Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக தேர்தல் செய்திகள்

Featured Replies

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு நிலவரம்

Comment (5)   ·   print   ·   T+  
 
 
 
 
 
 
 
  • சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்த முதன் முறை வாக்காளர்கள் | படம்: எல்.சீனிவாசன்.
    சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்த முதன் முறை வாக்காளர்கள் | படம்: எல்.சீனிவாசன்.
  • காலில் காயம் காரணமாக சக்கர நாற்காலி வசதியைப் பயன்படுத்தி ஈரோடு நகரின் வாக்குச்சாவடியில் தன் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர். | படம்: எம்.கோவர்தன்
    காலில் காயம் காரணமாக சக்கர நாற்காலி வசதியைப் பயன்படுத்தி ஈரோடு நகரின் வாக்குச்சாவடியில் தன் ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர். | படம்: எம்.கோவர்தன்

தமிழக தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 25.2% வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.3% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து 232 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

12.00 PM: தருமபுரி மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரம் 44% வாக்குப்பதிவு.

11.55 AM: கனமழையையும் பொருட்படுத்தாமல் மதுரையில் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்து வருகின்றனர்.

11.40 AM: சென்னையில் வழக்கத்தைவிட அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக ராஜேஷ் லக்கானி தகவல்.

11.35 AM: தமிழகத்தில் காலை 11 மணி வரை 25.2% வாக்குப்பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் காலை 11 மணி நேர நிலவரப்படி 27.51 % வாக்குகள் பதிவு. கேரளாவில் 28.46% வாக்குப்பதிவு.

11.30 AM: சென்னை ராயபுரம் 53-வது வார்டில் மின்வெட்டு ஏற்பட்டதால். வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

11.25 AM: திமுக, அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்து தமிழக மக்களை பணத்துக்கு அடிமையாக்கிவிட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

11.15 AM: கர்நாடக மாநிலத்திலிருக்கும் தமிழக வாக்காளர்கள் இன்று காலை பெருமளவில் ஓசூர் வந்தனர். ஒசூரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப போதிய அளவு வாகனங்கள் இல்லாததால் ஒசூர் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

11.10 AM: கடலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, நாகப்படினம் பகுதிகளில் கனமமழை பெய்து வருவதால். இந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேரத்தை தேவைக்கேற்ப அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கோனி தெரிவித்துள்ளார்.

maanach_2855341a.jpg

திருச்சி மன்னச்சநல்லூர் வாக்குச்சாவடி. படம்: ஆர்.ராஜாராம்.

10.50 AM: நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

10.45 AM: ஜெயங்கொண்டம் அருகில் புதுகுடி கிராமத்தில் ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு செல்லும் போது இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஜெயகுமார் மனைவி வளர்மதி(38).

10.35 AM: முன்னாள் சட்டப்பேரவை சபாநாயகர் சேடப்பட்டி ஆர்.முத்தையா மதுரை அவனியாபுரத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வந்துள்ளதற்கு காரணம் திமுகவின் மதுவிலக்கு வாக்குறுதி" என்றார்.

10.25 AM: சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் 40 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

10.10 AM: ஆளுங்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சென்னை மயிலாப்பூர் வாக்களித்த பின்னர் கனிமொழி தெரிவித்துள்ளார். | திமுக ஆட்சியமைக்கும்: கனிமொழி நம்பிக்கை |

kanimozhi_2855268a.jpg

படம்: எல்.சீனிவாசன்

10.00 AM: இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும்: வாக்களித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருத்து. விரிவான செய்திக்கு | தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?- ஜெயலலிதா கருத்து |

9.56 AM: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்களித்தார். அவருடன் சசிகலாவும் வாக்களித்தார்.

9.50 AM: அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் எனக் கோரினார்.

9.45 AM: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாமக ஆட்சியை பிடிக்கும் என பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

9.35 AM: புதுச்சேரியில் வாக்களிக்க காலையிலேயே ஏராளமான வாக்காளர்கள் குவிந்தனர். காலையில் தூறலாக இருந்த மழை, 9 மணியளவில்அதிக அளவில் பொழிந்தது. அப்படியிருந்தும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். காலை 9 மணி வரை புதுச்சேரி பிராந்தியத்தில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளடக்கியது) 13% வாக்குப்பதிவாகியுள்ளது. விரிவான செய்திக்கு : | புதுச்சேரியில் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு: 9 வரை 13% வாக்குப்பதிவு |

9.40 AM: சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தாருடன் வாக்களித்தார்.

vijayakanth_1_2855286a.jpg

9.25 AM: புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் - நாராயணசாமி நம்பிக்கை.

9.20 AM: காலை 9 மணி நிலவரப்படி கேரளாவில் 13.5% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.12 AM: காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 18.3% வாக்குப்பதிவாகியுள்ளது.

9.00 AM: தமிழகம், கேரளா, புதுச்சேரியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்.

8.50 AM: தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாக குஷ்பு குற்றச்சாட்டு.

8.45 AM: நடிகர் ஜீவா சென்னை தி.நகர் இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தார்.

jeeva_2855230a.jpg

படம்: எல்.சீனிவாசன்.

8.35 AM: 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: வாக்களித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை. விரிவான செய்திக்கு: | 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: ஸ்டாலின் |

stalin_new1_2855243a.jpg

படம்: மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் பக்கம்.

8.30 AM: சென்னை தேனாம்பேட்டையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

8.25 AM: திருத்துறைப்பூண்டி வேலூர் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாக்களித்தார்.

8.15 AM: பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கருத்து.

8.10 AM: திண்டுக்கல் அவர்லேடி மெட்ரிக் பள்ளி, கடலூர் கந்தசாமி நாயுடு பள்ளி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.

8.05 AM: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோட்டில் வாக்களித்தார்.

EVKS_2855221a_2855226a.jpg

படம்: எம்.கோவர்த்தன்

7.55 AM: நடிகர் கமல்ஹாசன், அவரது மகள் அக்‌ஷராஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.

kamalhasan1_2855201a.jpg

படம்: எல்.சீனிவாசன்.

7.51 AM: பணப் பட்டுவாடாவை தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையம் தோல்வியடைந்த ஆணையம்- ப.சிதம்பரம் கருத்து.

