Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

Featured Replies

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

 

 
koba_2879890f.jpg
 

நடப்பு சாம்பியன் சிலி, அர்ஜென்டினா, பிரேசில் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்ளும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் கொலம்பியா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை, ஐரோப்பிய கால்பந்து போட்டிக்கு அடுத்து புகழ்பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி. தென் அமெரிக்க கண்டங்களில் உள்ள அணிகள் இதில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வெல்ல மோதும்.

இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடர் அமெரிக்காவில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி இம்முறை கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சிறப்பான வகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கண்டத்தை சேராத நாடு போட்டியை நடத்துவதும் இதுவே முதன் முறை.

45-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி தொடரில் தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த 10 அணிகளும், வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளை சேர்ந்த 6 அணிகளும் கலந்து கொள்கின்றன.

தொடரில் பங்கேற்கும் நடப்பு சாம்பியனான சிலி, அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், கொலம்பியா, ஈக்வெடார், பராகுவே, பெரு, உருகுவே, வெனிசுலா ஆகியவை தென் அமெரிக்க கண்டங்களை சேர்ந்த அணிகளாகும். வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் தீவுகளை சேர்ந்த அணிகளாக அமெரிக்கா, மெக்ஸிகோ, கோஸ்டா ரிகா, ஜமைக்கா, ஹைதி, பனாமா ஆகியவை பங்கேற்கின்றன.

இந்த கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் அர்ஜென்டினா, பிரேசில், மெக்ஸிகோ, அமெரிக்கா அணிகளும், 'பி' பிரிவில் சிலி, கொலம்பியா, உருகுவே, ஈக்வெடார் அணிகளும், 'சி' பிரிவில் கோஸ்டா ரிகா, ஜமைக்கா, பனாமா, ஹைதி அணிகளும் 'டி' பிரிவில் பராகுவே, பெரு, பொலிவியா, வெனிசுலா அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். காலிறுதி ஆட்டங்கள் 16, 17, 18-ம் தேதிகளிலும் அரையிறுதி 21 மற்றும் 22-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிகள் 25-ம் தேதி மோதும். சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி ஜூன் 26-ல் நடைபெறுகிறது.

தொடரின் முதல் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கொலம்பியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் இந்திய நேரப்படி இந்த ஆட்டம் நாளை காலை 7 மணிக்கு நடைபெறும். போட்டியை சோனி கிக்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அர்ஜென்டினாவின் கனவு

கோபா அமெரிக்கா கால்பந்து வரலாற்றில் அதிகபட்சமாக உருகுவே 15 முறையும், அர்ஜென்டினா 14 முறையும், பிரேசில் 8 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன. இம்முறை அர்ஜென்டினா அணி பட்டம் வெல்லும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி கடைசியாக 1993-ம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரை வென்றிருந்தது.

அதன் பின்னர் இதுவரை பெரிய அளவிலான தொடர்களில் சாதிக்க வில்லை. 2015-ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் சிலி அணியிடம் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. 23 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் கனவுடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது அர்ஜென்டினா அணி.

நட்சத்திர பட்டாளம்

பிரபல நட்சத்திர வீரர்களான அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, செர்ஜியோ அகுரோ, எவர் பனிகா, உருகுவேயின் லூயிஸ் ஸ்வாரஸ், ஜோஸ் மரியா கிம்மென்ஸி ஜமைக்காவின் வெஸ் மோர்கன், சிலியின் அலெக்சிஸ் சான்செஸ், அர்டுரா விதால், சார்லஸ் அரங்குயிஸி, மெக்ஸிகோவின் ஜாவியர் ஹர்னான்டஸ், அன்ட்ரியாஸ் குவார் டாடு, பிரேசிலின் வில்லியன், கவுடின்கோ, ரெனட்டோ அகுஸ்டோ, அமெரிக்காவின் கிறிஸ்டியன் புலிஸிக், பராகுவேயின் அன்டோனியா சனப்ரியா, பெருவின் பாவ்லோ குயர்ரிரோ, வெனிசுலாவின் அடால்பெர்ட்டோ பெனரன்டா, கொலம்பியாவின் கார்லோஸ் பாஹ்கா என்று முன்னணி நட்சத்திர வீரர்கள் சங்கமிக்க இருப்பதால் இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

அர்ஜென்டினா அணியில் கேப்டன் மெஸ்ஸி முதுகுப் பகுதி காயத்தில் அவதிப் பட்டு வருகிறார். இது அந்த அணிக்கு சற்று பின்னடை வாக கருதப்படுகிறது. எனினும் அர்ஜென்டினா முதல் ஆட் டத்தை 6-ம் தேதியே விளையாடுகிறது. அதற்குள் மெஸ்ஸி உடல் தகு தியை எட்டிவிடுவார் என அணி நிர்வாகம் நம்பிக்கையுடன் உள்ளது.

koba1_2879889a.jpg

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-போட்டி-இன்று-தொடக்கம்/article8685814.ece

  • தொடங்கியவர்

கோப்பா அமெரிக்கா கால்பந்து: அமெரிக்க கனவை தகர்த்தது கொலம்பியா

 

 
'மார்க் செய்யப்படாத கொலம்பிய வீரர் ஸபட்டா முதல் கோலை அடிக்க, அமெரிக்க கோல் கீப்பர் குஸான் மற்றும் கோல் வலையருகே அமெரிக்க தடுப்பாட்ட வீரர் ஃபேபியான் ஜான்சன் ஆகியோர் இயலாமையில் நிற்கும் காட்சி. | படம்: ஏ.பி.
'மார்க் செய்யப்படாத கொலம்பிய வீரர் ஸபட்டா முதல் கோலை அடிக்க, அமெரிக்க கோல் கீப்பர் குஸான் மற்றும் கோல் வலையருகே அமெரிக்க தடுப்பாட்ட வீரர் ஃபேபியான் ஜான்சன் ஆகியோர் இயலாமையில் நிற்கும் காட்சி. | படம்: ஏ.பி.

அமெரிக்காவில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் பிரிவு ஏ முதல் போட்டியில் கொலம்பியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றித் தொடக்கம் கண்டது.

1994-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் நடைபெறும் பெரிய கால்பந்து தொடராகும் இது. 1994-ம் ஆண்டு கொலம்பியாவை அமெரிக்கா வீழ்த்தி அதிர்ச்சியளித்தது. ஆனால் இம்முறை அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. சாண்டா கிளாராவில் நடைபெற்ற முதல் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணி வெற்றி பெற்றது.

கொலம்பிய அணியின் நட்சத்திர வீரரும், அபாயகரமான வீரருமான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், மற்றும் ஏ.சி.மிலன் அணியின் நட்சத்திரம் கிரிஸ்டியன் ஸபாட்டா ஆகியோர் முதல் பாதியிலேயே இரு கோல்களை அடித்தனர்.

இந்தத் தோல்வியை அடுத்து இதே பிரிவில் கோஸ்டா ரிகா, பராகுவே போன்ற கடினமான அணிகளை அமெரிக்கா வீழ்த்த கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் பாதியிலேயே கொலம்பிய ஆதிக்கம்:

கொலம்பிய வீரர்கள் 8-வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றனர். இதில் கொலம்பிய வீரரை அமெரிக்கா சரியாக ‘மார்க்’ செய்யத் தவறியது.

அதாவது கொலம்பிய வீரர் ஸபட்டாவை சரியாக அமெரிக்க வீரர்கள் மார்க் செய்யவில்லை. இதனால் எட்வின் கார்டனாவின் கார்னர் ஷாட் அருமையாக சுழன்று உள்நோக்கி வரும் போது மார்க் செய்யப்படாத ஸபட்டா முன்னால் ஊடுருவி முதல் கோலை அடித்தார். அமெரிக்க தடுப்பாட்ட வீரர் ஜெஃப் கேமரூன் பந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகே அமெரிக்க வீரர்கள் தடுமாறத் தொடங்கினர். கொலம்பிய அணி நடுக்களத்தில் குவிய, அமெரிக்காவுக்கு தொடர் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

கொலம்பியா அணி அமெரிக்காவின் கோல் பகுதி முழுதும் ஆதிக்கம் செலுத்தியது, பந்தை தங்கள் வசத்திலிருந்து விட்டுவிடவில்லை. 16-வது நிமிடத்திலேயே செபஸ்டியன் பெரெஸ் அபாரமான ஒரு ஷாட்டை ஆட அமெரிக்காவின் பிராட் குஸான் டைவ் அடித்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவுக்கு கிடைத்த உண்மையான கோல் வாய்ப்பு 36-வது நிமிடத்தில்தான் ஏற்பட்டது. கிளிண்ட் டெம்ப்சே ஓடியபடியே அடித்த ஷாட் கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஓஸ்பினாவைத் தாண்டி வெளியே சென்றது.

இது நடந்து சில நிமிடங்களுக்கெல்லாம் கொலம்பிய வீரர் ஃபாரித் டையஸ் அடித்த கிராஸை அமெரிக்க வீரர் யெட்லின் கையால் தடுத்ததாக நடுவர் தீர்ப்பளித்தார். இது கோல் வாயில் நடந்ததால் பெனால்டி கிக் அல்லது ஸ்பாட் கிக் கொலம்பியாவுக்கு வழங்கப்பட்டது. இதனை ரோட்ரிக்ஸ் முறையாக 2-வது கோலாக மாற்றினார். அமெரிக்க வீரர்கள் இந்த பெனால்டி வழங்குதலை கடுமையாக எதிர்த்தனர் ஆனால் மெக்சிகோ நடுவர் ரொபர்டோ கார்சியா உறுதியாக இருந்தார். காரணம் பந்துக்கு பின்புறத்தைக் காட்டிக் கொண்டிருந்த யெட்லின் கையை மட்டும் உயர்த்தி தடுக்க எத்தனித்தார் என்பது தெள்ளத் தெளிவானது.

கொலம்பிய வீரர் எட்வின் கார்டோனாவின் திறமை அமெரிக்க வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அமெரிக்க வீரர்கள் வசம் பந்து வந்த போது அதனை கோலாக மாற்றும் எந்தவித உத்திகளும் அந்த அணியிடத்தில் இல்லை. ஒரு ஷாட் கூட இலக்கை நோக்கி அமையவில்லை.

இடைவேளைக்குப் பிறகும் கொலம்பிய வீரர் கார்டோனா அமெரிக்க தடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். ஒரு பந்தை அவர் தோட்டா வேகத்தில் அடிக்க அமெரிக்க கோல் கீப்பர் குஸானால் சரியாகத் தடுக்க முடியவில்லை பந்தை தவற விட்டார். பந்து பாக்கா காலருகே வந்த போது கேமரான் அவரை வீழ்த்தினார், இதனால் கொலம்பிய வீரர்கள் ஸ்பாட் கிக் வேண்டும் என்று கோரினர். ஆனால் இம்முறை நடுவர் செவிசாய்க்கவில்லை.

கொலம்பியா தொடர்ந்து நெருக்கடி கொடுக்க, பந்தை தங்கள் கால்களிலேயே வைத்துக் கொண்டு தங்களுக்குள்ளேயே ஆடிக் கொண்டிருக்க அமெரிக்க வீரர்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்க வேண்டும், அதுதான் நடந்தது. 59-வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு கிட்ட டெம்ப்சே எழும்பி தலையால் முட்ட பந்து கோல் லைனுக்கு வெளியே சென்றது. சில நிமிடங்களுக்குப் பிறகு டெம்ப்சேயின் ஃப்ரீ கிக் கோலாக மாறியிருக்க வாய்ப்பிருந்த போது கொலம்பிய கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா அருமையாக தடுத்தார்.

அதன் பிறகே அமெரிக்கா இரண்டு இளம் திறமைகளை உள்ளிறக்கியும், கொலம்பிய தடுப்பாட்டம் இறுக்கப்பட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மொத்தத்தில் பார்த்தால் இரண்டு அல்லது மூன்று சந்தர்ப்பங்கள் தவிர கொலம்பிய அணி பிரச்சினை அதிகமில்லாமல் வெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது.

கொலம்பிய அணிக்கும் தங்கள் பிரிவில் உள்ள கோஸ்டா ரிகா மற்றும் பராகுவே அணிகள் கடும் சவாலே, எனவே இந்த பிரிவிலும் உறுதியான வெற்றியாளர்களை நிர்ணயம் செய்து விடுவது கடினமே.

http://tamil.thehindu.com/sports/கோப்பா-அமெரிக்கா-கால்பந்து-அமெரிக்க-கனவை-தகர்த்தது-கொலம்பியா/article8690899.ece?homepage=true

  • தொடங்கியவர்

13316835_1149973431728112_50723538143814

 
 
கோபா கால்பந்து!
  • தொடங்கியவர்

கோப்பா அமெரிக்கா: நெய்மர் இல்லாத பிரேசில், ஈக்வடாருடன் அதிர்ச்சி டிரா

 

 
ஈக்வடார் வீரர் ஜெஃபர்சன் மாண்டீரோவை ஃபவுல் செய்த பிரேசில் வீரருக்கு மஞ்சள் அட்டை. | படம்: ஏ.எஃப்.பி.
ஈக்வடார் வீரர் ஜெஃபர்சன் மாண்டீரோவை ஃபவுல் செய்த பிரேசில் வீரருக்கு மஞ்சள் அட்டை. | படம்: ஏ.எஃப்.பி.

