Jump to content

நானும் என் ஈழமும் - பகுதி 2


Recommended Posts

பதியப்பட்டது

part2.jpg

அண்மையில் எம்மை சோகத்தில் ஆழ்த்தி சென்ற பாலா மாமாவிற்காக "நானும் என் ஈழமும்" தொடரை அர்ப்பணம் செய்கிறேன்....

------------------------------------------------------------------------------------

உங்களில் எத்தனை பேர், கோயிலை கடக்கும் நேரங்களில் எல்லாம் கையெடுத்து கும்பிடுவீர்கள்?அல்லது நெஞ்சில் கைவைத்து "இறைவா" என சொல்வீர்கள்? எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு. அதனால் எனக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம்..இன்று வரை தொடர்வது.. அதை பற்றி பார்க்கலாம்...

ஊருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் அப்பப்பாவீட்டில் அதிக நேரத்தை செலவழிப்பேன். காரணம் அங்கு இருக்கும் புத்தகங்கள், பழைய படங்கள், அப்பபாவின் இசை கருவிகள்...அதில் வீணை மீட்டுகிறேன் என்று கம்பிக்களை அறுத்த வீரத்திருமகள் நானாக்கும்...அது மட்டுமா அறுத்த கம்பியை இணைக்கிறேன் என்று ஆரம்பித்து, கம்பி பழி வாங்கி, விரலில் 2 தையல் போட்டதும் நடந்து இருக்கு...இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் தூயாவின் சாகாசங்களை...

நான் விரும்பி நேரம் செலவழிப்பது எங்கள் குடும்ப படங்களுடன் தான்...பலரை நான் நிஜத்தில் பார்த்ததேயில்லை...படங்களில் மட்டும் பார்த்ததுண்டு..

அப்பப்பாவிடம் கேட்பேன் "இவையெல்லாம் ஆர்? எங்க இருக்கினம்?"

அப்ப்பா பதிலாக ஒரு பார்வை மட்டுமே..

"சாமியாகிட்டினமா?" சின்ன வயதில் இறந்தவர்களை , இறைவனிடம் சேர்ந்தவர்கள் என்று சொல்லி தந்த பழக்கத்தில் கேட்டேன்..

"ஓம். இவையெல்லாம் தூயாட சாமி" அப்பப்பாவின் பதில் இது...இப்பொழுதும் நல்ல நினைவு..

அதிலும் நாங்கள் ஒவ்வொரு வருடமும் மறக்காமல் அப்பப்பா வீடு செல்வது என் சித்தப்பாவின் நினைவு நாளில்..

சித்தப்பா எங்கே என்ற என் கேள்விக்கு பதில்? சற்று தூரத்தில் இருந்த ஒரு "மாவீரர் துயிலும் இல்லம்"...

எங்கள் ஊரில் பாதி பேர் மாவீரர் துயில் இல்லங்களில் தானே இலட்சியத்திற்காக உறங்கிகொண்டிருக்கின்றார்கள

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2000ம் வருடத்துக்கு முதல் பிறந்த ஜேசுவை வெள்ளைக்காரர்கள் சொன்னதினால் அதை நம்பிக் கடவுள் என்கிறோம். எமது மூதாதையர் சொன்னதினால் சிவனையும் கடவுள் என்கிறோம். எம்மைக்காப்பதற்காக இன்னுயிரைத் தியாகம் செய்த எத்தனையோ கடவுள்கள் எமது தாய் நிலத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 12 நாட்கள் உண்ணாமல் உயிர் தியாகம் செய்த தீலிபன், வெளினாட்டில் சொகுசு வாழ்க்கை அனுபவிக்காமல் எமது மக்களுக்காக, எமது மண்ணில் வாழ்ந்து கஸ்டப்பட்ட தேசத்தின் குரல், 10 12 மணித்தியாலம் கடலில் கஸ்டப்பட்டு நீந்தி விலைமதிக்கமுடியாத இன்னுரை நீத்து காங்கேசன் கடற்கரையில் வீர காவியம் படைத்த அங்கயற்கண்ணி, கப்டன் மில்லர், உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்னை பூபதி.......

Posted

உண்மைதான் கந்தப்பு....சில உணர்வுகளை வார்த்தைகளில் எழுதுவது கடினம்...பதிலுக்கு நன்றி

Posted

நானும் மாவீரர்களின் நினைவு சுமந்த பாடல்களை எழுதி இங்கு இணைக்கலாமா??