7.50 AM: நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வாக்களித்தார்.

ajith_2855240a.jpg

7.49 AM: மதுரையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ் வரிசையில் நின்று வாக்களித்தார். மதுரையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

veera_raghav_2855214a.jpg

மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ்

7.45 AM: 2 மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் என ராஜேஷ் லக்கானி தகவல்.

7.40 AM: ஒசூரில் 131-வது வாக்குச்சாவடி மற்றும் நெல்லையில் 131-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு.

7.38 AM: மாநிலம் முழுவதும் பணப்பட்டுவாடா நடந்துள்ள போது 2 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவை ரத்து செய்வது நியாயமான செயல் அல்ல. தேர்தல் ஆணையம் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை இல்லை- சீமான்.

7.35 AM: சென்னை சாலிகிராமத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.

7.30 AM: வாக்களித்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி, தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார். விரிவான செய்திக்கு: | திமுக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?- கருணாநிதி பதில் |

7.20 AM: சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்.

Karuna_2855184a_28_2855220a.jpg

7.15 AM: சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார்.

7.10 AM: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தனது மனைவியுடன் அரும்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

7.05AM: நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

rajini_2855187a.jpg

படம்: ம.பிரபு.

7.00 AM: தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி - தமாகா அணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி என ஆறுமுனைப் போட்டி நிலவுகிறது.

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெய லலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியிலும், திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரிலும் போட்டி யிடுகின்றனர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டு மன்னார்கோவிலிலும், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரத் திலும் களத்தில் உள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந் தரராஜன் விருகம்பாக்கத்திலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரிலும் போட்டியிடுகின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8606151.ece?homepage=true

சென்னையில் வழக்கத்தைவிட அதிகமான வாக்குப்பதிவு: லக்கானி

 
சென்னையில் இளம் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களிப்பு. | படம்: பி.ஜோதி ராமலிங்கம்
சென்னையில் இளம் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களிப்பு. | படம்: பி.ஜோதி ராமலிங்கம்

சென்னையில் வழக்கத்தைவிட அதிகமான அளவு வாக்குப்பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

அதேபோல், சென்னையில் முதன்முறை வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களித்து வருவதாக அவர் கூறினார்.

11 மணி வாக்குப்பதிவு நிலவரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ராஜேஷ் லக்கானி.

அப்போது அவர், "காலை 11 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 25.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் வழக்கத்தை விட அதிக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சென்னையில் முதன்முறை வாக்காளர்களும் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்.

பிறமாவட்டங்களில் கனமழை காரணமாக வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருக்கிறது. சேலம், நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 30 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/article8606592.ece?homepage=true

  • தொடங்கியவர்

திமுக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்?- கருணாநிதி பதில்

 
சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை கோபாலபுரம் சாரதா பள்ளியில் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திமுக தலைவர் கருணாநிதி வாக்களித்தார்.

வாக்குப்பதிவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.

எத்தனைத் தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற கேள்விக்கு, "தேவையான அளவுக்கு வெற்றி பெறும்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article8606197.ece?homepage=true

  • தொடங்கியவர்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?- ஜெயலலிதா கருத்து

 
 
  • சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார் முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.
    சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார் முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.
  • முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.
    முதல்வர் ஜெயலலிதா | படம்: ம.பிரபு.

இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என வாக்களித்த பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தவிர 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

காலை 10 மணியளவில் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வாக்களித்தார் முதல்வர் ஜெயலலிதா. அவருடன் சசிகலாவும் வந்திருந்தார்.

வாக்களித்துவிட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இன்னும் 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும்" எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8606309.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஆட்சிக்கு நல்லவர்கள் வரவேண்டும்: கமல்ஹாசன் விருப்பம்

 
வாக்களித்து விட்டு நடிகர் கமல்ஹாசன், கெளதமி மற்றும் கமலின் மகள் அக்‌ஷ்ரா ஹாசன் | படம்: எல்.சீனிவாசன்
வாக்களித்து விட்டு நடிகர் கமல்ஹாசன், கெளதமி மற்றும் கமலின் மகள் அக்‌ஷ்ரா ஹாசன் | படம்: எல்.சீனிவாசன்

சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும் என்று விரும்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன், அவரது மகள் அக்‌ஷராஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடாது. நல்லவர்கள் வர வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தளவுக்கு வாக்கு சதவீதம் ஏறுகிறதோ அந்தளவுக்கு ஜனநாயகம் நிலைநாட்டப்படுகிறது என்று அர்த்தம்.

வாக்கு சதவீதம் அதிகமாக வேண்டும் என்பது என் விருப்பம். அனைவருக்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமை. என் கடமையை நான் செய்துவிட்டேன். அனைவரது கடமையையும் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உங்களுக்கு வாக்கில்லை என்று ஒரு சர்ச்சை எழுந்ததே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "அது நான் விளையாட்டாக சொன்னது" என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article8606450.ece?homepage=true

  • தொடங்கியவர்

யார் வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்: நடிகர் சிவகுமார் உருக்கம்

 
sivakumar1_2855413f.jpg
 

'முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள், இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்' என்று நடிகர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், "எல்லா கட்சியுமே மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் ஜெயிப்பாங்க என்பது தெரியாது. யார் ஜெயித்தாலும் முதல் வேலையாக அதை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் 40 வருடத்தில் 1 கோடி பேரைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடி நோயாளியாக இருக்கிறார்கள். குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள்.

பாலியல் பலாத்காரம் என்று சொல்றோமே அதற்கு காரணம் மது. எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும் 400 மில்லி மது குடித்தான் என்றால் அசாத்திய தைரியம் வருகிறது. அதன் விளைவு அவனுடைய மிருக வெறிக்கு அம்மா, மகள், மனைவி என எந்த வித்தியாசமும் தெரியாது.

95 வருடமாக எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்" என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article8606657.ece?homepage=true

  • தொடங்கியவர்

வாக்குப்பதிவின்போது மயக்கம்; போலீஸ்காரருக்கு சிகிச்சை அளித்தார் தமிழிசை

 

tamilisaitreatment60021.jpg

சென்னை; சென்னையில் வாக்குச்சாவடியில் மயங்கிவிழுந்த காவலருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் பாஜக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன்.