கலிபோர்னியாவின், பசடேனாவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நெய்மர் இல்லாத பிரேசில் அணி, ஈக்வடார் அணியுடன் கோல் இல்லாத டிரா செய்தது.

ஈக்வடார் வீரர் மில்லர் பொலானோஸின் கோல் ஒன்றை இல்லை என்று கூறியது இந்த ஆட்டத்தில் கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில், ஈக்வடார் வீரர் மில்லர் பொலோனோசின் கிராஸ் ஒன்றை பிடித்த பிரேசில் கோல் கீப்பர் அல்லிசன் பந்தைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியடைய பந்து கோல் கோட்டைத் தாண்டியதாக கருதப்பட்டது. ஆனால் அது கோட்டைத் தாண்டியதா இல்லையா என்பதை முழுக்கவும் கூற முடியவில்லை இது கோல் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது. பந்து அவுட் என்றனர், இது ஈக்வடார் வீரர்களை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இது தங்கள் வெற்றி வாய்ப்பை பறித்தது என்றும் வலுவான பிரேஸில் அணிக்கு ஆதரவாக நடுவர் செயல்பட்டதாக ஈக்வடார் பயிற்சியாளர் கடுமையாக சாடினார்.

நெய்மருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, அவர் ரோஸ்பவுல் ஸ்டாண்ட்டிலிருந்து ஈக்வடாருடன், 8 முறை சாம்பியனான பிரேசில் கோல் இல்லாமல் டிரா செய்ததை அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அதே போல் டேவிட் லூயிஸ், மார்செலோ ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் படுத்திக் கொண்டிருப்பதால் இந்தப் போட்டியில் ஆடவில்லை. இந்நிலையில் வெறுப்பான ஆட்டத்தில் ஈக்வடார் அணி பிரேசில் பயிற்சியாளர் துங்காவுக்கு மேலும் சிந்திக்க சில புதிய பிரச்சினைகளை பிரேசில் அணிக்கு உருவாக்கித் தந்துள்ளது.

வில்லியன், பிலிப் கூட்டின்ஹோ ஆகியோர் போதிய அச்சுறுத்தல்களை வழங்கினாலும் அந்த கில்லர் அணுகுமுறையைக் காணோம். 17-வது நிமிடத்தில் கூட்டின்ஹோ 25 யார்டிலிருந்து ஆடிய ஷாட் வெளியே சென்றது. பொதுவாகவே பிரேசில் அணியை நீண்ட தூரத்திலிருந்து ஷாட் ஆடவே செய்தது ஈக்வடார் தடுப்பணை.

சுமார் 53,000 ரசிகர்கள் ஆரவாரத்துடன் தீவிரமாகத் தொடங்கிய இந்தப் போட்டியில் பிரேசில் அணி ஏகப்பட்ட வாய்ப்புகளை சரியாக கோல் அடிக்கும் நகர்த்தலாக மாற்ற முடியாமல் தோல்வி கண்டது. சில ஷாட்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமாக இலக்கை விட்டு விலகிச் சென்றது. ஒரு முறை லுகாஸ் லிமா தலையால் அடித்த ஷாட் நூலிழையில் கோல் வாய்ப்பை விட்டு விலகிச் சென்றது.

முதல் பாதியில் பிரேசில் தனது உத்வேகத்தை வெளிப்படுத்தியது, கூட்டின்ஹோ மற்றும் பிலிப் லூயிஸ் ஆகியோருக்கு இடது புறம் நிறைய இடம் கிடைத்தது. வில்லியனின் வேகம் ஈக்வடார் மூத்த வீரர் வால்டர் அயோவியை அவர் பக்கத்தில் வர முடியாமல் செய்தது.

ஈக்வடார் ஆங்காங்கே அச்சுறுத்தல் கொடுத்தது. பிரேசில் வீரர்களான கேசிமிரோ மற்றும் எலியாஸ் ஆகியோரை ஃபவுல் செய்யத் தூண்டுவதாகவே ஈக்வடார் ஆட்டம் அமைந்தது. ஈக்வடாருக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பு இடைவேளைக்கு முன்னதாக நிகழ்ந்தது, என்னர் வாலன்சியாவின் 25 அடி ஃப்ரீ கிக் அருமையாக கோல் நோக்கி செல்ல, பிரேசில் கோல் கீப்பர் அலிசன் அதனை அருமையாகத் தடுத்தார்.

இடைவேளைக்குப் பிறகும் என்னர் வாலன்சியா மூலம் ஈக்வடார் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டது, கடைசியில் வாலென்சியா அருமையாக பந்தை எடுத்து சென்றதும், ஜெஃப்ர்சன் மாண்ட்டிரோவின் கோல் முயற்சியும் இறுதி விசில் மூலம் முடிவுக்கு வந்தது.

மொத்தத்தில் கோல் வாய்ப்புகளை பிரேசில் நழுவ விட்டது பிரேசிலின் இந்த அதிர்ச்சி டிராவுக்குக் காரணம். அடுத்த போட்டியில் பிரேசில் அணி ஹெய்ட்டி அணியை சந்திக்கிறது.

http://tamil.thehindu.com/sports/கோப்பா-அமெரிக்கா-நெய்மர்-இல்லாத-பிரேசில்-ஈக்வடாருடன்-அதிர்ச்சி-டிரா/article8693346.ece?ref=sliderNews

  • தொடங்கியவர்
கோப்பா அமெரிக்கா: தப்பித்தது பிரேஸில்
 

article_1465129321-CopaBrzailEsape.jpgகோப்பா அமெரிக்கா கால்பந்தாட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிiயில், ஐந்து தடவைகள் உலகச் சம்பியனாகிய பிரேஸில் அணி, இத்தொடரின் முதலாவது போட்டியில் தோற்பதிலிருந்து, அதிர்ஷ்டத்தின் உதவியுடன் தப்பித்தது.

ஈக்குவடோர் அணிக்கெதிராக இடம்பெற்ற இப்போட்டியில், ஈக்குவடோரின் மில்லர் பொலனோஸ் அடித்த கோல், சர்ச்சைக்குரிய விதத்தில், இல்லையெனத் தீர்மானிக்கப்பட்டது. அவர் கோல் கம்பத்துக்குள் பந்தை அனுப்புவதற்கு முன், விளையாட்டு எல்லையை விட்டுப் பந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தே, அவரது கோல், இல்லையென அறிவிக்கப்பட்டது.

ஆனால், மீள் ஒளிபரப்புகளின்போது, பந்து முழுமையாக வெளியே சென்றிருக்கவில்லை என்பதும், பிரேஸில் அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டது என்பதும் தெரியவந்தது. இப்போட்டி, பின்னர், 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

இடம்பெற்ற ஏனைய போட்டிகளில், கொஸ்டா றிக்கா அணிக்கும் பரகுவே அணிக்குமிடையிலான போட்டி, கோல்கள் பெறப்படாமல் சமநிலையில் முடிவடைந்தது. ஹெய்ட்டி அணிக்கும் பெரு அணிக்குமிடையிலான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணி வெற்றிபெற்றது.

- See more at: http://www.tamilmirror.lk/173951/க-ப-ப-அம-ர-க-க-தப-ப-த-தத-ப-ர-ஸ-ல-#sthash.JxmJj41l.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோப்பா அமெரிக்கா: த்ரில் ஆட்டத்தில் உருகுவேயை வீழ்த்தியது மெக்சிகோ

 
16-ம் எண் ஜெர்சி வீரர் ஹெரெரா கூடுதல் நேரத்தில் 3-வது கோலை அடித்தார். | படம்: ஏ.எஃப்.பி.
16-ம் எண் ஜெர்சி வீரர் ஹெரெரா கூடுதல் நேரத்தில் 3-வது கோலை அடித்தார். | படம்: ஏ.எஃப்.பி.

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் விறுவிறுப்பு எய்தியுள்ளது என்று கூறினால் அது மெக்சிகோ-உருகுவே மோதிய குரூப் சி போட்டியாகத்தான் இருக்க முடியும். மெக்சிகோ அணி தனது கடைசி நேர 2 கோல்களினால் 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.

தேசிய கீதத்தில் சர்ச்சையுடன் இந்தப் போட்டி தொடங்கியது. உருகுவே தேசிய கீதத்துக்குப் பதிலாக சிலி தேசிய கீதம் ஒலிபரப்பப் பட்டது. இந்தத் தவறுக்காக அமைப்பாளர்கள் ஹாஃப் டைம் போது மன்னிப்பு கேட்டனர்.

அரிஸோனாவில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 5 நிமிடங்களில் ரஃபா மார்க்வேஸ், ஹெக்டர் ஹெரேரா ஆகியோரது கோல்களினால் மெக்சிகோ சற்றும் எதிர்பாராத ஒரு வெற்றியைப் பெற்றது. இந்த ஆட்டத்தை சுமார் 60,025 பேர் நேரில் கண்டு களித்தனர்.

ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் மெக்சிகோவின் மார்க்வேஸ் ஒரு லாங் பாஸை அடிக்க இடது புறத்திலிருந்து மெக்சிகோ வீரர் குவார்டாடோ அருமையான ஒரு ஷாட்டை ‘கிராஸ்’ செய்ய உருகுவே கோல் கீப்பர் பெரைராவால் அதனை கையாள முடியவில்லை காரணம் ஹேரேரா அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க இதனால் தடுமாறி உருகுவே கோல் கீப்பர் பெரைரா மூலமாகவே மெக்சிகோவுக்கு முதல் கோல் கிடைத்தது. அதாவது ‘ஓன் கோல்’ முறையில் மெக்சிகோ முன்னிலை பெற்றது, ஆனால் குவார்டாடோவின் அந்த கிராஸ்தான் பெரைராவின் தடுமாற்றத்துக்குக் காரணம், எனவே மெக்சிகோ இந்தக் கோலை முயன்றே அடைந்தது என்றே கூற வேண்டும்.

அதன் பிறகே மெக்சிகோ ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தியது, பெரைராவின் ஃபவுல் ஆட்டத்துக்காக அவர் எச்சரிக்கப்பட்டார். நடுக்களத்தில் மெக்சிகோ ஆதிக்கம் செலுத்த உருகுவே லாங் ஷாட்களில் தஞ்சம் கொள்ள நேர்ந்தது. உருகுவேயின் நட்சத்திர வீரர் சுவாரேஸ் இந்த ஆட்டத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பாதியில் உருகுவேவிற்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிட்டியது. நிகலஸ் லொடைரோவின் பாஸை எடின்சன் கவானி கோலுக்கு அடித்தார், ஆனால் அங்கு மெக்சிகோ கோல் கீப்பர் அல்பிரடோ தலாவெரா அதனை தடுத்து திருப்பி விட்டார்.

இடைவேளைக்குப் பிறகு உருகுவே தங்கள் பாணி ஆட்டத்திற்குத் திரும்பி நெருக்கடி கொடுக்க, 59-வது நிமிடத்தில் கவானி கொடுத்த வாய்ப்பை டீகோ ரோலான் கோலாக மாற்றத் தவறினார், இது சற்றே எளிதான வாய்ப்பு.

இரு அணிகளும் ஃபவுல் கேம் ஆட இரண்டு வீரர்கள் இரு அணிகளிலிருந்தும் வெளியேற்றப்பட இரு அணிகளுமே 10 வீரர்களுடன் ஆடியது. 74-வது நிமிடத்தில் உருகுவே கேப்டன் டீகோ கோடின் ஃப்ரீ கிக்கை தனது தலையால் முட்டி அருமையான கோலாக மாற்ற 1-1 என்று சமனிலை அடைய, ஆட்டம் சூடு பிடித்தது.

84-வது நிமிடத்தில் ரஃபேல் மார்க்வேஸ் கார்னரிலிருந்து அருமையான ஒரு ஷாட்டை அடித்து கோலாக மாற்றினார். ஆனால் இது ஆஃப் சைடு என்று உருகுவே எதிர்ப்பு காட்டினர், ஆனாலும் பயனில்லை. பிறகு 91-வது நிமிடத்தில் ரால் ஜிமேனேஸின் கிராஸை ஹெரெரா தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த மெக்சிகோ 3-1 என்று வெற்றி பெற்றது.

மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் வெனிசூலா ஜமைக்கா அணியை 1-0 என்று வீழ்த்தியது, ஆனால் மெக்சிகோ கோல் வித்தியாசங்கள் அடிப்படையில் சி பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

அடுத்த ஆட்டத்தில் உருகுவே, வெனிசூலா அணியை எதிர்கொள்கிறது.

http://tamil.thehindu.com/sports/கோப்பா-அமெரிக்கா-த்ரில்-ஆட்டத்தில்-உருகுவேயை-வீழ்த்தியது-மெக்சிகோ/article8696828.ece?homepage=true

  • தொடங்கியவர்
கோப்பா அமெரிக்கா: சிலியை வென்றது ஆர்ஜென்டீனா
 
07-06-2016 11:35 AM
Comments - 0       Views - 6

article_1465304827-CopaAngediain.jpgதென்னமரிக்க நாடுகளுக்கான கோப்பா அமெரிக்காவின் நான்காம் நாளில் இடம்பெற்ற குழு டி போட்டிகளில் ஆர்ஜென்டினாவும் பனாமாவும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த வருட கோப்பா அமெரிக்கா இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டீனாவும் சிலியும் விளையாடிய போட்டியில் வெற்றி ஆர்ஜென்டீனா, கடந்த வருடத்துக்கு பழி தீர்த்துக் கொண்டது.

ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரரான லியானல் மெஸ்ஸி காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடியிருக்காத போதும், தமது வேகமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்ஜென்டீனா அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்ஜென்டீனா சார்பாக சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய அஞ்சல் டி மரியா ஒரு கோலினைப் பெற்றதுடன், மற்றைய கோலுக்கு உதவி புரிந்து மெஸ்ஸியை விட ஆர்ஜென்டீனா அணிக்கு தான் எவ்வளவு முக்கியமான வீரர் என்பதை வெளிப்படுத்தினார். ஆர்ஜென்டினா சார்பாக பெறப்பட்ட மற்றைய கோலை எவர் பனிகா பெற்றிருந்தார்.

இதேவேளை, பனாமா, பொலிவியா அணிகளுக்கிடையிலான போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் பனாமா வெற்றி பெற்றது.

இது தவிர, மெக்ஸிக்கோ, உருகுவே அணிகளுக்கிடையே மூன்றாவது நாள் இடம்பெற்ற போட்டியில் மெக்ஸிக்கோ வெற்றி பெற்றதுக்கு மேலதிகமாக, இப்போட்டியின்போது, உருகுவே அணியின் தேசிய கீதத்துக்கு பதிலாக, சிலியின் தேசிய கீதம் இசைக்கப்பட்டிருந்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தவிர, அன்றைய மற்றைய போட்டியில், ஜமைக்காவை வெனிசுவேலா வென்றிருந்தது.

- See more at: http://www.tamilmirror.lk/174177#sthash.8DrZ0HzW.dpuf
  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: பொலிவியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது பனாமா

 
பொலிவியா வீரர்களின் தடுப்புகளை மீறி கோல் அடிக்கும் பனாமா வீரர் பிளாஸ் பெரஸ். படம்: ஏஎப்பி.
பொலிவியா வீரர்களின் தடுப்புகளை மீறி கோல் அடிக்கும் பனாமா வீரர் பிளாஸ் பெரஸ். படம்: ஏஎப்பி.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள பொலிவியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பனாமா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஒர்லான்டோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அறிமுக அணியாக களம் கண்ட பனாமா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 11-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. நடுகள வீரர் அல்பெர்ட்டோ குயின்டேரோவிடம் பாஸை பெற்று பிளாஸ் பெரஸ் கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பனாமா 1-0 என முன்னிலை பெற்றது.

54-வது நிமிடத்தில் பொலிவியா பதிலடி கொடுத்தது. மார்ட்டினிடம் இருந்து நீண்ட தொலைவில் இருந்து ப்ரீக்கை பெற்ற ஜூவான் கார்லோஸ், பனாமாவின் முன்கள வீரர் ஹரோல்டு கமிங்ஸை ஏமாற்றி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமநிலைப்பெற்றது.

போட்டி முடிவடையை 3 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பனாமா 2-வது கோலை அடித்து அதிர்ச்சி கொடுத்தது. பிளாஸ் பெரஸே இந்த கோலையும் அடித்தார். 87-வது நிமிடத்தில் அப்டில் அரோயோவிடம் இருந்து பாஸை பெற்று கோல் அடித்தார் பிளாஸ் பெரஸ். முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் பனாமா வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பொலிவியாவை விட பனாமா அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. ஆனால் இதை அந்த அணியாக சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறியது. கடைசி நேரத்தில் பிளாஸ் பெரஸ் அடித்த கோலால் அந்த அணிக்கு வெற்றி வசப்பட்டது.

இந்த வெற்றி மூலம் கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் வரலாற்றில் அறிமுக ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்த 4-வது அணி என்ற பெருமையை பனாமா அணி பெற்றது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா - பராகுவே மோதுகின் றன. இந்த ஆட்டம் சிகாகோவில் நடை பெறுகிறது.

கொலம்பியா தொடக்க ஆட்டத்தில் அமெரிக் காவை வீழ்த்தி இருந்தது. இதனால் பராகுவேயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னே றும் முனைப் பில் உள்ளது. பராகுவே தனது முதல் ஆட்டத்தில் கோஸ்டாரிகாவுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்திருந்தது. பசடினா நகரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்கா - கோஸ்டாரிகா மோதுகின்றன. அமெரிக்கா, கோஸ் டாரிகா அணிகள் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் பட்சத்தில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அமெரிக்கா அணி இழக்க நேரிடும். அதேவேளையில் கோஸ்டா ரிகாவுக்கும் இந்த ஆட்டம் முக்கியமா னது தான். அந்த அணி முதல் ஆட்டத்தை கோல் எதுவுமின்றி டிராவில் முடித்திருந்ததால் நெருக்கடியுடன் இன் றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-பொலிவியாவுக்கு-அதிர்ச்சி-கொடுத்தது-பனாமா/article8705078.ece

  • தொடங்கியவர்

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் கொலம்பியா
 
08-06-2016 12:06 PM
Comments - 0       Views - 2

article_1465385839-CopaAmjamefka.jpgதென்னமரிக்க நாடுகளுக்கிடையே, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்று வரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு, முதலாவது அணியாக கொலம்பியா நுழைந்துள்ளது.

தொடரின் ஐந்தாவது நாளில் இடம்பெற்ற, கொலம்பியா, பராகுவே அணிகளுக்கிடையிலான போட்டியில், கொலம்பிய அணியின் தலைவரும், அவ்வணியின் நட்சத்திர வீரருமான ஜேம்ஸ் ரொத்ரிகாஸ் பெற்ற கோலின் உதவியுடன், 2-1 என்ற கோல்கணக்கில் பராகுவேயை வீழ்த்தி குழு ஏயிலிருந்து காலிறுதிப் போட்டிக்கு மூதாலாவது அணியாக தகுதி பெற்றது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்கா, கோஸ்டாரிக்கா ஆகிய அணிகளுக்கிடையே இடம்பெற்ற மற்றைய குழு ஏ போட்டியில் 4-0 என்ற கோல்கணக்கில் கோஸ்டாரிக்காவை ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது. முதலவாது போட்டியில், கொலம்பியாவிடம் தோல்வியுற்ற ஐக்கிய அமெரிக்காவுக்கு இம்முடிவு ஆறுதலாய் அமைந்தது.

இந்நிலையில், இந்தக் குழு ஏயிலிருந்து கொலம்பியா, காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஐக்கிய அமெரிக்காவும் பராகுவேயும் மோதுகின்ற போட்டியில் வெல்லும் அணியே, இக்குழுவிலிருந்து அடுத்த அணியாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெறவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/174249#sthash.Z8xIVsmY.dpuf
  • தொடங்கியவர்

அமெரிக்க அணி அபாரம்: கோஸ்டா ரிகாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது

 
அமெரிக்க வீரர் டெம்ப்சே பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
அமெரிக்க வீரர் டெம்ப்சே பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் கோஸ்டா ரிகாவை அமெரிக்க அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்கள் கணக்கைத் தொடங்கியது.

கொலம்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்கா போராடி தோல்வி கண்டது. ஆனால் இந்த முறை ஆதிக்க வெற்றி பெற்றது.

அமெரிக்க அணியின் டெம்ப்சே 9-வது நிமிடத்திலும், ஜோன்ஸ் 37-வது நிமிடத்திலும் பி.உட் 42-வத் நிமிடத்திலும் கடைசியில் 87-வது நிமிடத்தில் ஜி.சூஸீ கோல்களை அடித்து கோஸ்டா ரிகா வெற்றிக் கனவைத் தகர்த்தனர்.

முதல் 5 நிமிடங்கள் தவிர கோஸ்டா ரிகா மீதி 85 நிமிடங்களில் ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்தவில்லை. அமெரிக்க அணியில், ஜோன்ஸ், ஜான்சன், டெம்ப்சே மிக அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடுத்ததாக பராகுவே அணியைச் சந்திக்கின்றனர்.

முதல் 5 நிமிடங்களில் கோஸ்டா ரிகா அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தது. 3-வது நிமிடத்திலேயே கேம்பல் ஒரு அபாரமான ஷாட்டை கோல் நோக்கி அடிக்க அதனை குஸான் பிடித்தார். அமெரிக்கா இந்த 5 நிமிடங்களில் கொஞ்சம் பதற்றத்துடன் தடுப்பாட்டம் ஆடியது.

9-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா கோல் எல்லையில் ஃபவுல் செய்ய அமெரிக்காவுக்கு பெனால்டி வழங்கப்பட்டது, அதனை எடுத்துக் கொண்ட மூத்த அனுபவ வீரர் டெம்ப்சே கோல் கீப்பருக்கு இடது புறம் அபாரமாக கோலாக மாற்றினார். 37வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் ஜோன்ஸின் முயற்சி ஒன்று விரயமாக எதிர்த்தாக்குதல் தொடுத்த அமெரிக்க அணியின் டெம்ப்சே மீண்டும் ஜோன்ஸிடம் பந்தை அளிக்க அவர் அதனை அருமையாக கோலாக மாற்றினார்.

41-வது நிமிடத்தில் பிராட்லி ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், 30 அடிக்கு பந்தை அவர் கடத்தி எடுத்து வந்தார் பந்து அதன் வழியில் அமெரிக்க வீரர் உட்டிடம் வர அவர் கோஸ்டா ரிகா கோல் கீப்பரைத் தாண்டி 3-வது கோலை அடித்தார். இடைவேளையின் போது அமெரிக்கா 3-0 என்று முன்னிலை பெற்றிருந்தது.

0-3 என்ற நெருக்கடியில் இறங்கிய கோஸ்டா ரிகா அதன் பிறகு அவசரகதியில் ஆடியதால் எந்த ஒரு நகர்வும் முக்கியத்துவம் பெறவில்லை, அமெரிக்க அணியும் தடுப்பணையை வலுப்படுத்தியது. 87-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா தங்கள் பகுதிக்கு சற்று வெளியே பந்தை தங்கள் வசமிடமிருந்து இழந்தது. வூண்டோலோவ்ஸ்கி பந்தை சாதுரியமாக கடைந்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சூஸி கோலை நோக்கி அடிக்க அது கோஸ்டா அணியின் கோல் கீப்பர் பெம்பர்டனைக் கடந்து கோல் ஆனது. கோஸ்டா ரிகா அணிக்கு கடும் ஏமாற்றம், சொந்த மண்ணில் அமெரிக்க அணி ஆதிக்கம்.

http://tamil.thehindu.com/sports/அமெரிக்க-அணி-அபாரம்-கோஸ்டா-ரிகாவை-40-என்ற-கோல்-கணக்கில்-வீழ்த்தியது/article8705422.ece

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: காலிறுதியில் கால்பதித்தது கொலம்பியா

கோல் அடித்த மகிழ்ச்சியில் கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ். படம்: ஏஎப்பி.
கோல் அடித்த மகிழ்ச்சியில் கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ். படம்: ஏஎப்பி.

கோபா அமெரிக்கா கால்பந்தில் பராகுவே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா காலிறுதி போட்டிக்கு முன்னே றியது.

பசடேனா நகரில் நேற்று நடை பெற்ற ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள கொலம்பியா-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் கார்னர் கிக் மூலம் ஜேம்ஸ் ரோட்ரிக் ஸிடம் இருந்து பந்தை பெற்ற கார்லோஸ் பாக்கா தலையால் முட்டி கோல் அடித்தார். 30-வது நிமிடத்தில் கார் லோஸ் பாக்கா, எட்வின் கார்டோனா ஆகியோர் உதவியுடன் தனது இடது காலால் ரோட்ரிக்ஸ் கோல் அடிக்க கொலம்பியா 2-0 என முன்னிலை வகித்தது.

முதல் பாதி முடிவடையும் வேளையில் பராகுவே அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் தரியோ லெஸ்கனோஸ் ப்ரீகிக் மூலம் அடித்த பந்தை கொலம்பியா கோல்கீப்பர் டேவிட் ஒஸ்பினா ட்டிவிட பந்து கோல் கம்பத்துக்கு மேல்நோக்கி சென்றது. 61-வது நிமிடத்திலும் பராகுவே அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு டேவிட் ஒஸ்பினா முட்டுக்கட்டை போட்டார்.