Posted

யாழில் எங்கும் இணைக்கலாமே? பாடல்களை இணைப்பதற்கென்றே ஒரு பதிவு இருக்கு...அங்கு தான் நாங்கள் அனைவரும் பாடல்வரிகளை இணைப்பது வழக்கம் :lol:

Posted

நல்லதொரு பதிவு தூயா...பாராட்டுக்கள். என்னுடன் பணி புரியும் தமிழ்நாட்டுத்தமிழ் சகோதரர்களில் மிகப்பெரும் பாண்மையானவர்கள் கூப்பிடு தூரத்தில் இருந்து கொண்டு நாம் சிந்தும் கண்ணீரையும் செந்நீரையும் மிகவும் அலட்சியம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எங்கள் உணர்வுகளை புரிய வைப்பதற்கு, இது போன்ற பதிவுகளை படியெடுத்து வினியோகித்துக்கொண்டிருக்கி

Posted

வணக்கம் ஈழநேசன்,

பாராட்டிற்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

Posted

நல்ல பதிவு துயா மாவீரர் இல்லத்துக்கு ஓரிரு முறைதான் சென்றிருக்கின்றேன் அதுவும் விசேசமாக சொன்னால் 93 மாவீரர் தினத்தில் அன்று எனக்கு 8 வயது ஆனால் அங்கு சென்ற போது ஒரு புரியாத உணர்வு அச்சிறு வயதிலும் எனக்கிருந்தது.சிறுவயதில் எனது தந்தையாரின் வேலைத்தளத்தில் அப்பாவுடன் மாவீரர் நாளுக்கு விளக்கேற்ற செல்வேன் அத்துடன் மாவீரரின் புகழுடல்களை அப்பாவின் வேலைத்தளத்தில் வைப்பார்கள் அன்று ஒலிக்கும் ஒவ்வொரு பாடலும் மனதை உருக்கும்.

தலைவரின் புதல்வர் சாள் அன்ரனியுடன் கூட 6 வருடங்கள் ஒரே வகுப்பில் படித்தேன்.அவரை அஜந்தன் என்றே பாடசாலையில் அழைப்பார்கள்.அவரது மகள் தங்கை துவாரகாவும் பொஸ்கோவில் படித்தார் .சாள்சுடன் நாடகங்களும் நடித்தோம் யாழ் மாவட்டத்தில் முதலாவது இடமும் வந்தோம்.அந்த வயதில் சாள்சின் உறுதியை,எளிமையையும் கண்டு வியந்ததுண்டு ஏன் எனின் நாம் பொஸ்கோவில்ல் இருந்து பரியோவான் கல்லூரியில் 6 ம் ஆண்டு படிக்க சென்ற போதும் அவர் என்னுடைய வகுப்பிலே படித்தார் அப்போதுதான் அவர் தலைவரின் மகன் ஏன எமக்கு தெரிந்தது அதுவரை நாம் அவரை அஜந்தன் எனவே அழைப்போம் பெரிய அண்ணாமார் வந்து வேணுமெண்டு கேட்பார்கள் அப்பா எங்க என அதுக்கு சாள்ஸ் பிடிகொடுக்காமல் பதிலழிப்பார் அப்பா கடை வச்சிருக்கிறார் என அந்த உறுதியும் பிடிகொடுக்காமலும் கதைப்பதும் சரியாக தலைவரை போலவே இருக்கும் என்ன புலிக்கு பிறந்தது பூனையாக்குமா.மதி அன்ரியையும் பலதரம் கண்டிருக்கிறேன் பாடசாலை விழாக்களில்.அடேல் அன்ரியின் விடுதலை வேட்கை புத்தகத்தில் சாள்சின் உருவமும் குணமும் செயலும் தலைவரை போலவே இருக்குது என எழுதி இருந்தார்.அவரை சந்திக்க எனக்கு ஆசை என்ன ஒரு நாள் அவர் சந்திப்பேன்.

Prabaharan_family.jpg

இந்த வயதில் அவரை கண்டிருப்பேன்

Posted

ஈழவன் உம்முடைய இணைப்பை வாசித்தேன். நீர் தலைவரின் மகனோடு 6 ஆண்டுகள் ஒரே வகுப்பில் படித்தீரா?? உண்மையில் பெருமைப்படவேண்டிய விசயம். நிச்சயமாக எதிர்காலத்தில் நீர் அவரை சந்திப்பீர் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

Posted

ஈழவன் உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.