விருகம்பாக்கம் பாலலோக் பள்ளியில் இன்று காலை விறுவிறுப்பாக வாக்களிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. அப்போது அத்தொகுதியின் வேட்பாளரும் பாஜக தமிழக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் வாக்களிக்க வந்தார். வாக்காளர்களின் வரிசையில் அவர் நின்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு பணியில் இருந்த சூர்யா என்ற காவலர் திடீரென மயங்கிவிழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

tamilisaitreatment60011.jpg

அப்போது உடனடியாக தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப்பின் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த காவலர் மேற்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.

வாக்களிக்க வந்த இடத்தில் வேட்பாளர் மயங்கிவிழுந்த காவலருக்கு சிகிச்சையளித்த சம்பவத்தை கண்டு அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சர்யமடைந்தனர். தமிழிசை சௌந்தரராஜன் பிரபல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/64212-tamilisai-first-aid-polling-booth-for-policemen.art

 

  • தொடங்கியவர்

13.45 PM: மதியம் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 50.43% வாக்கு பதிவாகியுள்ளது. கேரள மாநிலத்தில் 43.88% வாக்கு பதிவாகியுள்ளது.

13.40 PM: மழை பாதித்த பகுதிகளில் வாக்குப்பதிவை நீட்டிப்பது குறித்து 3 மணிக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும்: லக்கானி

13.35 PM: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 42.1% வாக்குப்பதிவு- ராஜேஷ் லக்கானி தகவல்

13.00 PM: திருப்பூர் மாவட்டம் வடசின்னேரிபாளையத்துக்கு உட்பட்ட காங்கேயம்பாளையம் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் செல்வராஜ் (54) பணியில் போது மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் இறந்தார். போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

12.40 PM: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மோட்டார் சைக்கிளில் வந்து திலாசுபேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு சிறப்பாக பணி செயல்பட்டு அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது.இதனால் மக்கள் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அளிப்பார்கள்" என்றார்.

rangasamy_new_2855398a.jpg

படம்: ஞானப்பிரகாஷ்.

12.35 PM: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

12.10 PM: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் வாக்களித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8606151.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா தொகுதியில் வாக்கு 'மை' அழிவதால் பரபரப்பு!

 

voteink.jpg

 

 

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்கேநகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் 'மை' அழிவதால் பூத் ஏஜென்டுகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதால் உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

சென்னை ஆர்கேநகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் சிம்லா முத்துசோழனும், மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சியின் வசந்திதேவியும் போட்டியிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்கேநகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் 'மை' தானாகவே அழிந்து விடுவதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்கேநகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை புதுவார்டு நேருநகர் 8வது தெருவில் உள்ள இசிஐ மெரிட் மேல்நிலைப்பள்ளியில் 14 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களித்து வந்தனர். திடீரென மின்சாரம் தடைபட்டது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு விரவில் வைக்கப்படும் 'மை' தானாகவே அழிந்தது. இதனை பார்த்த எதிர்க்கட்சியை சேர்ந்த பூத் ஏஜென்டுகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக பூத் அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை காவல்துறையினர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றினர். தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

இது குறித்து எதிர்க்கட்சியை சேர்ந்த பூத் ஏஜென்டுகள் கூறுகையில், அதிகாரிகளுக்கு தெரியாமல் இப்படி தரமற்ற 'மை' வர வாய்ப்பில்லை. கள்ள ஓட்டு போடுவதற்காக இப்படி ஈடுபடுகிறார்கள்" என்று குற்றம்சாட்டினர்.

இதனிடையே, இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
http://www.vikatan.com/news/politics/64214-voting-ink-fades-away-quickly-in-rk-nagar.art

  • தொடங்கியவர்

மின்சாரம் கட்..! மெழுகுவர்த்தி, செல்போன் வெளிச்சத்தில் நடந்த வாக்குப்பதிவு!

 

votelight.jpg

படம்: பா.பிரபாகரன்

 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டதால் மெழுகுவர்த்தி மற்றும் செல்போன், டார்ச் லைட் உதவியுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை துவங்கிய வாக்குப் பதிவு மந்தமாக இருந்து வருகிறது. காலை 10 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 8 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.
 

votelight1.jpg

இந்நிலையில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளில் உள்ள வாக்கு மையங்களில் மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை. மின்விளக்கு வசதி செய்யப்பட்டுள்ள மையங்களிலும் வெளிச்சம் குறைவாகவே உள்ளது. மேலும் மேக மூட்டமாக இருப்பதுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை. குறிப்பாக தங்கச்சிமடம் வாக்குப் பதிவு மையம் எண் 227 அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறும் அறை முழுவதும் இருட்டாக உள்ளது.
 

votelight1a.jpg

இதனால் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளம் காண்பதில் கட்சிகளின் முகவர்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செல்போனில் உள்ள விளக்கின் வெளிச்சத்தில் வாக்காளர் அடையாளத்தை சரி பார்த்தனர். இதன் பின் வாக்களிக்கும் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற வாக்காளருக்கு எங்கே மிஷின் உள்ளது, எந்த இடத்தில் சின்னம் உள்ளது என்பது கூட தெரியாத அளவிற்கு அந்த இடம் இருள் சூழ்ந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் திரும்பினர். இதனை தொடர்ந்து வாக்கு மைய அலுவலர் தான் வைத்திருந்த பென் டார்ச் லைட்டின் மூலம் வெளிச்சம் ஏற்படுத்தி வாக்களிக்க செய்தார். ஒவ்வொரு வாக்காளர் வாக்களிக்க செல்லும் போதும் வாக்குப்பதிவு மைய அதிகாரி எழுந்து சென்று லைட் அடித்து உதவி வருகிறார்.
 

votelight1aa.jpg

ராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு மையங்களில் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக தேர்தல் கமிஷனால் பூத் லெவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்களை தவிர வேறு யாரையும் இவர்கள் தங்கள் அருகில் அனுமதிக்க கூடாது. இதற்கு மாறாக அ.தி.மு.க கவுன்சிலர் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் பூத் லெவல் அதிகாரியின் அருகில் அமர்ந்து கொண்டு ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனை தேர்தல் அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.
 

votelight2.jpg

 

மின்சாரத் தடை காரணமாக புதுச்சேரியில் நெட்டப்பாக்கம், மடுகரை பகுதிகளில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் செல்லிப்பட்டு வாக்குச்சாவடியில் அரை மணி நேரமாக மின்சாரம் இல்லை. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

http://www.vikatan.com/news/politics/64211-public-cast-their-votes-with-the-help-of-torchligh.art