ஒரு வழியாக 71-வது நிமிடத் தில் விக்டர் அயலா, பராகுவே அணிக்காக முதல் கோலை அடித்தார். ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்களே இருந்த நிலையில் பராகுவேயின் நடுகள வீரர் ஆஸ்கர் ரோமேரோ இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை பெற்றதால் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

10 வீரர்களுடன் விளையாடிய பராகுவே அணியால் மேற்கொண்டு எதும் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் முதல் அணியாக காலிறுதிக்கு முன்னேறியது.

கொலம்பியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 12-ம் தேதி கோஸ்டா ரிகாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு கொலம்பியாவை எந்த வகையிலும் பாதிக்காது.

இன்றைய ஆட்டம்

பிரேசில் - ஹைதி

நேரம்: அதிகாலை 5

ஈக்வெடார் - பெரு

நேரம்: காலை 7.30

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-காலிறுதியில்-கால்பதித்தது-கொலம்பியா/article8709073.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோப்பா அமெரிக்கா காலிறுதியில் வெனிசூலா: அதிர்ச்சித் தோல்வியுடன் உருகுவே வெளியேற்றம்

 
 
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் வலுவான உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெனிசூலா அணி வீழ்த்தியது. இதன் மூலம் வெனிசூலா காலிறுதி வாய்ப்பைப் பெற்றது.

உருகுவே அணியின் காலிறுதி வாய்ப்பு முடிந்தது. ஏனெனில் மெக்சிகோ-ஜமைக்கா போட்டி டிரா ஆனாலே மெக்சிகோ அணி காலிறுதிக்குத் தகுதி பெற்று விடும், ஆனால் மெக்சிகோ அணி 2-0 என்று ஜமைக்காவை வீழ்த்தியதால், இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த உருகுவே வெளியேற குரூப் சி-யிலிருந்து மெக்சிகோ, வெனிசூலா அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

தென் அமெரிக்கக் கால்பந்தின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத உருகுவே அணி வெளியேறியிருப்பது அந்த அணிக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலடல்பியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் சாலமன் ரோண்டன் அடித்த கோல் உருகுவே அணியை கலங்கடித்தது. இந்த வெற்றி மூலம் 2 போட்டிகளிலும் வென்ற வெனிசூலா அணி தனது காலிறுதி வாய்ப்பைப் பெற்றது. இந்தப் போட்டியிலும் உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரேஸ் ஆடவில்லை.

ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் உருகுவே கோல் கீப்பர் செய்த தவறை வெனிசூலா அருமையாக பயன்படுத்திக் கொண்டது. உருகுவே கோல் கீப்பர் பெர்னாண்டோ மஸ்லேரா கோல் லைனில் இல்லை. இதனைக் கண்டு கொண்ட வெனிசூலாவின் அலெயாண்ட்ரோ குவெரா 50 அடியிலிருந்து மிகவும் துணிச்சலான ஒரு ஷாட்டை உருகுவே கோலை நோக்கி அடித்தார், அதிர்ச்சிகரமான முயற்சி இது. கோலாகும் வேளையில் உருகுவே கோல் கீப்பர் பந்தை லேசாக தட்டி விட முடிந்தது, கிராஸ்பாரைத் தாக்கி பந்து மீண்டும் களத்திற்குத் திரும்பியது. அப்போது சாலமன் ரோண்டன் விழிப்புடன் அதனை எதிர்நோக்கி பந்தை கோலுக்குள் செலுத்தினார்.

68-வது நிமிடத்தில் வெனிசூலாவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தது. இம்முறை அடால்பெர்டோ பெனரந்தா என்ற வீரர் உருகுவே தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குக் காட்டி பந்தை கடத்தி வந்து செய்த கோல் முயற்சியை உருகுவே கோல் கீப்பர் மஸ்லேரா திசைதிருப்பினார்.

உருகுவே அணி இடைவேளைக்கு முன்னதாக இருமுறை வெனிசூலா கோல் பகுதிக்குள் ஊடுருவி கோல் வாய்ப்பைப் பெற்றது ஆனால் கோலாக மாற்ற முடியவில்லை. கடைசியில் ஆட்ட முடியும் தறுவாயில் சமன் செய்ய அருமையான வாய்ப்பு கிட்டியது ஜோஸ் காண்ட்ரிராஸுடன் ஏற்பட்ட ஒற்றை மோதலில் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை வைடாக அடித்து நழுவ விட்டார் எடின்சன் கவானி. மற்றொரு வாய்ப்பில் வெனிசூலா கோல் கீப்பர் டேனி ஹெர்னாண்டஸ் ஷாட்டைத் தடுத்து விட்டார்.

இடையே வெனிசூலாவுக்கு 2-வது கோல் அடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. வெனிசூலாவுக்கு கிடைத்த கார்னர் வாய்ப்பு அது. கார்னர் ஷாட் ரொமூலு ஒடீரோவிடம் வர அவரது ஷாட் நூலிழையில் இலக்கை தவறவிட்டது. கடைசியில் வெனிசூலா 1-0 என்று வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/கோப்பா-அமெரிக்கா-காலிறுதியில்-வெனிசூலா-அதிர்ச்சித்-தோல்வியுடன்-உருகுவே-வெளியேற்றம்/article8713673.ece

  • தொடங்கியவர்

மேஜிக் மெஸ்ஸியின் ஹாட்ரிக்; பனாமாவை நொறுக்கி காலிறுதியில் அர்ஜெண்டினா

 
  • மேஜிக் மெஸ்ஸி பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | படம்: கெட்டி இமேஜஸ்/ஏஎஃப்பி.
    மேஜிக் மெஸ்ஸி பந்தை எடுத்துச் செல்லும் காட்சி. | படம்: கெட்டி இமேஜஸ்/ஏஎஃப்பி.
  • கோல் அடிக்கும் முன் பந்தை கட்டுப்படுத்தும் மெஸ்சி. | படம்: கெட்டி/ஏ.எஃப்.பி.
    கோல் அடிக்கும் முன் பந்தை கட்டுப்படுத்தும் மெஸ்சி. | படம்: கெட்டி/ஏ.எஃப்.பி.

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் ரசிகர்கள் ஏங்கிய மெஸ்ஸி கடைசியாக பனாமாவுக்கு எதிராக களமிறங்கி 3 கோல்கள்- ஹாட்ரிக் சாதனை புரிய பனாமா அணியை அர்ஜெண்டினா 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

19 நிமிடங்களில் மெஸ்ஸி மேஜிக்கை கண்டு ரசிகர்கள் மகிழ்ந்தனர். 19 நிமிடங்களில் மெஸ்ஸி அடுத்தடுத்து 3 கோல்கள்-ஹேட்ரிக். மேலும் கடைசி கோலை உருவாக்கிய கற்பனைவளம் மிகுந்த லாங் பாஸ் என்று மெஸ்ஸி கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் நேற்று தீபங்கள் சிலவற்றை ஏற்றினார்.

கீழ்முதுகு காயம் காரணமாக விளையாடுவது சந்தேகம் என்று அறியப்பட்ட லயோனல் மெஸ்ஸியை பனமாவுக்கு எதிராக பதிலி வீரர்கள் பட்டியலில் பயிற்சியாளர் ஜெரார்டோ மார்டினோ அறிவித்தார்.

ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி 1-0 என்று முன்னிலை பெற்று 9 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பனாமா அணிக்கு எதிராக 2-வது கோலை அடிக்கத் திணறிய போது மெஸ்ஸி அகஸ்டோ பெர்னாண்டஸுக்குப் பதிலியாக களமிறக்கப்பட்டார். ரசிகர்கள் மெஸ்ஸி... மெஸ்ஸி என்று கதறியபடியே இருந்தனர், கடைசியில் அவர் இறங்கியவுடன் ரசிகர்களின் மகிழ்ச்சி ஆவேசமாக மாற ‘ஜீனியஸ்’-இன் ஒவ்வொரு நகர்வும் பெரிய எதிர்பார்ப்புடனான பேரொலியாக மைதானத்தில் எழுந்தவண்ணம் இருந்தன.

68-வது நிமிடத்தில் கொன்சாலோ ஹிகுவெயினின் ஷாட் ஒன்று பனாமா தடுப்பு வீரர் ஹென்ரிக்ஸிடமிருந்து திரும்பி வர மெஸ்ஸி சரியான இடத்தில் நின்று கொண்டிருந்தார். சும்மா பனாமா கோல் கீப்பர் பெனிடோவைத் தாண்டி மெஸ்ஸி கோலுக்குள் தள்ளி விட்டார். ஆனால் பந்து ஹிகுவெயினின் கையில் பட்டு வந்தது போல் தெரிந்தது, இந்த வகையில் ஏற்கெனவே துரதிர்ஷ்டம் கண்ட் பனாமா அணிக்கு மேலும் ஒரு அதிர்ஷ்டங்கெட்ட தருணம்.

ஆனால் அடுத்த கோல் மெஸ்ஸி ஸ்பெஷல், ரசிகர்கள் எதற்காகக் காத்திருந்தனரோ அந்த தரிசன கோல் கிடைத்தது. ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் தொடர்ந்து ஃபவுல் ஆட்டம் ஆடி வந்த பனாமா அணி தவறு செய்ய மெஸ்ஸிக்கு 25 அடி ஃப்ரீ கிக் அளிக்கப்பட்டது. இது மெஸ்ஸியின் வலுவான இடம், அவர் மிக அருமையாக அந்த ஃப்ரீகிக்கை நேராக கோலுக்குள் அடித்தார். பெனிடோ முழு டைவ் அடித்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை, தனித்துவமான மெஸ்ஸி ரக ஃப்ரீ கிக், இதற்குத்தானே ரசிகர்கள் காத்திருந்தனர்!

87-வது நிமிடத்தில் பனாமா தங்களது ஆட்டத்தை கைவிட மெஸ்ஸியிடம் வந்த பந்து 15-வது யார்டிலிருந்து அவரது ஹேட்ரிக் கோல் ஆனது. மெஸ்ஸியின் முதல் கோல் போன்றதே இதுவும், இடையில் பனாமா வீரர் பெலாயின் தடுப்பு உத்தியை மெஸ்ஸி கையாண்ட விதம் அபரிமிதமானது. மெஸ்ஸி ஹாட்ரிக்! அர்ஜெண்டினா 4-0 என்று முன்னிலை.

கடைசியில் 89-வது நிமிடத்தில் மெஸ்ஸி மிக அருமையான நம்பமுடியாத, அவருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய ஒரு நீண்ட தூர பாஸ் ஒன்றை செய்ய அது ரோஜோவிடம் வர அவர் அதனை தலையால் அகிரோவிடம் தள்ள நெருக்கமான இடத்திலிருந்து அகிரோ அதனை கோலாக மாற்றினார். இது அகிரோவின் 33-வது சர்வதேச கோல் அர்ஜெண்டினா 5-0 என்று வெற்றி பெற்றது.

68-வது நிமிடம் வரை 9 வீரர்களை வைத்துக் கொண்டு 0-1 என்று பின் தங்கியிருந்த பனாமா மெஸ்ஸி வந்த பிறகு தங்களது கால்பந்தாட்டத்தை மறந்து பார்வையாளர்களாக மாற வேண்டியிருந்தது.

முன்னதாக ஆட்டம் தொடங்கி ஆறரை நிமிடம் என்று கூறலாம் டி மரியாவின் ஃப்ரீ கிக் ஒன்றை நிகலஸ் ஒட்டாமெண்டி தலையால் முட்டி முதல் கோலை அடித்தார்.

அதன் பிறகு இடைவேளை வரை பனாமா நன்றாகவே ஆடினர். ஆனால் அந்த அணி ஒரு மாதிரியான ஆவலாதி கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் அரைமணியில் 4-5 மஞ்சள் அட்டை இருதரப்பினருக்கும் காண்பிக்கப்பட்டது, ஆட்டத்தின் 17-19-வது நிமிடங்களில் பனாமா தனது ஆக்ரோஷத்தை உடல் ரீதியாக அர்ஜெண்டின வீரர்களை அச்சுறுத்துவதில்தான் காட்டினர். பந்து எங்கோ ஆடப்பட்டிருக்கும் போது கூட இங்கு அர்ஜெண்டின வீரரைக் கையால் தள்ளி விடுவது என்ற ரீதியில் ஆட்டம் செல்ல ஒரு நேரத்தில் இரு அணியினருக்கும் கைகலப்பு ஏற்படும் போல் ஆனது. அதில் பெரஸுக்கும் மஸ்கரணாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, பிறகு பலேயோ என்ற பனாமா வீரர் அர்ஜெண்டினாவின் மஸ்கரணாவை முட்டித் தள்ளினார், இருவருக்கும் மஞ்சள் அட்டை.

