Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் குடிகொண்டதாம்! மட்டக்களப்பின் இரு கிராமங்கள் அம்பாறைக்கு மாற்றம்!!

Featured Replies

இராணுவம் குடிகொண்டதாம்! மட்டக்களப்பின் இரு கிராமங்கள் அம்பாறைக்கு மாற்றம்!!

கடந்த 5 வருடங்களாக மாதவணை மற்றும் மயிலத்தமடு ஆகிய இந்த இரண்டு கிராமங்களும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டதையடுத்து, இந்த கிராமங்களில் இராணுவம் நிலைகொண்டமையால் இந்த இரண்டு இடங்களும் அம்பறை மாவட்டத்துக்கு உட்பட்ட மகாஓயா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதி என வரையறுத்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பின் எல்லை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கைகள், குடியேற்றங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று கருத்து வெளியிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘மட்டக்களப்பை பொறுத்தவரையில் கிரான், செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மாதவணை, மயிலத்தமடு, சின்ன மாதவன ஆகிய இந்த பிரதேசங்கள் பல நூற்றாண்டு காலமாகவும் வரலாற்று ரீதியாகவும் மட்டக்களப்புக்கு உரிய எல்லை கிராமங்கள் ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய பிரதேசத்துக்கு உரிய எல்லை என்று தான் வரைபடத்தில் இருக்கின்றது.

ஆனால், கடந்த 5 வருடங்களாக மாதவணை மற்றும் மயிலத்தமடு ஆகிய இந்த இரண்டு கிராமங்களும் மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டதையடுத்து, இந்த கிராமங்களில் இராணுவம் நிலைகொண்டமையால் இந்த இரண்டு இடங்களும் அம்பறை மாவட்டத்துக்கு உட்பட்ட மகாஓயா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதி என வரையறுத்து கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது எந்த அளவுக்கு நியாயம் என்பது தெரியவில்லை.

ஆனால், சட்டவிரோத பயிர்ச்செய்கைகளும் பெரும்பான்மையினக் குடியேற்றங்களும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் இந்த அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் மற்றும் எல்லை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டு பரிபூரண ஆதாரத்துடன் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 5 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இந்த 2 இடங்களும் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவுக்கு எவ்வாறு மாற்றப்பட்டது? இதற்கு யார் பொறுப்பு? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மத்திய அரசாங்கமும் நல்லாட்சி என்று கூறி இணக்கப்பாடு அரசியல் நடத்துகின்ற இந்த ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்கள் அம்பாறை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன? இதுதான் நல்லாட்சியா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைகளைப் பொறுத்தவரையில் நல்லாட்சி என்று கூறிக்கொண்டு மத்திய அரசாங்கம் தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொள்ளுவது மட்டக்களப்பு – செங்கலடி பிரதேசங்களுக்குரிய எல்லை கிராமங்களை, மகோயா பிரதேச செயலகத்துக்கு மாற்றுவது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

எமது மண்ணையும் எமது நிலத்தையும் எமது வரையறுக்கப்பட்ட எல்லையையும் பாதுகாக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளது. இதற்காகத்தான் அவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

இந்த கடமையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகி விட்டதா? இது மட்டக்களப்பு எல்லைக்கு உரிய கிராமம் என உறுதி செய்து அந்த அத்துமீறிய பெரும்பான்மையினக் குடியேற்றத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது தமிழர்களுடைய நிலம். ஆகவே, உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=29953

கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகம் தெரியாத போலி ஜனநாயகவாதி சம்பந்தன் என்ன செய்கிறார்? இன்னும் பேப்பர் நியூஸ் அவருக்கு கிடைக்கேலையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஜனநாயகம் தெரியாத போலி ஜனநாயகவாதி சம்பந்தன் என்ன செய்கிறார்? இன்னும் பேப்பர் நியூஸ் அவருக்கு கிடைக்கேலையா?

ஏனப்பா அந்த ஆளை இழுக்கிறீங்கள் 
உங்களுக்கு தெரியாததா ...அவராலை ஒன்றுமே புடுங்க முடியாது...கொஞ்சம் பொறுங்கள் எல்லாவற்றுக்கும்  இந்தியாவிற்கு ஓடவேண்டியிருப்பதால் 
பதில் கொஞ்சம் பிந்தி தான் வரும் அதற்குள் இன்னும் நாலைஞ்சு கிராமம் மாறினாலும் ஆச்சரியமில்லை.. இப்ப முக்கியமாக ஐ நாவில என்ன சொல்லணும் என்பதை இந்தியாவிடம் கேட்டு எழுதிக்கொண்டிருப்பதால் செட்யுள் கொஞ்சம் பிசி..அவசரமாக ஏதும் தேவையென்றால் 
இங்கே அவரோட 2016 புகழ் சனநாய்அகவாதிகள் சிலர் இருக்கிறார்கள் அவங்களிட்ட கேளுங்கள் வெடி தீர்வுகள் தருவார்கள். 
நீங்களே புகைஞ்சு போய் நிற்பீர்கள்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.