Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண ஆளுநரை மீளப்பெறவேண்டும் ; ஸ்ரீகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம்

Featured Replies

வடமாகாண ஆளுநரை மீளப்பெறவேண்டும் ; ஸ்ரீகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம்

 

வடக்கு மாகாண ஆளு­நரை மீளப் பெறு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் பகி­ரங்கக் கோரிக்­கையை விடுத்துள்ளோம். அதனை மேலும் தாம­தப்­ப­டுத்­தினால் அர­சியல் சாச­னத்­தி­னூ­டாக வீட்­டுக்கு அனுப்பி வைப்போம் என தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் செய­லா­ளரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான ந.சிறி­காந்தா தெரி­வித்தார்.

யாழ்ப்­பாணம் விடு­தி­யொன்றில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

MKPC_combo_2855245a.jpg

ஆளுநர் ஒருவர் தெரிந்­தெ­டுக்­கப்­ப­டு­பவர் அல்ல. ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­ப­டு­பவர். இதற்கு உதா­ர­ண­மாக இந்­தியாவில் பல்­வேறு மாநி­லங்­களில் ஆளு­நர்கள் நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள். இந்த ஆளுநர் பதவி என்­பது இலங்­கையின் அர­சியல் சாச­னத்தின் அடிப்­ப­டையில் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான பதவியாகும்.

வடக்கு மாகாண சபையின் ஆளுநர் ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டவர். வடக்கு மாகாண சபை வடக்கு மாகாண மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டது. பெரும்­பான்மை ஆத­ரவை பெற்­றவர் முத­ல­மைச்சர் ஆகவும் அவரால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட 4 உறுப்­பி­னர்கள் அமைச்­சர்­க­ளாகவும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அத்­த­கைய நிலையில் ஆளுநர் சம்­பி­ர­தா­க­பூர்­வ­மாக இருந்து கொண்­டி­ருப்­பவர்.

ஆளுநர் முத­ல­மைச்­ச­ரு­டைய ஆலோ­ச­னையின் பேரில் செயற்­பட வேண்­டி­யவர். இது தொடர்­பான சட்ட விதிகள் அர­சியல் சாச­னத்தில் தெளி­வாகக் கூறப்­பட்­டுள்­ளன.

ஆனால் வடக்கு மாகாண ஆளுநர் கொழும்பில் செய்­தி­யா­ளரைக் கூட்டி வடக்கு மாகாண முத­ல­மைச்சரையும் வடக்கு மாகாண சபை­யையும் விமர்ச்­சித்­துள்ளார்.

வடக்கு மாகாண சபையும் முத­ல­மைச்­சரும் முன்­வைத்த தீர்வை விமர்ச்­சித்­துள்ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரையோ வடக்கு மாகாண சபை­யையோ விமர்­சிப்­ப­தற்கு ஜன­நா­யக ரீதி­யாக சட்­ட­ரீ­தி­யாக எந்தப் பிர­ஜையும் அர­சி­யல்­வா­திளும் அர­சியல் கட்­சி­க­ளும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் விமர்­சிக்­கலாம். ஆனால் வடக்கு மாகாண ஆளுநர் விமர்­சிக்­க­மு­டி­யாது. அவர் விசே­ட­மான பொறுப்பில் இருக்­கின்றார்.

வடக்கு மாகாண சபை­யுடன் அத­னு­டைய நிர்­வாகம் தொடர்­பிலே இணைந்து செயற்­ப­ட­வேண்­டிய அர­சியல் சாசன பொறுப்பில் உள்­ளவர். அவர் வடக்கு மாகாண சபை­யையோ முத­ல­மைச்­ச­ரையோ எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் விமர்­சிக்­க­மு­டி­யாது.

ஆளுநர் பதவி அல்­லது பொறுப்பு என்­பது மரபு ரீதி­யாக ஜன­நா­யக ரீதி­யாக அமைந்­துள்ள பொறுப்பாகும். இதற்கு நல்ல உதா­ர­ண­மாக இந்­தியாவில் மாநி­லங்­களில் ஆளுநர் நிய­மனம் உள்­ளது. தீவிர அர­சியல் இருந்­த­வர்கள் கூட ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டாலும் அவர்கள் கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் நடை­முறை அர­சி­ய­லுக்குச் செல்­ல­மாட்­டார்கள்.

வடக்கின் மாகாண சபையின் தீர்வு தொடர்­பான ஆலோ­ச­னையை எந்த அர­சி­யல்­வா­தி­களும் விமர்­சிக்­கலாம். ஆளுநர் விமர்­சிக்க முடி­யாது. பகி­ரங்­க­மாகக் கூற­மு­டி­யாது. அவ்­வாறு பேசினால் அர­சியல் சாச­னத்தை மீறு­வ­தாகும்.

இதுதான் இங்கு நடந்­துள்­ளது. இது தொடர்பில் அமைச்சர் மனோ­க­ணேசன் கருத்து கூறி­யுள்ளார். அதனை வர­வேற்­கின்றேன்.

ஆனால் இத்­துடன் இந்த விட­யத்தை விட்­டு­வி­ட­மு­டி­யாது. இந்த மாகாண சபை­களை பெறு­வ­தற்­காக பல்­லா­யி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்­களும் பொது மக்­களும் உயிர்­க­ளைத்­தி­யாகம் செய்­தி­ரு­கின்­றார்கள். அந்த தியாக வர­லாற்றில் தான் இந்­திய இலங்கை ஒப்­பந்தம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதன் கீழ் மாகாண சபை உரு­வாக்­கப்­பட்­டது.