  • தொடங்கியவர்

சின்னம் தவிர்த்து எண்ணம் பார்த்தால் நாடு உருப்படும்: டி.ராஜேந்தர்

 
tr_2855474f.jpg
 

சின்னம் பார்த்து ஒட்டுப் போடக்கூடிய இந்த நாட்டிலே என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஒட்டு போடும் நிலை வருகிறதோ அன்றைக்கு தான் இந்த நாடு உருப்படும் என்றார் டி.ராஜேந்தர்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் நடிகர் மற்றும் இயக்குநர் டி.ராஜேந்தர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் டி.ஆர் பேசியது "லட்சிய திராவிட இயக்கத்தில் தலைவர், நடிகர், இயக்குநர் என்ற முறையில் அல்லாமல் ஒரு சாதாரண குடிமகன் என்று வாக்களித்திருக்கிறேன். என் மகன் சிம்பு கூட அனைவரும் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக ஒரு பாட்டே பண்ணியிருக்கிறார். மழை பெய்தாலும் கூட ஆர்வத்தோடு வந்து வாக்களித்த மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாருமே ஒட்டுரிமையை இழந்து நிற்கக்கூடாது.

திரையுலக பிரபலமாக இருந்தாலும் நான் வரிசையில் எல்லாம் நிற்க மாட்டேன் என்று சொல்லாமல் வரிசையில் தான் நிற்க விரும்புகிறேன். நான் சட்டத்தை மட்டுமே மதிக்க விரும்புகிறேன். சட்டத்தை மதிக்கும் அந்தளவுக்கு மக்கள் சரியான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போது நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, பணநாயகம் இருக்கிறதா என்று பெரிய பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று சொல்லும் போது எனக்கு வாக்காளர்களைக் கொச்சைப்படுத்துவது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. படித்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாமர மக்கள் தெளிவாகவும் இருக்கிறார்கள், நெளிவு சுழிவாகவும் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

யார் பணம் கொடுத்தாலும் கையில் இருக்கக்கூடிய அந்த நோட்டை பார்க்காதீர்கள். உங்களுடைய அடுத்த 5 வருட வாழ்க்கையை நிர்ணயக்கக் கூடியது இந்த ஒட்டு. மக்களுக்கு என்ன திட்டம் போட்டுட்டு அதில் நாம் என்ன ஆதாயம் அடையுறது என திட்டம் போடுபவர்களை மக்கள் மனதில் வைத்துக் கொண்டு ஒட்டு போட வேண்டும் என்பது தான் என் வாதம். உங்களுடைய 5 வருட எதிர்கால வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டைவிட்டு சென்றுவிட்டாலும் இந்த நாட்டில் இருக்கும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்படி மீட்பது என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நாம் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை, நடுநிலைமையோடு பேசுகிறேன். யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு சென்றாலும் சரி தட்டிக் கேட்க வேண்டும்.

சின்னம் பார்த்து ஒட்டுப் போடக்கூடிய இந்த நாட்டிலே என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஒட்டு போடும் நிலை வருகிறதோ அன்றைக்கு தான் இந்த நாடு உருப்படும். தேர்தலில் யார் நிற்கிறார் அவருடைய தகுதி என்ன என்று தெரிந்து கொள்ளாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் நாம் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம். இவை எல்லாம் என்றைக்கு கலையப்படுகிறதோ, அன்று தான் இந்த நாடு முன்னேறும்" என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/article8606802.ece?homepage=true

  • தொடங்கியவர்

திருப்பூரில் மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த பெண்

 
வாக்களிக்கும் மணப்பெண் சத்தியபிரியா. படம்: தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கம்.
வாக்களிக்கும் மணப்பெண் சத்தியபிரியா. படம்: தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கம்.

திருப்பூர் மாவட்டம் வல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மணப்பெண் ஒருவர் வாக்களித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் திருப்பூர் மாவட்டம் வல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மணப்பெண் ஒருவர் வாக்களித்தார்.

அவர் பெயர் சத்யப்பிரியா (21). அவருக்கும் குமரேசன் (24)-க்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் அவரது சொந்த ஊரான வல்லபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து அவர் வாக்களித்தார்.

வாக்களித்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், தனது கணவரும் அவரது ஊரில் வாக்களிப்பார் என்றும் கூறினார். சத்யபிரியா பி.காம். படித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/article8606831.ece?homepage=true

  • தொடங்கியவர்

வெற்றி களிப்பா, தோல்வி பயமா?, ஜெயலலிதா சொன்ன சிங்கிள் வரி பேட்டிக்கு என்ன அர்த்தம்?

Journalists analytics Jayalalithaa's word

சென்னை: இன்னும் 2 நாட்களில் மக்களின் தீர்ப்பு என்ன என்பது தெரிந்துவிடும் என்ற ஒற்றை வார்த்தையை முதல்வர் ஜெயலலிதா கூறினாலும், கூறினார், அவரது வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்பது குறித்து சீனியர் பத்திரிகையாளர்கள் நடுவே பெரும் விவாதமே எழுந்துள்ளது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா வாக்குப்பதிவு செய்தார்.

 

இதைத்தொடர்ந்து அந்த இடமே, ஒளிவெள்ளத்தால் நிரம்பும் அளவுக்கு, பத்திரிகை கேமராமேன்களால், பிளாஸ் போட்டு புகைப்படங்கள் எடுத்து தள்ளப்பட்டன. அதேநேரம், ஜெயலலிதாவின் அருகே சென்று பேட்டியெடுக்க ஜெயா டிவியை தவிர வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேநேரம், அவர்பேசுவது பிற பத்திரிகையாளர்களுக்கு கேட்க வசதியாக ஒலி பெருக்கி வைக்கப்பட்டிருந்தது.

