பழைய சாதத்தில் தயிர் (அ) மோர் சேர்த்து, உப்பையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும் அதனுடன் மேலும் சிறிதளவு மோர் சேர்த்து நன்கு கலந்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பருகவும்.


சிங்கப்பூர் கோஸ் கறி

தேவையானவை: சின்ன முட்டைகோஸ் - ஒன்று, பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 3 பல், தேங்காய்ப்பால் - கால் கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை, எண்ணெய், உப்பு - சிறிதளவு.

p120a.jpg

செய்முறை: முட்டைகோஸை மெல்லியதாக, நீள நீளமாக நறுக்கவும். பூண்டு, வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கி, பிறகு கோஸை சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து, மூடி போட்டு வேகவிட்டு இறக்கி, கொத்தமல்லித் தழை தூவிக் கிளறி பரிமாறவும்.


ஆப்பிள் மில்க் ஷேக்

தேவையானவை: தோல் சீவி, பொடியாக நறுக்கிய ஆப்பிள் - 2 கப் (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்), ஸ்ட்ராபெர்ரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - அரை லிட்டர், பொடித்த பாதாம், முந்திரி - தேவையான அளவு, ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு.

p121.jpg

செய்முறை: பொடித்த பாதாம், முந்திரி நீங்கலாக, மற்ற எல்லாவற்றையும் மிக்ஸி யில் நன்கு நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றி...  பாதாம், முந்திரி தூவிப் பரிமாறவும்.


கம்பு மாவு அடை

தேவையானவை: கம்பு - 2 கப் (ஊறவைத்து, கழுவி, உலரவிட்டு, சற்று ஈரமாக இருக்கும்போதே மெஷினில் கொடுத்து (அ) மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப், சிறிய பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

p122.jpg

செய்முறை: வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயை வதக்கி, அரைத்த கம்பு மாவுடன் சேர்த்து... உப்பு போட்டு, தேவையான நீர் விட்டு நன்கு பிசையவும். அடுப்பில் தோசைக்கல்லில் மாவை வைத்து அடையாக தட்டி, சிறிதளவு எண்ணெய் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.


நீர் மோர்

தேவையானவை: தயிர் - ஒரு கப், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று,  கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை - சிறிதளவு.

p122a.jpg

செய்முறை: இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்த மல்லித்தழை ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, தேவையான தண்ணீர் சேர்த்து, தயிர் கடையும் மத்தைப் பயன்படுத்தி நன்றாகக் கடையவும். இதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும்.


மல்டி வெஜிடபிள் சூப்

தேவையானவை: மிகவும் பொடியாக நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ் (சேர்த்து) - ஒரு கப், கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு.

p123.jpg

செய்முறை: கொத்தமல்லித்தழையை ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். கார்ன்ஃப்ளாரை கொஞ்சம் நீரில் கரைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத் தில் நீரைக் கொதிக்க விட்டு, காய்கறிகள், கொத்த மல்லித்தழை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்து ஆறியதும், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அதனுடன் சிறிதளவு நீர்,  கார்ன்ஃப்ளார் கரைசல், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கி, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


முருங்கை - தால் சூப்

தேவையானவை: முருங்கைக்காய் - 4, பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பூண்டு - 4 பல், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டீஸ்பூன், வெண்ணெய், மிளகுத்தூள், கொத்தமல்லித்தழை, உப்பு - சிறிதளவு.  

p124.jpg

செய்முறை: முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, வேகவிட்டு, ஆறியதும் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிட்டு மசித்துக்கொள்ளவும், பூண்டு, பெரிய வெங்காயம், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பூண்டு, வெங்காயத்தை வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, முருங்கைக்காய் விழுது சேர்த்து தேவையான நீர் ஊற்றி கொதிக்கவிடவும். கார்னஃப்ளார் கரைசலை சேர்த்து நன்றாக கலந்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கி... உப்பு, மிளகுத்தூள் தூவிப் பரிமாறவும்.