30வது நிமிடத்தில் இந்த வகையான வகைதொகையற்ற ஆக்ரோஷத்தினால் பனாமா வீரர் கோடாய் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அது முதலே 10 வீரர்களுடன் ஆடியது பனாமா. மெஸ்ஸி இறங்கும் போது அந்த அணி கிட்டத்தட்ட செத்த பாம்பாகிவிட்டது, ஆனாலும் மெஸ்ஸி கோல்களை அடித்த விதம் அவர் ஒரு ஜீனியஸ் என்பதை அறிவுறுத்தியது.

http://tamil.thehindu.com/sports/மேஜிக்-மெஸ்ஸியின்-ஹாட்ரிக்-பனாமாவை-நொறுக்கி-காலிறுதியில்-அர்ஜெண்டினா/article8717834.ece

  • தொடங்கியவர்
கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் அமெரிக்கா
 
 

article_1465731688-CopaCliniDemps1usa.jpஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு ஐக்கிய அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பராகுவேக்குமிடையே இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் 1-0 என்ற கோல்கணக்கில் வென்றதன் மூலமே ஐக்கிய அமெரிக்கா காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் பெறப்பட்ட கோலை, ஐக்கிய அமெரிக்காவின் சிரேஷ்ட வீரர் கிளைன்ட் டெம்ப்ஸே பெற்றார்.

இதேவேளை, குழு ஏயிலிருந்து காலிறுதிப் போட்டிகளுக்கு கொலம்பியா தகுதி பெற்றிருந்த நிலையில், கொலம்பியா, கோஸ்டாரிக்கா அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதி குழு ஏ போட்டியின்போது கொலம்பியா அணியில் 10 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பயிற்சியாளரின் இந்த உத்தி பிழைக்க, 2-3 என்ற கோல்கணக்கில், கோஸ்டாரிக்காவிடம் தோல்வியுற்ற கொலம்பியா, காலிறுதிப் போட்டிகளில் பெரும்பாலும், கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேஸிலைச் சந்திக்கவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/174505#sthash.05LMrYy8.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் 29 வருடங்களுக்கு பிறகு வெளியேறியது பிரேசில்

 

Daily_News_5202404260636.jpg

நியூயார்க்: கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இருந்து 29 வருடங்களுக்கு பிறகு லீக் சுற்றில் பிரேசில் அணி வெளியேறியுள்ளது. லீக் சுற்று போட்டியில் பெரு அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் தோல்வி அடைந்தது. 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே, ‘பி’ பிரிவில் ஹைதி, பெரு, பிரேசில், ஈகுவடார், ‘சி’ பிரிவில் ஜமைக்கா, வெனிசுலா, மெக்சிகோ, உருகுவே, ‘டி’ பிரிவில் பனாமா, பொலிவியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் நேற்று பி பிரிவில் இடம் பெற்றுள்ள பிரேசில் - பெரு அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் பெரு அணி பிரேசிலை வீழ்த்தியது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பின் லீச் சுற்றோடு பிரேசில் அணி வெளியேறியுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=223656

  • தொடங்கியவர்

கையால் தள்ளி கோல்: பெரு அணியிடம் தோற்று பிரேசில் அதிர்ச்சி வெளியேற்றம்

 

 
படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சர்ச்சைக்குரிய கோல் மூலம் பெரு அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து பிரேசில் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

குருப் பி-யில் பெரு அணி 7 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க, ஈக்வடார் அணி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடிக்க இந்த இரண்டு அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. பிரேசில் 4 புள்ளிகளுடன் 3-ம் இடம் பிடித்து வெளியேறியது.

முதல் போட்டியில் ஈக்வடார் அணிக்கு எதிராக கோல் இல்லாமல் டிரா ஆக பிரேசில் சொத்தையான ஹைட்டி அணியை 7 கோல்கள் அடித்து வென்றது. இந்த கோல் வித்தியாசத்தினால் நேற்று பெரு அணிக்கு எதிராக ஒரு புள்ளி பெற்றிருந்தாலே போதும். ஆனால் சற்றும் எதிர்பாராதவிதமாக சர்ச்சை கோலில் பிரேசில் 1-0 என்று தோல்வி தழுவி அதிர்ச்சி வெளியேற்றம் கண்டது.

காலிறுதியில் பெரு-கொலம்பியா அணிகளும் அமெரிக்கா-ஈக்வடார் அணிகளும் மோதவுள்ளன. 5 முறை உலக சாம்பியன் பிரேசில் அணி வெளியேறியது. கடந்த 31 ஆண்டுகளில் பிரேசில் அணிக்கு எதிராக பெரு பெறும் முதல் வெற்றியாகும் இது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பா அமெரிக்காவில் பிரேசிலை, பெரு வீழ்த்திய நாக் அவுட் தருணமாகும்.

முதல் போட்டியிலேயே பிரேசில் அணி ஈக்வடாரிடம் தோல்வி கண்டிருக்க வேண்டியதுதான், அன்று நடுவரின் தவறான தீர்ப்பினால் ஈக்வடாரின் கோல் மறுக்கப்பட்டது. இன்று காலத்தின் முரணாக கோல் இல்லாதது கோல் என்று தீர்ப்பளிக்கப்பட்டு பிரேசில் வெளியேறியது. இதைத்தான் 'பொயட்டிக் ஜஸ்டிஸ்' என்று கூறுகிறார்களோ?

1-0 என்று பெருவிடம் பிரேசில் தோற்க இதே குரூப் பி-யில் ஈக்வடார் அணி ஹைட்டி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றதால் பிரேசில் அணி வெளியேற்றம் கண்டது. இந்தப் போட்டியில் பிரேசில் அணிக்குத் தேவை ஒரேயொரு புள்ளி. ஆனால் பெரு அணியின் கோல் கீப்பர் பெட்ரோ கேலஸின் அபாரமான கோல்கீப்பிங்கும் பிரேசில் துன்பத்தை இரட்டிப்பாக்கியது. ஒன்று பிரேசில் அணியில் நெய்மர் இல்லை. இதனால் பினிஷிங் செய்ய ஆள் இல்லை. ஆட்டத்தில் தொய்வு நிலை சீராக இருந்தது.

இந்நிலையில் இடைவேளைக்கு முன்னதாக கேப்ரியல் பார்போசா எடுத்த இரண்டு கோல் முயற்சிகளையும் பெட்ரோ கேலஸ் முறியடித்தார், பெரு அணி கோல் அடித்த பிறகு ‘சாகற காலத்தில் சங்கரா.. சங்கரா’ என்பது போல் பிரேசில் அணி சில அதிரடி முயற்சிகளைச் செய்த போதும் ஒரு நேர் கோல் வாய்ப்பை பிரேசில் தவறவிட்டது. ஷாட்டில் வலுவில்லை. பெரு கோல் கீப்பர் கேலஸும் நன்றாகக் கணித்து விட்டார்.

கையால் தள்ளிய கோல்:

ஜீனியஸ் மரடோனா தனது சாம்பியன்ஷிப் கோலை ‘ஹேண்ட் ஆஃப் காட்’ என்றார். இந்தப் போட்டியில் பெரு அணிக்காக கடவுள் தன் கையைக் கொடுத்தது ரால் ருடியாஸ் என்ற வீரருக்கு, ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருக்கும் தறுவாயில் பெரு அணி அபாரமான கூட்டு முயற்சியில் பந்தை பிரேசில் எல்லைக்குள் கொண்டு செல்ல பெரு வீரர் ஆண்டி போலோ அருமையான ஒரு கிராஸைச் செய்ய கோலுக்கு நேராக நின்று கொண்டிருந்த ரால் ருடியாஸின் கையில் பட்டு கோலுக்குள் சென்றது. அதாவது அவர் கையால் தள்ளினார் என்பதே ரீப்ளேக்கள் காட்டிய நிஜம். உடனேயே பிரேசில் கோல் கீப்பர் கை, கை என்று கதறினார்.

முதலில் கோல் என்று அறிவிக்கப்பட்டது, ஸ்கோர் போர்ட் 1-0 என்று பெருவுக்குச் சாதகம் காட்டியது. ஆனால் நடுவர் அதனை நிறுத்தி வைக்க மீண்டும் ஸ்கோர் லைன் 0-0 என்று காட்டியது, பிறகு நடுவர் ஆண்ட்ரேஸ் குன்ஹா லைன்ஸ் ரெஃப்ரீக்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார், இடையே பெரு அணி போர்க்கொடி உயர்த்தியது, கடைசியில் நடுவர் கோல் என்று அறிவிக்க பிரேசில் அணி போர்க்கொடி தூக்கியது, ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை ஏனெனில் அது ‘ஹேண்ட் ஆஃப் காட்’ அல்லவா?

ஆட்டத்தின் தொடக்க தருணங்களில் பிலிப் கோர்ட்டின்ஹோ மற்றும் வில்லியன் பிரேசிலின் தடுப்பு வியூகத்தை கவனித்துக்கொள்ள தொடக்கத்தில் சில நல்ல நகர்வுகளுடன் வலுவாகவே பிரேசில் தொடங்கியது. பிலிப் லூயிசின் அபார முயற்சியை பெரு கோல் கீப்பர் கேலஸ் முறியடிக்க பிறகு கேப்ரியல் ஷாட்டையும் கோலுக்குப் போகாமல் தடுத்து கேலஸ் பிரேசிலுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பெரு கோல் பகுதியில் அந்த அணியின் கிரிஸ்டியன் ரேமோஸ், லுகாஸ் லிமோவுடன் மோத பிரேசில் அணி பெனால்டி கேட்டு முறையீடு செய்ததை நடுவர் குன்ஹா ஏற்கவில்லை. மறு முனையில் பிரேசில் வீரர் ரெனேட்டோ அகுஸ்டோவின் சவாலில் கீழே விழுந்த பெரு வீரர் எடிசன் புளோரேஸ் பெனால்டி கேட்டார், அதுவும் அளிக்கப்படவில்லை. இடைவேளைக்கு முன்னதாக கேப்ரியலின் இன்னொரு முயற்சியையும் ஆட்ட நாயகன் கோல் கீப்பர் கேலஸ் முறியடித்தார்.

இடைவேளைக்குப் பிறகும் பிரேசில் ஆட்டத்தில் வேகம் மந்தமானது முயற்சிகளில் உத்வேகம் இல்லை, இலக்கை நோக்கிய வெறி இல்லை. 75-வது நிமிடத்தில் கையால் தள்ளிய பெரு வீரர் ருடியாஸின் கோல் ஏற்படுத்திய அதிர்ச்சியில் பெரு அணிக்கு சில நெருக்கடிகளைக் கொடுத்தாலும் பிரேசிலின் முயற்சிகள் மிகவும் தாமதமாகவே நடந்தேறியது, ஆனால் ஆட்ட நாயகன் பெரு கோல் கீப்பர் கேலஸ் பிரேசிலின் தடுப்புச் சுவராக நின்றார்.

கடந்த ஆண்டு கோப்பா அமெரிக்காவில் காலிறுதியில் தோற்றது, 2014 உலகக்கோப்பையில் ஜெர்மனி அணி கோல் மழையில் மூழ்கடித்தது தற்போது குருப் மட்டத்திலேயே வெளியேறியிருப்பது என்பது பிரேசில் அணியின் கால்பந்து வரலாற்றில் வைக்கப்பட்ட கரும்புள்ளிகளே.

http://tamil.thehindu.com/sports/கையால்-தள்ளி-கோல்-பெரு-அணியிடம்-தோற்று-பிரேசில்-அதிர்ச்சி-வெளியேற்றம்/article8723797.ece?homepage=true

  • தொடங்கியவர்

கோபாவிலும் தொடருது சோகம்... என்னதான் ஆச்சு பிரேசில் அணிக்கு?

Brazil11.jpg


2014 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டி, புகழ்பெற்ற மரக்காணா மைதானம் – சொந்த ரசிகர்களுக்கு மத்தியில் ஜெர்மனியிடம் 7 – 1 என பேரடி வாங்கியது பிரேசில் அணி. கோப்பை வாங்கும் என எதிர்பார்த்த அந்த அணி, ஜெர்மனியிடம் தோற்றது அந்நாட்டு கால்பந்து ரசிகர்களின் நெஞ்சில் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் தற்போது நடந்து வரும் கோபா அமெரிக்கா கோப்பையின் நூற்றாண்டு விழா தொடரிலும், முதல் சுற்றோடு வெளியேறி மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது அவ்வணி.