மாகாண சபைமுறைமையை எங்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சினை தீர்­வாக கரு­தி­ய­தில்லை. ஆனால் இன்று அர­சியல் சாச­ன­மாக இருப்­பது மாகாண சபைதான். இந்த மாகாண சபைகள் வடக்கு கிழக்கு உட்­பட அனைத்து மாகா­ணங்­க­ளிலும் செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

இந்த நிலையில் வடக்கு மாகாண மக்­களின் உணர்­வுகள் தொடர்பில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர், வடக்கு மாகாண சபையை ஆளுநர் விமர்­சித்­தி­ருப்­பது பார­தூ­ர­மான விட­ய­மாகும்.

இவற்றை தெரி­யாது செய்­தி­ருக்­கிறார் அல்­லது சிந்­திக்­காது செய்­தி­ருக்­கிறார் என்று விட்­டு­வி­ட­மு­டி­யாது. அதற்கு அவர் சிறு­பிள்­ளை­யல்ல. அவர் தெரிந்து கொண்­டுதான் இதனை செய்­துள்ளார். அவர் தானாக பேசி­னாரா. அல்­லது பேச வைக்­கப்­பட்­டாரா என்­பது அல்ல பிரச்­சினை. அவர் தானாக பேசி­யி­ருக்­கலாம். அல்­லது பேசவும் வைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம. அது பற்றி கவ­லை­யில்லை.

எமது பிரச்சினை என்னவெனில் இந்த மனிதர் வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருக்­க­மு­டி­யாது. இவர் வீட்­டுக்கு அனுப்­பப்­பட வேண்டும். இவ­ரு­டைய பத­வியை ஜனா­தி­பதி மீளப் பெற­வேண்டும். எந்­த­வித தாம­தமுமில் மில்­லாது மீளப் பெற­வேண்டும். இவர் இங்கு வருகை தந்­த­போது வர­வேற்பு கொடுக்­கப்­பட்­டது. முத­ல­மைச்சர் ஒத்­து­ழைப்பு கொடுத்தார். ஆனால் இன்று வடக்கு மாகாண ஆளுநர் முத­ல­மைச்சர் சபை இதற்­கப்பால் வடக்கு மாகாண மக்கள் முதுகில் ஈவி­ரக்­க­மின்றி திரு­மபத் திரும்ப குத்­தி­யி­ருக்­கிறார் என்று பகி­ரங்­க­மாக குற்றம் சாட்­டாக முன்­வைக்­கிறேன்.

இவ்­வி­ட­யத்தை சாதா­ரணமாக விட­மு­டி­யாது. இத்­த­கைய ஆளு­ந­ருடன் இணைந்து வடக்கு மாகாண சபை சீராக செயற்­ப­ட­மு­டி­யுமா இந்த கேள்­வியை நாங்கள் எல்­லோரும் எழுப்ப கட­மைப்­பட்­டுள்ளோம்.

ஆளுநர் ஒரு விட­யத்தை மறந்து விட்டார். அவரை வீட்­டுக்கு அனுப்ப வடக்கு மாகாண சபையால் முடியும். அதற்குத் தேவைப்­ப­டு­வது எல்லாம் மூன்றிரண்டு வாக்குகள் ஆகும்.வடக்கு சபையில் உறுப்­பினர் தொகை 38 என்றால் 26 உறுப்­பி­னர்­க­ளு­டைய வாக்­குகள் இருக்­கு­மாக இருந்தால் ஆளுநர் வீட்­டுக்கு போயாக வேண்டும். அர­சியல் சாசன ஏற்­பாட்டில் தெ ளிவாக இவ்­வி­டயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ரோடு ஆலோ­ச­னை­யடன் செயற்­ப­ட­வேண்­டிய ஆளுநர் வடக்­கு­மா­காண சபைக்கு ஏதா­வது தெரி­விக்க வேண்­டி­யி­ருந்தால் வடக்­கு­மா­காண சபையைக் கூட்டி தெரி­விக்­கின்ற அதி­கா­ரத்தை கொண்­டுள்ளார்.மாறாக ஆளுநர் பகி­ரங்­க­மாக ஒரு மூன்றாம் தரப்பு அர­சியல் வாதியைப் போல்­ஒரு சந்தை முன்­றலில் கூட்டம் போட்டு பேசுவதுபோல் கொழும்பில் கூட்டம் போட்டு பேசியுள்ளார்.

ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு பேசமுடியாது. வடக்கு மாகாண சபையோ முதலமைச்சரோ இது தொடர்பில் எதுவும் பேசமுடியாது இருக்கலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு இருக்கமுடியாது.

வடக்கு ஆளுநர் இவ்வாறு பேசமுடியாது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழீழ விடுதலைக் இயக்கம் பகிரங்கமாக கூறுவது என்னவென்றால் தயவு செய்து இந்த கனவானை மீளப் பெறுங்கள். இல்லையேல் அரசியல் சாசனத்தன்படி 13 திருத்தத்திற்கு ஏற்ப வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். அல்லது ஆளுநர் கடிதத்தில் தனது இராஜினாமைவை எழுதிவிட்டு வீடு செல்லலாம் என்றார்.

http://www.virakesari.lk/article/6466

  • கருத்துக்கள உறவுகள்

சிறிகாந்தாவுக்கு காச்சல் ஒண்டும் இல்லை தானே.:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.