CijS6ahXEAA5MeL.jpg

அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பதிலளித்த ஜெயலலிதா, இன்னும் இரண்டு தினங்கள் காத்திருந்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று தெரியும் என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார். ரிசல்ட் வரும்வரை காத்திருங்கள் என்று, ஜெயலலிதா கூறியது அனேகமாக இதுதான் முதல்முறை என்றும், இது பதற்றத்தை காட்டுவதாகவும் கூறுகிறார், 'தி வீக்' ஆங்கில இதழின் மூத்த பத்திரிகையாளர் லட்சுமி. ஜெயலலிதாவின் உடல் மொழி மிகவும் பதற்றத்தோடும், பலவீனமாகவும் இருந்ததாகவும், இது, தோல்விக்கான அறிகுறி என்றும் கூறுகிறார்

 

சிஎன்என்-ஐபிஎன் சேனலின் துணை ஆசிரியர் ஜக்கா ஜேக்கப். இது ஒருபுறம் இருக்க, 2 நாள் காத்திருங்கள் என்று கூறியது, வெயிட் அன்ட் சீ என்ற பேச்சின் பொருளில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது என்கிறார்கள் வேறு சில சீனியர் பத்திரிகையாளர்கள். வெற்றி உறுதியாகிவிட்டது என்ற தகவலை அறிந்ததால்தான், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார் என்கிறார்கள் அவர்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/journalists-analytics-jayalalithaa-s-word-253802.html

  • தொடங்கியவர்

3 மணி வரை 63.7 % வாக்குப்பதிவு; மழைபெய்யும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க பரிசீலனை!

vote600.jpg

 

சென்னை: தமிழக சட்டசபைக்கு இன்று நடைபெற்று வரும் தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை சராசரியாக 63.7 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  லக்கானி , மதியம் 1 மணி வரை சராசரியாக 42.1 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்தார். இந்நிலையில் பிற்பகல் 3 மணி வரை சராசரியாக 63.7 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய லக்கானி, " மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் என தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளன.

டெல்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பாதிப்பு இடங்களில் வாக்குப்பதிவு நேரத்தினை நீட்டிக்க ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது மழை நின்று இருப்பதால் 3 மணி நேர நிலவரத்தை பார்த்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.  வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு காத்திருப்போர் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

மின் தடை உள்ள பகுதியில் மாற்று அவசர விளக்குகள் அளிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சிறிய மோதல்கள் தவிர்த்து தமிழகம் முழுவதும் பெரும்பாலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை." என  மேலும் கூறினார்.

http://www.vikatan.com/news/politics/64239-tn-election-63-per-cent-turnout-till-3-pm.art

  • தொடங்கியவர்

வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை: லக்கானி அறிவிப்பு

 


  • rajesh%20lakhoni.jpg

சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், வாக்களிப்பதற்கான நேரத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.

மழை அளவு குறைந்திருப்பதாலும், இன்னும் வாக்களிக்க நேரம் இருப்பதாலும், வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டிப்பதற்கான முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, 6 மணிக்கு முன்பு யார் வந்தாலும் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

மேலும், வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்புக் கருதி வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை.

தென் மாவட்டங்களில் அதிக அளவில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு வீதம் குறைந்துள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் 2.30 மணி நிலவரப்படி 63.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.dinamani.com/tn-election-2016/election-news-2016/2016/05/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article3435873.ece

  • தொடங்கியவர்

தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால்... அச்சச்சோ..! -வடிவேலுவின் வெடி

 

3.jpg

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால் நோட்டீஸ் அனுப்புவார்கள் என்று ஓட்டுப்போட்டுவிட்டு வந்து நடிகர் வடிவேலு சீரியசாக கூறினார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, விஜயகாந்த், வைகோ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ரஜினிகாந்த், கமலஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட திரை பிரபலங்களும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் வடிவேலு. தனது வாக்கை பதிவு செய்தபின் நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''அனைவரும் ஜனநாயக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு தேர்வு போல இந்தத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று எல்லோருக்கும் ஆர்வம் உள்ளது. மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்குத் தலைவணங்க வேண்டும்" என்றார். அப்போது செய்தியாளர்கள், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வடிவேலு, ''தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் பேசினால் நோட்டீஸ் அனுப்புவார்கள். அது அவர்களுடைய முடிவு" என்றார். உடனே, சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் இந்தமுறை பிரசாரத்துக்குச் செல்லவில்லையா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ''அந்தக் கடையை மூடுங்க" என்று தனது ஸ்டைலில் காமெடியாக சொல்லிவிட்டு கிளம்பினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/64240-if-we-speak-against-election-commission.art

  • தொடங்கியவர்

தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு

Tamilnadu Assembly Election News:  தேர்தல் ஒத்திவைப்பு 'சென்டிமென்ட்' எதிர்க்கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு
 
 


திருச்சி:அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை ஒத்தி வைத்துள்ளதால், ஆட்சி பறிபோகும் கடந்த கால, 'சென்டிமென்டை' நினைத்து, அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, மது வினியோகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி தேர்தலை, 23ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் கமிஷன் அறிவித்தது.கடந்த, 25 ஆண்டுகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதெல்லாம் ஆளுங்கட்சி தோல்வியை தழுவி,

எதிர்க்கட்சியே ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த, 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சுயேச்சை வேட்பாளர்கள் இறந்த காரணத்தால், மருங்காபுரி, முசிறி, மதுரை கிழக்குஉள்ளிட்ட நான்கு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

மற்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1991ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, எழும்பூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் இறந்த காரணத்தால், அங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

அடுத்து, 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நொய்யல் ஆறுபிரச்னை காரணமாக மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட, 1,450க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு தாக்கல் செய்தனர்.
ஓட்டுச்சீட்டு அச்சிட முடியாது என்பதால், மொடக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த தேர்தலில்,

எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., ஆட்சியை பிடித்தது.

இப்படி பொதுத்தேர்தலின் போது குறிப்பிட்ட தொகுதிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நேரங்களில் எல்லாம், ஆளுங்கட்சி தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், 'சென்டிமென்டாக' தோல்வியடைந்து விடுவோமோ என, அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர்.

http://election.dinamalar.com/detail.php?id=10912

  • தொடங்கியவர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2016 - வாக்குப்பதிவு நிலவரம்

 

 
சென்னை அயனாவரத்தில் வாக்களித்த பிறகு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பெண்கள் | படம்: எம்.வேதன்
சென்னை அயனாவரத்தில் வாக்களித்த பிறகு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் பெண்கள் | படம்: எம்.வேதன்
போட்டோ கேலரி

தமிழக தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 69.19% வாக்குப்பதிவு

தமிழகத்தில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 69.19% வாக்குகள் பதிவாகின. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு திங்கட்கிழமை நிறைவுபெற்றது.

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 85% வாக்குப்பதிவு. குறைந்தபட்சமாக சென்னையில் 57% வாக்குப்பதிவு.

ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஊரகப் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவும், நகர்ப்புறங்களில் குறைந்த அளவும் வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. இறுதி நிலவரம் மாலை 7 மணி அளவில் வெளியாகும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

6.01 PM: தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

5.55 PM: மாலை 5 மணி நிலவரப்படி விருதுநகர் மாவட்டத்தில் 72.13% வாக்கு பதிவாகியுள்ளது.

5.30 PM: கேரளாவில் மாலை 5 மணி நிலவரப்படி 71.12% வாக்கு பதிவாகியுள்ளது.

5.20 PM: புதுச்சேரி யூனியனில் ஒட்டுமொத்தமாக மாலை 5 மணி நிலவரப்படி 81.06% வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 81.94 சதவீத வாக்குகளும், காரைக்காலில் 76.31 சதவீத வாக்குகளும், மாஹேயில் 75.25 சதவீத வாக்குகளும், ஏனாமில் 88.5 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தது.

5.15 PM: புதுச்சேரியில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என மாநில தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார். மழை காரணமாக மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

4.48 PM: புதுச்சேரியில் 4 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும் 71.34% வாக்கு பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரியில் 72.38 சதவீதமும், காரைக்காலில் 66.28 சதவீதமும், மாஹேயில் 64.83 சதவீதமும், ஏனாமில் 77.63 சதவீதமும் பதிவானது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 71.34சதவீதமும் வாக்கு பதிவானது.

4.45 PM: ஒட்டப்பிடாரம் கவர்னகிரி சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பை வாபஸ் பெற்றனர்.

4.15 PM: மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் அனைவருக்கும் டோக்கன் வழங்கி, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை - லக்கானி.

3.55 PM: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 63.70% வாக்கு பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

3.20 PM: 3 மணி நிலவரப்படி அரியலூர் தொகுதியில் 72%. ஜெயங்கொண்டான் தொகுதியில் 68%.

3.15 PM: கேரளாவில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.89% வாக்குப்பதிவு.

3.09 PM: புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 4 பிராந்தியங்களிலும் 68.6% வாக்கு பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரியில் 69.38 சதவீதமும், காரைக்காலில் 62.6 சதவீதமும், மாஹேயில் 63.81 சதவீதமும், ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது.

2.45 PM: சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் வடிவேலு வாக்களித்தார்.

2.35 PM: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கருப்புபூவன்பட்டி கிராமத்தில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வதில் திமுக, அதிமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

2.15 PM: புதுச்சேரியில் மதியம் 2 மணி நிலவரப்படி 54.64% வாக்குப்பதிவு. புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் புதுச்சேரியில் 55.72 சதவீதமும், காரைக்காலில் 48.9 சதவீதமும், மாஹேயில் 50.12 சதவீதமும், ஏனாமில் 61.38 சதவீதமும் பதிவானது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 54.64 % வாக்கு பதிவாகியுள்ளது.

2.00 PM: சென்னை சைதாப்பேட்டையில் திருநங்கைகள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இடம்: சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் பள்ளி.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article8606151.ece?homepage=true

  • தொடங்கியவர்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிகிறது- மீண்டும் திமுக: இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல்

Exit poll predicts 124 seats for DMK, 90 for AIADMK

 டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 124 முதல் 140 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தவிர 232 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் திமுக 124 முதல் 140 இடங்களில் வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஆக்சிஸ் - மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிற கட்சிகள் 4 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. திமுக ஆட்சி மீண்டும் உதிக்கிறது என்றும் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன.

Read more at: http://tamil.oneindia.com/news/india/exit-poll-predicts-124-seats-dmk-90-aiadmk-253830.html

 

 

 

 

118 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி: நியூஸ் நேஷன் எக்ஸிட் போல்

 

 டெல்லி: தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. நியூஸ்நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு இதோ: திமுக கூட்டணி 114 தொகுதிகள் முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 95-99 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது. மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகள் 9 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் நியூஸ் நேஷன் கூறுகிறது. அதேநேரம், அதிமுகவுக்கு 35% வாக்குகளும், திமுகவுக்கு 39% வாக்குகளும் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது. மக்கள் நலக் கூட்டணி- தேமுதிகவுக்கு 14% வாக்குகள் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 4% வாக்குகள் கிடைக்கும் என்றும் இந்த கருத்துக்கணிப்பு மேலும் கூறுகிறது.

2011 சட்டசபை தேர்தலில் அதிமுக 165 தொகுதிகளில் போட்டியிட்டு, 150 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாகியது. 119 தொகுதிகளில் களமிறங்கிய திமுக வெறும் 23 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/india/dmk-will-come-power-tamilnadu-says-cnn-ibn-exit-poll-253825.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? 'திடுக்' Exit poll முடிவுகள்!

 

KARU1.jpg

 

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் ( 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.) இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம், வெவ்வேறு ஊடகங்கள் நடத்தியுள்ள Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

NewsNationTV

அதிமுக 35 சதவீத வாக்குகளுடன் 95 முதல் 99 இடங்களை கைப்பற்றும் என்றும், திமுக 39 சதவீத வாக்குகளுடன் 114 முதல் 118 இடங்களை கைப்பற்றும் என்றும், மக்கள் நலக்கூட்டணி 14, பா.ஜனதா 4, இதர கட்சிகள் 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
India Today-Axis My India

அதிமுக 89 முதல் 101, திமுக 124 முதல் 140 இடங்கள் வரை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 0-3, மற்ற கட்சிகள் 4 - 8 இடங்களை கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Times Now TV

அதிமுக 139, திமுக 78, மற்ற கட்சிகள் 17 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/politics/64251-exit-polls-2016-on-tn-assembly-election.art

  • தொடங்கியவர்
தமிழகத்தில் 73.76% ஓட்டுப்பதிவு: தேர்தல் ஆணையம்
  • கருத்துக்கள உறவுகள்

சீமானைப் பற்றி ஒரு கடுகளவு செய்தி கூட வரவில்லையா!

 

திமுக 120 ஆசனங்களை வெல்லக்கூடும் என்று வாக்களித்தவர்களிடம் நடாத்திய கருத்துக் கணிப்பு சொல்கின்றதாம். 

அம்மா ஆட்சி அம்புட்டுதேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இவை கருத்து கணிப்பு இல்லை 
கருத்து திணிப்பு!

தவிர இவை சென்னையை மட்டுமே மையமாக கொண்டவை!