தென் அமெரிக்காவின் முன்னணி அணிகள் பங்குபெறும் கோபா அமெரிக்கா தொடர், கடந்த ஆண்டு சிலியில் நடைபெற்றது. அக்கோப்பையை,  போட்டியை நடத்திய சிலி அணியே வென்றது. 1916 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டியின் 100வது வருடத்தை முன்னிட்டு,  இந்த ஆண்டே போட்டி மீண்டும் நடத்தப்பட்டது. சிறப்பாக நடத்த வேண்டும் என்ற நோக்கில் 12 அணிகளுக்கு மாற்றாக வட அமெரிக்காவைச் சேர்ந்த அணிகளையும் சேர்த்து 16 அணிகள் பங்கேற்றன. அதுமட்டுமின்றி தென் அமெரிக்காவிற்கு வெளியே இத்தொடர் முதன்முறையாக அமெரிக்காவில் நடத்தப்படுகிறது. லீக் போட்டிகள் முடிவடையும் தருவாயில் இதுவரை மெக்சிகோ, அமெரிக்கா, கொலம்பியா, அர்ஜென்டினா உள்ளிட்ட முன்னணி அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. ஆனால் 8 முறை சாம்பியனான பிரேசில் அணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. ஒருகாலத்தில் ரொனால்டோ, ரொனால்டின்ஹோ, ககா, ராபின்ஹோ போன்ற வீரர்களைக் கொண்டு உலகையே திணறடித்த பிரேசில் அணி, மீண்டும் மீண்டும் தோல்விகளைத் தழுவி வருவது மிகப்பெரிய ஏமாற்றமாய் அமைந்துள்ளது.

Brazil2.jpg

தனது முதல் போட்டியில் ஈகுவடார் அணியிடம் பிரேசில் போராடியே டிரா செய்தது. அடுத்த போட்டியில் கத்துக்குட்டி ஹைதியைப் போட்டுத்தள்ளிய பிரேசில் அணி, காலிறுதிக்குத் தகுதி பெற டிரா மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் பலம் குறைந்த பெரு அணியிடம் 1-0 என்று தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது பிரேசில். இப்போட்டியில் பெரு அணியின் ருடியாஸ் கையினால் பந்தைத் தள்ளி கோல் போட்டதாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அது உண்மையாக இருந்த போதும், நடுவர்கள் அதை கவனிக்கத் தவறினார்கள். அவ்வணியின் தோல்விக்கு இது ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், ஈகுவடார் அணியிடம் இவர்கள் தோல்வியிலிருந்து தப்பிக்க,  அப்படியொரு நடுவரின் தவறான முடிவுதான் காரணம் என்பதை அவ்வணி மறந்துவிடக் கூடாது.

கால்பந்து உலகைக் கட்டி ஆண்டவர்கள் இப்படி சோடை போகக் காரணம் என்ன? பல இளம் நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் அவர்களால் மீள முடியவில்லை?

இளம் புயல் நெய்மார் இல்லை

Brazil6.jpg

பிரேசில் அணியின் பலம், அவ்வணியின் எதிர்காலம் எல்லாமே நெய்மார் என்னும் 24 வயது நட்சத்திரம்தான். பார்சிலோனா அணியில் மெஸ்ஸியோடு இணைந்து கலக்கி வரும் இவரே, அடுத்த மெஸ்ஸியாகவும் கருதப்படுகிறார். ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள ஒலிம்பிக் கால்பந்து அணியில்,  23 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் மூவர் மட்டுமே ஒரு அணிக்காக விளையாட முடியும். நெய்மார் விளையாடி வரும் பார்சிலோனா அணியின் நிர்வாகம் அவரை ஒலிம்பிக் அல்லது கோபா அமெரிக்கா தொடர் ஏதாவது ஒன்றில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று கூறிவிட்டது. சொந்த மண்ணில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டுமென்பதால் நெய்மாரை கோபா தொடரில் களமிறக்கவில்லை. அவர் இல்லாத நிலையில் அவ்வணியின் முன்கள வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கத் தவறினர். ஈகுவடார் மற்றும் பெரு அணிகளோடு அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாததால் நெய்மார் இல்லாதது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அடி மேல் அடி

பிரேசில் அணி இப்படி அடிமேல் அடி வாங்க, அவ்வீரர்கள் அடி வாங்குவதும் ஒரு காரணமாய் அமைந்துவிட்டது. உலகக்கோப்பை அரையிறுதியில் நெய்மார் காயத்தால் விளையாடாததே தோல்விக்கு வித்திட்டது. அதேபோல் இத்தொடர் தொடங்கும் முன்பு, முன்னனி வீரர் டக்லஸ் கோஸ்டா காயத்தால் தொடரிலிருந்து வெளியேறினார். அனுபவம் வாய்ந்த நட்சத்திர வீரராகவும் காயத்தால் வெளியேறிய நிலையில் லூயிஸ் கஸ்டோவா, எடெர்சன், ராஃபின்ஹா ஆகியோரும் நடையைக் கட்டினர். இதனால் அணியில் பெரிய அளவு மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தது. ககா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர் இல்லாதது அவர்களை மேலும் பிரச்னைக்குள்ளாக்கியது.

துங்கா..!

Brazil41.jpg

2010 வரை அணியின் பயிற்சியாளராக இருந்த துங்கா, 2014 அரையிறுதியில் தோற்ற பிறகு அணியின் பயிற்சியாளராக மீண்டும் பதவியேற்றார். பதவியேற்றவுடனேயே ‘அணியை மாற்றுகிறேன்’ பேர்வழி என்று பல மாற்றங்களைச் செய்து தள்ளினார். கேப்டன் தியாகோ சில்வாவை அணியிலிருந்து கழட்டிவிட்டு நெய்மாரைக் கேப்டனாக்கினார். 2014ன் உலக லெவனில் இடம்பெற்ற டேவிட் லூயிஸ், மார்செலோ போன்ற முன்னனி வீரர்கள் பலரும் துங்காவால் தூக்கியடிக்கப்பட்டனர். ரியல் மாட்ரிட் அணிக்காக கலக்கி வரும் மார்செலோ சில மோசமான செயல்பாடுகளுக்காக மொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். போட்டிக்கு போட்டி மீண்டும் வேலையைக் காட்டினார் துங்கா.  செல்சீ அணியின் வில்லியனைத் தவிர்த்து, எந்த வீரரையும் அவர் நிரந்தரமாக ஆடும் லெவனில் சேர்க்கவில்லை. இதனால் அணியில் கெமிஸ்ட்ரி, பயாலஜி என எதுவுமே வொர்க் அவுட் ஆகவில்லை. வீரர்களை மாற்ற எடுத்த முயற்சிகளை, அவர்களின் திறனை மேம்படுத்துவதில் துங்கா.எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அனுபவ வீரர்கள் இல்லாத ஒரு அணி எப்படி திணறும் என்று உலகிற்கே எடுத்துக்காட்டாய் விளங்கியது பிரேசில் அணி.

பண மோகம்

Brazil5.jpg

இது வீரர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை. ரியல் மாட்ரிட், மேசெஸ்டர் யுனைடட் போன்ற மிகப்பெரிய கிளப் அணிகள் பிரேசிலில் கிடையாது. அங்குள்ள கிளப்களால் இந்த வீரர்கள் எதிர்பார்க்கும் ஊதியத்தைத் தர முடியாது. இதனால் 90% பிரேசில் வீரர்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தில்தான் விளையாடி வருகின்றனர். இந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவின் கால்பந்து புரட்சியால் பல வீரர்கள் மிகப்பெரிய ஊதியத்துக்காக சீனாவின் பக்கம் படையெடுத்து வருகின்றனர். அதிலும் அவ்வணிகளின் முக்கிய டார்கெட்களாக விளங்குவது பிரேசில் வீரர்கள்தான். ஏற்கனவே டக்சீரா, ரமையர்ஸ், கில், ரெனாடோ ஆகஸ்டோ போன்ற பல வீரர்கள் அங்கு விளையாடி வரும் நிலையில் ஆஸ்கர், டேவிட் லூயிஸ் போன்ற வீரர்களுக்கும் வலை வீசுகின்றன அவ்வணிகள். போட்டி அதிகம்  இல்லாத அத்தொடர்களில் விளையாடுவதன் மூலம் வீரர்களின் திறமையை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது வீரர்களின் திறமை மேம்படுவதற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது.

Brazil3.jpg

இப்படி அவ்வணி தோற்க எத்தனை எத்தனையோ காரணங்கள். இவை அவ்வணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் முக்கிய அம்சங்கள். இதுமட்டுமின்றி அடுத்த உலகக்கோப்பைக்கு தேர்வாவதிலும் பிரேசில் அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென் அமெரிக்காவிலிருந்து 5 அணிகள் மட்டுமே அதிகபட்சமாக பங்கேற்க முடியும். ஆனால் தற்போது பிரேசில் அணி 6 வது  இடத்தில் அவல நிலையில் நிற்கிறது. ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறாவிட்டால்,  அதைவிட அவ்வணிக்கு கரும்புள்ளி எதுவும் இல்லை. இதையெல்லாம் அந்த அணியின் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும்.

வழக்கம் போல் பயிற்சியாளர் மாற்றம், வீரர்கள் மாற்றம் என்று செய்யாமல், அனுபவ வீரர்களையும் இளம் வீரர்களையும் மீண்டும் அணியில் இணைத்து அணிக்கு உயிரூட்ட வேண்டும். இல்லையேல் பீலே போன்ற நட்சத்திரம் விளையாடிய ஒரு அணி, டி.வி யில் மட்டுமே உலகக்கோப்பையைப் பார்க்க வேண்டிய நிலமைக்குத் தள்ளப்படும். கால்பந்து பிரபலமாகாத நாடுகளில் கூட பிரேசில் வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்துதான் எல்லோரும் கால்பந்தை ரசித்தனர். அவ்வணி மீண்டு வர வேண்டுமென்பது அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்ல, கால்பந்தை சுவாசிக்கும் ஒவ்வொரு ரசிகனின் ஆசையும் கூட. அது நிறைவேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/65187-sadness-continues-koba-football-league-brazil.art

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: மெக்சிகோ - வெனிசுலா ஆட்டம் டிரா- உருகுவேக்கு ஆறுதல் வெற்றி

 
 
வெனிசுலா வீரர்களின் தடுப்புகளை மீறி கோல் அடித்த மெக்சிகோ வீரர் ஜீசஸ் மானுவல். படம்: ஏஎப்பி.
வெனிசுலா வீரர்களின் தடுப்புகளை மீறி கோல் அடித்த மெக்சிகோ வீரர் ஜீசஸ் மானுவல். படம்: ஏஎப்பி.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசுலா அணிக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது மெக்சிகோ அணி.

சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளும் ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ஹூஸ்டன் நகரில் மோதின.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து மெக்சிகோவுக்கு அதிர்ச்சி கொடுத்தது வெனிசுலா. அல்ஜான்ட்ரோ குயரா அடித்த ப்ரீகிக்கை கிறிஸ்டியன் சான்டோஸ் தலையால் முட்ட அதனை மானுவல் வெலாஸ்குவெஸ் கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் வெனிசுலா 1-0 முன்னிலை வகித்தது.

மெக்சிகோ வீரர் ஜீசஸ் மானுவல் கோல் அடிக்க கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோட்டைவிட்டார். எனினும் 80-வது நிமிடத்தில் 5 வீரர்களின் தடுப்புகளை மீறி 10 யார்டு தூரத்தில் இருந்து ஜீசஸ் மானுவல் கோல் அடித்து அசத்தினார். 84-வது நிமிடத்தில் வெனிசுலா அணிக்கு 2-வது கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த அணியின் ஜோசப் மார்ட்டின்ஸ் இலக்கை நோக்கி உதைத்த பந்தை மெக்சிகோ கோல் கீப்பர் ஜோஸ்டி ஜீசஸ் கொரோனா தடுத்தார். அதன் பின்னர் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட் டத்தை டிராவில் முடித்ததன் மூலம் 22 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல் வியை சந்திக்காத பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது மெக்சிகோ.

லீக் ஆட்டங்களின் முடிவில் மெக்சிகோ அணி 7 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடம் பிடித்தது. அந்த அணி காலிறுதியில் டி பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான சிலியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. சி பிரிவில் இரண்டாவது இடம் பிடித்துள்ள வெனிசுலா காலிறுதியில், இந்த முறை பட்டம் வெல்லக்கூடிய அணியாக கருதப்படும் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆறுதல் வெற்றி

சி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்த உருகுவே-ஜமைக்கா அணிகள் மோதின. இதில் உருகுவே 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 15 முறை சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே அணிக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.

இன்றைய ஆட்டங்கள்

சிலி- பனாமா

நேரம்: அதிகாலை 5.30

அர்ஜென்டினா- பொலிவியா

நேரம்: காலை 7.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-மெக்சிகோ-வெனிசுலா-ஆட்டம்-டிரா-உருகுவேக்கு-ஆறுதல்-வெற்றி/article8731453.ece

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து: அர்ஜென்டினா ஹாட்ரிக் வெற்றி

 
 

கோபா அமெரிக்கா கால்பந்தில் அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அர்ஜென்டினா அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. மேலும் இந்த தொடரில் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற ஒரே அணி என்ற பெருமையையும் அந்த அணி பெற்றது.

டி பிரிவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அர்ஜென் டினா ஆதிக்கம் செலுத்தியது. 13-வது நிமிடத்தில் எரிக் லாமேலா ஃப்ரீகிக் மூலம் பொலிவியா வீரர்களின் தடுப்பு அரண்களை மீறி கோல் அடித்தார்.