மாதுளை ராய்த்தா

தேவையானவை: மாதுளை முத்துக்கள் - ஒரு கப், கெட்டித் தயிர் - ஒன்றரை கப், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்), உப்பு - தேவையான அளவு.

p125.jpg

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்துப் பிசிறவும். இதில் கெட்டித் தயிரைக் கலக்கவும். பரிமாறும் சமயம் மாதுளை முத்துக்களைக் கலந்து பரிமாறவும்.


சௌசௌ தால்

தேவையானவை: சௌசௌ - ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்), பாசிப்பருப்பு - கால் கப், சின்ன வெங்காயம் - 8, பச்சை மிளகாய் - 2, சீரகம், உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, நெய் - சிறிதளவு, உப்பு - சிறிதளவு.

p126.jpg

செய்முறை: பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி, பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். வெந்த பருப்பை கடாயில் சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்து... நறுக்கிய வெங்காயம், சௌசௌ, கீறிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேகவைக்கவும். சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை நெய்யில் தாளித்து, பாசிப்பருப்பு - காய் கலவையில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


டேட்ஸ் மில்க் ஷேக்

தேவையானவை: பேரீச்சம்பழம் - 6, (பொடி யாக நறுக்கவும்) காய்ச்சி ஆறவைத்த பால் - அரை கப், வாழைப்பழம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), ஐஸ் க்யூப் - 2, வெனிலா எசன்ஸ் - சில துளிகள், சர்க்கரை - தேவையான அளவு, தேன் - சிறிதளவு.

p126a.jpg

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, நன்கு நுரைக்க அடித்து, கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பருகவும்.


மூங்தால் - மில்க் கஞ்சி

தேவையானவை: பாசிப்பருப்பு - கால் கப், பால் - கால் கப், பொடித்த வெல்லம் - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

p127.jpg

செய்முறை: பாசிப்பருப்புடன் ஒரு கப் நீர் சேர்த்து மலர வேகவிடவும். வெல்லத்தை மூழ்கும் அளவு நீர் விட்டு அடுப்பில் வைத்து கரையவிடவும். பிறகு வடிகட்டி, அதனுடன் பாசிப்பருப்பு, பால், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்


ஆச்சி கிச்சன் ராணி

சீஸ் - சேமியா ரோல்ஸ்

தேவையானவை: சேமியா - 2 கப், வேகவைத்த பச்சைப் பட்டாணி - கால் கப், வேகவைத்த ஸ்வீட் கார்ன் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், ஆச்சி மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், ஆச்சி கரம் மசாலா - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - 2, சீஸ் க்யூப் - ஓன்று (துருவிக்கொள்ளவும்) கொரகொரப்பாக பொடித்த ஓட்ஸ் - கால் கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