  • தொடங்கியவர்

தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் ! ஆர்வமாக திரண்டு வந்த மக்கள் யாருக்கு வாய்ப்பு என கட்சிகள் பீதி

 

  •  
Tamilnadu Assembly Election News:   தமிழகத்தில் பதிவான ஓட்டு 74 சதவீதம் !  ஆர்வமாக திரண்டு வந்த மக்கள் யாருக்கு வாய்ப்பு என கட்சிகள் பீதி
 
 

தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் 73.85 சதவீதஓட்டுகள் பதிவாகின. வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த போதும் பொது மக்கள் ஆர்வமாக திரண்டு வந்து ஓட்டளித்தனர்.


இதனால் யாருக்கு வாய்ப்பு என தெரியாமல் கட்சிகள் பீதி அடைந்துள்ளன.தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகாரால், தஞ்சாவூர், அரவக்குறிச்சி
தொகுதிகளுக்கான தேர்தல் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மீதமுள்ள 232 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இந்தத் தொகுதிகளில் 65 ஆயிரத்து 486 ஓட்டுச்சாவடிகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் அதிகாலையிலே மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்க குவிந்தனர்.
 

நீண்ட வரிசை


 


இளைஞர்கள், இளம்பெண்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும், நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். காலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலுார் ஆகிய மாவட்டங்களில், காலை முதல் காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் வந்து வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.சில பகுதிகளில் மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. அங்குள்ள ஓட்டுச்சாவடிகளில் 'எமர்ஜென்சி' விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு
ஓட்டுப்பதிவு நடந்தது. சென்னையில் காலையில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது; மதியத்திற்கு பிறகு மந்தமானது.ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது, போலி மை என சிறு சிறு பிரச்னைகள் ஆங்காங்கே எழுந்தன. வேறு அசம்பாவிதங்கள் எதுவுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டுப்பதிவு துவங்கிய நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓட்டுப்பதிவு நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி காலை 9:00 மணிக்கு 18.3 சதவீதம்; 11:00 மணிக்கு 25.2; மதியம் 1:00 மணிக்கு 42.10; மதியம் 3:00மணிக்கு 63.7; மாலை 5:00 மணிக்கு 69.19 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவுபெற்றது.
 

மொபைல் சேவை பாதிப்பு


 

 

சில ஓட்டுச் சாவடிகளில் மாலை 6:00 மணிக்கு முன் வந்து ஓட்டுப் போட காத்திருந்தோருக்கு 'டோக்கன்' வழங்கப்பட்டு அவர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.மழையால் பல இடங்களில் மொபைல் போன் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,
ஓட்டுப்பதிவு விவரத்தை, அதிகாரிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் மொத்த ஓட்டுப்பதிவு சதவீதம் தெரிய கால
தாமதம் ஏற்பட்டது.கடந்த 2011 சட்டசபை தேர்தலில் 78.12 சதவீதம்; 2014 லோக்சபா தேர்தலில் 73.68 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. இம்முறை, 73.85 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.மாலை நிலவரப்படி,
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் அதிகபட்சமாக 85 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வழக்கம் போல் சென்னை மாவட்டத்தில் ஓட்டுப்பதிவு சதவீதம் 65 சதவீதம் என்ற அளவுக்கு குறைவாக இருந்தது. பொதுவாக கிராம பகுதிகளில் ஓட்டுப்பதிவு
அதிகமாகவும், நகரங்களில் குறைவாகவும் இருந்தது.ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 'சீல்' வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை 19ம் தேதி காலை8:00 மணிக்கு துவங்குகிறது.
 

மூன்றடுக்கு பாதுகாப்பு


 

சென்னை:ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பதிவான ஓட்டுகள் 68 ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அம்மையங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,800 துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
'சீல்' வைக்கப்பட்ட அறைக்குள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அறை முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்பகுதியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தல்ஆண்டு வாரியாக பதிவான ஓட்டு சதவீதம்
தேர்தல் ஆண்டு - சதவீதம்
1952 - 55.34
1957 - 46.56
1962 - 70.65
1967 - 76.57
1971 - 72.10
1977 - 61.58
1980 - 65.42
1984 - 73.47
1989 - 69.69
1991 - 63.84
1996 - 66.95
2001 - 59.07
2006 - 70.82
2011 - 78.01
2016 - 73.85
 

சபாஷ் லக்கானி


 


தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்கவும் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பெரும் முயற்சி மேற்கொண்டார். பணம் வாங்க மாட்டோம்; பணம் கொடுக்க வருவோரை பிடித்து கொடுப்போம் என 1.64 கோடி பேர் ஒரே நேரத்தில் உறுதிமொழி எடுக்க ஏற்பாடு செய்தார். பணப்பட்டுவாடாவைத் தடுக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன. கிராமங்களை இளைஞர் குழுக்களும் ஏற்படுத்தப்பட்டன.

பணப்பட்டுவாடா புகாரால் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ன. விடாது மழை பெய்தாலும் பல்வேறு முயற்சிகளால் ஓட்டுபதிவு பெரிய அளவிலான பிரச்னைகள் இன்றி முடிக்கப் பட்டுள்ளது.

http://election.dinamalar.com/detail.php?id=11025

  • தொடங்கியவர்

232 தொகுதிகளிலும் அமைதியாக நடந்தது சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குப்பதிவு

 
  • சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிக்க வந்த முதல்வர் ஜெயலலிதாவின் கை விரலில் மை வைக்கும் தேர்தல் பணியாளர், படம்: க.ஸ்ரீபரத்
    சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களிக்க வந்த முதல்வர் ஜெயலலிதாவின் கை விரலில் மை வைக்கும் தேர்தல் பணியாளர், படம்: க.ஸ்ரீபரத்
  • சென்னை கோபாலபுரம், சாரதா மெட்ரிக் பள்ளியில் வாக்களிக்க வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. படம்: க.ஸ்ரீபரத்
    சென்னை கோபாலபுரம், சாரதா மெட்ரிக் பள்ளியில் வாக்களிக்க வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. படம்: க.ஸ்ரீபரத்

அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 88.50 சதவீதம் | சென்னை துறைமுகத்தில் 55.27 சதவீதம்