அடுத்த 2-வது நிமிடத்தில் கோன்சாலா தலையால் முட்டி கொடுத்த பந்தை கோல் கம்பத்தின் மிக அருகே வைத்து கோலாக மாற்றினார் லாவெஸி. இதனால் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை வகித்தது. சர்வதேச போட்டிகளில் லாவெஸிக்கு இது முதல் கோலாகவும் அமைந்தது. 32-வது நிமிடத்தில் 3-வது கோலை அடித்து அசத்தியது அர்ஜென் டினா. லாவெஸியின் கிராஸை பெற்று விக்டர் குயஸ்டா இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் அர்ஜென்டினா 3-0 என முன்னிலை பெற்றது.

2-வது பாதியின் தொடக்கத்தில் மெஸ்ஸி களமிறங்கினார். 60-வது நிமிடத்தில் ஃப்ரீகிக் மூலம் அவர் அடித்த பந்து கோல்கம்பத்துக்கு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது. 81-வது நிமிடத்தில் பொலிவியா கோல்கீப்பரை தந்திரமாக மாற்றி கோல் அடிக்க மெஸ்ஸி முயன்றார். ஆனால் இது ஆப் சைடு என அறிவிக்கப்பட்டதால் மெஸ்ஸிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் கடைசியாக 1979-ம் ஆண்டு அர்ஜென்டினா அணியை பொலிவியா வீழ்த்தியிருந்தது. அதன் பின்னர் அந்த அணி அர்ஜென்டினாவிடம் தோல்வியையே சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடம் பிடித்த அர்ஜென்டினா காலிறுதியில் வெனிசுலாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-அர்ஜென்டினா-ஹாட்ரிக்-வெற்றி/article8735950.ece?homepage=true

  • தொடங்கியவர்
கோப்பா அமெரிக்கா: அரையிறுதியில் அமெரிக்கா
 

article_1466170680-f5qtzu4f.jpgஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் தென்னமரிக்க நாடுகளுக்கிடையிலான 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, போட்டியை நடாத்தும் நாடான ஐக்கிய அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

ஈக்குவடோர் அணியுடனான இன்றைய காலிறுதிப்போட்டியில், சிரேஷ்ட வீரரான கிளைன்ட் டெம்ப்சே, முதலாவது கோலினைப் பெற்றதுடன், இரண்டாவது கோலுக்கு உதவி புரிந்த நிலையில், 2-1 என்ற கோல்கணக்கில் ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

ஆர்ஜென்டீனா, வெனிசுவேலா ஆகிய அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை, அரையிறுதிப் போட்டியில், அமெரிக்கா சந்திக்கவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/174951/க-ப-ப-அம-ர-க-க-அர-ய-ற-த-ய-ல-அம-ர-க-க-#sthash.Al3B3sXh.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெஸ்ஸி எட்டிய மைல்கல்: வெனிசூலாவை வீழ்த்தி அரையிறுதியில் அர்ஜெண்டீனா

 
ஒரு கோல் அடித்து மைல்கல்லை எட்டியதோடு, 2 கோல்களுக்குக் காரணமாக இருந்த லயோனல் மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி.
ஒரு கோல் அடித்து மைல்கல்லை எட்டியதோடு, 2 கோல்களுக்குக் காரணமாக இருந்த லயோனல் மெஸ்ஸி. | படம்: ஏ.எஃப்.பி.

அமெரிக்காவில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் வெனிசூலா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் அமெரிக்காவைச் சந்திக்கிறது அர்ஜெண்டீனா. மெஸ்ஸி தனது 54-வது சர்வதேச கோலை அடித்து கப்ரியேல் பேட்டிஸ்டுடாவின் சாதனையை சமன் செய்து புதிய அர்ஜெண்டீன மைல்கல்லை எட்டினார்.

ஒரு கோலை அடித்த மெஸ்ஸி, 2 கோல்களுக்குக் காரணமாக அமைந்தார். கொன்சாலோ ஹிகுவெய்ன் இருமுறை கோல் போட்டார். தொடக்கம் முதலே மெஸ்ஸி மிகவும் அபாயகரமாகத் திகழ்ந்தார். தொடக்கத்திலேயெ அர்ஜெண்டீன ரசிகர்கள் ஆரவாரம் முழங்க மெஸ்ஸி வெனிசூலா தடுப்பை உடைத்துக் கொண்டு வெனிசூலா கோல்பகுதிக்குள் நுழைந்தார். அங்கிருந்து ஒரு ஷாட்டை ஆட அதனை வெனிசூலா கோல் கீப்பர் டேனியல் ஹெர்னாண்டஸ் பிடித்தார்.

சரியாக 2 நிமிடங்களுக்குப் பிறகு மெஸ்ஸி மீண்டும் அச்சுறுத்தினார். மீண்டும் உள்ளே புகுந்து கோலை நோக்கி அடித்த ஷாட் வெளியே சென்றது.

8-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் ஆட்டம் கோலைப் பெற்றுத் தந்தது. இரண்டு வெனிசூலா தடுப்பு வீரர்களுக்கிடையே ஒரு அருமையான பாஸ்ஸை தூக்கி அடித்தார். அப்போது சறுக்கிக் கொண்டு வந்த ஹிகுவெய்ன் கோலாக மாற்றினார், அர்ஜெண்டீனா 1-0 என்று முன்னிலை பெற்றது

3 நிமிடங்களுக்குப் பிறகு மெஸ்ஸி முன்னிலை கொடுத்திருப்பார். வெனிசூலா கோல் கீப்பர் தவறிழைக்க பந்தைச் சாதுரியமாக பெற்ற மெஸ்ஸி 25 அடியிலிருந்து கோல் நோக்கி ஒருஷாட்டை முயன்றார். ஆனால் அது வெனிசூலாவின் அதிர்ஷ்டமாக வெளியே சென்றது.

வெனிசூலாவும் சும்மா வேடிக்கைப் பார்க்கும் அணி அல்ல என்பதை நிரூபித்தது. சாலமன் ரோண்டன் அங்கு அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார். சாலமன் ரோண்டன் கோலை நோக்கி விரைவு கதியில் எடுத்து வர கோலாகாமல் அது கார்னராக அர்ஜெண்டீன கோல் கீப்பர் ரொமீரோ காரணமானார்.

22-வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்ஸி பந்தை எடுத்துக் கொண்டு அச்சுறுத்தல் நகர்வு மேற்கொள்ள அவரை வெனிசூலா வீரர் ஆர்க்கிமிடிஸ் பிகுயெரா பின்னாலிலிருந்து தடுக்க முயன்றார், இது உண்மையில் பெனால்டி கொடுக்க வேண்டிய ஃபவுல், ஆனால் மெக்சிகோ நடுவர் ரொபர்டொ கார்சியா, அவர் பந்தை தடுக்கவே முயன்றார் என்று விளக்கம் அளித்தார்.

பிறகு ஹிகுவெயினின் ஷாட் ஒன்று கோல் அருகே தடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு சிறிது நேரத்திற்கெல்லாம் வெனிசூலாவின் பிகுயெரா பின்பக்கமாக பாஸ் செய்த மோசமான முயற்சியால் பந்து ஹிகுவெய்னிடம் சிக்க அவர் 2-வது கோலை அடித்தார்.

முதல் பாதியில் வெனிசூலாவின் நிறைய வாய்ப்புகள் கோலாக மாற முடியவில்லை. முதலில் ரொமீரோ, ரோண்டனின் ஷாட்டை தடுத்தார், பிறகு ரோண்டனின் தலையால் ஆடிய ஷாட் ஒன்று போஸ்டில் பட்டு திரும்பியது.

44-வது நிமிடத்தில்தான் வெனிசூலாவின் மோசமான தருணம் நிகழ்ந்தது. ஒரு ஷாட்டை எதிர்கொள்ளும் முயற்சியில் ஜோசப் மார்டினெஸை எதிர்கொண்டார் இதனால் பெனால்டி வாய்ப்பு வெனிசூலாவுக்குக் கிடைத்தது. ஸ்பாட் கிக்கை லூயிஸ் செய்ஜாஸ் அடிக்க அதனை ரொமீரோ பிடித்தார், ஒன்றுமில்லாத ஷாட்டாக அது அமைந்தது.

இந்நிலையில் மெஸ்ஸி கோப்பா அமெரிக்காவின் இந்தத் தொடரில் தனது 4-வது கோலை அடித்தார். வெனிசூலா வீரர் ஆஸ்வால்டோ விஸ்கராண்டோ தங்களது பகுதியிலேயே பந்தை விட்டுக் கொடுத்தாலும் அர்ஜெண்டீன வீரர் நிகோலஸ் கெய்ட்டன் வேகமாக ஓடி வந்து பந்தை மெஸ்ஸியிடம் அளிக்க அவர் ஹெர்ணாண்டஸை தாண்டி கோலாக மாற்றினார், 3-1.

70-வது நிமிடத்தில் அலியாண்ட்ரோ குவெராவின் கிராஸை சாலமன் ரோண்டன் கோலாக மாற்ற வெனிசூலா கணக்கைத் தொடங்கியது, ஆனால் இதுவே அந்த அணிக்கு ஆறுதல் கோலாகவும் அமைந்தது. காரணம் சிறிது நேரத்திற்கெல்லாம் மெஸ்ஸியின் அருமையான பாஸை பதிலி வீரர் எரிக் லமீலா கோலாக மாற்ற அர்ஜெண்டீனா 4-1 என்று வென்றது.

http://tamil.thehindu.com/sports/மெஸ்ஸி-எட்டிய-மைல்கல்-வெனிசூலாவை-வீழ்த்தி-அரையிறுதியில்-அர்ஜெண்டீனா/article8748472.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மெக்சிகோ அணியை 7-0 என்று நொறுக்கிய சிலி அணி அரையிறுதியில்

 
4 கோல்களை அடித்து மெக்சிகோவுக்கு ஆணியறைந்த சிலி வீரர் எட்வர்டோ வார்கஸ். | படம்: கெட்டி இமேஜஸ்/ஏஎஃப்பி.
4 கோல்களை அடித்து மெக்சிகோவுக்கு ஆணியறைந்த சிலி வீரர் எட்வர்டோ வார்கஸ். | படம்: கெட்டி இமேஜஸ்/ஏஎஃப்பி.

கோப்பா அமெரிக்காவின் நடப்பு சாம்பியன் சிலி அணியின் எட்வர்டோ வார்கஸ் 4 கோல்களைத் திணிக்க ஓரளவுக்கு வலுவான மெக்சிகோ அணியை சிலி அணி அதிர்ச்சிகரமாக 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

எட்சன் புச் 2 கோல்களையும், அலெகிசிஸ் சான்சேஸ் ஒரு கோலையும் அடிக்க மெக்சிகோவை பதம் பார்த்த சிலி அரையிறுதியில் மேலும் வலுவான கொலம்பியாவைச் சந்திக்கிறது. மெக்சிகோ அணி 22 ஆட்டங்களில் தோல்வியுறாமல் வைத்திருந்த சாதனை முற்றுப் பெற்றது.

ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் சிலி முன்னிலை பெற்றது. எட்சன் புச் பட்டு மீண்டும் வந்த பந்தை கோலாக மாற்றினார். அதாவது அலெகிசிஸ் சான்சேஸ் மூலம் தொடங்கிய இந்தத் தாக்குதல் நகர்வு மார்செலோ டயஸுக்கு கோல் அடிக்க வாய்ப்பாக மாறியது, ஆனால் டயஸின் ஷாட்டை மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா கையால் தட்டி விட அது எட்சன் புச் பாதைக்கு வந்தது. இதுவே முதல் கோலாக மாறியது.

இதனையடுத்து சிலி அணி மேலும் ஆக்ரோஷம் கூட்ட வார்கஸ் அடித்த ஷாட் ஒன்று 37-வது நிமிடத்தில் கோல் ஆனது, ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை, அது ஆஃப் சைடு என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இடைவேளைக்கு சற்று முன்பு ழான் பியூசேயூர் இடது புறத்திலிருந்து கிராஸ் செய்ய வார்கஸ் சிலி அணிக்காக 2-வது கோலை அடித்தார். இடைவேளை வரை சிலியின் பகுதிக்குள் பெனால்டி பகுதி வரை மெக்சிகோ அணி இருமுறையே நுழைய முடிந்தது, மாறாக சிலி அணி 9 முறை உள்ளுக்குள் நுழைந்து 2 கோல்களை அடித்தது.

இதனையடுத்து ரால் ஜிமினேஸ், கார்லோஸ் பீனா ஆகியோரைக் களமிறக்கியது மெக்சிகோ, ஆனால் இது எந்தவித பயனும் அளிக்கவில்லை, சிலி அணி மேலும் ஆதிக்கப்போக்கைக் கடைபிடித்தது. இதில் ஆர்தரோ வைடால் பந்தை அழகாக வெட்டி எடுத்து வந்து சான்சேசிடம் அளிக்க சிலி அணியின் 3-வது கோல் வந்தது.

