Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் சீரழிக்கப்படுகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சீரழிக்கப்படுகிறது

Barack Obama

- பிறைவாணன்

போர் இடம்பெற்ற காலப் பகுதியில் உலகமே வியர்ந்து பார்த்த தமிழ் கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட யாழ்ப்பாணம், போர் முடிவடைந்து 7 வருடங்களைத் தாண்டவுள்ள நிலையில் பண்பாடுகள் சீரழிக்கப்பட்டு களவு, கொலை, பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் பாவனை, விபச்சாரம் என்று வாழ்வை இழந்து நிற்கிறது.

யாழ்ப்பாணம் மாதகலில் கடல் மூலமாக போதைப் பொருள் வந்து இறங்குகிறது. இந்தப் பகுதி கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். அக் கட்டுப்பாட்டை மீறி எப்படி கடத்தல்காரர்களால் போதைப் பொருளை இலகுவாக இங்கு கொண்டு வரமுடிகிறது?  மாணவர்கள் மத்தியில் இந்தப் போதைப் பொருள் பழக்கத்தை உருவாக்கி விடுகின்றார்கள். இதற்காக ஆசிரியர்களை பயன்படுத்துகின்றார்கள்.

விபச்சாரத் தொழில் தங்குதடையின்றி நடைபெறுகிறது. போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமல்ல தென்னிலங்கையில் இருந்தும் பெண்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விபச்சாரத் தொழிலை மேற்கொள்கிறார்கள். இதற்காக தனி வீடுகள் கொட்டல்களை பயன்படுத்துகிறார்கள். யாழ் நகரப் பகுதி வடமராட்சி தென்மராட்சி போன்ற கிராமப் பகுதியிலும் விபச்சாரம் இடம்பெறுகிறது.

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் தான் இவர்களுக்கு தேவையான ஒழுங்குகளைச் செய்து வருகின்றனர். தனி வீடு எடுத்துக் கொடுப்பதில் இருந்து பெண்களை ஒழுங்குபடுத்துவது வரை இவர்களின் வேலையாகவுள்ளது. தனது குழந்தைக்கு பால் மா பைக்கெட் வாங்குவதற்காக விபச்சார தொழிலுக்கு வந்ததாக பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வாக்கு மூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

வறுமை காரணமாக பெண்களை வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி அழைத்து வந்து விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி விடுவதில் தென்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல வடபகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் பங்குண்டு.

பாதை திறக்கப்பட்ட போதுதான் வேண்டப்படாதவர்கள் வடபகுதிக்குள் காலடி எடுத்து வைத்தனர். இவர்களில் தமிழர்களும் அடங்குவர். கட்டுக்கோப்பாக இருந்த காலப் பகுதியில் வடபகுதியில் இருந்த தீய சக்திகள் வெளியேறியிருந்தனர். இன்று அந்தக் கட்டுக்கோப்பு குலைந்த நிலையில் மீண்டும் தீய சக்திகள் வடபகுதிக்குள் ஊடுருவி விட்டனர்.  இவர்களால் களவுகள், கொலைகள், பாலியல் வல்லுறவுகள், விபச்சாரம், போதைப் பொருள் கொண்டு வரப்பட்டமை போன்ற சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

50 களில் தமிழர்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெரும் வளர்ச்சியடைந்திருந்தனர். இதனால் அவர்களே தமக்கான அரசியலை உருவாக்கி தமிழ் மக்களுக்காக பேசினர். அது முடியாமல் போக அகிம்சைப் போரையும் நடத்தினர். பின்னர் அதுவும் முடியாமல் போக ஆயுதப் போரை நடத்தினர். ஆனால் இன்று எதிலும் முன்னேற்றம் இல்லாத காலப் பகுதியாகும். முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட நபர்கள் இருக்கிறார்கள்.

பணம் படைத்தவர்கள் வடபகுதியில் கோயில்களைக் கட்டுகிறார்கள். அதற்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்கிறார்கள். வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்வில் மீளமுடியாமல் கஸ்ரப்படுகின்றனர். இவர்களின் வாழ்வை தூக்கிவிட எவரும் முன்வருவதில்லை. மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுத்தல் போன்றவை மனித வளர்ச்சியை பிற்காலத்திற்கு கொண்டு செல்லுமே தவிர முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாது.

போரின் பின்னர் தான் மக்கள் புற்றுநோய் காரணமாக யாழில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சலரோகம், கிட்னி பாதிப்பு, எய்ட்ஸ் என உயிரைக் கொள்ளும் நோய்க்கும் ஆளாகி வருகின்றனர். பொருளாதார வசதிகளுமற்ற போர்க்கால சூழ்நிலையில் எமது மாணவர்கள் கல்வியில் உச்சத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

சினிமாவைப் பார்த்து தாமும் சினிமா ஹீரோ மாதிரி உலா வருகிறார்களே ஒழிய நிஜக் ஹீரோவாக வர எவராலும் முடியாமல் இருக்கிறது. இதனைக்கண்டும் காணாதது போல் தமிழ்க் கட்சிகள் இருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளையும் இவர்கள் எடுப்பதில்லை. தேர்தல் வரும் போது மக்கள் முன் வந்து அவர்கள் படும் துன்பங்களைச் சொல்லி நாங்கள் சளைக்காது போராடுவோம் இதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்று சொல்லி வாக்குகளை வாங்கிச் சென்றதும். என்ன சொன்னோம் என்பதை மறந்து போய்விடுவார்கள். பின்பு அரசுடன் இணக்கப்பாட்டுடன் இருந்து கொண்டு அவர்கள் சொல்லும் செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பார்கள்.

 

http://www.nanilam.com/?p=9269

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் ஒரே தெருவில் இளவுவீடு நடந்தாலும் அதே தெருவில் இன்ணொருவீட்டில் கல்யாணமும் நடக்கும் கருனாநிதி சொல்லிய வசனம் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல யாழ் (கூ)குடாநாட்டுக்கும் பொருந்தும்.

காலப்போக்கில் இவைகள் எல்லாம் சாதாரணமாகிவிடும் (இப்போதே அந்த நிலைதான்)  இதுக்கே அரண்டால் என்ன செய்வது, இது வெறும் சாம்பிள் பீஸ் மட்டும்தான் மெயின் றீலே இனிமேல்தான் ஓடப்போகுது

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் தற்பொழுது வாழும் சிட்னியில் இவை அனைத்தையும் 5 நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் ,சிட்னியில் காலாச்சாரம் கெட்டுவிட்டது வாழமுடியாது என நான் தாயகம் செல்லபோவதில்லை ....இங்குதான் தொடர்ந்து வாழ போகிறேன் வேறு வசதிகள் இங்கு அதிகம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.