தமிழகத்தில் 232 தொகுதி களிலும் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அமைதியாக நடந்தது. மாநிலம் முழுவதும் சராசரியாக 73.76 சதவீ த வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 88.50 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீத வாக்குகளும் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித் தது. இதைத் தொடர்ந்து தமிழகத் தில் உள்ள 234 தொகுதிகளி லும் 66,007 வாக்குச்சாவடிகள் அமைத்து வாக்குப்பதிவை நடத்த தமிழக தேர்தல்துறை ஏற்பாடுக ளை செய்து வந்தது. இந்நிலையில் , அதிக அளவு பணப் பட்டுவாடா புகார் தொடர்பாக அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அந்த 2 தொகுதிகளுக்கும் வரும் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 25-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 232 தொகுதி க ளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 232 தொகுதிகளிலும் மொத்தம் 65 ஆயிரத்து 486 வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தொகுதிக்கு 2 அல்லது 3 என மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இம்முறை தேர்தலில் மாற் றுத்திறனாளிகள், மகளிருக்கான பிரத்யேக வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

26 ஆயிரத்து 961 வாக்குச்சா வடிகளில் இணைய கேமரா, 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா வசதி செய்யப் பட்டிருந்தது. இதன்மூலம் வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தங்கள் அலுவலகத் தில் இருந்தபடி கண்காணித்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பணியில் இருந்தனர்.

பொதுமக்கள் ஆர்வம்

இந்த தேர்தலில் 232 தொகுதி களிலும் 2 கோடியே 86 லட்சத்து 36 ஆயிரத்து 54 ஆண்கள், 2 கோடியே 90 லட்சத்து 92 ஆயி ரத்து 751 பெண்கள், 4 ஆயிரத்து 702 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 507 பேர் வாக்க ளிக்க தகுதி பெற்றி ருந்தனர். 3,728 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியபோது, பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடியில் காத்திருந்தனர். வாக்குப்பதிவு தொடங்கியதும் சில இடங்களில் மட்டும் மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவை சரிசெய்யப்பட்டன. சில இடங்களில் மாற்றப்பட்டன.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல்வர் ஜெய லலி தா, கோபாலபுரம் சாரதா உயர் நி லைப் பள்ளியில் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

மழையால் பாதிப்பு

இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. சில மாவட்டங் க ளில் மழை அதிகமாக பெய்ததால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருவாரூர், வேதாரண்யம் தொகுதிகளில் முதல் 2 மணி நேரத்தில் சுமார் 5 சதவீத வாக்குகளே பதிவாகின.

இதையடுத்து, பலத்த மழை பெய்த மாவட்டங்களில் வாக்குப்ப திவு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணை யத்திடம் கோரிக்கை விடுத்தன. இதை பரிசீலித்த ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டியதில்லை என தெரி வித்தது. அந்த மாவட்டங்களின் வாக்குப்பதிவு நிலவரம் அடிப்ப டையில் இவ்வாறு அறிவித்திருப் பதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரி வித்தார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தேர்தல் ஆணைத்தால் வெளியிடப்பட்டது. இறுதி நிலவரப்படி 73.76 சதவீத வாக்கு கள் இந்த தேர்தலில் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். அதிகபட்சமாக பாலக் கோடு தொகுதியில் 88.50 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீத வாக்குகளும் பதிவாகின.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத் தும் சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத் துச் செல்லப்பட்டன.

அங்கு 5 அடுக்கு பாதுகாப் புடன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை 19-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கு கிறது. பிற்பகலுக்குள் முடிவு தெரியும்.

http://tamil.thehindu.com/tamilnadu/232-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7376-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article8610047.ece?homepage=true

  • தொடங்கியவர்

மிகக் குறைந்த வாக்கு சதவீதம்: தலைகுனிய வைத்த தலைநகர் சென்னை

 
 
chennaicentral_1872988h.jpg
 

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சென்னையில் 60.47 சதவீதம் என்ற குறைந்த அளவே வாக்கு பதிவானது. தொகுதிவாரியாக கணக் கிட்டால் சென்னை துறைமுகம் தொகுதியில் குறைந்தபட்சமாக 55.77 சதவீதம் பதிவாகியுள்ளது.

அரசியல் கட்சிகளின் அத்தனை பிரச்சாரங்களையும் மிஞ்சும் விதமாக தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரசாரங்கள் இந்த தேர்தலில் தூக்கலாகவே இருந்தன. அதற்கேற்ற கடுமை யான உழைப்பை ஆணையமும் அதன் ஊழியர் படைகளும் அர்ப்பணித்திருந்தன.

சிறியது முதல் பெரியது வரையிலான அத்தனை தனியார் நிறுவனங்களும், கடைகளும் தங்களது ஊழியர்கள் வாக்கு களை செலுத்த வசதியாக விடுப்பு அளித்திருந்தன. கட்டிடங்களில் கல் சுமக்கும் கூலித் தொழிலாளர் கள்கூட கடமையாற்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை சாலைகளும் தெருக் களும் வெறிச்சோடிக் கிடந்தன.

அத்தனை காட்சிகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு கிடைத்த பெருவெற்றியாகவே உணரப்பட்டன. ஆனாலும், தலைநகர் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்து போயிருப்பது வேதனைக்குரிய விஷயமாகவே படுகிறது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியபோதும் பொறுப்புணர்ந்து கணிசமான வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். ஆனால் சென்னயைப் பொருத்தவரை மழை இல்லாமல் மேகமூட்டமாக ரம்மி யான சூழலே நிலவியது. அப்போ தும் கூட பலர் வாக்குச்சாவடிக்கு வராதது சமூக ஆர்வலர்களை வேதனை கொள்ளச்செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் நிமிடத்துக்கு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டு உரக்க அரசியல் பேசும் கூட்டம் வழக்கம்போல விடுமுறையை அனுபவிக்கச் சென்று விட்டதாகவே தெரிகிறது.

வாட்ஸ்-அப்பில் விதவிதமாய் குரூப்களை கடைபரப்பி வகைதொகையில்லாமல் வாதம் கிளப்பும் கூட்டம் வாக்களிக்க வரவில்லை போல் தெரிகிறது.

தமிழகத்தின் பிற ஊர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய தலைநகர் தனது ஜனநாயகக் கடமையில் அலட்சியம் காட்டியிருப்பது பெரும் தலைக்குனிவே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சமூக வலைத்தளங்களில் அரசியல் பேசும் கூட்டம் வழக்கம்போல விடுமுறையை அனுபவிக்கச் சென்று விட்டதாகவே தெரிகிறது

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article8610335.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.