அதன் பிறகு வார்காஸின் ஆட்டம் ஆதிக்கம் செலுத்தியது இவர் 52, 57, 74-வது நிமிடங்களில் 3 கோல்களை அடித்தார். இது மெக்சிகோ அணிக்கு ஆணியடித்தது.

வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் கடைசியில் எட்சன் புச் மேலும் ஒரு கோலை அடிக்க 7-0 என்று வென்றது சிலி.

மெக்சிகோ உண்மையில் இவ்வளவு மோசமாக வெளியேற வேண்டிய அணியல்ல, குறைந்தது அரையிறுதி வரை சென்றிருக்க வேண்டிய அணிதான் ஒரு தினம் ஒரே தினம் வார்காஸ் அந்த அணியை உதைத்துத் தள்ளியுள்ளார், அவ்வளவே.

http://tamil.thehindu.com/sports/மெக்சிகோ-அணியை-70-என்று-நொறுக்கிய-சிலி-அணி-அரையிறுதியில்/article8748496.ece?homepage=true

  • தொடங்கியவர்

மெஸ்ஸியின் தாக்கம்: அமெரிக்காவை பந்தாடி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா!

 
 
படம்: ஏபி
படம்: ஏபி

அமெரிக்காவில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதிச் சுற்றுக்கு அர்ஜென்டினா அணி முன்னேறியது. அமெரிக்க அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

லவேஸி, மெஸ்ஸி ஆகியோர் தலா ஒரு கோலை அடிக்க ஹிகுவெய்ன் 2 கோல்களை அடித்தார். அமெரிக்க அணியில் தடை காரணமாக 3 முன்னிலை வீரர்கள் விளையாட முடியாமல் போனது. அர்ஜென்டினா அணியில் காயமடைந்த நிகலஸ் கெய்த்தானுக்குப் பதிலாக இசகியல் லவேஸி விளையாடினார்.

தொடக்கத்திலேயே மின்னல் போல விளையாடிய அர்ஜென்டின அணி 3 நிமிடங்களுக்குள்ளாகவே பந்தை கோல் வலைக்குள் செலுத்தியது. குறிப்பாக முதல் கோலில் லயோனல் மெஸ்ஸியின் ஈடுபாடு அதிகம். லவேஸி எடுத்த ஷார்ட் கார்னர் ஷாட் பனேகாவுக்கு அடிக்கப்பட்டது, அவர் மீண்டும் லவேசிக்கு பந்தை அளிக்க அவரோ கார்னரிலிருந்து குறுக்காக வேகமாக பந்தை எடுத்து வந்தார் இடையில் வந்த ஃபேபியான் ஜான்சனை அனாயாசமாகக் கடந்து வந்து பாக்ஸுக்கு ஓரத்தில் மெஸ்ஸி சுதந்திரமாக இருந்ததால் அவரிடம் அனுப்பினார். மெஸ்ஸி அதனை மிகமிகத் துல்லியமாக, கட்டுப்பாட்டுடன் தூக்கி அடித்து பாஸ் செய்ய மீண்டும் லவேஸி பாய்ந்து தலையால் முட்டி அமெரிக்க கோல் கீப்பர் குஸானுக்கு வேதனை அளிக்கும் விதமாக முதல் கோலை அடித்தார். அர்ஜென்டினா 1-0 என்று முன்னிலை பெற்றது.

அருமையான ஒத்திசைவினால் முயன்று அடைந்த முதல் கோல் கொடுத்த நம்பிக்கையில் அர்ஜென்டினா மேலும் வலுப்பெற்றது. அமெரிக்க அணிக்கு பந்து தங்கள் கால்களில் வருவதே அரிதான விஷயமாகிப் போனது.

இப்படியே சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் 32-வது நிமிடம் கோல்டன் மொமண்ட் ஆனது. அதுதான் மேஜிக் மெஸ்ஸியின் கனவு கோல், அனைவரும் பார்க்கத் துடிக்கும் மெஸ்சியின் ஃப்ரீ கிக் கோல். சில பல முக்கோண ஷார்ட் பாஸ்களுக்குப் பிறகு பந்து அமெரிக்க கோல் பகுதியின் டி வட்டத்துக்கு சற்று வெளியே மெஸ்ஸியின் கால்களுக்கு வர மெஸ்ஸி அதனை தடைகளைக் கடந்து தனது பாம்பு போன்று நழுவிச் செல்லும் உடலுடன் பந்தை எடுத்துச் செல்ல முனைந்த போது அமெரிக்க வீரர் வொண்டொலோவ்ஸ்கி படு அசிங்கமாக ஒரு ஃபவுல் செய்தார், அதாவது மெஸ்ஸியின் காலில் பந்து இல்லாத போதே அவரை அராஜகமாகத் தடுத்தார், முறையற்ற தடுப்பு, இதனால் அந்த வீரருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதோடு, மெஸ்ஸிக்குக் பிரீ கிக் அளிக்கப்பட்டது.

அமெரிக்க வீரர்கள் சுவர் எழுப்பினர், ஆனால் மெஸ்ஸியின் காலுக்கும், கண்ணுக்கும் தெரிந்தது வலை மட்டுமே. இடது காலால் அதி அற்புதமாக மெஸ்ஸி உதைக்க ரசிகர்கள் போலவே அமெரிக்க வீரர்களும் கோல் கீப்பரும் பார்வையாளர்களாக பந்து அழகாக கோல் கீப்பர் குஸான் தலைக்கு மேல் சென்று வலையைத் தாக்கியது. மெஸ்ஸி அதிக சர்வதேச கோல்களை அடித்த அர்ஜென்டினா வீரரானார். பாட்டிஸ்டுடா 54 கோல்கள் அடித்ததை மெஸ்ஸி தனது 55-வது கோலால் முறியடித்தார். ஆனால் பாட்டிஸ்டூடா 77 போட்டிகளில் 54 கோல்கள். மெஸ்சி தனது 112-வது ஆட்டத்தில்தான் 55-வது கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதியிலேயே அமெரிக்காவை போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்ட அர்ஜென்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது.

இடைவேளைக்குப் பிறகும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் அர்ஜென்டினா 3-வது கோலை அடித்தது. இதுவும் மெஸ்ஸியின் தாக்கத்தினால் விளைந்ததே. அமெரிக்க வீரர்களை நடுக்களத்தில் முறியடித்து, ஊடுருவினார் மெஸ்ஸி, பிறகு பந்து ஹிகுவெய்னுக்கு அனுப்பப்பட்டது, முதல் ஷாட்டை அமெரிக்க்க கோல் கீப்பர் குஸான் நன்றாகவே தடுத்தார், ஆனால் மீண்டும் பந்தைப் பெற்ற ஹிகுவெய்ன் குஸானிடம் சிறிது விளையாடி காலி கோல் வலையில் திணித்தார்.

அமெரிக்க அணியில் 17 வயது ‘அதிசயச் சிறுவன்’ என்று அழைக்கப்படும் பியூலிசிச் சிலபல மின்னல்களை ஏற்படுத்தினார். ஆனாலும் ஆறுதல் கோல் கிடைக்கவில்லை, கால்பந்து உலகில் பியூலிசிச் பெயர் இன்னும் சிறிது காலத்தில் பரவலாகி விடும்.

ஆறுதல் கோல் அமெரிக்காவுக்குக் கிடைக்காத நிலையில் இன்னொரு மெஸ்ஸி உதவியுடன் ஹிகுவெய்ன் 4-வது கோலை அடித்தார். அமெரிக்கா வெளியேறியது.

http://tamil.thehindu.com/sports/மெஸ்ஸியின்-தாக்கம்-அமெரிக்காவை-பந்தாடி-இறுதிப்-போட்டியில்-அர்ஜென்டினா/article8759703.ece

  • தொடங்கியவர்

கொலம்பியாவை வீழ்த்தி இறுதியில் அர்ஜென்டினாவைச் சந்திக்கிறது சிலி

 
சிகப்பு ஜெர்சியில் இருக்கும் சிலி வீரர் ஜோஸ் பியுயென்சாலிதா 2-வது கோல் அடிக்கும் முயற்சியில். | படம்: ஏ.எஃப்.பி.
சிகப்பு ஜெர்சியில் இருக்கும் சிலி வீரர் ஜோஸ் பியுயென்சாலிதா 2-வது கோல் அடிக்கும் முயற்சியில். | படம்: ஏ.எஃப்.பி.

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கொலம்பிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவைச் சந்திக்கிறது சிலி.

சிகாகோவில் சோல்ஜர் பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7-வது நிமிடத்தில் சார்லஸ் அராங்குய் மற்றும் 11-வது நிமிடத்தில் ஜே.பியுயென்ஸலிதா ஆகியோர் அடித்த கோல்களினால் சிலி அணி வென்றது. இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்க 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆனது. காரணம் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வீர்ர்கள், ரசிகர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது வீரர்கள் தரையில் கால் பதிக்க முடியாமல் திணறினர், கடுமையாக வழுக்கியது ஆட்டத்தைப் பாதித்தது. மேலும் கொலம்பிய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவில் கார்லோஸ் சான்சேஸ் 2-வது முறை மஞ்சள் அட்டையை 57-வது நிமிடத்தில் வாங்கியதால், 3-வது இடத்துக்கான அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, அதாவது இறங்கும்போதே 10 பேர்களுடன் கொலம்பியா இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கொலம்பிய அணி ஆட்டத்தை விறுவிறுப்பாகவே தொடங்கியது. ஆனால் 7-வது நிமிடத்தில் சிலி வீரர் அராங்குய் அடித்த கோல் கொலம்பியாவின் உற்சாகத்தைக் குறைத்தது. மேலும் 11-வது நிமிடத்தில் அலெக்சிஸ் சான்சேஸின் அருமையான ஷாட்டை பியுயென்சாலிதா 2-வது கோலாக மாற்ற சிலி அணி மேலும் பின்னடைவு கண்டது.

கொலம்பிய அணியில் தங்கள் தனிப்பட்ட ஆட்டத்தினால் போக்கையே மாற்றும் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், யுவான் குவாட்ராடோ இருந்தனர். ஆனால் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்னவோ சிலி மும்மூர்த்திகளான அலெக்சிஸ் சான்சேஸ், வார்கஸ் (அன்று மெக்சிகோவுக்கு எதிராக 4 கோல்கள் அடித்தவர்), அராங்குய் ஆகியோரே.

4 நிமிடங்களில் 2 கோல்கள் வாங்கிய அதிர்ச்சியிலிருந்து கொலம்பியா மீண்டு வர மேற்கொண்ட சொற்ப முயற்சிகளும் கைகொடுக்கவில்லை, சிலி அணி சரியான பார்மில் உள்ளது.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா-சிலி அணிகள் மோதுகின்றன.

http://tamil.thehindu.com/sports/கொலம்பியாவை-வீழ்த்தி-இறுதியில்-அர்ஜென்டினாவைச்-சந்திக்கிறது-சிலி/article8764427.ece

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வெல்லாமல் அர்ஜென்டினா அணி நாடு திரும்பக்கூடாது: மரடோனா எச்சரிக்கை

 
maradona_2004235f.jpg
 

கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான சிலி, அர்ஜென்டினாவை எதிர்த்து விளையாடுகிறது.

கடந்த 2014-ல் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்க கோப்பையை சிலியிடம் இழந்தது.

இரண்டு வருடத்தில் மிக முக்கி யான இரு சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட அர்ஜென்டினா இந்த முறை கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வென்றே தீர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

தொடரின் ஆரம்பத்தில் இருந்தே அந்த அணி மிகச்சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டியில் கால்பதித்துள்ளது. நட்சத்திர வீரர் லலோயனல் மெஸ்ஸி நல்ல பார்மில் உள்ளார்.

அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதில் அவர் முனைப்புடன் உள்ளார். சர்வதேச போட்டிகளில் அர்ஜென்டினா அணிக்காக பெரிய அளவில் சாதித்ததில்லை என்ற தன் மீதான விமர்சனத்துக்கு இம்முறை நிச்சயம் அவர் முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்றே கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து 23 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடும் அர்ஜென்டினாவின் கனவு நிறைவேறுமா என்பது திங்கள் கிழமை தெரிந்துவிடும். இந்நிலை யில் இம்முறை கோபா அமெரிக்கா தொடரில் கோப்பையை வெல்லாமல் அர்ஜென்டினா அணி வீரர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என்று கால்பந்து ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார்.

இதுகுறித்து மரடோனா கூறும்போது ‘‘நாங்கள் உறுதி யாக கோப்பையை வெல்வோம். ஒருவேளை இறுதிப்போட்டியில் வெற்றி பெறாவிட்டால் அர்ஜென் டினா வீரர்கள் நாடு திரும்பக்கூடாது" என்றார்.

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-தொடரில்-பட்டம்-வெல்லாமல்-அர்ஜென்டினா-அணி-நாடு-திரும்பக்கூடாது-மரடோனா-எச்சரிக்கை/article8772445.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.