p129.jpg

செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். சேமியாவுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடிகட்டவும். ஆறியதும் பாத்திரத்தில் போட்டு மசித்துக்கொள்ளவும். வேகவைத்த பச்சைப் பட்டாணியையும் சேர்த்து மசிக்கவும். இதனுடன், வேகவைத்த ஸ்வீட் கார்ன், நறுக்கிய கொத்தமல்லிதழை சேர்க்கவும். பிறகு, ஆச்சி கரம் மசாலா, ஆச்சி மிளகாய்த் தூள், உப்பு, வெங்காயம் - பச்சை மிளகாய் விழுது, துருவிய சீஸ், பொடித்த ஓட்ஸ் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சற்றே நீளவாக்கில் உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=105007&sid=3174&mid=3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்துறீங்கள்... ஒவ்வொன்டாய்ச் செய்தாலும் இந்தக் கோடை போய் அடுத்த கோடையும் வந்துடும் போல....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செவிட்டு நுளம்புகளாயிருந்திருக்கும்.  🤣 அதனைத் தொடர்ந்திருந்தால, தற்போதைய நிலையில்  Sri Lankan Elon Musk என்று புகழப்பட்டிடுப்பீர்கள்.  ☹️
    • அது தான் பிரச்சினை நீங்கள் அடுத்தவன் பெட் ரூமில் எட்டிப் பார்த்து கண்ணகி 2.0 வை வைத்து தேசியத்தை தேட நாங்களோ யாழில் 90 வீதம் மாவீரர், கொழும்பில் புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பவர்களிடமும் தான் தேசியத்தை தேடுகிறோம். கருணா தேசியத்தலைவரை மதிக்கிறேன் என்று துணிந்து பெயரளவிலாவது சொன்னான். வாசகர்களுக்கு தெரியும் சீமான் கூத்தமைப்பை விட எவ்வளவு திறமென்று. அட நானே சொல்கிறேனே 2009 இலிருந்து வாத்திமார் Promote பண்ணிய அக்மார்க் கூத்தமைப்பு தான் என்னை கருணாவுக்கு வோட்டு போட வைத்ததென்று. கூத்தமைப்பு மட்டும் இல்லாதிருந்தால் கருணாவுக்கு அரசியலே இல்லை. என்னை நம்பாட்டில் நீங்க நசீரிடம் கேட்கலாம், தாத்தாவை நினைத்து கண்ணீர் வடிப்பார். அந்தக் காலம் அப்போ ஊரிலிருந்து சும்மா புழுகிக் புழங்காகிதமடைந்து கோடிஸ்வரனுக்கு வாக்களித்த வசந்தன் கோ காலம்.   
    • இது உண்மையாயின் திருமதி சுமந்திரன் வழக்கு போட வேண்டும். திருச்சபைக்கு வருவதை ஒருவருக்கு வருவதாக சொல்வதும் - அதை அவர்கள் சட்டவிரோதமாக பாவிப்பதாக சொல்வதும் - பொய்யாயின் பாரிய பொய்கள். ஆனால் இப்படி வழக்கு போட்டால் அதை வைத்து ஒரு சைவ-கத்தோலிக்க முறுகலை உருவாக்கி குளிர்காயலாம் என சங்கி ஆனந்தம் நினைப்பதாகவும் இருக்க கூடும்.  
    • நான் இப்படி வார்த்தைகளை இந்த திரியிலுமோ வேறு எந்த திரியிலுமோ பயன்படுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு ஏவரோ ஒரு நாலாம் தர நபருக்கு அவர் இறந்த பின் கொடுத்த 3ம் தர பதில்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் இந்த திரியில் என்னை இழுத்து சாதி கதை கதைத்வருக்கு கொடுக்க வேண்டிய ஷாட்டை கொடுத்துள்ளேன். நாங்கள் யூகே யில் அல்ல, உப்பு கராஜில் இருக்கும் போதும் இப்படி சாதி திமிர் கதையள் கதைக்கிற ஆட்களை கண்டால் போட்டு மொத்தி போட்டுத்தான் விடுறது. தெருப்பொறுக்கியில் சீமானை காணவில்லை. இரெண்டும் ஒன்ராக இருக்கும் போது ஏன் பிரிவினை🤣. நான் எந்த அரசியல்வாதியையும் தலைவராக ஏற்றதமில்லை வேலை செய்ததும் இல்லை. பிள்ளையான், கருணாவின் பிரசாரகர் மொள்ளமாரி தலைவர்களை பற்றி பேசுவது - இந்த சிரிப்பையும் வாசகர்களிடமே விடுகிறேன்.
    • இந்த கஜே.- கஜே கோஷ்டியை த. தே. கூ இல் இருந்து 2010 ல் பிரித்தெடுத்தலில் இருந்து இவர்களை இயக்குபவர்கள் தொடர்புசசியாக தொடர்பில் இருப்பவர்கள் புலம்பெயர் தேசிக்காய் அமைப்புகள் தானே! புலம் பெயர் தேசிக்காய் அமைப்புகள் என்றால் “கொள்ளை” என்ற வார்ததை கச்சிதமாக பொருந்தும் தானே! 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.